Friday, 31 December 2010

'இமாவின் உலகிற்கு' அகவை ஒன்று

எப்படியோ ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. புதிய நட்புகள், புதுப் புது அனுபவங்கள் ;).


பின்தொடரும் பார்வையாளர்கள், பின்தொடராது' பின் தொடர்வோர் மற்றும் இன்று இந்த இடுகையைக் காணும் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பிறக்கும் புத்தாண்டு மகிழ்வு கொண்டுவரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கிறேன்.

அன்புடன்
 இமா

15 comments:

  1. உங்களுக்கும் , குடும்பத்தார் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்...!!

    விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. கிறிஸ்துமஸ் ட்ரீயா அது? நான் கூட ஏதோ மரத்துல பொன்வண்டுகள் ஊறுகின்றதோ என்று நினைத்துவிட்டேன் ...

    புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துகள் டீச்சர்!

    ReplyDelete
  3. பிறந்த நாள் காணும் ப்ளாக்கிற்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  4. Hi Imma,

    Happy Birthday
    Wish you a Happy New Year.

    ReplyDelete
  5. அன்பு இமாவின் உலகமே !
    உனக்கு ஒரு வயதாகிவிட்டதா! இப்போது தான் பிறந்தது போல இருக்கிறது .. தவழ்ந்து ஓடத்தொடங்கியாச்சா....

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    வளர்ந்து வலியதாக ஆகவேண்டும்... காண்போருக்கு ஊக்கமும் ஆக்கமும் கிடைக்கும்படி வளரவேண்டும்..

    எங்கிருந்தோ வரும் பறவைகளுக்கு நிழலாய் ஆலமரம் இருப்பதுபோல "இமாவின் உலகம்" வரும் வருடங்களில் இருக்க வாழ்த்துகிறேன்!


    அன்புட‌ன்
    இலா!

    ReplyDelete
  6. Happy New Year everyone.
    Welcome Ramani.
    Thanks Jaleela for the award.

    ReplyDelete
  7. புத்தாண்டு தொடங்கிய பிறகு வாழ்த்துகிறேன்.

    உறையும் குளிர்
    பொசுக்கும் வெயில்
    மலையாய் வெள்ளம்
    மாண்டோர் பலர்என்றில்லாமல்
    இறைவன் நம்மை
    வளமுடன் வாழ வைக்க
    நம்பிக்கையுடன் அடியெடுத்து
    வைப்போம் புத்தாண்டில்....

    வெற்றிகரமாக முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாட்களை கடந்த உங்கள் உலகம் இன்னும் கடக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. ஹாய் இமா..,என்னை நினைவிருக்கின்றதா என எனக்கு தெரியவில்லை.உங்களின் இந்த வலைபூ பக்கத்தை நான் இன்றுதான் அடைந்தேன்.
    முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    இனி அடிக்கடி உங்கள் பக்கம் நான் வருவேன்.

    அன்புடன்,அப்சரா.

    ReplyDelete
  9. புத்தாண்டுக்குப் பின் ஏன் பதிவுகள் ஏதும் இல்லை
    ஆவலுடன் ஏதிர்பார்த்து அன்புடன்... .

    ReplyDelete
  10. //விடுமுறை இனிதாய் அமை//ந்தது. மருமகனுக்கு நன்றி எல்லாம் சொல்வதாக இல்லை. ;))

    ~~~~~~~~~~

    வசந்த் சார்... //கிறிஸ்துமஸ் ட்ரீ// இல்லை. ;) //மரத்துல பொன்வண்டுகள்//தான். ;) 'இனிப்பாக' அவசரத்துக்கு அதுதான் அகப்பட்டது.
    தங்களுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

    ~~~~~~~~~~

    நல்வரவு ரமணி. ;) தாங்கள் வாழ்த்தியபடியே எல்லாம் 'ஹாப்பி'யாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது. ;) வாழ்த்துக்கு நன்றி. தங்களுக்கும் அனைத்தும் நலமாக என் வாழ்த்துக்கள்.

    //புத்தாண்டுக்குப் பின் ஏன் பதிவுகள் ஏதும் இல்லை//
    அதற்கு முன்பிருந்தே விடுமுறையிலிருந்தேன். இதுவரை வெளியானவை அனைத்தும் சேமிப்பில் இருந்த பதிவுகள்தான். விரைவில் வருவேன். ;)

    ReplyDelete
  11. ஹுஸைனம்மா! புத்தாண்டுதான் முதல்ல வரும்; அடுத்தது பின்னாலதான். இருந்தாலும்... பத்து௦ நாள் முன்னாடி எல்லாமா வாழ்த்துவாங்க. ;) எல்லாம் ரொம்ப ஹாப்பியாவே போச்சு. ரொம்ப நன்றி. ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி ஆமினா. ;) நலம்தானே?

    ~~~~~~~~~~

    நன்றி சிவா & விஜி. ஒன்பது பத்து நாள் முன்னாடியே சொல்லி வைத்து இருக்கிறீர்கள். ;))

    ~~~~~~~~~~

    //நட்பு வட்ட அவார்டு// பார்த்துட்டேன் ஜலீலா. சந்தோஷம். விரைவில் பெற்றுக்கொள்ள வருகிறேன்.

    ~~~~~~~~~~

    அந்நியன் சார்.. என்னால உங்களப் புரிஞ்சுக்கவே முடியல. ஹும்! 'அந்நியன்' இல்லையா! அப்பிடித்தான் இருப்பீங்க. ;))
    வாழ்த்து அருமை. மிக்க நன்றி.

    ~~~~~~~~~~

    நல்வரவு அப்சரா. ;) நல்லா நினைவு இருக்கு. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். //இனி அடிக்கடி உங்கள் பக்கம் நான் வருவேன்.// அப்போ.. அடிக்கடி பதிவு போட வேண்டும் என்கிறீங்க; நடத்திரலாம். ;))

    ReplyDelete
  12. @ இலா ;)

    //அன்பு இமாவின் உலகமே !//
    ம். ;)

    //உனக்கு ஒரு வயதாகிவிட்டதா!//
    ஆமாங்க, இப்போதான் சமீபத்துல ஆச்சு.

    //இப்போது தான் பிறந்தது போல இருக்கிறது//
    எனக்கும் தான். ;))

    //தவழ்ந்து ஓடத்தொடங்கியாச்சா.//
    இல்லை, எப்பவும் சுத்திட்டு மட்டும் இருக்கேன். ;))

    //இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//
    தாங்க்யூ, தாங்க்யூ, தாங்க்யூ. ;)
    (கிப்ட் ஒண்ணும் கொடுக்க மாட்டாங்க போல.)

    //வளர்ந்து// !!! எவ்வளவு ட்ரை பண்ணாலும் முடியலயே!! ;( //வலியதாக ஆகவேண்டும்.// அது ட்ரை பண்றேன்.

    //காண்போருக்கு ஊக்கமும் ஆக்கமும் கிடைக்கும்படி வளரவேண்டும்.//
    நான் பாட்டுக்கு சுத்திட்டு இருக்கேன்; இது குருவி தலைல பனங்காய் மயில். பாரம் தாங்க முடியல. ;)))

    //எங்கிருந்தோ வரும் பறவைகளுக்கு நிழலாய் ஆலமரம் இருப்பதுபோல "இமாவின் உலகம்" வரும் வருடங்களில் இருக்க வாழ்த்துகிறேன்!//
    சிரிக்காமல் சிந்திக்கிறேன் இலா. நிச்சயம் என்னால் முடிந்தவரை இங்கு வருவோர்க்கு நிழலாய் இருக்க முயற்சிப்பேன்.

    அன்புட‌ன்
    இமாவின் உலகம்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா