Monday 22 March 2010

பிடித்த 10 பின்னூட்டங்கள் (8 - 10)

தொடருகிறது..... 

8. என் தாயார் செபா அவர்களது வலைப்பூ அறிமுகம் வெளியான போது அங்கு ஓரிடத்தில் எனக்கு பதில் சொல்கையில்
  athira சொன்னது…
//உங்கட வீட்டில 'கர்...' ஓகே. விருந்துக்குப் போற இடத்திலயுமா!!!/// ஆன்ரி வீடுதானே? அப்போ சொல்லலாம்தானே... ஆன்ரி என்ன ஆரோவோ?   

மனதை நெகிழவைத்த பின்னூட்டம், மனதில் இருப்பது தான் வார்த்தையில் வரும்.   

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வந்த பின்னூட்டம் இது என்பதாக நினைக்கிறேன்.  அதிரா மட்டுமல்ல, என்னைத் தெரிந்த பலரும் இவ்வாறு மனதில் நினைக்கிறார்கள் என்பது தெரியும்.

ஊரில் கற்கையிலும், ஏன் கற்பிக்க ஆரம்பித்த பின் கிடைத்த என் தோழிகளுக்கெல்லாம் கூட அவர் 'மம்மி'யாக இருந்தார். இங்கும் அதே போல் எல்லோரும் பிரியமாக இருக்கிறீர்கள். (பப்பி 'கிரான்மா' என்று கூப்பிடுது. ;) செல்வி முதல்முதலில் வலைப்பூக்களில் கொடுத்த பின்னூட்டம் இவருக்குத்தான். )

அனைவருக்கும் ஆழ்மனதில் இருந்து என் நன்றிகள். (இதுக்காக மம்மியையும் 'சங்கிலியில' இழுத்து விட்டுராதீங்க. இப்போ எழுத முடியாமல் இருக்கிறாங்க.)

9. இது போல் அம்மா வலைப்பூவில் நான் இட்ட முதற்பின்னூட்டம் பிடிக்கும். அவர் வலைப்பூ முதல் இடுகை பார்த்த நிமிடத்தில் சந்தோஷமாக, பெருமையாக இருந்ததே, அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதே சந்தோஷத்தோடு சட்டென்று

21 comments:

  1. நானாக யோசித்து இருப்பேனோ என்னவோ தெரியவில்லை. ஆள் ஆளுக்கு ஒரு டேலியா வேண்டுமானால் கொடுத்து இருப்பேன். ;)

    சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி செல்வி. ;)

    கூகிளாருக்கு என் மேல் என்ன கடுப்பு என்று தெரியவில்லை. இன்று, தான் நினைத்தது போலதான் 'பப்ளிஷ்' பண்ணுவாராம். ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி வாசியுங்கோ எல்லோரும். நான் நாளை ஒரு முறை அமைப்பைச் சரி செய்யப் பார்க்கிறேன்.

    (இது தான் பெஸ்ட் பின்னூட்டம். ;) எனக்கு நானே போட்டு இருக்கிறன். வேறு யாராவது இப்பிடிப் போட்டு இருக்கிறீங்களா?? யாராவது என் பேரை 'கின்னசுக்கு' அனுப்பி வையுங்க.;D )

    ReplyDelete
  2. இமா, உங்கள் பெயரை கின்னசுக்கு அனுப்பி விட்டேன். கின்னசிலிருந்து ஒரே குடைச்சல்.... என்ன சாதனை செய்தீர்கள் என்று. என்ன சொல்ல? எப்படி சொல்ல?

    செபா பற்றி உங்கள் பதிவு நல்லா இருக்கு. செபா ஆன்டிக்கு ஒரு ஹாய்.
    அதோடு அண்ணாமலையான், அறுசுவை ஆனி(சே அனானி), செல்வி அக்கா எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மனதை நெகிழவைத்த பின்னூட்டம், மனதில் இருப்பது தான் வார்த்தையில் வரும்.//// என் மனதையும் நெகிழ வைத்துவிட்டீங்கள் இமா...

    கடவுளே இதை எங்கட.. வனி மன்னிக்க வாணி பார்க்காமல் இருக்கோணும் இல்லாட்டில் டவல் அனுப்பிப்போடுவா எனக்கு...:).

    கின்னசிலிருந்து ஒரே குடைச்சல்.... என்ன சாதனை செய்தீர்கள் என்று. என்ன சொல்ல? எப்படி சொல்ல?/// இதுவரை பத்துப் பூச்சி, ஒரு பட்டர்பிளை, இரு ஆமை, கடைசியாக ஒரு Bunny(மேலே இருக்கு) பிடித்திருக்கிறார் எனச் சொல்லுங்கோ. இரு சங்கிலியும் பெற்றுக்கொண்டார் என மறக்காமல் சொல்லிடுங்கோ..

    இன்னும் அவவுக்கு ஒழுங்காக, முகம் காட்டி ஒரு படத்துக்கெண்டாலும் “போஸ்” கொடுக்கத் தெரியவில்லை:) அதுக்குள் கின்னஸ் கேட்குதாம்....

    தலையைக் குனியும் தாமரையே... இது போன படத்துக்கான கொமென்...ட்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  4. எல்லாப் பதிவுகளும் அருமை. பிடித்த பத்து பெண்கள் நைஸ் அன்ட் டிபரென்ட்! அசத்தலா இருக்கு.

    உங்க வேகத்துக்கு என்னால ஓடி வர முடியாது இமா..நீங்க போயிட்டே இருங்க..நான் மெதுவா, பதிவுகளை ஒண்ணொண்ணா படிச்சிட்டு வாரேன். :)

    ReplyDelete
  5. அதிரா, சொன்னேன். அவர்கள் animal control officer க்கு அதெல்லாம் குடுக்க முடியாது போம்மா என்று விரட்டி விட்டார்கள்.

    ReplyDelete
  6. இட்ஸ் ஓகே சந்து.. :) கண்ணத் தொடச்சுக்க.. :) இதுக்கெல்லாம் அழலாமா.. யாரங்கே.. ஒரு பாக்கெட் டிஷ்யு ப்ளீஸ்.. ரீச்சர் உம் மேல ரொம்ப அன்பாத்தான் இருக்காங்க.. கண்டிப்பா பதின்னொன்னாவது இடம் உனக்கேதான் :)))))))))))))))))))

    //தலையைக் குனியும் தாமரையே... இது போன படத்துக்கான கொமென்...ட்//

    haha athees.. good job

    ReplyDelete
  7. சந்து !!! சொர்க்கமே என்றாலுமே அது அதிராவைப் போல வருமா???? கிக் கிக் கிக் புரிஞ்சால் சரி.... அப்பாடா பத்த வச்சிட்டேன்....... இனிக் குப்புறக் கிடந்திடோணும்....... திட்டி முடியும்வரை...:):)

    உங்களுக்கில்லாத டிஷ்யூவோ இந்தாங்கோ துடைச்சிட்ட்டு பின்க்குள் ஒயுங்கா போட்டுடோணும்... கண்ட கண்ட வைரஸ் உலாவுதாம் அமெரிக்காவில:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்..

    வாணி... அனிமல் கொன்ரோல் ஆபிஷரோ??? ஹக் ஹக் ஹா... அதாராது?:) மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  8. வாணிக்கு ஒரு ;) + :D

    ~~~~~~~~~~

    அதிராவுக்கு ஒரு ;) + :)

    ~~~~~~~~~~

    மகிக்கு ஒரு ;)

    ~~~~~~~~~~

    சந்து... இதான் என் பிரச்சினையே! ;( நான் சொல்லி இருக்கேன் கவனிக்கலையா! ;( ஒழுங்கில இல்லை. அது போல இவ்வளவும் தான் என்பதுமில்லை. ;( கவலையா இருக்கு. என்னை மாட்டி விட்டுட்டீங்களே செல்விமா, நியாயமா!!

    ReplyDelete
  9. அதீஸ்.. நல்லாவே பத்திக்கிச்சு போல :) இருந்தாலும் ரீச்சரை வருத்தப்படவிடுவோமா?நல்லவேளை இன்னைக்கு எட்டிப்பாத்துட்டேன்..

    இம்ஸ் இம்ஸ்.. இது சீரியசான எல்போர்ட்டின் ஃபீலிங்க்ஸ் இல்லயாக்கும். சிரிச்சிட்டே சந்து எழுதின ஃபீலிங்க்ஸ்.. இந்தாங்கோ - அதீஸ் எனக்கு அனுப்பின டிஷ்யூ.. கண்ணத் தொடச்சிக்கோங்கோ..

    சந்து.. கார்ட் இல்லாட்டிப் போனா என்ன? சொக்லேட் இல்லாட்டிப் போனா என்ன? ரீச்சரோட அன்பு என்னைக்கும் உனக்கு இருக்கு.. கலங்காதே.. :))))))))

    ReplyDelete
  10. //சந்து.. கார்ட் இல்லாட்டிப் போனா என்ன? சொக்லேட் இல்லாட்டிப் போனா என்ன? ரீச்சரோட அன்பு என்னைக்கும் உனக்கு இருக்கு.. கலங்காதே.. :))))))))// சென்ட்டி தாங்கலையே!

    இமா,உங்க ;) க்கு ஒரு :)

    ReplyDelete
  11. imma pls collect this award from my blog

    http://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html

    congrats :)

    ReplyDelete
  12. Tkz for understanding Chandana. ;)

    Tkz for the award Kavisiva. ;)

    Tkz Mahi. ;)

    ReplyDelete
  13. பின்னூட்டம் எல்லாம் சுவாரசியமாக இருக்கிறது.கவி மாதிரி அனைத்து பின்னூட்டத்தையும் படையல் போட்டு இருக்கலாம்.சூப்பர்.செபா அம்மாவிற்கு என் விசாரிப்புக்கள்.

    ReplyDelete
  14. Imma pls collect this award from my blog
    http://vijisvegkitchen.blogspot.com/2010/03/blog-post_26.html

    ReplyDelete
  15. சந்து.. கார்ட் இல்லாட்டிப் போனா என்ன? சொக்லேட் இல்லாட்டிப் போனா என்ன? ரீச்சரோட அன்பு என்னைக்கும் (ரீச்சர் மருமகண்ட நட்பும் என்னைக்கும்) உங்கள்க்கு இருக்கு.
    கலங்காதே..:))))))))...ஏ....ஏ..ஏங்கோ!! :0):0)

    புஜ்ஜி கிட்ட நாக் அவுட் ஆனதாலை,ஜீனோ போடும் ஸ்மைலி கூடோ நோஸ் வீங்கிபோய் இருக்கு, டோன்ட் மைன்ட் படீஸ்! ;௦)

    ReplyDelete
  16. ஜீன்ஸ் அண்ணே.. அடங்குங்க.. அடங்குங்க.. ஜீன்சுக்கு ஒரு காலம் வந்தா எல்லுக்கும் ஒரு காலம் வரும்.. :))

    ReplyDelete
  17. அன்பு ஆசியா,
    //பின்னூட்டம் எல்லாம் சுவாரசியமாக இருக்கிறது.// இங்க உங்களுக்கு முன்னால இருக்கிறதைத் தானே சொல்றீங்க! ;)
    //கவி மாதிரி அனைத்து பின்னூட்டத்தையும் படையல் போட்டு இருக்கலாம்.// நான் இமா மாதிரி இருக்க விரும்பி அப்படிப் பண்ணிட்டேன். சாரி. நல்ல ஐடியா. நெக்ஸ்ட் டைம் உதவும் என்று குறித்து வைத்து இருக்கிறேன். நன்றி. ;)

    //செபா அம்மாவிற்கு என் விசாரிப்புக்கள்.// மறக்காமல் சொல்லி விடுகிறேன்.
    வருகைக்கு நன்றி, தொடர்ந்து வருக. ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி விஜி. ;) காலையில் போட்ட பதில் காற்றில் போய் விட்டதாகத் தெரிகிறது. நல்லவேளை கவனித்தேன். மீண்டும் நன்றிகள்.

    ~~~~~~~~~~

    //;௦)// அழகா இருக்கு பப்பி. என்ன, கடி வாங்கினாலும் கொஞ்சம் சிரிக்கிற 'டெடி பேர்' போல இருக்கிறீங்க.

    ~~~~~~~~~~

    ம்... அண்ணாமலையான், பப்பி முகத்தைத் தானே 'பிரமாதம்' என்று சொல்றீங்க! ;)

    நானும் சொல்வேனே, //பிரமாதம்// கார் முன்னால் நின்றாலும் கை கட்டி நிற்கும் போஸ் 'பிரமாதம்'. ;) 'லெக்சரர்' ஆக இருந்தாலும் ஒரு சொல்லில் பின்னூட்டம் போடும் திறன் 'பிரமாதம்'. ;) 'தொடர்ந்து வருக' என்று எழுதினால் மொப்சி கோச்சுக்கறாங்க. பரவாயில்ல, நீங்க தொடர்ந்து வாங்க. ;)

    ~~~~~~~~~~

    சந்தனா, அது என்ன 'எல்லு'???? புது ஃபாஷன் துணியா? எனக்கும் ஒண்ணு தச்சு அனுப்புங்கோ. ;)

    ReplyDelete
  18. இமா பிடித்த‌ பின்னூட்ட‌த்த‌ பார்ட் பார்டா போட்டு பின்னிட்டீங்க‌ போல‌
    உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.

    ReplyDelete
  19. ஜலீ, //சின்ன மலர் விருது// பெரிசா இருக்கு. ;) பெற்றுக் கொண்டேன். மகிழ்ச்சி, மிக்க நன்றி. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா