Friday 5 February 2010

'தலைப்பிடக் கோருகிறேன்' முடிவுகள்


இன்றோடு ஒன்பது நாளாச்சு, 'தலைப்பிடக் கோருகிறேன்' அறிவித்து. கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்குமே  பரிசுகள் உண்டு.

கை கொடுங்க செந்தமிழ் செல்வி. ;) 
நீங்கள் கொடுத்த தலைப்பு சிறப்பாக இருப்பதை போட்டியில் பங்கேற்ற மற்ற அனைவரும் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
உங்களுக்குப் சிறப்புப் பரிசாக...

ஒரு போத்தல் நெய்ல் பாலிஷ் .... கூடவே இந்த ரோஸ்.

//டடாய்ங்... டடாய்ங்... டடாய்ங்... டடாய்ங்... டட்..டட்..டட்ட..டட.. டடாய்ங்!!!! // என்று பேக்ரவுண்டு ம்யூசிக் போட்டு....


"மரத்து மேல குருவிக் கூட்டம்" இருக்க விடாமல் துரத்திய ஜீனோபிரானுக்கு! இந்த போட்டோ பரிசு.

எவ்ளோ சிவிலைஸ்டா இருக்குது பாருங்கோ. ;)

//ச்சிப் ச்சிப்// என்று சொன்ன எல் போர்டுக்கு...

எங்கள் வீட்டு மஞ்சள் 'சிப்'.
//ஹி ஹி அதிசய மரம்// என்று சிரித்த சாருவுக்கு...
குருவியும் விளக்கும் காய்த்துத் தொங்கும் அதிசய மரம்.

//””பூனையின் தோழர்கள்””.... ஒரு நிழல், ஒரு கமெரா, ஒரு மரம்... 7 குருவி...:).// என்று கவிதை! சொன்ன அதிராவுக்கு இது. ;)


பயந்து போய் விட வேண்டாம், வெறும் நிழல்தான். ;)

தொடர்ந்து வரவிருக்கும் போட்டிகளிலும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும்
தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். ;)

இப்படிக்கு
இமா

11 comments:

  1. நல்லவேளை நான் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அறுசுவையில் ஆரம்பித்தது, இன்னும் போகவில்லை இந்தப் பழக்கம் இல்லையா? ;-D

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி இமா , உங்கள் பரிசுக்கு ,ஒரு வாரமாக ஊரில் இல்லை அதனால் தான் பின்னூட்டம் எழுதவில்லை , இனிமேல் தொடரும்

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. என்ன போட்டி என்ன பரிசு...? :-0

    ReplyDelete
  5. ஹை இமா!!!! எனக்கே எனக்கா??!!!!!!
    எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் நெயில் பாலிஷும், வெள்ளை ரோஜாவும். மிக்க நன்றி இமா.
    எனக்குக் கூட எப்படி அது போல் தலைப்பிட தோணியதுன்னு ஆச்சரியமா இருக்கு. பார்சலை எதிர்பார்த்துகிட்டு இருப்பேன்:-)

    வாழ்த்துக்கு நன்றி சகோ. அண்ணாமலையான்.

    சொல்ல மறந்துட்டேனே! மருதாணி அழகா இருக்கு. எனக்கும் மருதாணின்னா ரொம்பப் பிடிக்கும்:-))

    ReplyDelete
  6. இமா, எனக்கு பரிசு இல்லையா??( அது சரி என்ன போட்டி?? எங்கே நடந்தது??). பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஏன் பூஸை ஏன் இப்படி பயமுறுத்துவான்??? அதிரா பார்த்தால் டென்ஷன் ஆகப்போகின்றார்.

    ReplyDelete
  7. டிரஸ் போட்ட குதுரயா ?? :))))))))))))))))) ஓகை..டிரஸ் போட்ட எதுவும்:) ஜீனோவுக்கு ஓகை..

    ப்ருத்விராஜன் சம்யுக்தையை தூக்கிப்போன மாதிரி ஜீனோ புஜ்ஜியை தூக்கிப்போக வசதியாய் குதுர:) தந்த ஆன்ட்டிக்கு ஒரு "ஜே..ஏஏஏஏஏ"!!!!!!!

    ReplyDelete
  8. நீங்க என் வரல ஹுசேன். ;;((

    ~~~~~~~~~~

    சாரு, நெக்ஸ்ட் டைம் முதலாவதாக வர முயற்சியுங்கள். ;)

    ~~~~~~~~~~

    போட்டியில பங்குபற்றாமல் வாழ்த்து மட்டும் வந்து சொல்றீங்க அண்ணாமலையான். ;)

    ~~~~~~~~~~

    ஃபாயிஸா & வாணி, 'தலைப்பிடக் கோருகிறேன்' தலைப்பின் கீழ் பாருங்க. ;)

    ~~~~~~~~~~

    திடீரென்று ஒரு ஞானம் பிறந்தது, மறந்த மாதிரி விட்டு விட்டால் அடுத்த அறிவிப்பை எல்லோருமாகப் புறக்கணித்து விட்டால் இமாவின் உலகம் என்ன ஆவது!! ;)

    செல்விம்மா, உண்மையாகவே அழகாக இருந்தது தலைப்பு.
    (கடைசி வரி.. சும்மா சொல்லாதைங்கோ. ;) இது ஆரம்ப காலத்து வேலை. 'அறுசுவை' வனிதா, பாப்ஸ் உதவியால் போட ஆரம்பித்தது.)

    ~~~~~~~~~~

    'வாத்தில' லாத்தீட்டு வந்து //இமா, எனக்கு பரிசு இல்லையா??//வா??

    பிறகு, பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் எப்பிடிப் போச்சு வாணி?

    ~~~~~~~~~~

    பப்பி திரும்ப தன் பால் வடியும் 'டீஃபால்ட்' முகத்தைக் காட்டீட்டார். ;)

    வார்த்தைக்கு வார்த்தை சிரிக்க வைக்கிறீங்கள் ஜீனோ. ;D

    ReplyDelete
  9. ஐ.. இமா.. ச்சிப் ச்சிப் க்கு நன்றி.. ஆனா நீங்க ஒரே ச்சிப் தான் கொடுத்திருக்கிறீங்க :)

    கை ரொம்ப அழகு இமா..

    பரிசுக்கேற்ற படங்களும் அருமையான செலக்‌ஷன்..

    ReplyDelete
  10. இப்ப தான் புரிகிறது...:-)

    ReplyDelete
  11. அந்த 'சிப்'ல ஒரு chip இருக்கு சந்தனா. ;)

    ~~~~~~~~~~

    கண்டுபிடிச்சிட்டீங்களா ஃபாயிஸா! ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா