Saturday, 27 March 2010

பிடித்த 10 websites

பிடித்த பத்துப் பெண்கள், பிடித்த பத்துப் பின்னூட்டங்கள் என்று சங்கிலிகள் ஆரம்பிக்குமுன்பே.. வெகு காலம் முன்பே இமாவின் இந்தத் தேடல் தொடக்கி விட்டது. இதோ இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். 

எச்சரிக்கை 
கையில் இருப்பதைத் தூரப் போட்டுவிட்டு வாருங்கள், கோபத்தில் விசிறி எறிந்து திரையை உடைத்துக் கொண்டால் நான் பொறுப்பு இல்லை. ;)
முதலில் ஒரு 'பெய்ன்ட்பிரஷ்' கைவண்ணம்.

1) 'Rotorua' போன போது எல்லோரும் அங்கிருந்த 'mudpools' பார்த்து ரசிக்கையில் நான் மட்டும் தனியே சைட் அடித்த  
'manuka' செடியில் ஒரு வெப்சைட்
2) one. two, three.. bumble bee
3) Honey! be my food!! 
4) வலைப்பூ!
5) பின்னப்பட்ட வலையில் பறவை சிக்கும், இது பறவையில் பின்னப்பட்ட வலை.
6) வானமே எல்லை!
7) கண்ணுக்குத் தெரியாத வலை
 
8) ஒளிந்து, மறைந்திருக்கிறேன்
9) 'பக் பக்' எண்டு இருக்குது எனக்கு!
 
10) வலையில் மாட்டுமா இந்த நத்தை!?
பத்தோடு 11) ஆக...
அழகே, அழகு! எந்திரத்தால் முடியுமா இது!
12) காத்திருப்பு 
13) ஈ-மீல்
14) வலையில் ஒரு வண்ணமில்லா வண்ணத்துப் பூச்சி

15) இவை கூட உணவாகுமா!!
(16 )

17) பெரியதோர் வலைப்பின்னல்

18) சிக்கலான ஒரு வலை
ம்... பிடித்த பத்துப் பெண்கள் பற்றிப் போடுவதை நடுவில் நிறுத்தி விட்டு.. என்ன இது!! 'இமாவுக்கு எண்ணத் தெரியல,' என்று எண்ணும் 'சிந்தனைவாதிகளே' கேளுங்கள்.
இந்த இடுகை 'இரண்டில் ஒன்று' (2 in 1)
அதாவது, எனக்கு இயற்கையன்னையை மிகவும் பிடிக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாருக்காவது பகுதி பகுதியா தெரிஞ்சுதா முன்னால!! sorry. ;(
சிலருக்கு 'தலைப்பா' நம்பர்லாம் தெரிஞ்சு... 'அது என்ன ஆறு?' என்று கரிசனமா வந்து கேட்டாங்க? ;) இனிமேல் கவனமா இருக்கிறேன். ;) பண்ணின தப்பெல்லாம்  மறைக்கிறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டேன். ;( பன்னக் குருத்தைப் போட்டு... அதைப் பண்ணி இதைப் பண்ணி! ஒன்றும் வர்க் அவுட் ஆகல. ;(
அண்ணாமலையான் கார் றெக்கை கட்டிப் பறக்குது போல. ;) என் எல்லா அட்டெம்ப்ட்களையும் தாண்டி... (நல்ல வேளை 'சேவ்' பண்றப்போ வழமையாப் போடுற 'கோர்ட்' இல்லாம, ஒழுங்கா ஏதோ தலைப்பு மாதிரி தெரியுற மாதிரி போட்டு இருந்தேன், தப்பித்தேன்.)  நான் எடிட் பண்ணி முடிக்க முதல் ஓடி வந்து 'ok' & 'double ok' சொல்லிட்டுப் போய்ட்டாங்க. ;) வேலை நடுவுல... 'பின்னூட்டம்' பார்த்ததும் ஷாக் ஆகிப் போச்சு. ;)

தடங்கலுக்கு வருந்துகிறேன் அண்ணாமலையான். ;( பின்னூட்டத்தை எப்பிடியாவது இணைத்து விடுகிறேன். ;)

(பி.பெ- 3 விரைவில்)

11 comments:

  1. அண்ணாமலையான் said...
    'ok' @ pic (18)
    on 26 March 2010 @ 11:21 PM

    ;)

    ReplyDelete
  2. அண்ணாமலையான் said...

    'double ok' @ pic (8)
    on 26 March 2010 @ 11:21 PM

    ;))

    ReplyDelete
  3. வலை எல்லாம் நல்லா இருக்கு எனக்கும் ஒரே யோசனை இமா காலை இருந்து உங்க வெப்சைட் ஓபன் ஆகலை பழைய பதிவு எல்லாம் ஒகே சேவ் பண்ணி வச்சுஇருக்கிங்க போல பின்னாடி பதியலாம்னு அப்படின்னு நினைத்தேன்

    ReplyDelete
  4. இப்ப என்னன்னு சொல்றது?

    ReplyDelete
  5. இமா, //பிடித்த 10 websites//கர்ர்ர்ர்ர்ர்ர்.
    நல்ல பொறுமையா படமெடுத்து(பாம்பு அல்ல. நீங்கள் தான்) இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. //'இமாவுக்கு எண்ணத் தெரியல,' என்று எண்ணும் 'சிந்தனைவாதிகளே' கேளுங்கள்.//

    ஒன்னு ஒன்னா எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறார் எங்க இம்ஸ்.. விரைவில் பத்து வரை எண்ணி முடித்து விடுவார் என்று நம்புகிறோம்.. முடித்ததும் எங்கள் சங்கத்தில் இணைக்கப்படுவார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் :)))))

    இப்படிக்கு,
    எண்ணத் தெரிந்த சிந்தனைவாதிகள் சங்கத் தலைவர்.


    //இந்த இடுகை 'இரண்டில் ஒன்று' (2 in 1)
    அதாவது, எனக்கு இயற்கையன்னையை மிகவும் பிடிக்கும்.//

    இமாக்கு இமாவ பிடிச்ச மாதிரி சந்துக்கு சந்துவ பிடிக்காது இமா.. ஆனா இயற்கையன்னையை எனக்கும் ரொம்ப பிடிக்கும்..

    எப்பிடியெப்பிடியெல்லாம் இரை தேடுது இந்த உயிரினங்கள்ன்னு ஆச்சர்யமா இருக்கு இல்லயா?

    குட் ஜாப் இமா.. மேலே வையுங்கோ..

    ReplyDelete
  7. வாங்க சாரு. நான் ஒன்றுமே பண்ணவில்லை, எல்லாம் குழப்பினதைத் தவிர. அது கூகிள் என்னவோ பண்ணி இருக்கு. ;)

    ~~~~~~~~~~

    அண்ணாமலையான், (இன்னொரு நாலு எழுத்து சேர்த்து வைச்சு இருக்கலாம். பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.) இப்ப 'triple ok' அல்லது 'ok x 18' சொல்றது. ;)

    ~~~~~~~~~~

    பின்ன! மகுடி வாசிக்க நீங்கள் எல்லாம் இருக்க நான் படமெடுக்காட்டி எப்பிடி வாணி! ;)

    ~~~~~~~~~~

    ம்... //எப்பிடியெப்பிடியெல்லாம்// பின்னூட்டம் போடுது// இந்த உயிரினங்கள்னும் ஆச்சர்யமா இருக்கு.//
    (Chandu! Could u lend me ur stepstool plzzz!!!)

    ReplyDelete
  8. க்ரிஸ் அங்கிள் கிட்டச் சொல்லி வடிவா ஒன்னு செஞ்சு தாறச் சொல்றன் இமா.. இங்கிருந்து அனுப்பினா ரொம்ப செலவாகும் ஹி ஹி :)

    ReplyDelete
  9. யாரு, யார்ட்ட, யாருக்கு ரெகமன்ட் பண்றது என்று இல்லையா!! எ.கொ.ச. இ!! (இது வேற 'ச') ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா