இந்த நீண்ட இடைவெளியில் சங்கிலித் தொடராய் இனிமையான நிகழ்வுகள் பல கடகடவென்று வந்து போயின. ஒன்றின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முன் இன்னொன்று.
மூன்று வாரங்கள் வீட்டில் மாமியோடும் உறவினர்களோடும் தங்கிய இனிமையான நினைவுகளோடு பத்து நாட்கள் சென்னையிலும் தங்கித் திரும்ப... மறுநாள் மாமியார் உடல் நலமில்லாமல் இருப்பதாகச் செய்தி வந்தது. அதற்கும் மறுநாள் பாடசாலையில் இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு துயரச் செய்தியைக் கொண்டு வந்தது. ;(
எங்கள் விடுமுறையை விடவும் எனது மாமியின் வாழ்க்கை இனிமையான பயணம்; இனிது நிறைவுற்றதே என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்.
வாழ்வின் மேடுபள்ளங்களை எல்லாம் புன்னைகையோடு எதிர்கொண்டு எம் குடும்பத்தினருக்கு ஓர் முன்மாதிரிகையாகத் திகழ்ந்த அன்பு தெய்வத்துக்கு என் கண்ணீர் அஞ்சலி.
;(((
R.I.P
;(((
R.I.P
- இமா
கவலைப்படாதீங்க இமா, உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! மாமி என்றால் மாமியார்(கணவனின் தாயார்)தானே இமா?
ReplyDeleteஇமா, உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteதங்களது துயரில் நாங்களும் பங்கேற்கிறோம்
ReplyDeleteஅவர்களது ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறோம்
மாமியின் அந்த நல்ல ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteஇமா,உங்கள் மாமி இறந்த செய்தி உங்கள் மெயில் பார்த்து அதிர்ந்தேன்.விடுமுறையை மாமியுடன் ,இன்புற கழித்து எடுத்த புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்து ஒருவாரத்திலேயே இப்படி ஒரு செய்தி.அவருடன் இறுதியாக நல்ல முறையில் விடுமுறையை சந்தோஷமாக கழிந்ததில் மன நிறைவு கொள்ளுங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteஇமா,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.மாமியின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteஆன்மா சாந்தி பெற வேண்டுகிறோம்
ReplyDelete:(
சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க உண்மையிலே உங்கள் மாமி கொடுத்து வைத்தவர்ங்க என்பத்தி ஐந்து வயது வரை வாழ்ந்ததே அதிகம்தான்.
ReplyDeleteஅண்ணார் எந்த நோயின்றி பிறர்களுக்கு எந்த தொந்தரவு தராமல் இயற்க்கை எய்ததற்கு கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
மரணம் என்பது யாருக்கு வேணாலும் வரலாம் இன்னைக்கு நான் எழுதலாம் நாளைக்கு எழுதாமல் போகலாம் சோ...இது கடவுளின் ஆணை.
உங்களின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன் சகோ....
நான் கொஞ்சம் வெளிப்படையாக பேசுபவன் அதுனாலே கோவித்துக் கொள்ள வேண்டாம்.
இமா, உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDelete//எனது மாமியின் வாழ்க்கை இனிமையான பயணம்; இனிது நிறைவுற்றதே என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்//
ReplyDeleteஇதிலிருந்தே அவர்களின் நிறைவான வாழ்வு தெரிகிறது. அவர்களின் வழிகாட்டுதலில் நீங்களும் மனநிறைவு அடைந்திருப்பீர்கள் நிச்சயம்.
இமா, உங்கள் அன்பு மாமியின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteமாமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்...
ReplyDeleteஅவருடன் கடைசி நேரங்களில் இருந்ததை நினைத்துக்கொள்ளுங்கள்...நிறைய பேருக்கு அந்த பாக்கியம் கூட கிடைப்பதில்லை ....
ReplyDeleteஇருந்தாலும் உங்கள் அன்பு மாமியின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கின்றேன்.
மாமியின் ஆன்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகள் இமா! அவர் உலகைவிட்டு மறைந்தாலும்,நீங்கள் இறுதியாகப்பார்த்த அவரது சிரித்த முகம் என்றும் உங்கள் நினைவில் இருக்கும்,அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்.
ReplyDeleteLet her soul rest in peace imma! You all are lucky enough to be with her in the last few days!!
ReplyDeleteஅனுதாபம் தெரிவித்த அன்புள்ளங்கள் அஸ்மா, வானதி, ரமணி, ஆசியா, ஸாதிகா, அம்முலு, சிவா, அயுப், சாரு, ஹுசேன், அதிரா, மேனகா, ஜெய்லானி, மகி, சந்தனா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. மீண்டும் நன்றி.
அன்புடன் இமா
இமா அக்கா உங்களுடன் சந்தித்த இனிமையான நேரத்தை பற்றி ச்ஸாதிகா அக்கா சொன்னாங்க்
ReplyDeleteஉங்கள் மாமியார் ஆத்மா சாந்தியடை எங்கள் பிராத்தனைகளும்.
இமா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.மாமியின் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிராத்தனைகள். - Vanitha
ReplyDeleteஇமா உங்கள் மாமியாரின் மரண செய்தி அறிந்து கொண்டேன் இன்று . அவரின் ஆன்மா சாந்தியடைவதாக் .உங்கள் சொந்த இடம் அறிந்து ஆச்ச்ரியபட்டேன்.
ReplyDeleteஜலீலா & வனிதா, சந்திப்பு வெகுவாக ரசித்தோம். அனுதாபச் செய்திக்கு நன்றி.
ReplyDelete~~~~~~~~~~
மிக்க நன்றி நிலா, ;) இனி இந்த இடம்தான் சொந்த இடமென்பது முடிவாகீட்டுது.நீங்க அங்க இருந்து இல்லையே? நான் உங்களை முதல்ல நிலாமதி பிச்சையப்பாவாக இருப்பீங்களோ என்று நினைச்சு தேடி வந்து இருக்கிறன். ஏன் ஆச்சரியம்? தமிழா? அது சும்மா முஸ்பாத்திக்கு எல்லாம் கலந்து கட்டி எழுதுறது, ஏமாந்து போனீங்களோ? ;)