Saturday 27 March 2010

ஒரு பிறந்தநாள் பார்ட்டி

ஹைஷ் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஃபேஸ் பெய்ண்டிங் செய்ய நானாகவே ஒப்புக்கொண்டேன்.
நான் பயந்து ஓடி விடுவேன் என்று நினைத்த சந்தனாவைத் தேடிப் போய் ...(அப்படியே மாடலாக ஒரு எருமையையும் தேடிப் பிடித்து.. வேறு ஒரு ஆள் உதவினாங்க. கன்றுக்குட்டி பார்க்கப் பசுக்கன்று போலவே இருந்தது.) பார்த்துப் பார்த்து வரைந்தது இந்த முகம். ;) 
சும்மாவே வாயை ஒரு மாதிரியாகப் பிடித்து இருந்தாங்க இந்த அம்மா. பிறகு இந்த அழகான பிராணியையும் வரைய வேண்டியதாகி விட்டது. 
~~~~~~~~~~~~~~~~~~~~~
பூஸ் பார்க்கப் பாவமாக இருந்தார். களைத்துப் போய் இருந்தார். ஆனாலும் அழகாக முகத்தைக் காட்டினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகத்தைக் காட்டாமல் முகத்தில் ரோஸ் வேண்டும் என்றால் என்ன செய்வது! இப்படித்தான் வரையமுடியும் அம்முலு. ;)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பப்பி மனதுக்குள் டோரா ஜெபம் பண்ணிக் கொண்டே தன் பால் வடியும் முகத்தை ஆடாமல் அசையாமல் பிடித்துக் கொண்டு நின்றார்.
 ஆனாலும், டோரா ஒரு முறை லேடி காகா போலவும் மறு முறை பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவும் தெரிய, இரண்டு டப்பா ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, ட்ரையர் பிடித்துக் காய வைத்து ஒருபடியாக இது. டோரா... மாதிரியே இருக்கிறாங்க, இல்லையா! ;)
~~~~~~~~~~~~~~
இவ்வளவு பேர்தான் முகத்தைக் காட்டியோர். என் வேலை முடிந்தது. எல்லாம் மேக்கப் கிட் இல் போட்டுக் கொண்டு கிளம்புகிறேன். 
அடுத்த முறை பார்ட்டி ஏதாவது என்றால், ஒரு ஐந்து நாளாவது முன்னால் சொல்லி விடுங்கள், வசதியாக இருக்கும். ;)

சமர்ப்பணம்

எனக்கு இந்த விருதினைக் கொடுத்துக் கௌரவித்த கவிசிவா, விஜி, ஜலீலா மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எதிர்பார்க்கவில்லை இதை. எனக்கு இந்த வலைப்பூக் கலாச்சாரம் இன்னமும் முழுவதாகப் புரியவில்லை.

ஏதோ ஓர் ஆசையில் ஆரம்பித்த வலைப்பூ; இன்னமும் மாதங்கள் மூன்று கூட வயதாகவில்லை என் உலகிற்கு. அதற்குள் விருதா! இதற்கெல்லாம் தகுதியானதாக நான் என்ன செய்து இருக்கிறேன் என்று புரியவில்லை. ;) இருப்பினும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஆசிரியத் தோழமைகளுக்கும் நெருங்கிய உறவுகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்த என் திறமைகள், வெளி உலகுக்கும் தெரியவரக் காரணமாக இருந்த அறுசுவை இணையத்தளத்திற்கும் அதன் நிர்வாகத்துக்கும் எனக்குக் கிடைத்த இந்த விருது சமர்ப்பணம். 

அன்புடன் இமா 

பிடித்த 10 websites

பிடித்த பத்துப் பெண்கள், பிடித்த பத்துப் பின்னூட்டங்கள் என்று சங்கிலிகள் ஆரம்பிக்குமுன்பே.. வெகு காலம் முன்பே இமாவின் இந்தத் தேடல் தொடக்கி விட்டது. இதோ இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். 

எச்சரிக்கை 
கையில் இருப்பதைத் தூரப் போட்டுவிட்டு வாருங்கள், கோபத்தில் விசிறி எறிந்து திரையை உடைத்துக் கொண்டால் நான் பொறுப்பு இல்லை. ;)
முதலில் ஒரு 'பெய்ன்ட்பிரஷ்' கைவண்ணம்.

1) 'Rotorua' போன போது எல்லோரும் அங்கிருந்த 'mudpools' பார்த்து ரசிக்கையில் நான் மட்டும் தனியே சைட் அடித்த  
'manuka' செடியில் ஒரு வெப்சைட்
2) one. two, three.. bumble bee
3) Honey! be my food!! 
4) வலைப்பூ!
5) பின்னப்பட்ட வலையில் பறவை சிக்கும், இது பறவையில் பின்னப்பட்ட வலை.
6) வானமே எல்லை!
7) கண்ணுக்குத் தெரியாத வலை
 
8) ஒளிந்து, மறைந்திருக்கிறேன்
9) 'பக் பக்' எண்டு இருக்குது எனக்கு!
 
10) வலையில் மாட்டுமா இந்த நத்தை!?
பத்தோடு 11) ஆக...
அழகே, அழகு! எந்திரத்தால் முடியுமா இது!
12) காத்திருப்பு 
13) ஈ-மீல்
14) வலையில் ஒரு வண்ணமில்லா வண்ணத்துப் பூச்சி

15) இவை கூட உணவாகுமா!!
(16 )

17) பெரியதோர் வலைப்பின்னல்

18) சிக்கலான ஒரு வலை
ம்... பிடித்த பத்துப் பெண்கள் பற்றிப் போடுவதை நடுவில் நிறுத்தி விட்டு.. என்ன இது!! 'இமாவுக்கு எண்ணத் தெரியல,' என்று எண்ணும் 'சிந்தனைவாதிகளே' கேளுங்கள்.
இந்த இடுகை 'இரண்டில் ஒன்று' (2 in 1)
அதாவது, எனக்கு இயற்கையன்னையை மிகவும் பிடிக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாருக்காவது பகுதி பகுதியா தெரிஞ்சுதா முன்னால!! sorry. ;(
சிலருக்கு 'தலைப்பா' நம்பர்லாம் தெரிஞ்சு... 'அது என்ன ஆறு?' என்று கரிசனமா வந்து கேட்டாங்க? ;) இனிமேல் கவனமா இருக்கிறேன். ;) பண்ணின தப்பெல்லாம்  மறைக்கிறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டேன். ;( பன்னக் குருத்தைப் போட்டு... அதைப் பண்ணி இதைப் பண்ணி! ஒன்றும் வர்க் அவுட் ஆகல. ;(
அண்ணாமலையான் கார் றெக்கை கட்டிப் பறக்குது போல. ;) என் எல்லா அட்டெம்ப்ட்களையும் தாண்டி... (நல்ல வேளை 'சேவ்' பண்றப்போ வழமையாப் போடுற 'கோர்ட்' இல்லாம, ஒழுங்கா ஏதோ தலைப்பு மாதிரி தெரியுற மாதிரி போட்டு இருந்தேன், தப்பித்தேன்.)  நான் எடிட் பண்ணி முடிக்க முதல் ஓடி வந்து 'ok' & 'double ok' சொல்லிட்டுப் போய்ட்டாங்க. ;) வேலை நடுவுல... 'பின்னூட்டம்' பார்த்ததும் ஷாக் ஆகிப் போச்சு. ;)

தடங்கலுக்கு வருந்துகிறேன் அண்ணாமலையான். ;( பின்னூட்டத்தை எப்பிடியாவது இணைத்து விடுகிறேன். ;)

(பி.பெ- 3 விரைவில்)

Monday 22 March 2010

பிடித்த 10 பின்னூட்டங்கள் (8 - 10)

தொடருகிறது..... 

8. என் தாயார் செபா அவர்களது வலைப்பூ அறிமுகம் வெளியான போது அங்கு ஓரிடத்தில் எனக்கு பதில் சொல்கையில்
  athira சொன்னது…
//உங்கட வீட்டில 'கர்...' ஓகே. விருந்துக்குப் போற இடத்திலயுமா!!!/// ஆன்ரி வீடுதானே? அப்போ சொல்லலாம்தானே... ஆன்ரி என்ன ஆரோவோ?   

மனதை நெகிழவைத்த பின்னூட்டம், மனதில் இருப்பது தான் வார்த்தையில் வரும்.   

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வந்த பின்னூட்டம் இது என்பதாக நினைக்கிறேன்.  அதிரா மட்டுமல்ல, என்னைத் தெரிந்த பலரும் இவ்வாறு மனதில் நினைக்கிறார்கள் என்பது தெரியும்.

ஊரில் கற்கையிலும், ஏன் கற்பிக்க ஆரம்பித்த பின் கிடைத்த என் தோழிகளுக்கெல்லாம் கூட அவர் 'மம்மி'யாக இருந்தார். இங்கும் அதே போல் எல்லோரும் பிரியமாக இருக்கிறீர்கள். (பப்பி 'கிரான்மா' என்று கூப்பிடுது. ;) செல்வி முதல்முதலில் வலைப்பூக்களில் கொடுத்த பின்னூட்டம் இவருக்குத்தான். )

அனைவருக்கும் ஆழ்மனதில் இருந்து என் நன்றிகள். (இதுக்காக மம்மியையும் 'சங்கிலியில' இழுத்து விட்டுராதீங்க. இப்போ எழுத முடியாமல் இருக்கிறாங்க.)

9. இது போல் அம்மா வலைப்பூவில் நான் இட்ட முதற்பின்னூட்டம் பிடிக்கும். அவர் வலைப்பூ முதல் இடுகை பார்த்த நிமிடத்தில் சந்தோஷமாக, பெருமையாக இருந்ததே, அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதே சந்தோஷத்தோடு சட்டென்று

பிடித்த 10 பின்னூட்டங்கள் (5-7)

திரும்பவும் நினைவுபடுத்துகிறேன்.. இது ஒழுங்கு முறை அல்ல. பிடித்த அனைத்தும் அல்ல. ;)

5 . 'அறுசுவை அனானி' ஒருவர் அவ்வப்போது வந்து பின்னூட்டம் + :) இடுவார். நானும் 'யாரோ' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ;) இங்கு அவர் பெயரையும் (அ. அ) சேர்ப்பது என்று நினைத்துக் குறித்து வைத்திருந்தேன்.
என்ன ஆச்சரியம்! நேற்று அவரிடமிருந்து ஒரு பின்னூட்டம், ஆனால் மெய்லில். (யாரும் 'யார்?' என்று கேட்கக் கூடாது. சொல்ல மாட்டேன்.) ;)

மெய்லில் இருந்து முக்கியமான வரிகளை மட்டும் தருகிறேன்.

//இன்னிக்கு ஒரு நிமிஷம் PRAY  பண்ணினேன்  நீங்க 8  மணிக்கு ஜெபம் பண்றதா சொல்லி இருந்தீங்க. டைம்  FOLLOW பண்ணல மறந்துட்டேன்.// கண்கள் பனித்தன.
நன்றி தோழி.

நீங்க எதுக்கு உங்களை அனானி என்று குறிப்பிடுறீங்க!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6. எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் திடீரென்று ஒரு நாள் பின்னூட்டம் கொடுத்து இருந்தார். ஒரு நாள், பொழுது போகாமல் கிறுக்கிய ஒரு கிறுக்கல் என்னும் இடுகையின் கீழ் வந்த

அண்ணாமலையான் said...
athu sari rendu mm potta இம்மா ல வரும்? இமாக்கு imaa la சரி? பொழுது போகலேன்னா இத சரி பாக்க வேண்டியதுதானே?/////
இன்னொருமுறை வந்து 'பங்களாவாசியா நீங்க?' என்று கேட்டு வைத்தார். நிறைய சந்தேகம் வரும் அண்ணாமலையானுக்கு. ;)
 
இமா, இவருக்காக அப்பப்போ 'சிரி'யஸ் பதில்களை விட்டு விட்டு, சீரியஸ் பதில்கள் போட வேண்டி இருக்கு. ;)
 
தொடர்ந்து வாங்க அண்ணாமலையான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7. ஒரு முறை, இடுகைக்குக் கருத்து எதுவும் தோன்றாமல் சும்மா எடுத்த ஒரு படத்தைப் போட்டுத் தலைப்பிடக் கோருகிறேன். அங்கு வந்து அழகாக...


செந்தமிழ் செல்வி said...
உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!?? /////
அதற்கு என் பதிலில் ஒரு பகுதியாக //இப்ப எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, படம் இதை விட அழகா எடுக்க முடியலையேன்னு. அடுத்த க்ளிக் அடிபடுறதுக்குள்ள கலைவு கண்டு பறந்துட்டாங்க.. ;( // என்று போட்டிருந்தேன்.
இனிமேல் ஒழுங்கான படம் மட்டும் தான் போடுவது. ;)
ஜோக்குட்டி கூட வருவதால் இவங்க பின்னூட்டங்கள் விசேடம். அவர் வளர்ந்தால் இவங்களும் வளருவாங்களோ!! ;)

இது நான் ரசித்த அழகான பின்னூட்டம். பாராட்டுக்கள் செல்வி. ;)
தொடரும்... 
பி. கு 
போரடிக்கிறேனா!! :) வேறு வழி இல்லை. ;) நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக இருக்கிறது என் கதை. நேரம் கண்டால் 'நெட்'டைக் காணோம். நெட்டைக் கண்டால் நேரம் காணோம். ;) இதில் இரண்டு 'சங்கிலிகள்' வேறு. ;) பிழை பொறுத்தருள்க. 

Saturday 20 March 2010

பிடித்த 10 பின்னூட்டங்கள் (1 - 4)

செல்வி சொல்லி விட்டார்; எப்படியாவது கொடுக்கலாம், விதிமுறைகள் என்று எதுவும் இல்லை என்பதாக.

ஒழுங்கு என்பதெல்லாம் கிடையாது. பிடித்தவற்றில் சிலதை (கவனிக்க, சிலதை மட்டுமே) இங்கு குறிப்பிடுகிறேன்.
அப்படியே என் வலையுலக உறவுகள் சிலரையும் உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று எண்ணம்.

என் முதல் இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் மறக்கமுடியாதவை.

எழுதலாமா வேண்டாமா!
என்ன எழுதுவது!
சரியில்லை என்று யாராவது வந்து சொல்லி விடுவார்களோ!
யாரும் வராமலே விட்டுவிடுவார்களோ! இப்படி ஒரு முழுநீள சந்தேக லிஸ்ட்டை மனதில் வைத்துக் கொண்டு, வலைப்பூவில் எனது முதலாவது இடுகையை வருடம் பிறந்த அன்று (இங்கு அது ஒரு நாள் முன்னதாக வந்திருந்தது) வெளியிட்டேன். செபாஅம்மாவிடம் கூடச் சொல்லவில்லை. ;)

அப்படி இருக்க... தன் மோப்ப சக்தியைப் பயன்படுத்தித் தேடி ஓடி வந்து முதல் ஆளாக





ஜீனோ said...
Aunty,Wish you a very Happy New Year..Have a great 2010!! Geno wishes you all the very best for your blogging world..I am going to be one of the frequent visitors for sure! :)
எனக்கு பின்னூட்டம் மெய்லில் வரும் என்று கூடத் தெரியாது அப்போ. பார்த்ததும் அப்படி ஒரே சந்தோஷம். (அப்போ ஜீனோ வலைப்பூ ஒன்றுக்குச் சொந்தக்காரராக இருக்கவில்லை.) 'அறுசுவை'யில் என்னை 'இஞ்சி டீ, பால்டீ, ஆன்ட்டீ' என்று விழித்துக்கொண்டு இருந்ததால் நானும் சந்தோஷமாக 'என் செல்ல மருமகன்' ஆகத் தத்து எடுத்துக் கொண்டேன். ;D

ஜீனோ கொடுக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே என்னைச் சிரிக்க வைக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டாவதாக வந்த






அருண் பிரசங்கி said...
அம்மா முதலில் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... இனிப்பு வகைகள் அனைத்தும் அருமை....எனக்கு கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க... என்னோட முகவரி இருக்குல... நெறைய எழுதுங்க... உங்க உலகத்தை சுத்தி பார்க்க நாங்க ரெடி... ஆமாம் சொல்லிட்டேன்... நல்லது அம்மா... மீண்டும் பார்க்கலாம்... என்றும் உங்கள், அருண் பிரசங்கி
சொன்ன மாதிரியே மீண்டும் பார்க்கிறார். ஆனால் பின்னூட்டங்கள் வாய்வார்த்தையாக வந்துவிடுவதால் இங்கு காணக்கிடைக்காது. ஒரு வருடம் முன்பு வரை அறுசுவையில் 'சிரித்த முகமான இமா' என்று என்னைக் கிண்டலடித்துக் கொண்டிருந்த அருண்பிரகாஷ்தான் என்னை 'அம்மா' என்று தத்து எடுத்துக் கொண்ட முதல் பிள்ளை. (வீட்டில் நான் 'மம்மி') திடீர் திடீரென்று தொலைபேசி அழைப்புகள் வரும். ;)
முக்கியமான தகவல், இமா 'வலையில்' இடறி விழுந்தால் கை கொடுக்கும் இருவரில் முக்கியமானவர் இவர். இரண்டாவது... ம்..ஹூம், சொல்ல மாட்டேன். பெயர் சொல்லித் திட்டு வாங்க விருப்பமில்லாததால் ___  ஆக விட்டு விடுகிறேன். ;)

அருண்மகனும் மருமகனும் வாழ்த்தியபடியே 2010  எனக்கு நல்லபடி போகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. என் மனதைத் தொட்ட பின்னூட்டம் வாணியுடையது.

   சமீபத்தில் வாணி வலைப்பூவில் ( Iris Folding )





athira said...

சூப்பர் வாணி. பொறுமையாகச் செய்து எங்கட இமாவை அடிச்சிட்டீங்க.... கடவுளே படித்ததும் கிழித்திடுங்கோ... மீ. எஸ்ஸ்ஸ்ஸ் ///// ;D






vanathy said...
அதிரா, என் குரு இமா தான். நான் அவரின் உண்மையான சிஷ்யை. ///////
மனதைத் தொட்டது, மகிழ்வளித்தது, மனநிறைவு தந்தது.

என்றும் என் மனதில் இடம்பெறும் இந்தப் பின்னூட்டம். @}->-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4. தானும் சிரித்து எல்லோரையும் சிரிக்க வைக்கும்
athira has left a new comment on the post "ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. ":

சுஜாதா சாரோட செல்லம்//// ஜீன்ஸ்... என்னால முடியல்லே.... கிக்...கிக்... கக்..க...காக்க்க்க்க க்காஅக்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ( குறை நினைக்கப்படாது அக்காவுக்கு சிரிச்ச்.... கிக்...கிக்..கீஈஈஈஈஈ /////

அப்பாடி. ;) என்னாலையும் முடியேல்ல. ;)

இது ஜீனோவின் வலைப்பூவில் வந்த பின்னூட்டம். ;)

இந்த அதிராக்காவின்ட அலுப்புத் தாங்க முடியாது. ;) எப்பிடித் தான் தட்டுறாவோ! 'கீ' போர்ட்ல 'k' அழிஞ்சு போயிருக்கும் இவ்வளவுக்கும். ;) ஆனால் கொடுமை கிடையாது. சிரிச்சுச் சிரிச்சே கொல்லுவாங்க. என் உலகத்திலும் இவரது பின்னூட்டங்கள் ஏராளம், இருந்தாலும் சமீபத்தில் சிரிக்கவைத்த பின்னூட்டம் என்பதால் இது. :)

என்னவோ தெரியேல்ல.. நான் நினைக்கிறதை, நினைச்சும் எழுதாமல் விடுறதை இவங்க எழுதீருவாங்க - சுருக்கமாச் சொன்னால்.. இமா அடக்கி வாசிக்கிறதை இவங்க 'ஓபினா' வாசிப்பாங்கள். ;) என் அதே அலைவரிசையில் இன்னொரு ஒலிபரப்புச் சேவை. நிறைய கரட் சாப்பிடுற ஆள் இவ. மற்றவங்க கண்ணில் படாதது எல்லாம் இவவுக்குப் பட்டுரும். ;) உ+ம் ஜீனோவின் ஆல்பம் பார்த்த விதம். எப்பவும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பாங்க உ+ம் இமாவைப் பார்க்காமல் இமாவுக்குப் பின்னால தெரிஞ்ச பூச்சியை! பார்த்தது!!.

மொத்தத்தில் அதிரா ஒரு 'ஊட்டமான ஊசி ' ;)

 பின்தொடருங்கோ ... 

எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள்

இமாவுக்கு சீரியஸாக எதுவும் எழுத வராது, என்பது தெரிந்தும் என்னையும் மதித்து தொடர் பதிவுக்கு அன்பாக அழைத்த விஜிக்கு முதலில் (சீரியஸாக) என் நன்றிகள். ;)

நிபந்தனைகளை ஒரு முறை படித்துக் கொள்கிறேன். 
1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது., ம்...
2. வரிசை முக்கியம் இல்லை., சரீ...
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், - இது நிபந்தனை இல்லை, ஓகே.(அப்போ, பல துறைகளில் உள்ள ஓர் பெண்மணி!)
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்... - யோசிக்க வேணும். பார்க்கலாம். ;)

ம்.. உறவினர் தானே வேணாம். ஓகே! ரெடி, ஸ்டார்ட்... 'டுமீல்'
~~~~~~~~~~~
என்ன பண்றது என்றே தெரியலையே!! திடீர்னு யாரையாவது மனசுல நினச்சு தட்டி வச்சுட்டு பிறகு வந்து பார்த்தா... வேற யாராச்சும் முன்னாடியே போட்டிருக்காங்கபா. ;(
திரும்பத் திரும்பக் குட்டிச் சுவர்லையே முட்டி முட்டி நெற்றி வீங்கிப் போச்சு. ;(

எனக்குப் பிடிச்ச ஒரு ஆள் இருக்காங்க... இன்னும் அவங்களைப் பற்றி யாருமே எழுதல. நாம எழுதி அசத்திரலாம். அந்த அக்காவை எனக்கு பிறந்த நாள்ல இருந்தே தெரியும். நிபந்தனைக்குப் பொருந்தி வராங்க. போதாததற்கு ஒரே சமயத்தில் 'வெவ்வேறு துறையில் உள்ள' நபர் வேற. அவங்க ஒரு ஆளைப் பற்றி எழுதினாலே பத்துப் பேரைப் பற்றி எழுதினதுக்குச் சமானம்.
சரி, எழுதிரலாம்.

பேர்.. அது இருக்கு, கடைசில சொல்றேன். இப்போ கேளுங்க,
துறை 1 ) கல்வி - அனுபவம், மூணு வயசில இருந்து இன்றுவரை
            2 ) சமையல் - 27, 28 வருஷம் இருக்கும் 
            3 ) கைவினை - பிறந்ததுல இருந்தே கையோடதான் இருக்காங்க
            4 ) தோட்டவியல் - அது இருக்கும் ஒரு 28 வருஷம்  
            5 ) எழுத்து! - மூணு வயசில இருந்தே எழுதுறாங்க.
            6 ) தையல் - ஸ்கூல்ல இருக்கிற வரைக்கும் அதுக்கும் இவங்களுக்கும் எட்டாத தூரம். (ஒரு வியாழக்கிழமை, மதியம் ஸ்கூலுக்குக் கிளம்புறப்ப பார்த்துக் கடுமையான தலைவலி வரவும் இவங்க அம்மா அன்று தையல் டீச்சர்  ஸ்கூலுக்குப் போகல என்கிற சரியான தகவலைச் சொல்லி இவங்களைக் கிளம்பிப் போக வச்சாங்க.) பிறகு ஒரு மாதிரி தன் வீட்டுத் தையல் எல்லாம் தானே பண்ற அளவுக்குத் தேறிட்டாங்க.
            7 ) பெய்ண்டிங் - இது என்ன பெரிய விஷயம். நானே பண்றேன்.  முதல்ல 'நெய்ல் பாலிஷ் ரிமூவரைப்' பூசி க்ளீன் பண்ணிட்டு 'பேஸ் கோர்ட்' கொடுக்கணும். பிறகு கலரைப் பூசிக் காய விட்டு கடைசில 'டாப் கோர்ட்' பூசிட்டா சரி.
            8 ) புகைப்படம் - அவங்க காமரால நிறைய இடத்தில 'கோர்ட்டிங்' காணாமல் போய் இருக்கு. (அந்த அளவு... நகம் வளர்த்து வச்சிருப்பாங்க) 
            9 ) விலங்கியல் - இன்னும் எந்தப் பிராணியும் கம்ப்ளைன்ட் கொடுக்கல, பிடிக்காட்டியும் போஸ் கொடுத்துட்டிருக்கு. அதனால் யாரும் வந்து பிடிச்சுட்டுப் போகல. கஷ்டப்பட்டு யோசிச்சு ஒரு மாதிரி ஒன்பது வந்தாச்சு. 
பத்தாவது துறை... அட! எப்பிடி மறந்தேன்!! ;) இவங்க முன்னால துறைமுக வீதில இருந்தாங்க, ஒரு... முப்பத்திரண்டு வருஷம் இருக்கும்.

(போட்டோவும் போடணுமா! ம்.. சரி.. பொறுங்க இருக்கானு பாக்குறேன். கிடைச்சாச்சு.)

இவங்கதான் எனக்குப் பிடித்த முதல் பெண்.. பெயர் இமா ;)

பின்ன! எல்லாருக்கும் முதல்ல தன்னைத் தானே பிடிக்கணும் இல்ல! அப்பதான் அவங்களுக்கு மத்தவங்களைப் பிடிக்கும். மத்தவங்களுக்கு அவங்களைப் பிடிக்கும். தன்னை ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் மத்தவங்களை ரசிப்பாங்க.

இது சாட்சாத் இமாவேதான், நம்பணும் எல்லாரும். (இமா பக்கத்துல எமா, 'க்வீன் நீ' என்று சொல்லலாம் மாதிரி இருந்தாங்க. ;) அவங்களைக் கேட்காம படம் போட வேணாம் என்று விட்டுட்டேன். இவங்களுக்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா! அவரும் எனக்குப் பிடித்த பெண் தான் .)

இமாவிடம் எனக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லணும்ல!! இமா எப்பவும் 'இமா'வாவே இருப்பாங்க. ரொம்..ப அழகா, க்யூட்டா இருப்பாங்க. ;)) (படம் பார்த்தீங்களா!) அமைதியா 'பேசுவாங்க' (ம்.. இந்த வரியை இலங்கைத் தமிழில் வாசிக்க வேணும்.) எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க. ('லூசு' எல்லாம் கிடையாது, வள்ளுவர் சொன்னதை தப்பாம ஃபாலோ பண்ற ஒரே ஆள், தமிழ் கூறு நல் உலகத்துல இமா மட்டும்தான்.) இவங்கள்ட எனக்கு முக்கியமா பிடிச்ச விஷயம் இவங்களை நிறையப் பேருக்குப் பிடிக்கும் என்பது. மற்றது... ('செல்ஃபூ' என்று பலபேர் கத்துறது காதில விழுது. இதோ, இதோ கிளம்பறேன்.. கிளம்பிட்டே இருக்கிறேன்.) ;)

சிரித்துக் கொண்டே எழுதினாலும் சீரியசாகத் தான் எழுதி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் நான் சரிதான் என்றே தோன்றுகிறது. எனக்கு இமாவைப் பிடிக்கும். மிக மிகப் பிடிக்கும். ;) மற்றவர்களுக்கு இமாவைப் பிடிக்கும் என்பதால் இமாவுக்கும் இமாவைப் பிடிக்கும்.

நன்றி விஜி. ;)
தொல்லை என்றெண்ணாமல் தொடர்ந்து படித்து முடித்த அனைவருக்கும் என் நன்றிகள். ;)

எனக்குப் பிடித்த பெண்கள் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோர் பெயரையும் சுருக்கி ஒரே இடுகையில் போட விரும்பவில்லை. அதனால்....

பகுதி 2 விரைவில்...

Friday 19 March 2010

say cheese ;D

 
ஸ்கூல்ல ஒரு குழப்படி ஃப்ரென்ட் இருக்கிறா. எப்பவும் கமராவோட திரிவா. ;) ஸ்கூல் மாகசினுக்கு எண்டு நடக்கிற எல்லாத்தையும் 'க்ளிக்'. யாரையாவது கண்டால் 'say undies' என்று சொல்லுவா, அப்பதான் படத்தில சிரிச்ச மாதிரி தெரியுமாம். 
 
சரி... இப்ப வந்து இருக்கிற எல்லாரும் வரிசையா நில்லுங்கோ. 
 
உயரமான ஆக்கள் எல்லாரும் பின்னால போங்கோ. 
 
குட்டீஸ் எல்லாரும் முன் வரிசைல வந்து பந்தியில இருக்கிற மாதிரி இருங்கோ. 
ம்.. வலக்கை, வலது முழங்கால்ல தாளம் போடுற ஸ்டைல்ல இருக்க வேணும்.  
ரெடி!!!! "ஸா.. ரீ.."
          ஐயோ!!! பாட வேணா....ம். சாரி செட் பண்ணுற ஆக்கள் இப்ப செட் பண்ணிக் கொள்ளுங்கோ. ;) ரெடி சொன்ன பிறகு பிறகு ஒருவரும் ஆடக் கூடாது.  
 
அது யார் அங்க... கொம்பு பிடிக்கிறது? சொல்லுக் கேட்க மாட்டீங்களோ! ஸ்கூல் பிள்ளையள விட மோசமா இருக்கிறீங்கள். ஒழுங்கா நில்லுங்கோ. இப்பிடி ஆடிக் கொண்டு இருந்தால்... கர்ர்ர்.... நான் எத்தின தரம்தான் தட்டுறது!!!!!!!!
ம். கடைசித் தரமா எடுக்கிறன். இப்ப.... கண்ண மூடினால் நான் பொறுப்பு இல்ல. 
ஓகே, ரெடி. 
   வண்...
          டூ... 
யார் அது ஓட ரெடியாகிறது? வண்டுக்குப் பயமோ உங்களுக்கு!!
அங்க போய் எதுக்கு நிக்கிறீங்கள்? அது பப்பிக்கு ரிசேவ் பண்ணி வச்சிருக்கிற இடம். அது கடைசியா மூச்சு வாங்க ஓடி வந்து நிக்கும். 
 சரி.... சரி.. இப்ப உண்மையாவே கடைசித் தரம்... 
one..  
      two....
              click 
தாங்க் யூ ;)
மெதுவா, கழுவிக் காய வச்சுப் பப்ளிஷ் பண்ணுறன். அப்ப வந்து யாருக்கு எத்தின கொப்பி வேணும் எண்டு சொல்லுங்கோ. ;)

Wednesday 17 March 2010

from a 'lovehart' ;)

இது என் குட்டித்தோழி வார இறுதியில் எனக்காக வரைந்து அனுப்பிய சித்திரம். உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. ;)

(ஸ்பெல்லிங்லாம் யாரும் கண்டுக்காதீங்க. குட்டிப் பொண்ணுப்பா. It's the thought that counts. She loves me lots.)

நான் வரைந்த ஓவியமே! - 3



இன்றுதான் அருகில் சென்று பார்க்கக் கிடைத்தது. இது ரூத் வரைந்த ஓவியம்தான். வலது பக்கக் கீழ் மூலையில் அவர் ஒப்பம் இருக்கிறது.


இந்த வாரம் வகுப்பில் நுழைந்த போது.. எங்கள் மூவரைத் தவிர மீதி அனைவரும் எங்கேயோ! போய் இருந்தார்கள். ;(


எதனால் எங்கள் கடந்த வகுப்புத் தள்ளிப் போயிற்று என்று சொல்ல வேண்டும்.
நான் வேலை பார்ப்பது ஒரு தனியார், கத்தோலிக்க பாடசாலையில். ஓவியவகுப்பு இடம்பெறவிருந்த அன்று 'ரைஸ் மீல்', அதாவது மதிய போசனத்தை வெறும் சாதம் (உப்பும் சேர்ப்பது கிடையாது) மட்டும் சாப்பிட்டு முடித்துக் கொண்டு அன்றைய உணவிற்கான பணத்தை 'கரிதாஸ்' ஸ்தாபனத்துக்கு நன்கொடையாக வழங்கி விடுவோம்.
முன்பாகவே இது பற்றி மாணவர்களிடம் பேசி விடுவோம். சில மாணவர்கள் தாங்களாகவே சோறு சமைத்து வர ஒத்துக் கொள்வார்கள். அரிசியை பாடசாலை கொடுத்து விடும். ஆளுக்கு இரண்டு கப் அளவுதான், அதிகம் இல்லை. எல்லோரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

நான்காவது பாட வேளை, சாதம் முழுவதையும் மைக்ரோவேவில் சுட வைத்து எடுத்து வைத்தது நான். என்னை நம்பி இந்த வேலையைக் கொடுத்து இருந்தார்கள். முக்கியமில்லாத வேலைகளை என் தலையில் கட்டி விடுவார்கள். ;) இந்தத் தடவை சொன்ன காரணம் - மற்றவர்கள் யாரும் வீட்டில் சோறு சமைப்பது இல்லையாம். சென்ற வருடம் வரை இதற்கெல்லாம் பொறுப்பாக இருந்த ஆசிரியை இவ்வருடம் மாற்றலாகிச் சென்று விட்டார். வழமையாக சாதம் சுட வைக்கும் ரூத் ஓவிய வகுப்பு எடுக்கச் சென்று விட்டார். மீதி இருவரில் ஒருவர் பிரேயர் பொறுப்பு, மற்றவர் மேற்பார்வை.

இந்த மூவருக்காகவும் மறு நாள் ரூத் ஸ்பெஷல் எடுப்பதாக ஏற்பாடு. ஆனால் அன்று பார்த்து லஞ்சுக்கு முன்பாக ஒருவர் காலை இடித்துக் கொண்டார். அவருக்குப் பன்னிரண்டு வருடங்களாக வலது குதியில் பிரச்சினை. இரண்டு வருடங்கள் முன்பாக திரும்பவும் தகடு மாற்றினார்கள். வலி பொறுக்க முடியாமல் தவித்தவரை வீட்டுக்கு அனுப்பி விட்டாயிற்று. மற்றவர் அவசரமாக ஒரு வேலைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். ரூத் போகிற போக்கில்  என்னிடம் 'அடுத்த வாரம் பார்க்கலாம்,' என்று சொல்லிட்டுக் கிளம்பி விட்டார். ;(

அந்த அடுத்த வாரம், இந்த வாரம் வந்ததும் 'நாங்கள்' மூவரும் ஒரு ஓரமாக அமர்ந்தோம். மற்றவர்கள் மறு பக்கம், அவர்கள் ஏதோ விதம் விதமான பிரவுன் கலர் எல்லாம் பூசு பூசு என்று பூசி வைத்திருந்தார்கள். நாங்கள் மூவரும் என்னமோ ஒன்றைத் தொலைத்தவர்கள் மாதிரி சோகமாக...

ரூத் வந்தார். கிளாஸ் எடுத்தார். ;) நான் இவ்வளவு தான் நடாத்தி இருக்கிறேன். ;)
அவர் சொல்லும் கலர் எல்லாம் எனக்குப் புரிவதேயில்லை. அந்தக் கத்தியை வேறு சீமெந்துக் கரண்டியைப் பிடிக்கிறது போல பிடிக்கிறேன் (என்று அவர் தான் சொல்கிறார்) ஆனாலும் தேறி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

கானமயிலாட்டம் ஆட முடியாது விட்டாலும் வான்கோழி ஆட்டமாவது ஆடலாம். ;)

Tuesday 16 March 2010

பூசணிக்காய்க்கு என்ன ஆச்சு!!

சமைத்தது போக மீதத்தைப் பிறகு சமைக்கலாம் என்று எடுத்து வைத்து இருக்கிறேன். ;)

Monday 15 March 2010

லஞ்சுக்கு வாங்கோ!

கிறிஸ் ஒரு முழுப் பூசணிக்காய் வாங்கி வரவும், மீண்டும் கை துருதுருத்தது. அறுசுவைக்கு ஒரு குறிப்புக் கொடுக்கலாம் என்னும் நோக்கில் தயாரானேன்.
நீர், நீள நீளமாக முகில்கள், ஒரு nikau palm, cabbage tree, flax, அலைகளைக் கொஞ்சமாவது 'koru' மாதிரி...மூலையில் ஒரு ஆமை என்று வரைந்து கொண்டேன்.
நினைத்தது போல் சுரண்ட வரவில்லை. ;) அதனால் 'ஸ்டெப் பை ஸ்டெப்' எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு இஷ்டம் போல் சுரண்ட ஆரம்பித்தேன். இருந்தாலும் அதே மரம்... என்ன கொஞ்சம் மாடர்ன் ;) 
ஃபிளாக்ஸ் கூட வேறு பூப் பூத்து விட்டது. ;)
ஒரு மீன் தொட்டி. 
ஒரு ஃபான் டெய்லும்...

...வாத்தும்.
 நாளை எல்லோரையும் வெட்டிக் கூறு போட்டுச் சமைக்க வேண்டியது தான். 
லஞ்சுக்கு வாங்கோ. ;)

Sunday 14 March 2010

ஜீனோவும் டோராவும்!

என் தோழி நேற்று மதியம் வந்து சட்டமிட்ட படத்தை எடுத்துப் போனார்.

அவருக்கு மிகத் திருப்தி என்பது முகத்தில், அந்த சிரிப்பில் தெரிந்தது. வரும்போது எனக்காக ஒரு பிஸ்கட் டப்பா கொண்டுவந்திருந்தார். எனக்கு அழகான டப்பாக்கள் சேர்க்கும் பழக்கம் இருப்பது அவருக்குத் தெரியும்.

ஆனாலும் இந்த டப்பாவிற்கு ஒரு சிறப்பு இருந்ததே! ;)
பாருங்க! டப்பா முகப்பில் ஜீனோவும் டோராவும்!! ;)

Saturday 13 March 2010

'அரடாகி'

'பின்னேரம் வந்து கதை சொல்கிறேன்' என்று நான் அதிராவிடம் சொல்லிவிட்டுப் போன 'பின் நேரம்' இப்போதான் வந்திருக்கிறது. ;)
'அரடாகி' போனது ஒரு பெரிய 'குட்டீஸ்' கூட்டத்தோடு என்பதால் படப்பிடிப்பு எல்லாம் நடாத்த இயலவில்லை. குட்டீஸை நடாத்திச் செல்வதே பெரும் பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. எனவே சில வாரங்கள் முன்பாக மருமகளோடு சுற்றுலாவிய காலத்தைய படங்களைப் பயன்படுத்த எண்ணி இணைத்துள்ளேன்.
(இது 'லுக்அவுட்' பகுதியில் இருந்து எடுத்தது.)
'Arataki' ஒரு பாதுகாக்கப்பட்ட அழகிய வனம். மனிதனால் அழிக்கப்பட்டு பண்ணையும் விவசாயமும் செய்யப் பயன்படுத்தப்பட்ட பூமியை மீண்டும் வனமாக்கும் வளமான முயற்சியில் உள்ள பிரதேசம்.
வருடா வருடம் எட்டாம் ஆண்டு மாணவர்களை அழைத்துச் செல்வோம். இது வரை பத்துத் தடவைகள் சென்றிருக்கிறேன். அலுத்ததில்லை ஒரு போதும்.

என் பதினைந்து வயதான, ஆறு வயது மாணவர் கல்விச் சுற்றுலா என்ற பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து 'Mrs. Chris, I no going anywhere,' என்று நினைவு வந்த போதெல்லாம் என்னிடம் வலியுறுத்திக் கொண்டு இருந்தார். இவருக்கு தன் பெற்றோர் வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் பிடிக்காது. சென்ற வருடம் பணத்தைக் கட்டிவிட்டு, பயணிக்க வேண்டிய அன்று காலை 'டமி பக்' ;) என்று ஆரவாரித்து 'நனா' வீட்டில் போய் செட்டில் ஆகிவிட்டார். இந்தத் தடவை 'அங்கு பெரிய ஊஞ்சல் இருக்கும், ஆடலாம்,' என்று விஞ்ஞான ஆசிரியர் ஆசை காட்டி அழைத்துப் போனார். குட்டியர் (இவர் நான் அண்ணா....ந்து பார்க்கும் உயரத்தில் இருப்பார்.) அரைமணிக்கொரு தடவை வந்து நேரம் கேட்பார், மூன்று பதினைந்துக்கு 'பிக்கப்' பாடசாலைக்கு வந்து விடும், அதற்குள் போய் விடுவோமா! என்கிற கவலை இருந்தது அவருக்கு.
'யூ ஆர் ஃபிட் மிஸ்,' என்று ஆச்சர்யத்தோடு எனக்குப் புகழாரம் சூட்டியபடியே உருண்டு உருண்டு நடந்த இருவர், இரண்டு முறை நடுவே தரித்து ஆத்ஸ்மா மருந்தை இழுத்துவிட்டு வந்த ஒருவர், 'ரேஞ்சர்' கத்தியதைப் பொருட்படுத்தாது அவரைத் தாண்டி உல்லாசமாக ஓடி சர்ரென்று பாதைப் பக்கச் சரிவில் சரிந்து உருண்ட ஒருவர் என்று... விதம் விதமான... என்ன சொல்வது! ;) அழகு மலர்க் கூட்டம் அது. ;) அடுத்த ட்ரிப் போகும் போது என்னோடு வாங்க, புரியும். ரசிப்பீங்க. ;) குழந்தைகள் நடுவே.... தினமும்... எனக்குக் கிடைத்துள்ள ஆசீர்வாதங்களில் மிகப் பெரியது இது. ;) 
~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு மிகப் பிடித்த தாவரம் இந்தப் பன்னம் - silver tree fern (ponga in Maori) http://en.wikipedia.org/wiki/Silver_Tree_Fern
   
இது 'nikau palm'.
'நிகோ' என்றால் 'தேங்காய் இல்லை' என்று அர்த்தமாம். ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு வந்து சேர்ந்த Maori மக்கள் இதனைத் தென்னை என்று நினைத்தார்களாம். பிறகு, காய்கள் பெருக்காமல் பறவைகளுக்கு உணவாகிக் காணாமற் போகவும் வந்த காரணப் பெயர் இது. (இங்குள்ள தாவரம் விலங்குகள் என்று பலவற்றுக்கும் அவற்றின் பெயர் அமைந்தமைக்கு ஒரு காரணம் இருக்கும்.)

இன்றைக்கு இது போதும். ;) கடைசியாக... முகப்பில் 'பன்னக்குருத்துப் போல என் ரசனைகள்,' என்று எழுதி இருப்பேன், பார்த்திருப்பீர்கள். இதோ அழகாக ஒரு koru.