Wednesday 29 February 2012

வாரம் ஒரு வசனம்

பாடசாலையில் ஒவ்வொருவருக்கும் சில வேலைகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக staffroom alter என் பொறுப்பில் இருக்கிறது. அந்த மேடையில் ஒரு சட்டம்... சிந்திக்கவென்று அழகான ஒரு வசனத்துடன் அமர்ந்திருக்கும். பிரதி புதன் காலையும் வசனத்தை மாற்றி வைக்கிறேன்.

இதுகாலம் வரை பயன்படுத்தியவற்றை ஏற்கனவே ஒரு பெட்டி நிறையச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். புதிதாக எதுவும் தேடவேண்டியதில்லை. காலத்துக்கும் சர்ந்தர்ப்பத்துக்கும் பொருந்த சமயங்களில் பொருத்தமான வசனங்கள் தன்னாலேயே என் கண்முன் வந்துவிழும்.

சிறுவயதுமுதலே என் வகுப்புத் தோழியாக இருந்த என் மாமிமகள் இரண்டு நாட்கள் முன்னர் ஊரில் காலமாகிவிட்டார். என் வயதொத்த தோழி, சிலகாலமாகவே நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருந்தார். மரணச்சடங்குகள் நேற்று நடந்திருக்கும்.

இரண்டு வருடம் முன்புவரை எங்கள் பாடசாலையில் கற்ற மாணவரொருவர், 20 வயது. கடின உளைப்பாளி; ரக்பி வீரர். விளையாடிவிட்டு இரவு ஜிம் போய் வந்து உறங்கியவர் எழுந்திருக்கவில்லை. மரணபரிசோதனைகளிலும் மரணத்திற்கான காரணங்கள் தெரியவரவில்லை. நேற்று இரவு எங்கள் பாடசாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தேறின.

கொஞ்சநாள் முன்பு ராஜேஷ், இப்போ இங்கு ஏஞ்சல் அம்மா செய்தி.
மரித்த இவர்கள் அனைவருக்காகவும் அவர்கள் குடும்பத்தினர்க்காகவும் என் பிரார்த்தனைகள்.

இந்தவாரம் எங்கள் alter -ல் வைப்பதற்காகத் தேடியபோது என் கவனத்தைக் கவர்ந்த வசனம்...
Death is God's way of saying..
YOUR TABLE IS NOW READY.


May they all rest in peace.
@}->--