நாத்தனார் அறுந்து போன சங்கிலி ஒன்று வைத்திருந்தார். சங்கிலி ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே மாதிரியான இரண்டு பதக்கங்கள் அதற்கு இருந்திருந்திருக்க வேண்டும். சங்கிலியைத் திருத்திக் கொடுத்துவிட்டேன்.
இரண்டாவது பதக்கத்தில் வளையம் இருக்கவில்லை. இருந்தாலும், ஒரே மாதிரி இரண்டை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்! ஒரு ப்ரோச் செய்து கொடுத்தால், சங்கிலியை அணியும் சமயம் இதையும் பயன்படுத்துவார் என்று தோன்றிற்று.
சின்னதாக ஒரு ப்ரோச் பின், ஏற்கனவே இருந்த முத்துக்களோடு ஒத்துப் போகும் நிறத்தில் ஓர் மணி, தங்க நிற ஊசி ஒன்று தேடி எடுத்துக் கொண்டேன். அதற்கு மேல் தேவைப்பட்டவை, ஊசியை வெட்டுவதற்கும் வளைப்பதற்கும் ஏற்ற குறடு & hot glue gun மட்டும்தான்.
புத்தாண்டு அன்று என் அன்பளிப்பாகக் கொடுத்தேன். கடைத் தேங்காயை கடைக்காரருக்கே உடைத்தாயிற்று. :-)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா... இப்பூடி ஓசியில அதிராவுக்கும் ஒன்று செய்து அனுப்பலாமெல்லோ:)).. நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))
ReplyDeleteஹை! அனுப்புறேன். எப்பவாவது நேரிலேயே வந்து தருவேன். :-)
Deleteஅழகா இருக்கு இமா. எப்படிதான் யோசிக்கிறீங்க.!!!!!!
ReplyDeleteஇதெல்லாம் யோசனையா! இருக்கிற குப்பைகளை அழகாக நீக்கும் வழி! ம்... செய்து முடித்தபின் கொடுத்துவிட மனமில்லை. :-) ஆனாலும் கொடுத்துவிட்டேன். :-)
Deleteஆஹா... அழகா இருக்கே...
ReplyDeleteநிச்சயம் அவருக்கும் பிடித்திருக்கும்.
முகத்தைப் பார்க்க, பிடித்திருந்த மாதிரித் தான் தெரிந்தது.
Delete