Friday, 31 December 2010

'இமாவின் உலகிற்கு' அகவை ஒன்று

எப்படியோ ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. புதிய நட்புகள், புதுப் புது அனுபவங்கள் ;).


பின்தொடரும் பார்வையாளர்கள், பின்தொடராது' பின் தொடர்வோர் மற்றும் இன்று இந்த இடுகையைக் காணும் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பிறக்கும் புத்தாண்டு மகிழ்வு கொண்டுவரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கிறேன்.

அன்புடன்
 இமா

Sunday, 26 December 2010

நட்புக்கு நன்றி

இறைய.. 0----னிணைப்பு
 ;)
அழைப்பிதழ் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது.
அபிப்பிராயம் சொல்லி உதவிய வலையுலக நட்புக்களுக்கு... முக்கியமாக மருமக்கள் ஜீனோ, ஜெய்லானி & தோழி ப்ரியாவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். 'கட்டிலுக்குக் கீழே தூங்கிக் கொண்டு ;) பிஸியா இருந்தும்' கலர் அடித்து உதவியவருக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்.

செய்முறை காண... http://www.arusuvai.com/tamil/node/29825

டிசெம்பர் 26 - ஒரு மீள்பார்வை

& ஒரு அழைப்பு

டிசெம்பர் 26 - வருடாவருடம் Boxing Day

டிசெம்பர் 26, 1960 - என் அன்புப் பெற்றோரது மணநாள்
டிசெம்பர் 26, 2004 - மட்டுநகரில்... இரண்டு நாட்களில் ஐம்பதாவது மணநாள் கொண்டாடவிருந்த என்  ஞானப்பெற்றோர் அவர்களது குடும்பத்தினரோடு ஆழிப்பேரலைப் பேரழிவில் சிக்கிக் காணாமற் போனமை
டிசெம்பர் 26, 2010 - செபாவின் தங்கத் திருமண நாள்


தாயாய்த் தாதியாய்த்
தோழியாய்
நல்லாசானாய்...
இன்றுவரை எனக்கு மட்டுமல்லாது 
என் குழந்தைகளுக்கும் 
அனைத்துமாக இருந்து வரும் 
என் அன்பு அன்னை செபாவையும் 
எனது அருமைத் தந்தையையும் 
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
 ~~~~~~~~~~

இங்குள்ள உறவுகள், நட்புக்களுக்கு இன்றிரவு ஒரு குட்டி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். ;) என் மகிழ்ச்சியில் இணைந்துகொள்ள உங்களையும் அழைக்கிறேன்.

அழைப்பிதழ் இதோ..

வருக. ;)

வாழ்த்த விரும்பின்.. செபாம்மா இதயத்திற்குத் தொடர்பு இதோ ;)

 அன்புடன் 
இமா

Friday, 24 December 2010

நத்தார் வாழ்த்துக்கள்


இங்குள்ளவை சென்ற வருடம் அன்பளிப்புகளில் மாட்டவென்று (gift tag) செய்தவை. நீள்சதுர வடிவ அட்டைகளை இரண்டாக மடித்து, பல்லுக் கத்தரிக்கோலால் ஓரங்களை வெட்டி விட்டு, ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி, துளைகள் செய்தேன்.

ஒற்றை அட்டை 'gift tag'

வலையுலக கிறீஸ்தவ நட்புகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்தோதய வாழ்த்துக்கள்.
அன்புடன்
இமா

Monday, 6 December 2010