Wednesday 24 February 2010

நான் வரைந்த ஓவியமே! - 1

செல்வி. ரூத் மில்லர் - எங்கள் பாடசாலையில் உப அதிபர் பதவியில் இருந்து வெகு காலம் முன்பு இளைப்பாறியவர். இளைப்பாறிய பின்னும் கடந்த பத்து வருடங்களாக தனது நேரத்தைப் பாடசாலை வளர்ச்சிக்காகவே செலவழிப்பவர். கணிதத்தில் புலி. இங்கு பிறந்தவர். உலக சரித்திரம், ஆங்கில மொழி, கிறிஸ்தவ சமயம் என்று பாடங்களில் சந்தேகம் வந்தால் இவரிடம்தான் ஓடுவோம். 

எழுபத்துமூன்று வயதான இவர் இன்றுவரை தனி வீட்டில் இருக்கிறார். 'ரிலீவிங்' (விடுமுறையில் செல்லும் ஆசிரியர்களுக்காக கற்பித்தல்) செய்கிறார், வாகனம் ஓட்டுகிறார், நீச்சலடிக்கிறார் & கற்பிக்கிறார். கல்விச் சுற்றுலாக்களின் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமைத்துக் கொடுக்கிறார். மாணவர்களின் சீருடைகளில் கிழிசலை அவதானித்தால் திருத்திக் கொடுக்கிறார். பாடசாலை விசேட வைபவங்களின் போது மலரலங்காரம் செய்து வைக்கிறார். வருடாவருடம் பரிசளிப்பு விழாவின் போது இவர் பெயரால் ஒரு மாணவருக்குக் கிண்ணம் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.ப்படி இவர் செய்யும் காரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வருடம் இரு முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுலாவும் கிளம்பி விடுவார், எல்லாம் தனியாகத்தான்.

இவரது வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கும். வருடா வருடம் பாடசாலை காலாவுக்காகச் (gala) செடிகள் முளைக்க வைத்து விற்பனை செய்வார். என் தோட்டத்து டேலியாக்கள் இவர் கொடுத்த கிழங்குகளில் இருந்து முளைத்தவை. பாடசாலை (ஜீனோவும் அதிராவும் கண்ணை மூடுங்கோ) 'மண்புழுப் பண்ணை'யும் இவர் பொறுப்பில்தான் இருக்கிறது.

இப்போ ரூத்தைப் பற்றி ஏன் சொல்ல வந்தேன்!!!! 
ம்.. ரூத் ஒரு சிறந்த ஓவியர். ;) 
ஏராளமான ஓவியங்கள் விற்பனை செய்திருக்கிறார். பாடசாலைக்கு எனவும் சிலது அன்பளிப்புச் செய்திருக்கிறார். அவற்றை விற்றுப் பணமாக்கி இருக்கிறோம். இருந்தும் இன்னமும் சிறந்த ஓவியர்களிடம் நுணுக்கங்களைக் கற்று வருகிறார்.

2007, 2008 இரு வருடங்களும் எங்கள் பாடசாலையில் மாணவர்களுக்காகவென  இலவச (பயன்படுத்தும் பொருட்களுக்கான தொகையை மட்டுமே பெற்றுக் கொள்வார்) ஓவிய வகுப்புகள் நடாத்தி இருந்தார்.  அப்போது பாடவேளை இல்லாத ஆசிரியர்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்று அழைப்பு வைத்திருந்தார். ஒரே ஒரு ஆசிரியை மட்டும் தொடர்ந்து கற்று வந்தார். ஆர்வம் இருந்தும் வகுப்பு வேளைகளில் செல்வது இயலாது இருக்கிறது என்னும் என் ஆதங்கத்தை சென்ற வருட ஆரம்பத்தில் நான் வெளிப்படுத்தி இருந்தேன்.

அது முதல் முடிந்தவரை பிரதி செவ்வாய் அன்றும் மதிய போசன இடைவேளையில் ஓவிய வகுப்புகள் நடக்கிறது. வாசகசாலைப் பொறுப்பாளர், பாடசாலைச் செயலாளர், ஆசிரியர்கள் என்று எப்படியும் பத்துப்பேர் சேர்ந்து விடுவோம். 

இது மூன்றாவது (வாணி கவனிக்க) முயற்சி. இம்முறை எண்ணெய் வர்ணங்களைப் பயன்படுத்த இருக்கிறோம்.
குறை வேலையைக் குருவுக்கும் காட்டக் கூடாது என்று சொல்வார்கள். இங்கு எனக்கு ஏற்கனவே பாராட்டுப் பத்திரம் கிடைத்து விட்டது. ;) 

எல்லோர் பொறுமையையும் நிறையச் சோதித்து விட்டேன். ;)

வரைய இருக்கும் ஓவியம்...

...இப்படி வர வேண்டும்.

முதற்படியாகக் கரியால் கோடு இழுத்து வைத்திருக்கிறேன்.


மற்ற நண்பர்கள் சிலரது கோட்டுச் சித்திரங்கள்



வாரா வாரம் வரைவதை உங்களோடு பகிர்ந்து கொள்வதாக இருக்கிறேன் - ஏதாவது சொல்வீர்கள் என்கிற நம்பிக்கையில்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பி. மு.கு 
 மையைக் கலக்காமல் பூச முடியாது என்பது இமாவுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் இந்த இடுகைத் தொடரின் கீழ் யாரும் வந்து 'கலக்குங்க' என்று கருத்துச் சொல்லுதல் ஆகாது என்பதை அனைவருக்கும் அன்புடன் அறியத் தருகிறேன்.
நன்றி
வணக்கம் _()_

5 comments:

  1. ரூத் மில்லரைப் படிக்க மெய் சிலிர்க்குது. அப்படி ஒருவர் எங்கள் பிள்ளைகளின் ஸ்கூலிலும் இருந்து போனவருடம் றிரயேட் ஆனார் அவரும் செல்விதான்.

    நான்தான் கண்ணை மூடிட்டனே இமா... அதால பதிவேதும் தட்ட முடியேல்லை:) :). அழகா வரையுறீங்க.. பெயிண்ட் அடியுங்கோ..

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சாரு & மொப்ஸ். ;)

    ReplyDelete
  3. இமா.. பதிவிலேயே இந்தளவுக்கு வண்ணத்தைக் குழைச்சு விட்டிருக்கீங்க! கான்வாஸ் பத்திரம் :) கலக்கீட்டீங்கோ இமா(கலக்குங்கோன்னு தானே சொல்லக் கூடாது :) )

    ஆசிரியை க்ரேட் இமா.. இந்த மாதிரி மனசோட என்னையும் படைச்சிருக்கலாம்.

    ReplyDelete
  4. //ஆசிரியை க்ரேட்// like Geno. ;D

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா