Saturday, 20 March 2010

பிடித்த 10 பின்னூட்டங்கள் (1 - 4)

செல்வி சொல்லி விட்டார்; எப்படியாவது கொடுக்கலாம், விதிமுறைகள் என்று எதுவும் இல்லை என்பதாக.

ஒழுங்கு என்பதெல்லாம் கிடையாது. பிடித்தவற்றில் சிலதை (கவனிக்க, சிலதை மட்டுமே) இங்கு குறிப்பிடுகிறேன்.
அப்படியே என் வலையுலக உறவுகள் சிலரையும் உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று எண்ணம்.

என் முதல் இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் மறக்கமுடியாதவை.

எழுதலாமா வேண்டாமா!
என்ன எழுதுவது!
சரியில்லை என்று யாராவது வந்து சொல்லி விடுவார்களோ!
யாரும் வராமலே விட்டுவிடுவார்களோ! இப்படி ஒரு முழுநீள சந்தேக லிஸ்ட்டை மனதில் வைத்துக் கொண்டு, வலைப்பூவில் எனது முதலாவது இடுகையை வருடம் பிறந்த அன்று (இங்கு அது ஒரு நாள் முன்னதாக வந்திருந்தது) வெளியிட்டேன். செபாஅம்மாவிடம் கூடச் சொல்லவில்லை. ;)

அப்படி இருக்க... தன் மோப்ப சக்தியைப் பயன்படுத்தித் தேடி ஓடி வந்து முதல் ஆளாக





ஜீனோ said...
Aunty,Wish you a very Happy New Year..Have a great 2010!! Geno wishes you all the very best for your blogging world..I am going to be one of the frequent visitors for sure! :)
எனக்கு பின்னூட்டம் மெய்லில் வரும் என்று கூடத் தெரியாது அப்போ. பார்த்ததும் அப்படி ஒரே சந்தோஷம். (அப்போ ஜீனோ வலைப்பூ ஒன்றுக்குச் சொந்தக்காரராக இருக்கவில்லை.) 'அறுசுவை'யில் என்னை 'இஞ்சி டீ, பால்டீ, ஆன்ட்டீ' என்று விழித்துக்கொண்டு இருந்ததால் நானும் சந்தோஷமாக 'என் செல்ல மருமகன்' ஆகத் தத்து எடுத்துக் கொண்டேன். ;D

ஜீனோ கொடுக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே என்னைச் சிரிக்க வைக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டாவதாக வந்த






அருண் பிரசங்கி said...
அம்மா முதலில் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... இனிப்பு வகைகள் அனைத்தும் அருமை....எனக்கு கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க... என்னோட முகவரி இருக்குல... நெறைய எழுதுங்க... உங்க உலகத்தை சுத்தி பார்க்க நாங்க ரெடி... ஆமாம் சொல்லிட்டேன்... நல்லது அம்மா... மீண்டும் பார்க்கலாம்... என்றும் உங்கள், அருண் பிரசங்கி
சொன்ன மாதிரியே மீண்டும் பார்க்கிறார். ஆனால் பின்னூட்டங்கள் வாய்வார்த்தையாக வந்துவிடுவதால் இங்கு காணக்கிடைக்காது. ஒரு வருடம் முன்பு வரை அறுசுவையில் 'சிரித்த முகமான இமா' என்று என்னைக் கிண்டலடித்துக் கொண்டிருந்த அருண்பிரகாஷ்தான் என்னை 'அம்மா' என்று தத்து எடுத்துக் கொண்ட முதல் பிள்ளை. (வீட்டில் நான் 'மம்மி') திடீர் திடீரென்று தொலைபேசி அழைப்புகள் வரும். ;)
முக்கியமான தகவல், இமா 'வலையில்' இடறி விழுந்தால் கை கொடுக்கும் இருவரில் முக்கியமானவர் இவர். இரண்டாவது... ம்..ஹூம், சொல்ல மாட்டேன். பெயர் சொல்லித் திட்டு வாங்க விருப்பமில்லாததால் ___  ஆக விட்டு விடுகிறேன். ;)

அருண்மகனும் மருமகனும் வாழ்த்தியபடியே 2010  எனக்கு நல்லபடி போகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. என் மனதைத் தொட்ட பின்னூட்டம் வாணியுடையது.

   சமீபத்தில் வாணி வலைப்பூவில் ( Iris Folding )





athira said...

சூப்பர் வாணி. பொறுமையாகச் செய்து எங்கட இமாவை அடிச்சிட்டீங்க.... கடவுளே படித்ததும் கிழித்திடுங்கோ... மீ. எஸ்ஸ்ஸ்ஸ் ///// ;D






vanathy said...
அதிரா, என் குரு இமா தான். நான் அவரின் உண்மையான சிஷ்யை. ///////
மனதைத் தொட்டது, மகிழ்வளித்தது, மனநிறைவு தந்தது.

என்றும் என் மனதில் இடம்பெறும் இந்தப் பின்னூட்டம். @}->-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4. தானும் சிரித்து எல்லோரையும் சிரிக்க வைக்கும்
athira has left a new comment on the post "ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. ":

சுஜாதா சாரோட செல்லம்//// ஜீன்ஸ்... என்னால முடியல்லே.... கிக்...கிக்... கக்..க...காக்க்க்க்க க்காஅக்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ( குறை நினைக்கப்படாது அக்காவுக்கு சிரிச்ச்.... கிக்...கிக்..கீஈஈஈஈஈ /////

அப்பாடி. ;) என்னாலையும் முடியேல்ல. ;)

இது ஜீனோவின் வலைப்பூவில் வந்த பின்னூட்டம். ;)

இந்த அதிராக்காவின்ட அலுப்புத் தாங்க முடியாது. ;) எப்பிடித் தான் தட்டுறாவோ! 'கீ' போர்ட்ல 'k' அழிஞ்சு போயிருக்கும் இவ்வளவுக்கும். ;) ஆனால் கொடுமை கிடையாது. சிரிச்சுச் சிரிச்சே கொல்லுவாங்க. என் உலகத்திலும் இவரது பின்னூட்டங்கள் ஏராளம், இருந்தாலும் சமீபத்தில் சிரிக்கவைத்த பின்னூட்டம் என்பதால் இது. :)

என்னவோ தெரியேல்ல.. நான் நினைக்கிறதை, நினைச்சும் எழுதாமல் விடுறதை இவங்க எழுதீருவாங்க - சுருக்கமாச் சொன்னால்.. இமா அடக்கி வாசிக்கிறதை இவங்க 'ஓபினா' வாசிப்பாங்கள். ;) என் அதே அலைவரிசையில் இன்னொரு ஒலிபரப்புச் சேவை. நிறைய கரட் சாப்பிடுற ஆள் இவ. மற்றவங்க கண்ணில் படாதது எல்லாம் இவவுக்குப் பட்டுரும். ;) உ+ம் ஜீனோவின் ஆல்பம் பார்த்த விதம். எப்பவும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பாங்க உ+ம் இமாவைப் பார்க்காமல் இமாவுக்குப் பின்னால தெரிஞ்ச பூச்சியை! பார்த்தது!!.

மொத்தத்தில் அதிரா ஒரு 'ஊட்டமான ஊசி ' ;)

 பின்தொடருங்கோ ... 

18 comments:

  1. அம்மா நலம் நலம் அறிய அவா.

    // சொன்ன மாதிரியே மீண்டும் பார்க்கிறார். ஆனால் பின்னூட்டங்கள் வாய்வார்த்தையாக வந்துவிடுவதால் இங்கு காணக்கிடைக்காது. // - அம்மா என்னுடைய சோம்பேறிதனத்தை குறைத்து கொண்டு அடிக்கடி வந்து பின்னூட்டம் போட்டுடுறேன். அப்புறம் மொக்கை பிரசங்கம் என்று சொல்ல கூடாது. சொல்லிட்டேன். :)

    //ஒரு வருடம் முன்பு வரை அறுசுவையில் 'சிரித்த முகமான இமா' என்று என்னைக் கிண்டலடித்துக் கொண்டிருந்த அருண்பிரகாஷ்தான் என்னை 'அம்மா' என்று தத்து எடுத்துக் கொண்ட முதல் பிள்ளை.// - அம்மா தத்து எல்லாம் எடுக்க வில்லை. அம்மா எங்க அம்மா. :)

    உங்கள் வாழ்த்துக்களுக்கு இதயங்கள் கனிந்த நன்றிகள்.

    அப்புறம் ஒரு சிறு விடுகதை...

    எந்த நேரமும் காதருகில் இருந்து கொண்டு ரகசியங்கள் பேசி கொண்டு இருப்பவள் யார்?

    அட அவளே தான்... இன்னும் கண்டுபிடிக்கலையா???

    ஆமாம் அம்மா

    மொபைல் தான்.

    அதுல இருந்து திடீரென்று கூப்பிடாமல், சொல்லி வச்சு கூப்பிட போகும் உங்கள் மகன் அருண்

    ReplyDelete
  2. இமா,
    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க! முடியட்டும், மீதியை பிறகு சொல்கிறேன்.

    ReplyDelete
  3. ஆஹா! இது பின்னூட்டமா! ;)))
    அருண், நான் சரியாகப் பார்க்காமல், மெய்ல் என்று நினைத்து ;) அங்கேயே பதில் போட்டு விட்டு வந்து விட்டேன் மகன். ;)) ஆனால் என்னவோ வித்தியாசம் என்று மனது சொல்லிக் கொண்டே இருந்தது. ;)

    ~~~~~~~~~~

    ம்.. ;) இங்கயும் சஸ்பென்ஸ்ஸா செல்வி! ;)

    ReplyDelete
  4. இமா, போங்கள் வெட்கமாக இருக்கு. நான் மனதில் இருந்ததை சொன்னேன். பொருங்கள் கண்ணை துடைத்து விட்டு வருகிறேன்.ம்ம்ம்...ஆனந்தக் கண்ணீர்.

    ReplyDelete
  5. இம்ஸ்.. எனக்கும் ஒரு ப்ளான்கெட் ப்ளீஸ்.. உங்க செண்டி”மெண்ட்டல்” பதிவப் பாத்து.. கண்ணுல காதுல மூக்குல இருந்து.. கொட்டோ கொட்டுன்னு கொட்டுது :)

    இதுக்கு முன்னாடி பதிவுல ஒன்னு வரைக்குந்தான் எண்ணத் தெரியும்ன்னு நினைச்சிருந்தேன் இம்ஸ்.. இப்போப் பரவாயில்லயே.. நாலு வரைக்கும் எண்ணத் தெரியுதே.. :))

    ReplyDelete
  6. ”மெண்ட்டல்”!!!!! grrrr............

    ;))

    ReplyDelete
  7. மறந்தே போயிட்டேன்.. உங்க நன்றி வாழ்த்துஅட்டை நல்லாயிருக்கு இம்ஸ்..

    (எத்தன நாளைக்குத் தான் நல்லாயிருக்குதுன்னே சொல்லிட்டிருக்க.. ஒரு மாற்றதுக்காக நல்லாயில்லாத மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க இம்ஸ்..) :))))

    ReplyDelete
  8. இமா. உங்க மனதை தொட்டபின்னூட்டங்கள் தொடரை சூப்பரா தொடங்கீட்டீங்க.
    //ஊட்டமான ஊசி//உண்மையான உண்மை.அதிராவுக்கு நிகர் அதிரா.
    //என் அதே அலைவரிசையில்// இருவருக்கும் ஒரு ஒற்றுமைதான்.

    ReplyDelete
  9. மக்கள்ஸ்ஸ் பிளீஸ்ஸ் பொறுமையாக வாசியுங்கோ... அவசரப்பட்டு இடையில படிக்காமல் விட்டிடாதீங்கோ..:).

    முதலில் சொல்லவேண்டியது.. இமா மிக்க நன்றி.. என்னையும் பத்திலே இணைத்தமைக்கு.

    அடுத்ததாக... நீங்க விபரமான ஆள்தான் இமா:) தத்து எடுத்ததுதான் எடுத்தீங்க.. ஒரு ஆபிரிக்க பிள்ளையை அல்லது ஏசியன் (வறிய குடும்பத்து) பிள்ளையைத் தத்தெடுத்திருக்கலாமெல்லோ.. எங்களைப்போல. இது நல்ல நல்ல பதவியில் இருக்கிற பெரிய இடமாகப் பார்த்துத்தான் மகனாக, மருமகனாக தத்தெடுத்திருக்கிறீங்க:).. சரி இதை விடுவம். எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.(பப்பி எங்க இமா? செல்லம் என்றதும் வெட்கம் வந்திட்டுதோஓஓஓஓஓஓஓஓஓஓ).

    அடுத்து எங்கட வாணியக்கா, தனிக்குடித்தனம் தொடங்கி கன நாளாகிவிட்டது, ஆனால் அதிரா கண்டுபிடித்து, முதல் முதல் பதிவிலேயே(கேள்வியிலேயே) அவவின்ர மனதில் இருந்த உண்மையை வெளிக்கொண்டுவந்தேன். அதுக்கு அதிராவுக்கு நன்றி சொல்லாமல்:) புல்லரிக்கிறா... அதிரா கேட்கிற கேள்வியிலதான் இருக்கு விஷயமே:). சரி இதுவும் போகட்டும்.

    அடுத்தது, இமாவை எல்லோரும் பார்ப்பார்கள் அதுதான் பூச்சியை அதிரா பார்த்தேன் கிக் கிக் கிக்... பூச்சி பாவமெல்லோ.. நான் கூட பார்க்காவிட்டால் எப்பூடி?

    நிறைய கரட் சாப்பிடுற ஆள் இவ/// அதுதான் மொப்ஸ்...

    //ஊட்டமான ஊசி//உண்மையான உண்மை/// அம்முலு நீங்களுமா??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    வாணி இந்தாங்கோ பிங் கலரில ... சந்து இந்தாங்கோ பேப்பிள் கலரில. வடிவாத் துடையுங்கோ பிளீஸ்.. பாத்டவல்.

    ReplyDelete
  10. ;D naan pinneram vaaran.

    doctor... velaikkup poka venum. enakku sirippai nippaatta tablet ethum thaariyale! ;)

    ReplyDelete
  11. எல்ஸ்... //ஒரு மாற்றதுக்காக நல்லாயில்லாத மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க இம்ஸ்// ஒரு பாட்டுப் பாடட்டா!

    ~~~~~~~~~~

    நன்றி அம்முலு. காற்று வாக்கில புது வலைப்பூ வாசம் வருது. எங்க இருந்து வருது என்று தெரியவில்லையே! . :)

    ~~~~~~~~~~

    அதீஸ், சரியாப் பாருங்கோ. 20% ;)

    நான் ஒரு பொம்பிளப் பிள்ளையையும் எடுக்க யோசிச்சு இருக்கிறன். முதலே ஒரு ஆள் இருக்கிறா. ரெண்டாவது வருற பிள்ளை கலியாணமான ஆளாக இருந்தால் நல்லம். அதுவும் மருத்துவத் தொழிலில இருக்கிற மாப்பிள்ளை எண்டால் விசேஷம் எண்டு தேடிக் கொண்டு இருக்கிறன். மருந்து ஃப்ரீ எல்லே! அதுதான். உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள் யாராவது இருக்கினமே!

    பப்பி எங்க எண்டு நானும் தேடுறன். மெதுவா வரட்டும், என்ன அவசரம் இப்ப! உங்களுக்குப் பாட ஆள் வேணுமோ!

    வாணியக்கா கலாதியாக் கதை எழுதிறா அங்க. போய்ப் பாருங்கோ.

    //அதுக்கு அதிராவுக்கு நன்றி சொல்லாமல்// ம்.. அதுக்கு அதிராவுக்கு நன்றி :)

    //பூச்சியை// !! நானும் //கிக் கிக் கிக்// அது பலகையில இருந்த மாக்.

    ReplyDelete
  12. ரெண்டாவது வருற பிள்ளை கலியாணமான ஆளாக இருந்தால் நல்லம். அதுவும் மருத்துவத் தொழிலில இருக்கிற மாப்பிள்ளை எண்டால் விசேஷம் எண்டு தேடிக் கொண்டு இருக்கிறன். மருந்து ஃப்ரீ எல்லே! அதுதான். உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள் யாராவது இருக்கினமே!//// ”இமா அம்மா” டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!

    ReplyDelete
  13. டாங்ஸூ ஆன்ரீ...ஜீனோ டேன்சிங் இன் ஹேப்பிநஸ்!

    ReplyDelete
  14. அய்ய்ய்ய்ய் அப்போ ஜீனோ இஸ் அ “குழல்புட்டு” காக்....காக்...காஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா