Thursday 24 June 2010

அஞ்சலி, அஞ்சலி, புஷ்பாஞ்சலி @}->--


இமா சோகமாக இருக்கிறேன். ;(

 மழை, வெயில், பனி, பூனை, பூச்சி, சந்திரன்  என்று காட்சி எதுவானாலும் என்னோடு என் மூன்றாம் கண்ணாகப் பார்வையிட்டுப் படம் பிடித்துப் பாதுகாக்கவும் உதவிய என்... என்... என்.. உயிரினும் மேலான... புகைப்படக்கருவி சில வாரங்கள் முன்பாக 'என் சமையலறை'யில் அகால மரணமடைந்தார் என்னும் சோகச்செய்தியைச் சக வலைப்பதிவர்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வு (பழக்கதோஷம், எப்பவும் சந்தோஷமாக இருந்தே பழகிப் போச்சு. ஹும்.) பெரும் சோகம் அடைகிறேன். ;;))))

(எல்லோரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு அமைதியாக அமருமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.)

( இதுதான் சாட்டு என்று ஆளாளுக்குத்லைப்பு ஆரம்பித்து விட்டுத் 'தைரியமிருந்தால் தொடருங்கோ' என்று சவாலுக்கு இழுக்கலாம் என்று மட்டும் நினைக்காதைங்கோ. புதுசாச் சமைக்க ஏலாட்டிலும் ஃப்ரிஜ்ஜிலருக்கிறதை எடுத்துச் சுட வைத்தாவது பரிமாறிவிடுவேன் இமா. இது புதுவிதமான டிஷ். வாங்க சாப்பிடலாம்.) 

(முதலாவதாக எழுந்து அமர்பவர்க்கு வலையுலக மரபின்படி வடையும், இரண்டாவது ஆளுக்கு சட்னியும், மூன்றாமாளுக்கு... அது நிச்சயம் பூஸாகத் தான் இருப்பார், எனவே எலியும் அன்பளிப்பாக வழங்கப்படும்.)
இது கடந்த பெப்ரவரி மாதம் இங்கு 'ஹாமில்டன் தோட்டத்தைப்' பார்வையிடச் சென்ற போது என் கருத்தைக் கவர்ந்த தாவரம் இது.

'மூன்றில் ஒன்று' என்று எண்ணத் தோன்றியது எனக்கு.

இலையில் உருளைக்கிழங்குத் தாவரத்தின் சாடை, பூக்கள் நிறமும் தோற்றமும் ரோஜாதான். (ரோஜாதான் அதிரா & ஜீனோ.) காய்களைப் பாருங்கள். ஏதோ புதிய இனத் தக்காளி போலில்லை!!

சுற்றுமுற்றும் தேடினேன். எங்கும் பெயர்ப்பலகையைக் காணோம். ;( யாருக்காவது எதாவது தகவல் தெரிந்தால் சொல்லி உதவுங்களேன்.

அடுத்து ரோஜா எங்கு மலருமோ!!!!

34 comments:

  1. ஆ... இமா, இது புதுத்தலைப்போ?? ஏன் மேலே வரவில்லை...? ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் வடேஏஏஏஏஏஏஏஏஏஏஏ நேக்குத்தான்(ஒரு கொமென்ட்டையும் காணாதநேரம்தான் இப்பதிவு, சொல்லிட்டேன் நாந்தான் பெஸ்ட்டு, 0 comments எண்டுதான் மேலே இருக்கு... சொல்லிட்டேன் ஆமா... இல்லாவிட்டால் 18 வேட்டு நியாபகம் இருக்கட்டும், நான், அஞ்சலி செய்யச் சொன்னீங்கதானே அதுக்குத்தான் சொன்னேன்.... கமெராதானே போனது..கிட்னி இருக்கில்ல:), அப்போ ஏதாவது போடலாம்தானே.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்..

    சரி விஷயத்துக்கு வாறேன்... இது அடுக்கில்லாத ரோசாவேதான்.... இங்கே மூலை, முடுக்கு பட்டி, தொட்டியெல்லாம் பிங் அண்ட் வைட் கலரில் ஜொலிக்கிறது, கொடிப்பத்தைபோல வளர்ந்து கொண்டே போகும்.. முடிந்தால் கேட்டுச் சொல்கிறேன் பெயரை...

    ரோசாவைப் பார்த்து தாவரம் எண்டால், அதிராவுக்கு கெட்டகோபம் வருதூஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி இமா. அடுத்து எங்கள் வக்கீல், பச்சைரோஸ் புகழ், ஜெய்..லானி தொடர்வார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். டொட் ட டொயிங்......

    சந்துவைக் காணோமே... தொடர...

    ReplyDelete
  2. இமா வந்துட்டீங்களா... வாங்க வாங்க. கேமரா போச்சா??? கவலை படாதிங்க... புதுசு வாங்கிடலாம் ;) அதிரா உங்களுக்கு வாங்கி தராங்கலாம். புதுசா இருக்கு இந்த பூ செடி. ரோஜா மாதிரியே இருக்கு. பெயர் கண்டுபிடிக்க வேணும். - Vanitha

    ReplyDelete
  3. Cornelia – Shrub Rose ???

    www.gardencentre.co.uk/images/large/5575.jpg - Vanitha

    ReplyDelete
  4. ஹாய் இமா நலமா.நீண்டடடட நாளைக்கு பிறகு. ஒரு பதிவு.
    பார்த்தால் ரோஜா மாதிரிதான் தெரியுது.
    ஆனாலும் ரோஜா பட‌ம்தான் போடவேணும் இது ஸேப்பில்லை. அதிராக க... சொல்லப்போறா.
    சரி என்ன செய்வது கமராவை நினைச்சு கவலைப்படவேண்டாம்.nikon d3000 மாடல் கமரா வாங்கித்தாறன்
    ஆஆ எனக்குதான் வ...

    ReplyDelete
  5. படத்தை பார்தா பிளம்ஸ் -ன்னு ஒரு பழம் இருக்கு . சில பேரு சொல்வாங்க சீனா தக்காளி அது மாதிரி இருக்கு. :-))

    ReplyDelete
  6. மூண்றாவது கண்னை சாம்பார்ல போட்டுட்டீங்களா. :-((
    டிஸ்யூ பிளீஸ்

    ReplyDelete
  7. மறைபொருள் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்(அண்ணனையும் தம்பியையும் கண்டுபிடித்ததைப்போல:)), பழசு எப்பவும் பழசுதான்... புதுசு எப்பவும் புதுசுதான்....

    எப்பவுமே பழசைத் தூசுதட்டிப்போடுவதே தொழிலாப்போச்சு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  8. //மூண்றாவது கண்னை சாம்பார்ல போட்டுட்டீங்களா. :-((
    டிஸ்யூ பிளீஸ் //
    =))

    ReplyDelete
  9. இதுதான் குறிஞ்சா வித் பூ அண்ட் பழம் இமா.. அதிரா சொன்னாவா? :)

    சரி.. புரியுது.. விடுங்க.. கொஞ்சம் நாள் மனசாறட்டும்.. பிறகு அங்கிள் கிட்டச் சொல்லி புதுசு வாங்கித் தரச் சொல்லுறனான்..

    ReplyDelete
  10. அடடா..என் கிட்ட ஒரு பிலிம் கேமரா இருக்கு அனுப்பி வைக்கட்டே... முதன் முதல் வெளிநாட்டில் வேலை செய்து வாங்கியதாக்கும்.. ரொம்ப அழகா படமெடுக்கும்... இது பன்னீர் ரோசா.... எனக்கு தெரியும்....இது ரொம்ப மணமா இருக்கும்...

    ReplyDelete
  11. அமைதியாக வந்து முகம் காட்டாமல் சிரிக்கிற இந்த அனானி யாரோ!! ;)
    வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி. (எதற்கு சிரித்தீர்கள் என்பதுதான் புரியவில்லை.) ;)

    ReplyDelete
  12. http://www.youtube.com/watch?v=89G7ou5jeCk

    சின்ன சின்ன ரோஜா மலரே

    ReplyDelete
  13. //இது புதுத்தலைப்போ?// ஏன்? பழசு மாதிரி இருக்கா?

    //ஏன் மேலே வரவில்லை...?// ம். நல்லாக் கேழுங்கோ. போன முறை உங்கட பக்கம் எனக்கு மேல வரேக்க அங்க வடை பொரிச்ச சட்டியையும் கழுவித் துடைச்சு எடுத்து வைச்சுவிட்டீங்கள். கூ.ஆ எங்கள் ரெண்டு பேரோடயும் விளையாடுறார் போல.

    //ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் வடேஏஏஏஏஏஏஏஏஏஏஏ நேக்குத்தான்// மேல ஒருவர் சிரிச்சுக் கொண்டு இருக்கிறார், பார்த்தீங்களோ!!

    //0 // எண்டால் வடைதான் எண்டு 'அண்ணாட்ட' சொல்லுங்கொ அதீஸ்.

    //கமெராதானே போனது.// ம்.
    //ஏதாவது போடலாம்தானே.// அதுதான் போட்டு இருக்கிறன். தெரியேல்லயோ!!

    //கொடிப்பத்தைபோல// உது வேற அதீஸ். கொடி இல்லாத பற்றை.

    //ரோசாவைப் பார்த்து தாவரம் எண்டால், அதிராவுக்கு கெட்டகோபம் வருதூ// ஓ! மரியாதைக் குறைச்சலாகத் தெரியுதோ!!
    ஓகே! அப்ப...

    ரோசாவைப் பார்த்துத் "தாங்கோ வரம்." ;D

    ReplyDelete
  14. என் உலகத்திலேயே எனக்கு வரவேற்பா! ;)

    //அதிரா உங்களுக்கு வாங்கி தராங்கலாம்.// ;)

    //Cornelia – Shrub Rose// nope. ;( லிங்க் செக் பண்ணிட்டேன். இதன் இலைகள் ஒரு விதமான டெக்க்ஷரா இருந்துது. வேலை மினக்கெட்டுத் தேடி இருக்கிறீங்கள். நன்றி வனிதா.

    ReplyDelete
  15. ஹாய் அம்முலு!

    //இமா நலமா.// ரைமிங்!! ;)

    //அதிராக க... சொல்லப்போறா.// அவ க.கா.போய்ட்டா. ;))

    //சரி என்ன செய்வது கமராவை நினைச்சு கவலைப்படவேண்டாம்.// சரீ.
    //nikon d3000 மாடல் கமரா வாங்கித்தாறன்// ஹை!! டங்க்க. ;D

    //ஆஆ // ஓ!! ரெடியா வாயைத் திறந்தாச்சோ! ;)

    //எனக்குதான் வ...// ?? வண்டோ!! ;))))

    ReplyDelete
  16. "கலக்கோ கலக்கிறீங்க" அதிரா.
    பாவம் இமா

    ReplyDelete
  17. ஜெய்லானி
    //பிளம்ஸ் -ன்னு ஒரு பழம் இருக்கு// எங்க வீட்ல மரமே இருக்கு.
    //சில பேரு சொல்வாங்க // நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டா!! கர்ர்ர்.
    //சீனா தக்காளி மாதிரி இருக்கு.// பார்த்த 'மாதிரி' சொல்றீங்க. என் உலகில் 'மாதிரி' போன்ற 'சந்தேகப்' பேச்சுகள் செல்லாது. ;) ஆதாரபூர்வமான தகவல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைத் தாழ்மையோடு அறிவித்துக் கொள்கிறேன். ;D

    //டிஸ்யூ பிளீஸ் // கஷ்டப்பட்டு பூரணசந்திரனைப் பிடிக்கவென்று தந்த டிப்ஸ் எல்லாம் வீணாப்போச்சு. ப்ச். ;(

    ReplyDelete
  18. தெய்வசுகந்தி... வாங்கோ, நல்வரவு.
    அழாதைங்கோ. நானே எப்பிடியோ கஷ்டப்பட்டு மனதைத் தேற்றிக் கொண்டு இருக்கிறன். ;(

    ReplyDelete
  19. அதீஸ்,
    //ம.பொ.ர// !! ஓ!! ;D
    //பழசு எப்பவும் பழசுதான்... புதுசு எப்பவும் புதுசுதான்.// சரி. வேறு வழி!!
    //எப்பவுமே // எப்ப!! ;D

    //ஹைஷ்126 said... :)// ?? ;D நீங்களும் கண்டுபிடிச்சீட்டீங்களோ!!

    ReplyDelete
  20. ஹாய் அனாமிகா துவாரகன் அவர்களே! ;D நான் ஒரு சோகமான கதை சொன்னால் சிரிக்கிறீங்கள். ;D

    ~~~~~~~~~~~~

    எல்ஸ்.. வாங்கோ. ;) //குறிஞ்சா வித் பூ அண்ட் பழம்// அது, மணித்தக்காளி எல்லாம் தனியாப் போட வேண்டிய இடுகைகள். ;D

    //சரி.. புரியுது.. விடுங்க.. கொஞ்சம் நாள் மனசாறட்டும்.. பிறகு அங்கிள் கிட்டச் சொல்லி புதுசு வாங்கித் தரச் சொல்லுறனான்.// எப்புடி!!! எப்புடி ஆறும்!! அது வரைக்கும் நீங்கள் எல்லாரும் கமராவை மூடி வச்சுக் கொண்டு இருப்பீங்களோ!! ;( சொந்தமாக 'ஆறு' வாங்கி விக்கிறதைப் பார்த்துப் பார்த்தே ஆறாத ரணமாகிப் போகும் மனசு. ;(

    ~~~~~~~~~~~~
    ஹலோ இலா! ஹலோ!! (செல்லுலதானே பார்க்கிறனீங்கள். அதுதான் 'ஹலோ' சொன்னனான். //பிலிம் கேமரா// அனுப்புங்கோ. குறும்படங்களாக இடுகைகள் போட உதவியாக இருக்கும். உதவ முன்வந்தமைக்கு மிக்க நன்றி. ;)
    //ரொம்ப அழகா படமெடுக்கும்.// விரட்டிப் பிரயோசனம் இல்ல. எனக்குப் பாம்புக்குப் பயமில்ல.

    //பன்னீர் ரோசா.... எனக்கு தெரியும்....இது ரொம்ப மணமா இருக்கும்.// ஆதாரம் ப்ளீஸ். ;D
    அடுத்த தடவை போனால் செக் பண்ன வேணும். தகவலுக்கு நன்றி இலா.

    ReplyDelete
  21. ////பிளம்ஸ் -ன்னு ஒரு பழம் இருக்கு// எங்க வீட்ல மரமே இருக்கு//

    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  22. இமா உங்களை நீண்ட நாட்களாக கானோமேன்னு பார்த்தேன்,இது தான் சோகமோ !

    ReplyDelete
  23. கிச்சன்லயும் காமிராவும் கையுமா இருந்தா, அப்படித்தான்!! கரண்டின்னு நினைச்சு காமிராவைப் போட்டுக் கிண்டுனீங்களோ?

    எது எப்படியோ, கொஞ்ச நாளைக்கு நாங்க தப்பிச்சோம்!!

    ;-)))))

    ReplyDelete
  24. அடுத்த சீசனுக்கு ஜெய்லானி வீட்டுக்குப் ப்ளம் பார்சல் அனுப்புறேன். ;)

    ReplyDelete
  25. இல்லை ஆஸியா. வேறு காரணங்களும் உண்டு. இது சும்மா, ஹுசேன் போல ஆட்கள் சந்தோஷத்துக்காகச் சொன்னது. ;))

    ஹுசேனம்மா, //கரண்டின்னு நினைச்சு// கிண்டல. கடலைமான்னு நினைச்சு கிண்டினேன். ;D

    உங்கள் இருவரையும் சீதாலக்ஷ்மி அங்க சின்னச்சின்னப் பதிவுகள் 2 ல் தேடியிருந்தாங்க, பார்த்தீங்களா?

    ReplyDelete
  26. கேமராவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் இமா!

    இந்த 'தாங்க'வரம் கொஞ்சம் வித்யாசமா இருக்கு..பன்னீர் ரோஸில் காய் வராதுன்னு நினைக்கிறேன்.
    பூ கலர் அழகா இருக்கு! :)

    ReplyDelete
  27. இமா, ஆழ்ந்த அனுதாபங்கள். புது காமரா வாங்கி விட்டீர்களா?

    பூக்கள் கொள்ளை அழகு.

    // எதாவது தகவல் தெரிந்தால் சொல்லி உதவுங்களேன். //

    எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.

    ReplyDelete
  28. ஒரு அப்டேட் /\

    தற்போது 'அறுசுவை'யில் உள்ள 'என் சமையலறை'க்குத் 'தொடர்பு' கொடுத்து இருக்கிறேன். அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறேன். ;)

    பின்னூட்டம் கொடுப்பதானால், அஞ்சலிக்கான பின்னூட்டத்தை இங்கேயும், 'என் சமையலறை'க்கான பின்னூட்டத்தை அங்கேயும் கொடுக்க வேண்டும். ;) இரண்டையும் குழப்பி வைக்க வேண்டாம் எனப் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். ;)

    ReplyDelete
  29. வருகைக்கும் அனுதாபச் செய்திக்கும் நன்றி வாணி & மகி. ;)
    ஒரு மாதிரி எங்கேயோ கிடந்த பழையதைத் தேடி எடுத்து விட்டேன். பாவம் ஹுசேன். ;)

    வாணி நீங்கள் மட்டும் தான் ஒன்றும் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். மீதிப் பேர் ஒன்றில் க.கா.போயிருக்கிறார்கள். இல்லாவிட்டால் பூ சுற்றி விட்டுப் போய் விட்டார்கள். ;))

    ReplyDelete
  30. கேமராதான் குடுக்க முடியல...
    இதையாவது குடுக்க டிரைபன்றேன்..!!

    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

    அன்புடன் .> ஜெய்லானி <
    ################

    ReplyDelete
  31. மிக்க நன்றி ஜெய்லானி அவர்களே.
    எப்படித்தான் இத்தனை வேலை பண்றீங்களோ!

    விருது கொஞ்சம் பாரமாக இருக்கு. இங்கு கொண்டுவந்து சேர்க்க நேரமாகும். கோபிக்க வேண்டாம்.

    ஏற்கனவே இரண்டு விருதுகள் இணைக்க வேண்டிய வேலை பெண்டிங்ல இருக்கு. இன்று எல்லாப் பூக்களையும் விசிட் அடித்து கருத்துச் சொல்லி வந்திருக்கிறேன். அடுத்த வேலை இதுதான்.

    மீண்டும் நன்றி.

    அன்புடன் இமா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா