Thursday 4 February 2010

சீச்சீ! இந்தப் பழ(ட)ம் புளிக்கும்

நேற்றுத் திடீரென்று ஒரு யோசனை, டைனிங் ஸ்பேசில் உட்கார்ந்திருக்கும் வட்டக் கண்ணாடி மேசையை அலங்கரித்துப் பார்க்கலாமா!
புதுமையாக இருக்கும். ஆனால், நன்றாக இருக்குமா இல்லையா என்று விஷுவலைஸ் பண்ணிப் பார்க்க முடியவில்லை. முயற்சிக்கலாம் என்று தோன்றியது.
(ஃப்ளாஷ் போட்ட போது மேசையில் கீறல்கள்)
இந்த மேசை பத்து வருடங்கள் முன்பாக எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இதில்தான் சாப்பாடு, என் கிராஃப்ட், அயர்னிங் என்று எல்லா வேலைகளும் நடக்கின்றன. இப்போ நிறையக் கீறல்கள் விழுந்து விட்டாலும் மாற்ற மனம் இல்லை. கதிரைகளுக்கு மட்டும் இருமுறை துணி மாற்றி இருக்கிறோம். முதல் முறை மகனும் நானும் மாற்றினோம். இரண்டு வருடங்கள் முன்பதாக கிறிஸ்ஸும் நானும் மாற்றினோம்.
(யன்னலூடாக வெயில்)
மேசைக்கும் புது வடிவம் கொடுக்கலாம் என்ற என் முதல் முயற்சியின் முடிவு இது. அப்பப்போ வேறு விதமாக அலங்கரிப்பதாக இருக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் (எவ்வகையாக இருப்பினும்) வரவேற்கப்படுகின்றன.

பயன்படுத்தி இருப்பவை 
  • வேண்டாம் என்று கழித்த பீங்கான் சூப் கிண்ணம் ஒன்று
  • மீள் சுழற்சியாகக் கொஞ்சம் 'வெட் ஓயாசிஸ்' (wet oasis)
  • காய்ந்த பாசி கொஞ்சம் 
  • ஸ்பைடர் பிளான்ட் (spider plant ) கொப்புகள் சில
  • ஐவி (ivi) கிளைகள் சில
  • கிளாஸ் பிளான்ட் (glass plant - சரியாகப் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது ;(  ) கிளைகள் சிறிது
  • மூன்று செயற்கைத் திராட்சைக் குலைகள்
  • ஒரு கிண்ணம் நீர்
  • இரண்டு கைகள்
  • கொஞ்சம் கற்பனை
(சுவரில் தொங்கும் நான் வரைந்த ஓவியமும் யன்னலூடாகத் தெரியும் திராட்சைப் பந்தலும் தலைகீழ் விம்பங்களாக)
(தூங்கும் உறியின் விம்பம்)
(திரைச்சீலைகள் மூடி இருந்தபோது)
புகைப் படம் எடுப்பதில் நிறையச் சிக்கல்கள்...
  • யன்னல் திரைச்சீலையை இழுத்து மூடினால் இருளாக இருக்கிறது.
  • ஃப்ளாஷ் போட்டால் கண்ணாடியில் ஒளி பிரதிபலிக்கிறது.
  • திரைச்சீலை திறந்திருந்தால் வானம், பறவைகள், ஆகாய விமானம் என்று எல்லாமே துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
  • கமரா திரையில் திருப்தியாகத் தெரிந்த படத்தை கணணித் திரையில் பார்த்தாலோ... நட்ட நடுவே இமா முகம் தெரிகிறதே!! ;D
என்னால் முடிந்த 'பெஸ்ட்' இதுதான்.
 
யாராவது விஷயம் தெரிந்தவர்கள் இந்த மாதிரியான போட்டோ எடுப்பதற்கும் ஏதாவது டிப்ஸ் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எடுத்த மீதிப் படங்கள் கொலாஜாக

13 comments:

  1. இமா அம்மா பார்க்கவே நல்லா இருக்கு. சூப்பர்.

    ReplyDelete
  2. உங்களின் கற்பனை திறன் மிகவும் அழகாக இருக்கு இமா

    ReplyDelete
  3. நல்ல ஐடியா இமா. ஐடியாத் திலகம்னு பட்டம் கொடுக்கலாம் உங்களுக்கு.

    ReplyDelete
  4. சூப்பர் ஐடியா இமா!!.உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி வித்தியாசமா யோசிக்க முடியுது...

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு இமா , உங்களுக்கு கற்பனை வளம் அதிகம் ஹுஸைனம்மா சொன்ன மாதிரி ஐடியா திலகம்னு பட்டம் கொடுத்துவிடுவோம்.

    ReplyDelete
  6. படங்கள் அத்தனையும் சூப்பர். ஆமாம் ஐடியா திலகம் என்ற பட்டமளிப்பு வார்த்தையை எங்கோயோ கேட்ட குரலாக இருக்கிறதே. லண்்ன் வாசி சொன்னார் போல் எதுக்கும் கன்பர்ம் செய்துக்கறேன். ரொம்ப நல்லா இருக்கு இமா திராட்சை தோட்டம் செய்திட்டிங்க ம்.. உங்க கற்பனைக்கு நல்ல பட்டம் தான். மேலும் தொடரவும்..

    ReplyDelete
  7. சூப்பர் ஐடியா!! ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  8. இமா,
    உங்களுக்கு கற்பனை வளம் ரொம்பவே அதிகம். பார்க்க ரொம்பவே அழகா இருக்கு. இதையெல்லாம் பார்க்கவே உங்க வீட்டுக்கு வரணும்னு ஆசையா இருக்கு. வெளிநாடு போகணும்னா முதல்ல உங்க வீட்டுக்குத்தான்:-)

    ReplyDelete
  9. ஆனா, ரொம்பவே கஷ்டப்பட்டு போட்டோ எடுத்திருக்கீங்க. கண்டிப்பாக பாராட்டியே ஆகணும்!!

    ReplyDelete
  10. ஆன்ட்டி..பொழுது போகலன்னா குப்புறப் படுத்து தூங்கற ஜீனோபிரானின்:) கற்பனைத்திறனை உசுப்பி விட்டுட்டீங்கள்! ஹும்..புறப்பட்டு ஜீனோ, உன் கால் வண்ணத்தை..ச்சே,ச்சே கை வண்ணத்தைக் காட்டு!!


    பி.கு : ஜீனோ திடீர்னு காணாமப் போயிட்டா, இந்த கால் வண்ணத்தோட:) எபெக்ட்டுன்னு தெரிஞ்சுக்குங்கோ,புரிஞ்சுக்குங்கோ!

    நோ,நோ..யூ ஆர் ராங்..புஜ்ஜி கிட்ட அடிவாங்கி ஜீனோ வானிஷ் ஆவாது பீப்புள்! பொறுமையா இருங்க,ஓகே-வா? ;)

    ReplyDelete
  11. நன்றி பிரபா, ஃபாயிஸா, ஹுசேன், மேனகா, சாரு, விஜி, சுஸ்ரீ, செல்வி & ஜீனோ. ;)

    ~~~~~~~~~~

    வாங்கோ, வாங்கோ செல்வி. ;) எப்போ வரீங்க!!

    ~~~~~~~~~~

    ம்ம்.. பப்பி இன்று ஜாலி மூட்ல இருக்கார். ;D

    ReplyDelete
  12. இமா.. ஏங்க வைக்கிறீங்களே.. நல்ல கற்பனை.. ரொம்ப அழகா இருக்கு.. மேஜைக்கு மேல இருந்து பாத்தா எப்படி இருக்கும்ன்னு ஒரு போட்டோ எடுத்திருக்கலாம்..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா