Wednesday, 10 March 2010

ஒரு முக்கிய அறிவித்தல்


சென்ற வருடக் கடைசி நாள்... அன்று பாடசாலையில் என் ரஷ்யத் தோழி தனக்கு ஒரு படம் சட்டமிடவேண்டி இருப்பதாகச் சொன்னார்.  
 ரஷ்யாவில் இருந்த போது, அவரது சிறு வயதுத் தோழி இவருக்காகவென்று ஒரு ஓவியம் வரைந்து கொடுத்திருக்கிறார்.

இப்போ அவர் இவர் வீட்டுக்கு வருகை தரவிருக்கிறார். அந்தச் சமயத்தில் தன் சித்திரம் தோழி வீட்டுச் சுவரில் இருப்பதைப் பார்த்தால் சந்தோஷப் படுவாரே என்று இவருக்குத் தோன்றி இருக்கிறது.
இவருக்கு நடப்பது பிடிக்கும். அது போலவே கண்ணில் படும் 'ஆப் ஷாப்' (opportunity shop) எல்லாம் ஆராயப் பிடிக்கும். ஒரு முறை எங்கோ ஒரு 'ஆப் ஷாப்' போன போது...
இந்த சட்டம் கண்ணில் படவும் வாங்கிவந்து விட்டார்.
படத்தை மாற்றத் தெரியவில்லை. வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டமிட வேண்டிய ஓவியம் தடித்த அட்டையில் வரையப்பட்டிருந்தது. வேலை முடிவில் பின்புறம் சட்டத்தை விட சில மி.மீ அளவு வெளியே தள்ளி இருக்கும். இது பாதுகாப்பான விடயம் அல்ல. ஆணி வைக்க இடம் போதுமா! ஒட்டும் கடதாசி ஒட்டுமா! தாங்குமா!! கழன்று விழுந்தால் என்னாவது! எல்லாவற்றையும் யோசித்துச் செயற்பட வேண்டும். நாமென்ன ப்ரோவா.. இதெல்லாம் தெரிவதற்கு! எப்போதோ இலங்கையில் கிறிஸ் 'WICA' என்கிற பெயரின் கீழ் ஒரு உபதொழிலாகச் சில காலம் 'போட்டோ ப்ரேமிங்' செய்த போது எடுபிடியாக நின்றிருக்கிறேன், அவ்வளவே. இருந்தாலும் உதவிகேட்டால் செய்யாமல் விடப் போகிறாரா என்ன. ;)

படத்தை உடையாமல் பாதுகாப்பது பெரிய தலைவலியாக இருந்தது. ஒரு அலமாரி பின்னால் வைத்துவிட்டுச் சில காலம் மறந்தே போனேன். பிறகு ஒரு நாள் வெளியே எடுத்து...

அக்குவேறு திருகாணி வேறாகப் பிரித்துப் போட்டேன். இருந்த அட்டைகளில் (மௌண்ட்) ஒரு தட்டைப் பத்திரமாக உரித்து எடுத்து விட்டேன். இது ஓரளவுக்குப் படத்தை மெலிய வைத்து விடும் என்று தோன்றிற்று.

இப்போ வேறு பிரச்சினை. சித்திரம் சட்டத்தில் இருந்த விளிம்புகளுக்குள் அடங்கவில்லை.

அதைப் பெரிதாக்க சிறிது வெட்ட வேண்டி இருந்தது. நான்கு பக்கங்களும் ஒரே அளவு வெட்டி எடுத்தால்.... ம்ஹும். சரிவராது. ;(
இதற்குள் மூத்தவர் பார்த்துவிட்டார். 'ஓ! உங்கள் தோழி ரஷ்யனா!!' என்றார். நான் மகனிடம் இதுவரை எந்தத் தோழியின் படம் என்பது பற்றி எதுவும் கதைத்து இருக்கவில்லை. 'எப்படித் தெரியும்?' 'அவர்கள் பக்கம் கோவில்கள் தங்கக் கோபுரத்தோடு இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். என் நண்பர் தோழியும் ரஷ்யன்தான்.' என்றார்.
அப்படியானால் நிச்சயம் கோபுர உச்சி மறையக் கூடாது.
அதற்கேற்ப நகர்த்திப் பிடித்துப் பார்த்தால்... கீழே ஓவியரின் ஒப்பம் காணோம். :( அது கோபுரத்தை விட முக்கியம் இல்லையா! தீர்மானிக்க முடியாமல் இரண்டையும் வைத்துக் கொள்ள நினைத்தேன். அதற்கேற்ப அட்டையை இப்படி வெட்டி முடித்து...

சித்திரத்தைப் பொருத்தி...

 இடைவெளியை நறுக்கிய அட்டைத் துண்டுகள் கொண்டு நிரப்பி...

பின்னால் மறு அட்டையை வைத்து....
குட்டிக் குட்டி ஆணிகளை (இவையே பெரிதாக இருப்பதாகக் கிடைத்த அறிவுரையை நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை. புதிது வாங்கி வரும்வரை காத்திருந்தால் அதற்குள் வேறு எதையாவது எங்காவது தொலைத்து விட்டுத் தேடுவேன். ஏற்கனவே வாங்கியது எங்கோ ஒளிந்து கொண்டு கண்ணில் படமாட்டேன் என்கிறது.) ;) கவனமாகச் சுற்றிலும் அடித்து....

கடதாசி நாடாவை ஒட்டி முடித்தேன். அப்பாடா! கண்ணாடி உடையாமல் ஒரு வழியாக வேலையை முடித்து விட்டேன்.
இறுதியாக, கொழுவுவதற்காக இருந்து ஏற்கனவே கழற்றி வைத்திருந்த கயிற்றையும் மீண்டும் இணைத்தாயிற்று.
 என்ன, சட்டம் அழகாக இருக்கிறதா? எத்தனை மார்க்ஸ் கொடுப்பீங்க? ;)

ஓவியத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லும் அளவு எனக்கு அறிவு போதவில்லை. பிடித்து இருக்கிறது.

இவ்வளவும் செய்தாயிற்று, ஒரு 'ப்ரொஃபெஷனல் லுக்' கொடுக்காவிட்டால் என்ன இமா! ;) விடுமுறையில் குளியலறை முகம் பார்க்கும் கண்ணாடி மாற்றப் பட்டு இருக்கிறது. அத்துடன் வந்த 'மூலைகள்' இவை. 

இன்னும் ஒரே ஒரு வேலை மீதம் இருக்கிறது, தொலை பேசியில் தோழியை அழைத்து வந்து எடுத்துப் போகச் சொல்ல வேண்டும். இந்தப் பெரிய கண்ணாடியை வைத்துப் பாதுகாப்பது மனதுக்குப் பெரிய 'திக் திக்'. ;)

வேலை தோழிக்குப் திருப்தியாக இருக்கிறதா என்பது வார இறுதியில் தெரிந்து விடும். வந்து சொல்கிறேன். (எனக்குப் பிடிச்சு இருக்கு, அது போதாதா! தவிர வீட்ல இருக்கிற 'ப்ரோ'வே 'சூப்பர்' என்று சொல்லிட்டார். ;) இதுக்கு மேல நமக்கு என்ன வேணும்!! ;)  )
* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ *

அறிவித்தல் 
இன்று முதல் போட்டோக்கள், ஓவியங்கள் சட்டமிடுதற்கான ஆர்டர்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும். 
               இமா

13 comments:

  1. மிக அழகான ஓவியம். அதை அழகாக சட்டத்திற்குள் கொண்டுவந்த இமாவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நல்வரவு மலிக்கா. ;) சுடச் சுட வந்து பின்னூட்டம் கொடுத்து இருக்கிறீங்கள். மிக்க நன்றி. ;)

    ReplyDelete
  3. Super Imaa.. I have many valuable pictures i need it framed...

    ReplyDelete
  4. ஆகா ... இது இமாவின் கைவண்ணமோ? வண்ணத்துப்பூச்சிகளைப் படமெடுக்க மட்டும்தான் தெரியும் என தப்பாக எல்லோ நினைச்சிருந்தேன். மிக அழகாகச் செய்திருக்கிறீங்க. ரசித்துக்கொண்டே பார்த்தனா.... முடிவிலதான் தெரியுது.... போட்டோ பிரேம் பண்ணுவதற்கான “அட்” கொடுத்திருக்கிறீங்க.... நிறைய ஓடர்ஸ் வந்திருக்குமே... என் படமும் அனுப்பியுள்ளேன்... ஹைஷ் அண்ணனின் பிறீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ டெலிவறி மாதிரி எனக்கொரு பிறீஈஈஈஈஈஈஈஈஈஈ பிரேம் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  5. இமா, அழகாயிருக்கு. ப்ரேமும் படமும். எனக்கும் ப்ரேம் பண்ண வேண்டும். என் ப்ளாக்கில் இருக்கும் படங்கள், இல்லாத படங்கள் என்று ஒரு 15 தேறும். எல்லாமே ஃப்ரீ தானே???(frame, shipping & Handling).
    இன்னும் கொஞ்சம் விள்க்கமாக சொன்னால் முயற்சித்து(கிறிஸ் அண்ணாச்சி, உதவி பிளீஸ்) பார்கலாம்.

    ReplyDelete
  6. வாணி,
    //இல்லாத படங்கள்// ;) ம்.. ஃப்ரீதான். அனுப்புங்கோ. (அது உங்கட சிலவு)

    என்ன மாதிரி விளக்கம் வேணும்? கேளுங்க, சொல்லுறன். பிரேம் தடி வாங்கி வெட்டுறது என்றால் மூலை எல்லாம் சரியான ஆங்கிள்ள வெட்டி எடுக்க வேணும்.

    இங்க எல்லாம் தான் ரெடிமேட் பிரேம் தாராளமாக் கிடைக்குதே. படத்தை (தேவையான உள் அளவையும்) அளந்து பார்த்துப் போய் ஒரு பிரேம் வாங்கிவாங்க. பிறகு பத்திரமாகப் பின் பக்கம் பிரித்து உள்ளே படத்தை வைத்து செட் பண்ணி பின் பக்கம் இருக்கும் குட்டித் தகடுகளை வளைத்து விட்டால் சரி. வேறு ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. அளவு சரியாக இருந்தால் ஐந்து நிமிஷம் கூட எடுக்காது. கனகாலம் இருக்க வேண்டும், கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் உள்ளே நுழைந்து விடும் என்று பயப்பட்டால் பின் பக்கம் 'கம் டேப்' (கடதாசி) ஒட்டி விடுங்கள்.

    இதற்கு மேல்... ஒரு உலர்ந்த நாளில் வேலை செய்வது நல்லது. பிறகு உள்ளே படம் உலர்ந்து ஆவி படிவதைத் தவிர்க்கலாம். இன்னும் இருக்கு. இப்போதைக்கு இது போதும். ;) குட் லக்.

    ReplyDelete
  7. அனுப்புங்கோ இலா. இலாவுக்கு இலாததா! ;)

    ~~~~~~~~~~

    அன்பு அதிரா,
    உங்கட படம் வடிவாக இருக்கு. ;) உடனே ஃபிரேம் பண்ணித் திருப்பி அனுப்பி விட்டேன். கிடைத்ததா?

    ReplyDelete
  8. வழமை போலவே மேலே வையுங்கோ இம்ஸ்.. எங்கட போட்டோ ஒண்டுக்கு சட்டமிட்டுத் தாரோனும்.. செய்வீகளா?

    ReplyDelete
  9. சூப்பர்ப் இமா.என‌க்கும் செய்துதாருங்கள்.

    ReplyDelete
  10. இமா டீச்சர், அப்படியே செய்கிறேன்.

    ReplyDelete
  11. அது எல் போர்ட் கலியாண போட்டோ என்றால் கட்டாயம் செய்து தருகிறேன். ;)

    ~~~~~~~~~~

    ஆஹா! அம்முலு, வருவீங்கள் வருவீங்கள் என்று இவ்வளவு நாட்களாகக் காத்திருந்தேன். ;) ஏமாற்றாமல் வந்து விட்டீர்கள், மகிழ்ச்சி.

    முயற்சி திருவினை ஆக்கும்.....
    பொறுத்தார் பூமி ஆழ்வார்.... எனக்கும் அதீஸ் மாதிரி பழமொழி பழமொழியாக வருது. ;)

    அதற்கென்ன, ஒரு பார்சல்ல ;) எல்லாப் படங்களையும் எனக்கு அனுப்பி வையுங்கள். ;) வேலையை முடித்துத் திருப்பி அனுப்பி வைக்கிறேன். சிரமங்களுக்கு மத்தியிலும் பின்னூட்டம் இட்டதற்கு எனது நன்றிகள்.

    ~~~~~~~~~~

    ம்... வாணியா!!! ;) அது யார் வாணி!!! நினைவு மாட்டன் எண்டுதே!!!! ;)

    ReplyDelete
  12. அழகா இருக்கு இமா..உங்க கப்பெயிண்டிங் வந்ததுல இருந்து நானும் எங்க வீட்டு கப்பெல்லாம் ஒரு வழி பண்ணனும்னு நினச்சேன்..அதுவே இன்னும் நடக்கலை..இந்த வேலை எல்லாம் வே டூ டஃப்!! நீங்களே பிரேம் பண்ணித் தந்துடுங்க.(கல்யாண போட்டோ என்றால்தான் பிரேம் பண்ணித் தருவீங்களா?எங்க கல்யாண போட்டோவெல்லாம் கைவசம் இல்லையே!!)

    ReplyDelete
  13. இந்த மாதிரி எல்லாம் சொன்னால் நான் என்ன செய்றது! ;)

    வெறுமனே ஒரு A 3 கடதாசியை ஃபிரேம் பண்ணி அனுப்பட்டா!!! இல்லாட்டா... ஒரு மஞ்சள் ரோஸ்!! ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா