'இமாவைக் காணவில்லை,' என்று ஏங்குவோருக்காக இந்த இடுகை. ;)
'காதில பூ' கேள்விப் பட்டிருப்பீங்க, இது காதில 'வாஷர்'. ;)
'காதில பூ' கேள்விப் பட்டிருப்பீங்க, இது காதில 'வாஷர்'. ;)
கீழுள்ள படத்தை வரைந்தது நான் அல்ல, என் சக ஆசிரிய நண்பர் ஒருவர்.
ஒரே ஒரு குறை, சிரிப்பைக் காணோம். ;(
ஒரே ஒரு குறை, சிரிப்பைக் காணோம். ;(
வருடத்தின் முதலாம் வாரம் எங்கள் பாடசாலைக்கு வரும் ஏழாம் எட்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் இந்தப் பயிற்சி கிடைக்கும். அவரவர் படத்தை வரைந்து, இது போல் உணர்வுகளைக் காட்டும் குமிழ்களும் வரைந்து, அவ்வுணர்வுகளால் அவர்கள் ஆட்கொள்ளப் பட்டிருந்த தருணங்களை விபரிக்குமாறு கேட்கப்படுவார்கள்.
உதாரணத்துக்கு ஒரு படம் வரையலாம் என்று ஆரம்பித்த ஆசிரிய நண்பர் அச்சமயம் வகுப்பினுள் வேறு வேலையாக நின்றிருந்த என் முகத்தை வரைய ஆரம்பித்தார். சரியாகத்தான் வரைந்து இருக்கிறார். ;)
அணிந்திருக்கும் காதணியைப் பற்றிய கதை.
என் தந்தையாருக்கு தச்சு வேலை, மற்றும் பல்வேறு விடயங்களில் ஈடுபாடு உண்டு. எப்போதும் அதற்கேற்ற மாதிரியான பொருட்களை வாங்கிச் சேர்த்தபடி இருப்பார். செபா அம்மாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், 'நல்லதுதான், திருமணத்தின் போது நகை நட்டு போடுவதற்குப் பதில் வாஷரும் நட்டுமாகப் போட்டு விடலாம்,' என்பார். ;)
இந்தக் காதணி பார்க்க வாஷர்களைக் கோர்த்தது போல் இருக்கவே பழைய நினைவுகள் வரவும் ஆசையாய் வாங்கி வந்தேன். :)
இவை இரண்டும் நியூசிலாந்து பாவா சிப்பிகளால் (paua shells) செய்யப்பட்ட வாஷர்கள். ;)
இமா, நலமா? கன நாளா காணேலயேன்னு இருந்தன்.
ReplyDeleteவரைந்த படம் அழகாருக்கு; ஆனா சின்னப் பொண்ணாத் தெரியுதே? அவங்களுக்கு சரியா வரையத் தெரியலையோ?
வாஷர் கம்மல் - புதுமை.
இமா எங்கே போய்ட்டீங்க?வாஷர் கம்மல் சூப்பர்ர்...
ReplyDeleteநண்பர் வரைந்த படம் ரொம்ப டாப்..
நீங்க தானா?
ReplyDeleteImma, very nice ear rings. I will take the first one for "A".
ReplyDeleteஹா ஹா.. சிரிப்பூ இங்க எங்களையெல்லாம் கண்ட பின்னாடி தானே இமா வரும் உங்களுக்கு :)
ReplyDeleteதேடியவுடன் தரிசனம் தந்தமைக்கு நன்றி..
வாஷர் :))
இமா!!! வாஷர் தோடு அழகா இருக்கு... உங்க கைவண்ணமே கைவண்ணம்....
ReplyDeleteபொதுவா இந்த படம் எல்லாம் கொஞ்சம் age factor இருக்கும்... அப்போ இதைவிட நீங்க இளமையா இருப்பீங்க :)) in person
nice ear rings!
ReplyDeleteநலம் ஹுசேன். நீங்க நலம்தானே? அதெல்லாம் சரியாத்தான் வரைஞ்சு இருக்கார். கர்ர்ர்ர்... சட்டியில் இருக்கிறதுதான் அகப்பைல வரும். (ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் 'என்ன ஆர்டிஸ்ட்' என்று புகழ ஆரம்பிச்சுட்டாங்க.)
ReplyDelete~~~~~~~~~~
நன்றி மேனகா. இன்றைக்கு நண்பர்ட்ட சொல்றேன். கேட்கிறப்ப அந்த முகத்தில வரும் சிரிப்பு இப்பவே கற்பனைல தெரியுது. ;)
(அவர் தமிழ் படிக்கத் தெரியாத தமிழர். பிறந்தது சவுத் ஆஃப்ரிக்காவில்.)
~~~~~~~~~~
இமா சொன்னா நம்பணும் அண்ணாமலையான். ;) என்னைப் பார்த்து வரைந்த படம்தான். எங்க யூனிவர்சிட்டில இப்படித்தான் வரைவோம். ;)
~~~~~~~~~~
தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கோ வாணி. அவவுக்கு இல்லாததா. என்ன தோளைத் தொடும், பரவாயில்லையா!
(லாம்ப் போஸ்டை நானே வேரோடு பிடுங்கி விட்டேன்.) ;)
~~~~~~~~~~
'பீ சீரியஸ்'னு யாராச்சும் சொன்னா சிரிப்பை நிறுத்திறுவேன். ;(
//வாஷர் :))// இது உண்மைச் சம்பவம்பா. இப்போது எனக்கு மிகவும் பிடித்த காதணியாப் போச்சு இது. 'சீரியல் வாஷர்' ;)
~~~~~~~~~~
என் அருமைச் சோதரியே! இலாவே! நீங்களாவது உண்மையை உணர்ந்தீர்களே. ;) மிக்க நன்றி. :)
~~~~~~~~~~
நன்றி சுஸ்ரீ. :)
அழகா இருக்கு இமா..நானும் கடைக்குப் போகும்போதெல்லாம் இந்த மாதிரி வகை வகையா கம்மல்களை எடுப்பேன்..பக்கத்தில இருந்து வர பார்வைலையே அமைதியா வைச்சுட்டு வந்துடுவேன்..நீங்க கலக்குங்க! :)
ReplyDelete// 'நல்லதுதான், திருமணத்தின் போது நகை நட்டு போடுவதற்குப் பதில் வாஷரும் நட்டுமாகப் போட்டு விடலாம்,'// நல்ல காமெடி! அப்போ, சீக்கிரமா கல்யாண போட்டோவையும் போடுங்க..ப்ளீஸ்!
முன்னால எல்லாம் எனக்கும் பக்கத்தில இருந்து 'பார்வை' வரும். 'ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் நான் ஒண்ணுமே வாங்கிக் குடுக்கிறது இல்லை என்று நினைச்சுக்கப் போறாங்க' என்று கமன்ட் வரும். ஆனால் மாமி எனக்கு சப்போர்ட். இந்தியா போய் வரப்ப எல்லாம் கலர் கலரா 'நதியா தோடு' வாங்கி வந்து கொடுப்பாங்க. ;) இந்த நாட்டுக்கு வந்ததன் பின் 99% பர்மிஷன் கிடைச்சாச்சு. தானாவே 'இது முகத்துக்குப் பொருத்தமா இருக்கும்' என்று தெரிந்து கொடுக்கிற நிலைமைக்குக் கொண்டு வந்தாச்சு.
ReplyDeleteகல்யாணத்தப்போ போட்டோக்ராபர் எங்க முதுகுகளை போட்டோ எடுக்க மறந்து போய்ட்டார் மகி. ;)
இமா அம்மா சூப்பரா இருக்கு இந்த கம்மல்.
ReplyDeleteima very nice earrings
ReplyDeleteஆன்ட்டீ..அந்த செகண்ட் போட்டோல இருக்கற தோடு பார்சல் ப்ளீஸ்..இங்கே வாலண்டைன்ஸ் டேக்கு கிப்ட் கிடைக்கலைன்னு புஜ்ஜி இஸ் மேட் அட் ஜீனோ! ஜீனோஸ் டென் இஸ் சரவுண்டட் பை "போர் மேகங்கள்"!! :-| :-|
ReplyDeleteஅனுப்பினீங்கன்னா, ஜீனோ அப்டியே நைஸா அத்த ஒரு ஹார்ட் பாக்ஸ்ல பேக் பண்ணி, நியூசிலாந்து பாவா சிப்பிகளால் (paua shells) செய்யப்பட்ட வாஷர்கள்...ச்சே..ஸ்பெஷல் தோடுகள்..ஜீனோ ஆன்ட்டீ கிட்ட சொல்லி இம்போர்ட் பண்ணிக்கிது -இப்டிலாம் பில்ட் அப் பண்ணி போர் மேகத்த கலச்சுரும்..நீங்க இன்னான்றீங்கோ? ;)
எல்லாரும் முதலிலே வந்து சொல்லிட்டாங்க நானும் அதே தான் பக்கத்தில் இருந்து ஒரு பார்வை பார்த்தாலே எல்லாமே வாங்கினது போல ஆயிடும். ஆமாம் இமா எனக்கு இந்த கமல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. என் வீட்டவர் சொல்வாரு. அடுத்த தடவை அத்தைகிட்டே பேசினேனா சொல்லபோறேன் ஏன் உஙக் மகளுக்கு தங்கத்தை விட ஊசி மனி பாசிமனி, தகரம், இரும்பு டெரகோட்டா இதஎல்லாம் ஸ்ரீதனமா குடுக்கனும் என்னால மல்லு கட்ட முடியல்லை உங்க பென்னோட என்று சொல்வாரு இமா.
ReplyDeleteநன்றி பிரபா & சாரு.
ReplyDelete~~~~~~~~~~
ம்... ஜீனோ டோரா வீட்டுப் "போர் மேகங்கள்" நீங்க எடுத்துக் கொள்ளுங்கோ 'நீண்ட வெண் முகிற்பூமி' இலிருந்து 'பாவா வாஷர்ஸ்'.
(ஆனாலும் டோரா காதில் அது தூங்குறதை மனக்கண்ணில் பார்க்க சிரிப்பா வருது. இந்தக் கொடுமைகளை அறிந்து கொள்ளவாவது டோரா தமிழ் கற்று ப்ளாக் படிக்க வரணும். ;D )
~~~~~~~~~~
நீங்களும் என் கேஸ்தானா விஜி! ;D