Saturday 27 March 2010

ஒரு பிறந்தநாள் பார்ட்டி

ஹைஷ் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஃபேஸ் பெய்ண்டிங் செய்ய நானாகவே ஒப்புக்கொண்டேன்.
நான் பயந்து ஓடி விடுவேன் என்று நினைத்த சந்தனாவைத் தேடிப் போய் ...(அப்படியே மாடலாக ஒரு எருமையையும் தேடிப் பிடித்து.. வேறு ஒரு ஆள் உதவினாங்க. கன்றுக்குட்டி பார்க்கப் பசுக்கன்று போலவே இருந்தது.) பார்த்துப் பார்த்து வரைந்தது இந்த முகம். ;) 
சும்மாவே வாயை ஒரு மாதிரியாகப் பிடித்து இருந்தாங்க இந்த அம்மா. பிறகு இந்த அழகான பிராணியையும் வரைய வேண்டியதாகி விட்டது. 
~~~~~~~~~~~~~~~~~~~~~
பூஸ் பார்க்கப் பாவமாக இருந்தார். களைத்துப் போய் இருந்தார். ஆனாலும் அழகாக முகத்தைக் காட்டினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகத்தைக் காட்டாமல் முகத்தில் ரோஸ் வேண்டும் என்றால் என்ன செய்வது! இப்படித்தான் வரையமுடியும் அம்முலு. ;)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பப்பி மனதுக்குள் டோரா ஜெபம் பண்ணிக் கொண்டே தன் பால் வடியும் முகத்தை ஆடாமல் அசையாமல் பிடித்துக் கொண்டு நின்றார்.
 ஆனாலும், டோரா ஒரு முறை லேடி காகா போலவும் மறு முறை பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவும் தெரிய, இரண்டு டப்பா ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, ட்ரையர் பிடித்துக் காய வைத்து ஒருபடியாக இது. டோரா... மாதிரியே இருக்கிறாங்க, இல்லையா! ;)
~~~~~~~~~~~~~~
இவ்வளவு பேர்தான் முகத்தைக் காட்டியோர். என் வேலை முடிந்தது. எல்லாம் மேக்கப் கிட் இல் போட்டுக் கொண்டு கிளம்புகிறேன். 
அடுத்த முறை பார்ட்டி ஏதாவது என்றால், ஒரு ஐந்து நாளாவது முன்னால் சொல்லி விடுங்கள், வசதியாக இருக்கும். ;)

12 comments:

  1. கலக்கறீங்க.. சகல கலா வல்லியோ?

    ReplyDelete
  2. அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த மாதிரி வேலைகள் பிடிக்கும், அவ்வளவுதான்.

    பாராட்டுக்கு நன்றி. ;)

    ReplyDelete
  3. இமா சூப்பர், பார்ட்டியை பெயிண்டிங்கால அசத்திட்டீங்க. அதுசரி பேர்த்டே போய்க்குப் பெயிண்டிங் போடவில்லையோ?:).

    சந்து இதுக்குத்தான் சொல்வது பொல்லுக்குடுத்து அடிவாங்கப்படாதென... இருப்பினும் (எ)ருமை (அ)ருமையாகத்தான் இருக்கு.

    அடுத்து யாருடைய பார்ட்டி?

    இமா...ராத்திரி நித்திரையாகிவிட்டேன், விரைவில் பரிசுண்டு:).

    ReplyDelete
  4. என்னதான் நடக்குதிங்கே? :-))

    ஏன் நம்ம சந்தனாவை இப்படி உர்ருன்னு வச்சிருக்கீங்க? (அதென்ன எல்லாரும் அவரை “சந்து”ன்னு கூப்பிடுறீங்க, எனக்கென்னவோ தெருமுக்குக்கடை சந்து, முட்டுச் சந்துன்னு என்னென்னவோ ஞாபகம் வருது!! அழகா சந்தனான்னு சொல்லுங்கோ, இல்லாட்டி அதைவிட அழகா “எல் போர்ட்”னு சொல்லுங்கோ!!)

    அம்முலுவை வரையும்போது தூங்கிட்டே வரைஞ்சீங்களா, இத்தனை கோடுகோடா இருக்கு?

    ReplyDelete
  5. இமா,நீங்க பேஸ்பெயிண்டிங் வரைந்த அனைவருக்கும் எப்படி அதனை அழியாமல் வைத்திருப்பது என்ற கவலை போலும்,எல்லாரும் உம்முன்னு இருக்காங்க.அருமையான பெயிண்டிங்கிற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. கலக்கல் இமா!!

    ReplyDelete
  7. குட் வொர்க் ஆன்ரீ..இப்பம் ஜீனோ அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்ப முடியல..நாலு மணி அசையாம முகத்தக் காட்டி, எல்லா நட்டு போல்ட்டும் டைட் ஆகி, பேஸ்-ஐ திருப்ப முடிலை...கர்...ர்ர்..ர்ர்ர்..ர்!!

    இருந்தாலும் நீங்க எல்ஸ்-க்கு மாத்திரம் அயகா வரைஞ்சிருக்கா மாறியே ஜீனோக்கு ஒரே பீலிங்க்ஸ்!;)

    டோராக்கு டோரா சாயல் இருக்குன்னு புஜ்ஜி சொல்லிடுச்சி..ஸோ ஜீனோ இஸ் கொயட் ஹேப்பி..டாங்க்ஸ்..டாங்க்ஸ்..டாங்க்ஸ்!

    ReplyDelete
  8. என் முகத்(தை)தில் அழகா கீறினதுக்கு ரெம்ப தாங்ஸூ.

    ReplyDelete
  9. ஹஹ்ஹா இமா.. நல்ல கற்பனை.. அருமையான கைவேலை.. :)) சொந்தத்த என்னோட முகத்திலேயே காண்பது மகிழ்ச்சியாயிருக்கு :)))))))))

    அதீஸ்.. இது பொல்லுக்கொடுத்து பெயிண்டிங் வாங்குவது.. :))

    ஜீனோ.. இப்படியெல்லாம் பொறாமைப் படக் கூடாது.. எல்லுக்கு இயல்பாவே அழகான முகம்.. அதான்...

    நன்றி ஹுசைனம்மா.. அதான? நல்லாக் கேளுங்க.. எனக்கு எப்பவுமே சிரிச்ச முகந்தான்.. ஏன் எல்லாரும் என்ன இப்படி சீரியசான ஆளா பாக்கறாங்கன்னு தான் புரியல :))))))))))

    ReplyDelete
  10. பார்ட்டி ஒரே கலக்கல் தான்

    ReplyDelete
  11. இமா,
    எனக்கு எங்கே பெயிண்டிங்? போங்க, எனக்கு கோபம்! அட்லீஸ்ட், ஜோவுக்காவது ஒரு கார் பொம்மை:-(

    ReplyDelete
  12. அன்பு அதிரா, பரிசு கலக்கல். ;) மிக்க நன்றி. எது எதெல்லாம் பிரசன்ட் பண்றீங்க!!! ;))) எதுக்கோ பழி வாங்குகிற மாதிரி இருக்கு. ;)

    ~~~~~~~~~~

    ஹுசேன்,
    //என்னதான் நடக்குதிங்கே? :-))// பார்ட்டிக்கு மேக்கப். ;) நான் ப்ராக்டிஸ் பண்றதுக்கு நாலு எலி. ;)
    அம்முலுவை வரையும்போது தூங்கிட்டே வரைஞ்சீங்களா, இத்தனை கோடுகோடா இருக்கு?// உங்க கேள்வியிலே பதிலும் இருக்கு. ;) கோடுகள் இல்லாமல் வரைதல் எப்படி!! அதுக்குப் பேர் கோட்டுச் சித்திரம். ;))

    ~~~~~~~~~~

    நன்றி ஆசியா, மேனகா, . ;)

    ~~~~~~~~~~

    ஜீனோ, டோரா பிடிக்கலையா!!
    எல்ஸ் கேட்டது ஒரு அழகான பிராணி, அழகா வந்து இருக்கு. ;)
    //டோராக்கு டோரா சாயல் இருக்குன்னு புஜ்ஜி சொல்லிடுச்சி..ஸோ ஜீனோ இஸ் கொயட் ஹேப்பி..டாங்க்ஸ்..டாங்க்ஸ்..டாங்க்ஸ்!// சந்தோஷம், நன்றி பப்பி. ;)

    ~~~~~~~~~~

    அம்முலு...//என் முகத்(தை)தில் அழகா கீறினதுக்கு//
    எங்கட தமிழ் தானே!! யோசிக்க வைக்கிறீங்க. ;) ம்.. நன்றி. ;)

    ~~~~~~~~~~

    சந்தனா... //நல்ல கற்பனை..// நீங்கதானே கேட்டீங்க!
    //அருமையான கைவேலை.. :))// ஒரு வேளை... முதல் எழுத்தைத் தப்பாத் தட்டிட்டீங்களோ!!
    //மகிழ்ச்சியாயிருக்கு// எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் பராபரமே! :)

    ~~~~~~~~~~

    சாரு, நீங்களும் வந்திருக்கலாம்.

    ~~~~~~~~~~

    செல்வி, //ஜோவுக்காவது ஒரு கார் பொம்மை// அந்தக் குட்டி முகத்தில் அதெல்லாம் போடப் படாது. அவர் வளர்ந்து தனக்கு என்ன போட வேண்டும் என்று, தானே கேட்பார். அப்போ கிடைக்கும். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா