Friday 9 November 2012

பொன் குஞ்சு!

'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.' இது உண்மையான பொன்குஞ்சு பற்றிய கதை.

ஏழாம் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து வீட்டில் மீன்கள் வளர்த்திருக்கிறோம். சிறிதும் பெரிதுமாகப் பத்துப் பதினைந்து தொட்டிகள், விதம் விதமாக மீன்கள்... பார்வையற்ற 'லெப்பர்ட் மொலி' கூட தடவைக்கு தொண்ணூறு வீதம் பத்துக்கு மேற்பட்ட தடவை குஞ்சு பொரித்திருக்கிறது. தங்க மீன்கள் மட்டும் எத்தனை வாங்கி விட்டாலும் தாம் வளர்ந்து பெரிதாகுமே தவிர எண்ணிக்கையில் பெருகியது இல்லை.

சென்ற வருடம் தோட்டத்து மீன் தொட்டியை (Fish pond) சுத்தம் செய்கையில், விட்டிருந்த நான்கு தங்கமீன்களில் ஒன்றுதான் மீதமாக இருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் வீட்டின் உள்ளே இருந்த தொட்டியில் விட்டிருந்த நால்வரில் மிஞ்சி இருந்த இறுதித் தங்கமீனை, அவர் நோய்வாய்ப் பட்டிருந்த காரணத்தால் வெளித் தொட்டிக்கு மாற்றி விட்டோம். அதை மறந்தும் விட்டேன் நான்.

பெரியவர் வீடு மாறியதில் கொஞ்சம் கவனிப்புக் குறைந்திருந்தது; ஃபில்டர், நீரூற்று எல்லாம் வேலை செய்வதை நிறுத்தியிருந்தது. ஆனாலும் இயற்கை தன் வேலை எதையும் நிறுத்தவில்லை. ஐதரில்லாத் தாவரம் பெருகிக் கிடந்தது. பாசி படர்ந்திருந்ததால் மீன்களுக்குப் போதுமான தீவனம் இருந்தது. மீன் சற்றுக் குணமாகிவிட்டிருந்தது.

சில வாரங்கள் முன்பாக இமாவனத்தில் அநுமார் (வாயு பகவான் இவர்தானே!) அட்டகாசம் செய்திருந்தார். ;( சுத்தம் செய்யும் வேலையில் பெரியவர் உதவிக்கு வந்திருந்தார்.  கிளம்புமுன், "அட! மீன்கள் வாங்கி விட்டிருக்கிறீர்கள் போல இருக்கிறதே!" என்றார். "இல்லையே!"
"மூன்று மீன்கள் இருக்கின்றன."

நாங்கள் போய்ப் பார்க்க எதுவும் தெரியவில்லை. பெரிய மீனின் வாலைப் பார்த்திருப்பார் என்று நினைத்துக் கொண்டோம். இலையுதிர்காலம் உதிர்த்து விட்ட இலைகளை வலை போட்டு எடுத்து வீசிவிட்டு மீதி வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.

பின்னேரம் தற்செயலாகப் பார்க்க...

உண்மையில் ஒரு தங்கக் குஞ்சு... அழ..கு. நியாமான பெரிதாக வளர்ந்திருந்தது. இத்தனை நாள் எங்கள் கண்ணில் எப்படிப் படாமலிருந்தார்!!

படம் எடுப்பது சிரமமாக இருந்தது. கொஞ்ச நேரம் அசையாமல் ஒரு இடத்தில் நிற்க மாட்டார்களாம்.

18 comments:

  1. வாவ்... அதுகுள்ள குடும்பமாயிட்டாங்களா... குட் :) இனி ஒழுங்கா கவனிப்பீங்க தானே?? அந்த ஒருவரை மறந்த மாதிரி மறக்க இயலாது - வனிதா

    ReplyDelete
  2. தங்க மீன்கள் மட்டும் எத்தனை வாங்கி விட்டாலும் தாம் வளர்ந்து பெரிதாகுமே தவிர எண்ணிக்கையில் பெருகியது இல்லை.//

    ஆமாம் இமா ..எங்க வீட்டிலையும் இதே கதைதான்

    நல்லா கொழு மொழுன்னு இருக்காங்க ...ஆனா அஞ்சு பேரும் அப்படியே
    ஆனா நல்லா பழகுவாங்க:))) ..நான் சென்று உணவிடும்போது

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு வீட்டில் அஞ்சு பேர்!! ;)

      Delete
  3. என் கண்ணுக்கு 2 மீன்கள் மட்டும்தான் தெரியுது...ங்ங்ஙே... :)

    எனிஹவ், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கு வாழ்த்துக்கள் ரீச்சர்! ;)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகி. ;) 2வது படத்துல இருக்கிறது அம்மாவும் அப்பாவும். கடைசி இரண்டிலும் யாரோ ஒருவரும் குஞ்சும்.

      Delete
  4. மீன் வளர்ப்பதே சிரமம்,அதனை காப்பாற்றி பராமரித்து வருபவர்களுக்கே வெளிச்சம்.உங்கள் பகிர்வில் தங்க மீன் குஞ்சை பார்த்த மகிழ்ச்சி எங்களையும் தொற்றி கொண்டது.

    ReplyDelete
    Replies
    1. சிரமம் என்று பெரிதாக இல்லை ஆசியா. உண்மையில்... வெளித் தொட்டிகளுக்கு அளவான எண்ணிக்கை மீன்களும் போதுமான சூரிய வெளிச்சமும் இருந்தால் போதும். ஒரு காலகட்டத்தின் பின் தாவரங்கள் பெருகி உணவு கூடப் போட வேண்டி இராது. இயற்கையே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும். அவ்வப்போது வெளிக்காரணிகளால் ஏற்படும் மாசுக்கள் மட்டும் கவனிக்கப் பட்டால் போதும்.

      ஃபில்ட்டர் வேலை செய்யாது விட்டதால்தான் குஞ்சு தப்பி இருக்கிறது என்று நினைக்கிறேன். முன்பு முட்டைகள் குஞ்சுகள் எல்லாம் ஃபில்ட்டரில் போய் மாட்டி இருந்திருக்கும். எப்படியிம் 10 குஞ்சுகளாவது பொரித்திருந்திருக்க வேண்டும். ஒன்றுதான் மீந்திருக்கிறது. ;(

      Delete
  5. Healthy Food for Healthy Kids Series - Wraps and rolls.
    http://www.asiyama.blogspot.com/2012/11/healthy-food-for-healthy-kids-event.html

    ReplyDelete
    Replies
    1. I don't think I will participate Asiya. I mostly cook for myself only these days. :) Thanks for the invite though. Have published it thinking it might catch someone else' attention.

      Delete
  6. கோல்ட் பிஷ் ஒளிர்கிறது ...

    ReplyDelete
  7. கருத்துக்களுக்கு நன்றி வனி, அஞ்சூஸ், ஆசியா, தனபாலன், மகி & இராஜராஜேஸ்வரி அம்மா.

    ReplyDelete
  8. கோல்ட் பிஷ்.....;)

    ஷ்.ஷ்.....கோல்ட் பிஷ்களை விட இமாவின் வேகம்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
    ஓடிவந்து பிடிக்கமுடியுதில்லை உங்களை...:)


    ReplyDelete
  9. //ஃபில்ட்டர் வேலை செய்யாது விட்டதால்தான் குஞ்சு தப்பி இருக்கிறது என்று நினைக்கிறேன்.// இல்லை இமா.. என் வீட்டிலும் ஒருமுறை இரவு 14 குஞ்சு பொரித்திருந்தது. .காலையில் பார்த்தால் 3 குஞ்சுதான் உள்ளது,, பெட் ஷோப்பில்
    தான் அந்த மீன்களை வாங்கினேன்.. வாங்கியவரிடம் விசாரித்ததில் குஞ்சு பொறித்த உடன் தனியே பிரித்து விட வேண்டும். இல்லையென்றால் மீனே குஞ்சுகளை தின்றுவிடும் என்றார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராதா. கட்டாயம் பிரித்து விட வேண்டும்.

      நிறையத் தாவரங்கள் இருந்தால் தாங்களாகவே ஒழிந்து கொள்வார்கள்.

      கண்ணாடித் தொட்டியாக இருந்தால் எப்படியும் முட்டைகளைக் கவனித்திருப்பேன். pond, அதனால் தெரியவரவில்லை. ;(

      Delete
  10. வேலை, கை வேலை, வீட்டு வேலை இத்துடன் மீன் பராமரிப்பு எப்படி டீச்சர் உங்களால் இதெல்லாம் முடியுது???? கொஞ்சம் உங்க எனெர்ஜிய ஸ்பீட் போஸ்ட் இல் அனுப்புங்களேன் :))


    புதிய வரவுக்கு வாழ்த்துக்கள். எங்கே பூசார காணோம் தங்க பிஷ் ன்ன ஒடனே கோச்சுகிட்டு தேம்சுக்கு போயிட்டாங்களோ :))

    ReplyDelete
  11. தங்கக் குஞ்சு - அருமையான பகிர்வு

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா