Thursday, 1 September 2016

வாழ்த்துகளும் வாழ்க்கையும்

திடீரென்று ஒரு ஞானோதயம்,
ஒரு நாள் பிறந்த நாட்டிலிருந்து எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிளம்பி இங்கு வந்து சேர்ந்த மாதிரி, இந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்தால்! :-)

இப்போது... பெட்டி பெட்டியாகச் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் தரம்பிரிக்கப் படுகின்றன. அனேகமாக இம்முறை, நினைவுகளை இரைமீட்டுப் பார்த்து ரசித்துவிட்டு வீசிவிடுவதாக ;( இருக்கிறேன்.

வீசப் போவது.... நினைவுகளை அல்ல. அவை என்றும் என்னுடன் இருக்கும். :-)
சின்னக் கைகள் அன்பாக அனுப்பிய ரோஜாக்கள்
ஃபெல்ட் பென், ஸ்டாம்ப் பென் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அட்டை மட்டும் ரோஜா வர்ணம்;
ரோஜாவோ வர்ணம் இல்லாத வண்ணம்! :-)
 குமிழ்முனைப் பேனைகள் + ஒட்டும் கற்கள்
பொதியுள் பொதிந்து வைத்த அன்பு
சின்னக் கைகள், விட்ட பிழை எதையோ மறைக்க முயன்றிருக்கின்றன. :-)
 பழைய வாழ்த்திதழ் எதிலிருந்தோ பூக்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.
 :-) சிரமப்பட்டிருக்க வேண்டும். வளைவுகள் வெட்டும் கத்தரிக்கோலினால் ஓரங்கள் வெட்டப்பட்ட அட்டையில், காய்ந்த இலைகள். 
நிறம் நிரப்பி, அது நிரந்தரமாக இருக்கவென்று clear seal ஒட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கிளைகள் தான் இங்கு குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரோஜா - ஒரு திருமண அழைப்பில் இருந்து வந்திருக்க வேண்டும்.
 உலர்ந்த இலைகள் உதிர ஆரம்பித்துவிட்டன. 
வயது போகிறது! :-)
சற்றுப் பெரிதான அட்டை!
சின்னவர்கள் வளர ஆரம்பித்ததற்குச் சாட்சியாக, வாழ்த்திதழிலும் மெருகு கூடியிருக்கிறது.

இன்னும் சில இருக்கின்றன. அவை பிறிதொரு சமயம் பார்வைக்கு வரும்.

சின்னவர்கள் நால்வர் சேர்ந்து அனுப்புவார்கள். அவர்களுள் வரைபவர் ஒருவர் இருந்தார்.

இப்போது எல்லோரும் வளர்ந்துவிட்டார்கள். வேலை, திருமண வாழ்க்கை, படிப்பு, திரவியம் தேடித் திரை கடல் ஓடுதல் என்று ஆளுக்கு ஒரு திக்காகப் பிரிந்து போனார்கள். 

இதுதான்... வாழ்க்கை.
சின்னவர்கள் நால்வரும் எல்லாச் சிறப்புகளுடனும் சந்தோஷமாக வாழ... என்றும் என் பிரார்த்தனைகள்.
Love you kutties. :-)

14 comments:

  1. வாழ்த்துக்களும் வாழ்க்கையும்.. பதிவின் தலைப்பும் பதிவும் அருமை. பழைய மாணவர்களின் அன்பை என்றும் மனதில் மட்டுமல்ல ... எழுத்திலும் என்றும் நீங்காமல் பதிய வைத்து விட்டீர்கள்..ஒரு ஆசிரியையாக நினைவுகளை பகிர்ந்த இமாவிற்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் மருமக்கள் ராதா. :-) நான் வாழ்த்திதழ்கள் செய்து அனுப்புவது தான் வழக்கம்; வாங்குவது இல்லை. அதனால், அவர்களும் எனக்காகச் செய்து அனுப்புவார்கள். மாணவர்கள் கொடுத்தவையும் இருக்கின்றன. அவை மெதுவாக வரும். :-)

      Delete
  2. Beautiful cards! I wish you keep your memories and these cards always with you! :)

    ReplyDelete
    Replies
    1. வைத்திருக்கத் தான் விருப்பம் மகி. பார்க்கலாம். :-)

      Delete
  3. இப்படியாவது வலையில் காண்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அந்த சிறியவர்களுக்கு ,))))

    ReplyDelete
  4. அழகிய வாழ்த்து அட்டைகள். என்னிடமும் கல்லூரி காலத்தில் எனக்கு வந்த வாழ்த்து அட்டைகள் உண்டு. தூக்கிப் போட மனதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஊரில் விட்டு வந்தவை... நான்கு லாச்சிகள் நிறைய இருந்தன. இப்போ கூட ஒரு பயணப் பெட்டி நிறைய இருக்கு. அடுத்தடுத்து பகிர்ந்தால் பார்ப்பவர்களுக்குச் சலிப்புத் தட்டும். முக்கியமான கதை உள்ளவற்றை மட்டும் மெதுவே பகிர்ந்து கொள்வதாக இருக்கிறேன். பார்க்கலாம். :-)

      Delete
  5. இமா,

    வீசிவிட வேண்டாம், வைத்திருக்கப் பாருங்க. அவர்களின் அன்பு உள்ளே பொதிஞ்சிருக்கு.

    "இங்கு வந்து சேர்ந்த மாதிரி, இந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்தால்! " ____ இந்த எண்ணம் வராத நாளில்லை !

    ReplyDelete
    Replies
    1. //இந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்தால்!// :-) இதைச் சிலேடை என்றும் கொள்ளலாம் சித்ரா. முன்னால ஒரு ரெட் க்ராஸ் ஆப்பர்சூனிட்டி கடைல வாலன்டியரா வேலை பார்த்தேன். யாராவது எதிர்பாராமல் வீட்டை, ஊரை, நாட்டை சில சமயம் உலகை விட்டுக் கிளம்பிய பின் மக்கள், மருமக்கள், பேரர் வீடு சுத்தம் செய்து வண்டி வண்டியாகப் பொருட்களைக் கொண்டு வந்து இறக்குவார்கள். பாவமா இருக்கும். என் பங்கு சுத்தம் செய்தலை ஆரம்பித்திருக்கிறேன். :-) //வீசிவிட வேண்டாம், வைத்திருக்கப் பாருங்க.// இங்கு பதிவாகி விட்டால் பிறகு எங்கும் போகாது இல்லையா? நினைவாக பாக்கப் பண்ணி வைக்க வேண்டும். :-)

      Delete
  6. அழகான வாழ்த்து அட்டைகள் இமா. எனக்கும் என்ன செய்வது என தெரியாம இருக்கு.எறியவும் மனமில்லாமல்,வைத்திருக்கவும் முடியாமல்.....

    ReplyDelete
    Replies
    1. இதை... அவர்களுக்கே பிரித்து அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன் ப்ரியா. :-)

      Delete
  7. அழகான வாழ்த்துக்கள்....

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா