பேத்தி பல மாதங்களாக தன் மூன்றாவது பிறந்தநாளுக்கு வானவில் கேக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மகன் இம்முறை யாரையும் அழைப்பதாக இருக்கவில்லை. நாம் இருவர், அவர்கள் மூவர் மேலும் இரு நட்புகளும் அவர்களது நான்கு மாதக் குழந்தையும் மட்டும்தான் என்பதால் கேக் பெரிதாக இருக்கத் தேவையில்லை என்று மகன் அபிப்பிராயம் சொன்னார்.
ஒரு தட்டில் மட்டும் வருமாறு கேக் செய்து அதற்கு ஏற்றபடி அலங்காரம் செய்யலாம் என்று எண்ணினேன். சின்னப்பெண்ணுக்கு 'ரெய்சின்ஸ்' மிகவும் பிடிக்கும் என்று கொஞ்சம் சேர்த்தேன்.
இருவருமாக அமர்ந்து வானவில் செய்தோம். 'இன்டிகோ' & ஊதா நிறங்களைப் பிரித்துக் காட்டுவது சிரமமாக இருந்தது. அவ்விரண்டிற்கு மட்டும் வெள்ளை நிறத்தில் வளைவு செய்து தூரிகையினால் வர்ணம் பூசிவிட்டேன்.
கேக்கின் மேற்பரப்பில் பச்சைநிற 'பட்டர் க்ரீம் ஐசிங்' பூசினேன். இதற்கு பச்சை றித்துடன் 'மின்ட்' சுவை சேர்த்திருந்தேன். மேலே 'மின்ட்' சுவையூட்டிய பச்சை நிற தேங்காய்த் துருவல். தொடர்ந்து மூன்று கேக்குகள் இதே முறையில் செய்தாயிற்று. இந்த வருடம் வேறு ஏதாவது செய்யவேண்டும். ஆனால் குட்டிப்பெண் மனதில் என்ன வைத்திருக்கிறாரோ!
ஆந்தையும் அது இருக்கும் மரமும் குட்டிப்பெண்ணின் முதலாவது பிறந்தநாள் கேக்கிலிருந்து வந்தது. டைனோசர் குட்டி, இரண்டாவது பிறந்தநாள் கேக்கிலிருந்து வந்தது. சின்னச் சின்னப் பூக்களையும் இலைகளையும் கொண்டு அலங்கரித்தேன். வானவில்லின் அடியில் பொன் நிறைந்த பானை ஒன்று வைத்தேன். சின்னப்பெண்ணின் பொம்மை - அவராக. :-)
அழகாக இருக்கிறது
ReplyDeleteமிக அருமை. குட்டிப்பெண்ணுக்குப் பிடித்திருந்ததா? பேத்திக்கு அன்பு வாழ்த்துகள்.
ReplyDeleteஇமா நலம்தானே.. நீண்ட இடைவெளி அப்பப்ப வந்துவிடுகிறது வலை உலகில்.
ReplyDeleteவானவில் கேக் எனச் சொல்லி, ஏதோ இன்னொரு வடிவமாக நிறைவேத்திப் போட்டீங்கள், ஆனாலும் இந்தக் கேக்கும் அழகுதான்.. ஃபுல் போல் ஸ்ரேடியம் போல:))
Hi mam
ReplyDelete