Wednesday, 16 January 2013

பதினாறும் பெற்று!

தனிமை! தனிமை! தனிமை!

தனிமை கர்ர்ர்ர் என்றிருந்த ஒரு நன்நாளில்... சமைக்கப் பிடிக்கவில்லை.
 
கூடையைத் தூக்கிக் கொண்டு தோட்டத்தில் ஒரு உலாச் சென்று, பச்சையாக (வேறு நிறமாக இருப்பினும் பச்சையாக) உண்ணக் கூடிய இலை, குழை, காய்களில்...
 
பதினாறு பெற்றேன். ;)
அவையாவன...
1. வல்லாரை
2. சில்வர் பீட் 
4. கொத்துமல்லி
6. பீட்ரூட்
9. திராட்சை
10. சலட் மிக்ஸ் (ஏற்கனவே சேர்க்காத மீதி வகை இலைகள் மட்டும்)
14 சைவ்ஸ்
15 நஸ்ட்... கர்ர்...ம்..  Nasturtium
16  Nasturtium 
....என்பனவாம்.
 பிறகு 'கந்தப்பாத்து'* ஓடுகிற நீரில் கழுவியபின், 'salad spinner'இல்

ஒரு சுற்றுச் சுற்றி நீரகற்றிவிட்டு, பெரிதாயிருந்தவற்றை மட்டும் அரிந்து...
(என்ன கீரை சமைப்பதானாலும் இந்தப் படிமுறைகள் பின்பற்றப்படும்.)

இருந்த ஒரே ஒரு தக்காளியை (வாங்கியதுதான். செடியிலுள்ளவை இன்னும் முற்றவில்லை.) அரிந்து....

potato salad dressing ஒரு கரண்டி அள்ளி வைத்து ருசிக்க... தனிமை இனிமையாயிற்று; பெருவாழ்வும் பெற்றேன்ன்ன். ;D

* 'கந்தப்பார்த்து' என்பது 'கஞ்சல் பார்த்து' என்பதன் மருவல் என்பதறிக. ;D

33 comments:

  1. 16ம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

    யாம் மாலே நேர, [ச்சீ,ச்சீ,நாக்குப் பிறழ்கிறதே..பல யுகங்கள் கழித்துச் செந்தமிழில் உரையாடினால் இப்படியாகும் போலும்!;)]மாலை நேர நடைக்குச் செல்கின்றோம், மீண்டு(ம்) வருவோம்.

    :)))))))

    ReplyDelete
    Replies
    1. ;))))))) //இப்படியாகும் போலும்!// ஆகும் ஆகும். ;) இங்கு கொங்குதமிழ் உரையாடலுக்கும் அனுமதி உண்டு.

      ஆகட்டும். ஆயினும்... நடைக்குச் செல்லுமுன் சத்துமாவு உண்டால் இடை மெலியாது என்பதைத் தாழ்மையுடன் நினைவுறுத்த விரும்புகிறேன். ;D

      Delete
  2. /செல்லுமுன் சத்துமாவு உண்டால் இடை மெலியாது / அது மெய்யே! இருப்பினும் உண்ணாமல் சென்றால் நடை தளர்ந்துவிடும் அல்லவா? காலையில் உண்ட நாலு இட்டலிகள் நாள் முழுக்கப் போதுமோ? தங்களைப் போல் இலை தழை உண்ண எமக்கு ஆர்வமில்லை, வசதியும் இல்லையே? அய்யகோ..என் செய்வேன்?!
    சிலருக்குத் தனிமை இனிமை ஆ(க்)கும் வண்ணம் தோட்டம் துரவுண்டு, ஆங்கே பயிர் பச்சைகளுமுண்டு. அவ்வசதி எமக்கில்லை, அதனால் தான் சத்துமா-வின் உதவியை நாடவேண்டியதாயிற்று என்பதை யானும் பணிவன்புடன் தெரிவிக்க விழைகிறேன்.
    நலம் பெறுக, வளம் பெறுக!
    வாழ்க வளமுடன்!
    -------------
    இனியும் எங்கூட தமிழ்ல பேசுவீங்க?
    :)))))))

    ReplyDelete
    Replies
    1. குழம்பி அருந்தி நடை பயிலலாமோ ??:))

      Delete
    2. கோடையில்... இனிமையற்ற குழம்பி அருந்தி, குழம்பாமல் நடைபயில்க. ;D

      Delete
    3. குழம்பி-- பசுப்பாலோ,வேறெந்தப் பாலோ இல்லாமல் குடித்தால் நன்று! இல்லையெனில் பச்சைத் தேனீர்(green tea), எலுமிச்சைத் தேனீர்(lemon tea) இவை போன்றவற்றை அருந்தி நடை பயிலவும்.
      அதுவே இடை மெலிய உறுதுணையாகும். ;)))

      பி.கு. இத்தனை அகவைகளாகியும் தாங்கள் இன்னும் நடை "பயின்று" கொண்டுதான் இருக்கிறீர்களா ஏஞ்சல் அக்கா? ஒரு வயதிலேயே எல்லாரும் நடை பயில்வது எப்படியென கற்றுக்கொள்வோமே!;))))

      Delete
    4. தேவதை எங்கே காணோம்!!

      Delete
    5. ;)) இன்னும் உள்ளது தேவதையே! ;)

      Delete
  3. மிக அருமை இமா.அழகும் கூட..

    ReplyDelete
  4. ”அந்தப்” பதினாறும் பெற்றிருந்தாக்கூடத் தனிமை இருக்காது இமா!! :-)))

    //15 நஸ்ட்... கர்ர்...ம்.. Nasturtium
    16 Nasturtium //
    இதென்ன ரெண்டு வாட்டி..? ஓ, பூவும், இலையுமோ?

    படத்தில “3”, 3-வாட்டி வந்திருக்கே? :-))

    திராட்சை, திரட்சை மாதிரியே இல்லியே? சுண்டைக்காய் மாதிரில்ல இருக்குது? இது எதும் புதுவிதமா?

    எங்க ஊர்ல, “கந்தப்பாத்து” என்றால், “கந்தல் பார்த்து” என்று அர்த்தம். அதென்ன “கஞ்சல்”?? :-)))

    ReplyDelete
    Replies
    1. ஹை!! ஹுசைனம்மா வந்திருக்காங்க. ;)
      16 !! :))))
      பதில் 1. ஆமாம்.
      2. அது... ஒரே கீரைல 3 விதம். ;D
      3. //சுண்டைக்காய் மாதிரி// ;))))பிஞ்சு அதானே எனக்குப் பிடிக்குது.
      4. //கந்தல்// அதேதான் இது. ;D ('கந்தல்' என்று போட... யாராவது வந்து 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு,' ரேஞ்ச்ல டவுட்டு கேட்டு வைச்சா என்ன செய்றது என்று இப்பிடிப் போட்டா... ஹ்ம்! தப்பவே முடியாதோ இமா!! ;D )

      சிரிக்க வைச்சீங்க, சந்தோஷம் ஹுசைனம்மா. :)

      Delete
  5. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்னு ஒரு நல்ல பதிவை போட்டுட்டீங்க இமா..படத்தில்தான் அந்த இனிமையை ரசிக்க முடியுது. ஏன்னா அந்த சாலட் செய்ய வேண்டிய பொருட்கள் ஒரு சிலது இங்க கிடைக்காது..:(

    ReplyDelete
    Replies
    1. !! நிச்சயம் கிடைக்கும். வேறு பெயர் இருக்கும் ராதா.

      Delete
  6. ennanamoo peri il unnavu sappudurega ennanu puriyalai.. parka romba nalla iruku.. 5vathu picture super

    ReplyDelete
    Replies
    1. உங்களை என் தமிழால் கொல்ல விரும்பவில்லை. ;) மிக்க நன்றி ஃபாயிஜா. :)

      Delete
  7. பதினாறு பேரும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்காங்க ..
    ட்ரிக்சி கிட்ட இருந்து இவங்க எப்படி தப்பிக்கறாங்க :))

    சாலட் அருமையா இருக்கு ..எங்க வீட்ல தக்காளி மட்டுமே கிலோ கணக்கில் ப்ரிட்ஜில் இருக்கும்
    நாங்க சாலட் டிரெஸ்ஸிங் knorr வாங்கி சேர்ப்போம் லைட்டா புலி சுவையுடன் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. //knorr வாங்கி சேர்ப்போம் லைட்டா புலி சுவையுடன் இருக்கும் // என்னது??! புலி சுவையோ?! ஆஆஆ...என் அன்புத் தமக்கைக்கு என்னாயிற்று? தாங்கள் சைவம் உண்பவர் என நினைத்திருந்தேனே..இப்படி புலி-கிலி என்று கூறி கிலியைக் கிளப்புகிறீர்களே?!

      நானும் பார்க்கின்றேன், இப்போது ஏஞ்சல் அக்கா நிறைய கவனமின்மை பிழைகள் (careless mistakes) விடுகின்றார்! விரைவில் ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். வீட்டில் இருக்கும் வைத்தியர் தம் தேவதையை சரியாகக் கவனிக்காமல் இருக்கின்றாரோ? பிரித்தானியாபுரத்தில் ஒரு புகழ்வாய்ந்த மருத்துவர் இருப்பதாகக் கேள்வி. அங்கே செல்வோமா ஏஞ்சல் அக்கா? :)))))

      Delete
    2. யாம் புலி மாமிசம் சாப்பிட்டதே இல்லை தேவதையே! ஈழை நோய்க்கு நல்லதென்பர். ஆயினும் முயன்றதில்லை. இமா இழுத்தாலும் புலியைத் தின்னார். அவர்தான் தாவரபட்சணியாயிற்றே! தவிர... புலி என்றால்.. பயமோ பயம். தூர நின்று தொலைநோக்கியில் நோக்குவார்.

      Delete
    3. //ட்ரிக்சி கிட்ட இருந்து இவங்க எப்படி தப்பிக்கறாங்க// வேலி உண்டு. யாம் சமைக்காது உண்பவை அருகே அவருக்கு அனுமதி கிடையாது. அவர் உண்பதற்காக தனியே தொட்டிச் செடிகள் உள்ளன.

      //சாலட் அருமையா இருக்கு// ;) நன்றி
      //தக்காளி// விதம் விதமாக விளைந்துள்ளது. பழுக்கக் காத்திருக்கிறேன்.

      //நாங்க சாலட் டிரெஸ்ஸிங் knorr வாங்கி சேர்ப்போம் // ம்..
      ;)))))))))

      Delete
    4. கூகிளில் தட்டச்சு செய்யும்போது ளி லி ஆகிவிட்டது தங்கையே ..மேலும் எமது கணினி யின் எலி புதிது ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது :))

      Delete
    5. ஏஞ்சல் அக்கா நிறைய கவனமின்மை பிழைகள் (careless mistakes) விடுகின்றார்! //உண்மைதான் மகி ...நிறைய மிஸ்டேக்ஸ்.

      Delete
  8. பதினாறும் பெற்று!பறித்து ஆரோக்கியம் பெறுக...

    ReplyDelete
    Replies
    1. :) நன்றி அக்கா. இங்க நடக்குற கலாட்டா எல்லாம் கண்டுக்காதீங்க. :)

      Delete
  9. இமா..அருமையான சலாட் குறிப்பு...
    அழகாக செய்து காட்டி, வர்ணித்து அற்புதம்...:)

    உங்களால்தான் இவையெல்லாம் இப்படி முடியும்....:)))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! ஒரு தொட்டி குளிர்குழம்பியைத் தலைமேல் கொட்டியது போல் குளிர்..ந்து போனேன். நன்றி சகோதரி. ;))

      Delete
  10. ஆஹா பார்க்கவே ஆசையா இருக்கு,பச்சை பசேல்னு இருக்கு..சூப்பர்ர் இமா!!

    ReplyDelete
  11. தங்களின் இளமையின் ரகசியம் இவை தானா...:) கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு....

    ReplyDelete


  12. இமா உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
    http://www.asiya-omar.blogspot.ae/2013/03/blog-post_11.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா