Wednesday, 24 February 2010

ஏட்டுச் சுரைக்காய்....

....கறிக்குதவாது. படத்தில இருக்கிற கப் காபிக்குதவாது. 
ஆளாளுக்கு கப் கேட்கறீங்களே!! ;)

வாணி கேட்ட ப்ளூ கப் இதோ


ஜீனோ ரெண்டும் வேணும் என்று கேட்டதால்...


ஆளுக்கு ஒரு கலர். ;)

 

எதுவும் கேட்காமல் பின்னூட்டம் கொடுத்த பிரபாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று தெரியல. ஸோ, நானே ச்சூஸ் பண்ணிட்டேன். ;)




இரண்டும் வேண்டும் என்று சொன்னீங்க சந்தனா. ஒன்று கார்ல வச்சுக்கலாம்...



டிரைவிங் லெசன் போறப்ப யூஸ் ஆகும். மற்றது...

வீட்டுக்கு. ;)

உங்க பேர் தெரியலையே அனானி!!
அதான் இப்படி விதம் விதமா மூன்று. ;)

 ஸ்பெஷலா இனிப்'பூ', புளிப்'பூ', துவர்ப்'பூ', கசப்'பூ', உறைப்'பூ', உவர்ப்'பூ'  என்பதான ஆறு சுவைகளையும் குறிக்கும் விதமாக...


ஆறு பூக்கள் பெய்ன்ட் செய்த கப் :)

சரி, வந்த எல்லோருக்கும் கப் கொடுத்துட்டேனா!!
கலக்கிட்டேன்ல! ;D

21 comments:

  1. இமா அக்கா கப்பும் அதில் இருக்கின்ற படமும் ரொம்ப எளிமையாகவும் ரொம்ப ரொம்ப அழகாகவும் இருக்கு. அதிலும் ப்ளூ கப் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  2. இது அநியாத்திலும் பெரும் அநியாயம் இமா!! அழுத பிள்ளைகளுக்குத்தான் கப் தருவீங்களா? சமத்தா வந்துட்டுப் போற என்ன மாதிரி குட் கேர்ள்ஸ்க்கு இல்லையா? ;-(

    அதெப்படி, பேரை பெயிண்ட் செய்து, உடனே அழிச்சுட்டு பேற பேரு எழுதுவீங்களா? இல்ல ஸ்டிக்கரா? :-D

    ReplyDelete
  3. போங்க இமா!! உங்களுக்கு அதிராவில அன்பே இல்லை:(:(:(.

    இமா டிஷூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!

    ReplyDelete
  4. எத்தனை mug இருந்தாலும் இந்த ஆசியாக்கு விதவிதமாக மக் வாங்க பிடிக்கும்,எனக்கு இரண்டு கலருமே பிடிச்சிருக்கு,கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் எனக்கும் ஒன்றாவது கிடைத்திருக்கும்

    ReplyDelete
  5. இமா,
    எனக்கு உங்க மேல் எப்பவும் பொறாமையா இருக்கும். இப்ப அதிகமாகிக்கிட்டே போகுது. குறைக்கணும்னா எனக்கும் ஒரு நாலு மக்:-)

    என்ன அழகா ஓவியம் வரையறீங்க, எனக்கும் சொல்லிக் கொடுங்க, ப்ளீஸ்!!!

    ReplyDelete
  6. இமா, நன்றி. உண்மையாகவே எனக்கா??? பிறகு பேச்சு மாறக்கூடாது. ஒரு நாள் நேரில் வந்து கதவை தட்டுவேன்(பகலில் தான்).

    ReplyDelete
  7. தாங்க்ஸ் சுபா. பேசி நாளாச்சு. நலம்தானே?

    ~~~~~~~~~~

    கடைல ஸ்டாக் தீர்ந்து போச்சு எண்டு சொன்னாங்கள். கிடைச்சால் உங்களுக்கும் அனுப்பலாம். பார்ப்போம் ஆசியா & ஹுசேன்.

    //பேரை பெயிண்ட் செய்து, உடனே அழிச்சுட்டு பேற பேரு எழுதுவீங்களா? இல்ல ஸ்டிக்கரா? :-D // பிக்காசால 'டச்அப்' பண்ற டெக்னிக் யூஸ் பண்ணி ஒரிஜினலா பெய்ன்ட் செய்த பேரை நீக்கிட்டு அதிலேயே வேறு பேர் அடிச்சிட்டேன். 1 பூ, 6 ஆகினதும் 'டச்அப்'. :) ரகசியத்தை யார் காதிலையும் போட்டு விடாதீங்கோ, ப்ளீஸ்.

    ~~~~~~~~~~

    செல்வி, உங்களுக்கும் கப் கிடைக்குதா பார்க்கலாம். ;)
    //ஓவியம்// இப்பதான் பழகறேன். ரூத்தோட 'வர்ஸ்ட்' மாணவி நானாத்தான் இருப்பேன். ;)

    ~~~~~~~~~~

    tkz Saru. ;)

    ~~~~~~~~~~

    டிஷூ கேட்டால் அது மட்டும் தான் கிடைக்கும் அதீஸ். ;)

    ~~~~~~~~~~

    மாறமாட்டேன் வாணி. உங்களுக்கேதான், சந்தோஷமா! ;)

    ReplyDelete
  8. கப்பூ!!! இமா... காலேஜில படிக்கும் போது எத்தன கப்பு அப்படின்னா.. எத்தனை அரியர் என்று அர்த்தம்.. காலேஜில கூட கப்பே வாங்காத எனக்கு கப்பூ மேல ஆச வரவச்சிட்டீங்களே ரீச்சர் அக்கா....
    எனக்கு தமிழ்ல இருக்கும் நல்ல quotes எழுதி தர முடியுமா...

    ReplyDelete
  9. ஓ! இப்பிடி ஒண்ணு இருக்கா! ;)

    கஷ்டமான வேலையைச் சொல்றீங்க இலா. நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன், பிக்காசால தமிழை ஒட்ட வைக்க முடியல. ;( பார்க்கலாம்.

    ReplyDelete
  10. நலம் தான் இமா அக்கா. கப்புக்கு ஆர்டர் பன்னும் பட்சத்தில் எனக்கும் ஒரு கப் வேணும்.........................

    ReplyDelete
  11. ஹை ஹை.. கப்ஸ்.. அதுவும் அதீஸ்க்கு இல்லாம எனக்கு மட்டும்.. ஜூப்பர்.. அப்படியே ஜீனோக்கு கொடுக்காம விட்டிருந்தா இன்னமும் நல்லாயிருந்திருக்கும் :))

    ReplyDelete
  12. athu eppadi!
    Puppy mattum thaane enakku inga uravu. ;D

    ReplyDelete
  13. இப்பதான் பார்சல் வந்தது ரொம்ப சூப்பர் ஆகா இருக்கு நன்றி 3 கப் 3 விதமாக சூப்பர்
    அறுசுவை அனானி :)

    ReplyDelete
  14. Hi Arusuvai Anonymous,

    got it without any chip! gud. nw u can...
    drink hot coffee, drink hot t,
    burn ur lips & think of me. ;D

    ReplyDelete
  15. enakku....????!!! :(( enakku oru cup parcel.... illainnaa azhudhuduven.

    ReplyDelete
  16. ஓகே. அப்ப 'மூணு கப்' கேட்ட அ.அனானி வனி இல்லை. ;)
    நீங்களாவது அழுறதாவது. பெஞ்சு மேல ஏத்துற ஆளாச்சே. எனக்கா தெரியாது. ;)

    ReplyDelete
  17. பாருங்க... பென்ச் மேல ஏத்தி இருந்தா கப் உடனே வந்திருக்கும்... எத்தாம விட்டு இன்னும் வரல. :(

    - வாணி இல்லை வனி

    ReplyDelete
  18. நீங்க எத்தினாலும் ஏத்தினாலும் ரெண்டு கிழமை ஆகும், விடுமுறை வர. அதுவரை பொறுத்திருங்கள். ;)

    ReplyDelete
  19. அச்சோடா... இப்படி ஆயிட்டுதே!!! சின்ன பிழை பெரிய தப்பா போச்சே!!! மன்னிச்சுடுங்கோ இமா.... வழக்கம் போல் வனி தமிழ்'ல சொதப்பிட்டா.... :(( (வனி வாணி ஆன மாதிரி)

    ReplyDelete
  20. //வனி வாணி ஆன மாதிரி// m. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா