Wednesday 1 June 2011

சும்மா ஒரு இடுகை - டிஷ்யூ ப்ளீஸ்

_()_

வாங்கி வந்து பிரிக்கும் போது, ஏற்கனவே ஒரு கரப்பான்பூச்சிக் குடும்பம் பயன்படுத்தி முடித்திருந்த அடையாளம் தெரிந்தது.
SUPER CLEAN!!!

ஒரு வீட்டுக்கு எத்தனை இலக்கங்கள்!!
'டயர்' என்று எழுதாதவரைக்கும் போதும். ;D
'ரு' ஒரு மாதிரி இருந்தது. பரவாயில்லை அந்த 'மை' ;))) எப்படி எழுதி இருந்தார்கள் என்று சரியாகக் கவனிக்காமல்விட்டுவிட்டேன்.
எழுதியவர் சிங்களவர், அதனால் மன்னிக்கலாம்.

வாழ்க Sound, வளமுடன் Horn
வாழ்க்கையில் நான் அதிக அளவு horn சப்தத்தைக் கேட்டது...
சென்னை மாநகரில்தான். அது போல், வாகனங்களில் எத்தனை வாசகங்கள்!!

எழுத்து இருக்கும் இடத்தில் மண் ஒட்டிக் கொள்ளாதோ!!
அல்லது...
யாராவது கரிசனமாக மீண்டும் சுரண்டி விட்டிருக்கிறார்களா!!

விடுமுறையின் போது இது போல் இன்னும் நிறைய சுவாரசியமான விடயங்கள் கண்ணில் பட்டன. எல்லாவற்றிலும் 'உயரமான வெளிச்சம்'... சென்னைச் சுவரோவியர்களின் திறமை; வியக்காமல் இருக்க முடியவில்லை. அது எப்படி எவ்வளவு பெரிதாக வரைந்தாலும்... எத்தனை சுவர்களில் வரைந்தாலும் பிரதி எடுத்தது போல கச்சிதமாக வரைகிறார்கள்!!

இறுதியாக.... ஆகாயவிமானத்தில் சுட்டது

இப்போ திருத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

10 comments:

  1. இந்தியாவில் Horn சத்தங்கள் காது செவிடாகி விடும் உண்மை தான்.
    lift என்று எழுதாமல் life என்று எழுதியமை விபத்து போல தெரியவில்லை. உங்கள் ( Life )வாழ்க்கையே இந்தக் கைப்பிடியில் தான் இருக்கு என்று பூடகமா சொல்லியிருக்கு.

    ReplyDelete
  2. படங்கள் மூலம் வித்தியாசமான பதிவினைத் தந்திருக்கிறீர்கள்.
    கமராக் கைவண்ணங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. சென்னை வாகனங்களில் உள்ள வாசகங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் .இவ்ளோ சத்தமா horn அடிச்சா எப்படி வளமுடன் வாழ்வது .

    ReplyDelete
  4. கண்ணைத் திறந்து வைத்தால் இப்படியான‌ நிறைய சுவாரசியமான விடயங்கள் கண்ணில் படும். ஹி ஹி. என்னிடம் பல இருக்கின்றன. மூஞ்சிபுத்தகத்தில் போட்டிருக்கிறேன். கொஞ்சத்தை இங்கேயும் போடவேணும்.

    ReplyDelete
  5. வான்ஸ் அக்கா சொன்ன மாதிரி, பூடகரமாக சொன்னது போலத் தான் எனக்கு தெரிகிறது. ஹி ஹி. ஒரு முறை துருக்கியில் என்று நினைக்கிறேன். ஞாபகமில்லை. தண்ணீரை சேமியுங்கள் என்று போட்டுவிட்டு, இரண்டு முறை நன்றாக ஃப்ளஷ் பண்ணுங்கள் என்றும் போட்டிருந்தார்கள். ஹி ஹி.

    ReplyDelete
  6. இந்தாங்கோ ரிசூ... பேப்பிள் கலர்...

    //வாங்கி வந்து பிரிக்கும் போது, ஏற்கனவே ஒரு கரப்பான்பூச்சிக் குடும்பம் பயன்படுத்தி முடித்திருந்த அடையாளம் தெரிந்தது.
    //
    கண்ணை மூடிக்கொண்டு தூக்கி ரொலிக்குள்ள போட்டு வீட்டுக்கு கொண்டுவந்துவிடுறது, பிறகு வாயில்லாத புழுப்பூச்சிகளையெல்லாம் குறை சொல்றது.... இதே தொழிலாப்போச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  7. வாங்கினது ஊரில, வீட்டுக்குப் பக்கத்துக் கடையில அதீஸ். இருந்ததே நாலைஞ்சு; எல்லாம் ஒரே நிலையிலதான் இருந்துது. ;)

    ReplyDelete
  8. நன்றி நிரூபன்.

    சிவா... !!! ;)

    1 ;) @ Angelin & Ana.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா