மு. கு
ஸாதிகாவின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்தப் பதிவு.
என் பெற்றோர் பொன்விழாவுக்காக (மணநாள்) நான் செய்த கேக் இது. ஸாதிகா பார்த்த படம் இதுவல்ல; இதனை விடத் தெளிவாக இருந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் அதனைத் தற்போது வெளியிட இயலாது உள்ளது . ;( இன்னொரு முறை பார்க்கலாம்.
இடது புறம் உள்ள சிறிய கேக் அவர்கள் விழாவின் போது வெட்டுவதற்காகச் செய்தது. 'ஸ்ட்ரக்க்ஷர்' மூன்று தட்டுகளால் அமைந்து இருந்தேன். அவற்றுள் முழுவதும் துண்டு போடப்பட்ட கேக்குகள், பொன்னிற ஆர்கன்சா துணிப்பைகளில். பைகள் தைத்து எடுத்துக் கொண்டேன்.
ஒரு மாதம் முன்பதாகவே கேக் செய்தாயிற்று. சுற்றி வைக்க.. பையில் போடவெல்லாம் ஏஞ்சல் வீட்டார் உதவினார்கள். (நண்பர்கள் பலரும் உதவ முன்வந்தனர் தான், எனக்கு என் கையால் செய்வதுபோல் வசதியாக இராது. ;) திடீர் திடீரென்று சிந்தனை மாறும். இவர்கள் அயலில் இருந்தார்கள்.. ரசனையும் எப்போதும் எங்களோடு ஒத்துப் போகும். என் எண்ணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்கள் இவர்கள்.
க்றிஸ் வழமைபோல் தனது ஆலோசனைகளோடு தேவையான உதவியும் செய்து கொடுத்தார். 'கேக் போர்ட்' அழகாக வெட்டித் தந்தார். (அறுகோணி வடிவம், மூத்த மகனது யோசனை.)
பெற்றோர் கேக் வெட்டியதும், மேலே உள்ள தட்டை எடுத்து வைத்து விட்டு (வெற்றுத் தட்டு இன்னமும் செபா வீட்டு மேஜை மேல் அலங்காரமாக இருக்கிறது,) அடுத்த இரண்டையும் அப்படியே 'ட்ரே' ஆகப் பாவித்துப் பரிமாறினோம். வெட்டுகிற வேலை & நேரம் மிச்சம் ஆகிற்று. ஒரே ஒரு சிரமம், வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு இவற்றை எடுத்துப் போவது - ஒரு வண்டியில் ஆளுக்கொரு தட்டாக எடுத்துக் கொண்டு போக்குவரத்துக் குறைவான சாலையாகப் பார்த்து மெதுவே பயணித்துப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துப் பொருத்தி விட்டேன்.
'பானர்' பெரிதாகச் செய்யும் நோக்கம் இருக்கவில்லை. எளிமையாக அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். கடையில் கிடைத்ததை எங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொண்டாயிற்று. யோசனை எனது, செயலாக்கியது க்றிஸ்.
மேசைச்சீலையிலிருந்து தேவைப்பட்ட அனைத்தையும் மஞ்சள் & பொன் வர்ணச் சாயல்களில் தெரிந்து கொண்டோம்.
நத்தார்க் காலம்... பொன்னிற 'மெர்குரிப்பந்துகள்' மலிவாகக் கிடைத்தன. சுவருக்கான அலங்காரம் அமைத்துக் கொண்டேன். (இனி வரும் வருடங்களில் அவை எங்கள் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும்.)
சுவரில் எங்கும் ஆணிகள் அடிக்கவில்லை, 'க்ளூடாக்' வசதியாக இருந்தது.
சாட்டின் துணியில் பெரிய 'போக்கள் ' வைத்து இரண்டு கதிரைகளுக்கு உறைகள் தைத்தேன். (நானே தைத்ததால் மீண்டும் தையல்களைக் கழற்றி விட்டு வேறு என்னவென்றாலும் தைத்துக் கொள்ள வசதியாகவே தையல் போட்டிருந்தேன்.)
ஒவ்வொரு மேசைக்கும் ஒற்றை மஞ்சள் மலர், 'டாலர் ஷாப்பில்' வாங்கிய மெழுகுவர்த்திக்கு மலரலங்காரம் என்று செய்து வைத்தேன்.
இந்தப் படத்தில் உள்ளவற்றை மட்டும் விபரித்திருக்கிறேன். விழா பற்றிய மீதி விபரம் பின்னர் எப்போதாவது வரக்கூடும்.
செபாம்மா திருமணத்தின் பொது அவரது பெற்றோர்கள் உயிரோடு இல்லை; ஒரு தம்பியார் மட்டும் இருந்தார்.
ஐம்பதாவது மணநாளை சிறிதாக இருந்தாலும் என்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். நினைத்தபடியே அனைத்தும் நன்றாகவே நடந்தது. அதற்கும் மேல் மறுநாள் அம்மா தொலைபேசியில் அழைத்து தன் திருமணத்தன்று இருந்ததை விடவும் முதல் நாள் தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகச் சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என் அன்புப் பெற்றோருக்கு என்னாலான ஒரு சிறு பரிசு. ;)
You are a good daughter imma... I liked all the decorations :) Awesome !
ReplyDeleteசூப்பரா இருக்கு மேடம் ...
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கு.
அது என்னமோ போங்கள் எல்லா அம்மா மார்களும் மகளின் மீது தனிப் பாசம் வைத்திருக்கின்றார்கள் மகன் மீது பாசம் வைத்திருந்தாலும் போட்டின்னு.. வந்து விட்டால் நாங்கல்லாம் எங்கே போயி விழுவோம்னே தெரியாது.
அது போல உங்கள் தாயும் உங்கள் மீது அளவு கடந்தப் பாசத்தைப் பொழிகிறார் பதிலுக்கு நீங்களும் பணிவிடைகள் செய்து கொண்டுதான் இருக்கின்றிர்கள் பல விதத்தில்.
அவர்கள் என்றும் போல பல்லாண்டு வாழ்க.
இமா... உங்க அம்மா'கு நீங்க செய்தது விஷேஷம் இல்லை... ஆனால் க்றிஸ் செய்தார் பாருங்க.... அவருக்கு தான் ஸ்பெஷல் வாழ்த்துக்கள். எல்லாமே அருமையா செய்திருக்கீங்க... உங்க பதிவை படிக்கும் போதே கண் முன் பார்த்த மாதிரி இருக்கு. நல்ல மகள், நல்ல மருமகன் கிடைக்க அப்பா அம்மா கொடுத்து வெச்சிருக்காங்க. சந்தோஷமா இருக்கு. - Vanitha
ReplyDeleteவாழ்த்துகள் இமா.
ReplyDeleteபூகம்பப் பாதிப்பு ஒன்றும் இல்லையே அங்கு?
பொன்விழாவை மிக நன்றாக நடாத்தியிருக்கிறீங்க இமா, வாழ்த்துக்கள். நடாத்திய விதத்தையும் கண்முன் காட்சிபோல சித்தரித்துவிட்டீங்க.
ReplyDeleteபொன்விழாவைக் கொண்டாட்டங்கள் சூப்பர்! கேக்குக்கு ரெசிப்பி தரமாட்டீங்களா?!!
ReplyDeleteசெபா அம்மாவின் திருமண பொன்விழாவிற்கு நல்வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு ! அம்மா அப்பா இருவரும் வளமுடனும் நலமுடனும் வாழ என் பிரார்த்தனைகள்.
ReplyDeleteநல்ல மகளா இருந்து செய்திட்டீங்க, இம்மி. கேக் அழகா இருக்கு. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் போட்டிருக்கலாம் ( படத்தை சொன்னேன் ).
ReplyDeleteசெபா ஆன்டிக்கும், அங்கிள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
கிறிஸ் அண்ணாச்சி, great job!!!
Well done Immamma and Chris.
ReplyDeleteசெபா அம்மாவின் திருமண பொன்விழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇமா ரொம்ப பெருமையான விசயம்...இவ்வளவும் முன்நின்று நடத்திய உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை..செபா அம்மா குடுத்து வைத்தவர்கள்.
ReplyDeleteஎனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து படத்துடன் பதிவிட்டதற்கு மிக்க நன்றி இமா.இந்த கேக் செய்த கதையை தம்பதி சகிதமாக என்னிடம் விவரித்து சொன்னது இன்னும் மனக்கண்ணில் நிற்கின்றது.
ReplyDeleteஅயுப் சார்...
ReplyDelete//எல்லா அம்மா மார்களும் மகளின் மீது தனிப் பாசம் வைத்திருக்கின்றார்கள்//அப்பிடி இல்லைங்க அயுப்.
1. செபாம்மா 'மகன்', மருமக்கள், பேரக்குழந்தைகள் என்று மட்டும் இல்லாம பழகுற எல்லாரோடையும் பாசமாத்தான் இருப்பாங்க. இங்க வரும் சிலருக்கு அது தெரியும்.
2. எங்க மாமி 'மகன்' கிறிஸ் மேல எவ்வளவு பாசமா இருந்தாங்க என்கிறதுக்கு ஒரே உதாரணம்... அவங்க மறைவு. ;(( தனியா பதிவு போடணும் இதைப் பற்றி. ;(
3. இமாவுக்கும் அவங்க பொண்ணு மேல தனிப் பாசம் இருக்கு. ;) ஒரு மாசத்தில பிறந்தநாள் வருது. என்னவாவது பண்ணணும். நினைவு படுத்தினதுக்கு தாங்க்ஸ். (ஆனா.. என் பசங்க இப்புடி சொல்ல மாட்டாங்க நிச்சயம்.)
4. அவசர அவசரமா ஒரு காப்பி குடிச்சா அது 'காப்பி'. அதையே நேரம் எடுத்து ஆற அமர ஸிப் சிப்பா ரசிச்சுக் குடிச்சா... 'அது' காப்பி. 'அதுவல்லவோ காப்பி'; 'சூப்பர் காப்பி'. அந்த சுவை நாவுல மட்டும் இல்லாம மனசுலயும் எவ்வளவு நேரம் நிக்கும் தெரியுமா! இப்புடி ஒரு தரம் குடிச்சா இன்னொரு தரம் குடிக்கச் சொல்லும்; பிறகு அடிக்கடி குடிக்கச் சொல்லும். இப்புடிக் குடிச்சுப் பார்த்தவங்களுக்கு 'அது தான்' காப்பி. இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமான்னு கொதிக்கக் கொதிக்க மடக்குன்னு முழுங்கினா!!!!! ;)))))
நீங்க ஏதோ இமாவுக்கு கமன்ட் போடணும்னு போட்டு இருக்கீங்க சார். ;) நிஜமா மனசைத் தொட்டு சொல்லுங்க.... அயுப் அம்மா, அயுப் மேல தனிப் பாசம் வச்சு இருக்காங்களா? இல்லையா? (நல்ல பையனா இருந்தா இப்புடி அம்மாவ விட்டுக் கொடுத்து எழுத மாட்டீங்க. கர்ர்ர் ;))) இமா மட்டும் உங்க அம்மாவா இருந்தேன்... இப்புடிப் பப்ளிக்ல போட்டதுக்கு வந்து நங்குன்னு நாலு குட்டு வச்சுட்டு வந்துருவேன். ;))))
//அவர்கள் என்றும் போல பல்லாண்டு வாழ்க.// பார்ப்பாங்க இதை. அழ...கா வாழ்த்தி இருக்கீங்க. எனக்கும் மம்மி இப்பிடித்தான் வாழ வேணும் என்று ஆசை.
அதாவது....
1. பல்லாண்டு = பல ஆண்டுகள் ம்...
2. பல் + ஆண்டு = 'பல்லா(டி)ண்டு' இல்ல. ;)
பல்லை ஆண்டு - பல்லு விழாம பத்திரமா பார்த்து, கடைசிவரை நல்லா ரசிச்சு மென்று சாப்பிடக் கூடிய நிலையில் ஆரோக்கியமா இருக்கணும்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
பி.கு ;))
இமாவைத் திட்டறதானா பப்ளிக்ல திட்டிரணும். ;))) மனசுக்குள்ள திட்டினா... கனவுல அந்நியன் வந்து மிரட்டுவார், பத்திரம். ;)))
தாங்க்ஸ் இலா. மயிலுக்கு மெயில் போட வேணும், மறக்கேல்ல. ;) மற்றது... 'டார்டாய்ஸ்' கொஞ்சம் வேலை செய்துட்டுது தெரியுமோ!! ;)
ReplyDelete~~~~~~~~~~
வனி.. ;) உண்மைதான். காட்டிட்டேன். கிறிஸ் அரை மீற்றருக்கு ஒரு சிரிப்பு சிரிச்சார். தாங்க்ஸ். ;)
~~~~~~~~~~
நன்றி ஹுசைன். ;) அது இங்க இல்லைங்க. வேற இடம். ஆனால் என்னைத் தெரிந்தவர்கள் எல்லாம் ஒரு நொடியாவது என்னை நினைச்சு இருப்பாங்க. ;) இமா இருக்கிற இடத்துல வரப் பயப்படும் அது. ;))
தாங்க்ஸ் பூஸ். ;) இதூ... 'இதுக்கு'
ReplyDeleteதாங்க்ஸ் பூஸ். ;) இதூ...வே... ற ;))) சொறி... தாங்க்ஸ் நுளம்பு. ;))))
~~~~~~~~~~
//கேக்குக்கு ரெசிப்பி தரமாட்டீங்களா?!!// கேக்குக்கு ரெசிபி கேக்கறாங்க!! கேக்குறவங்க யாரு!! பேக்கரி எக்ஸ்பர்ட் இல்ல!! நாம என்ன சொல்றது!! கட்டாயம் தரேன். கொஞ்சம் அவகாசம் தர முடியுமா?
~~~~~~~~~~
ஆசியாக்கா //வாழ்க பல்லாண்டு !// கிக் கிக் ;)) அயுப் சாருக்கு போட்ட பதில் பார்த்தீங்கள்ள. ;) தாங்ஸ்ங்க. ;)
//இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் போட்டிருக்கலாம்// ஓம் வாணி. ;( தொழிநுட்பத் தகராறு. ;( முடியேல்ல. இருக்கு வடிவான படம். ஸ்கான் பண்ணவும் முடியேல்ல. ;( தீர்வு கிடைக்க மாதங்கள் ஆகலாம் என்று... நம்பத் தகுந்த / தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ;((( ஒண்டும் இல்ல. 'மடிக்கிறது' மடிஞ்சு போய் இருந்தாலும் புதுசு வாங்கிருவன். திருத்தக் குடுத்துப் போட்டு லீவில போனன். இப்ப ஒடிஞ்சு போய் இருக்கிறன். பொறுங்கோ... சரியான உடனே பெருசாப் போட்டு விடுறன்.
ReplyDeleteசெபா பார்த்தாச்சு. ;)
கிறிஸ் அண்ணாச்சி... இதைவிட க்ரேட்டான காரியம் எல்லாம் பண்ணி இருக்கிறார். இங்க பகிர்ந்து கொள்ள ஏலும் எண்டு நினைக்கேல்ல. உங்கட கொமன்ட் பார்க்க வைக்கிறன் ஆளை. ;)
~~~~~~~~~~
அனாமிகாவுக்கு அன்பு நன்றிகள். ;)
~~~~~~~~~~
மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா. ஆனாலும்... என்ன சொல்ல!! ம்... அம்மாவுக்குப் பிள்ளை செய்ய வேணும். பிள்ளைக்கு அம்மா செய்ய வேணும். இதுல பெரிய விஷயம் சின்ன விஷயம் எல்லாம் இல்லை. அன்பு... கடமை.... ஈடுபாடு. அவ்வளவுதான். என் இடத்தில் நீங்கள் இருந்தாலும் இதைத்தான் செய்வீங்கள், என்ன.. செய்யிற விதம் வித்தியாசமா இருக்கும்.
//செவி சாய்த்து படத்துடன் பதிவிட்டதற்கு// வாணிக்குச் சொன்ன பதில் பாருங்க ஸாதிகா. சரியானதும் நீங்க காட்டின படத்தைப் போடுறன். //இந்த கேக் செய்த கதையை தம்பதி சகிதமாக என்னிடம் விவரித்து சொன்னது இன்னும் மனக்கண்ணில் நிற்கின்றது.// கிடைச்ச சந்தர்ப்பத்தை விடாமல் பயன்படுத்தினம். ;)) உண்மையச் சொல்லுங்க, போர் என்ன!! ;))
ReplyDeleteமேடம் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன் அம்மாவை நான் என்றும் விட்டுக் கொடுக்க மாட்டேன் நாட்டு நடப்பைத்தான் சொன்னேன்.
ReplyDeleteஒரு தம்பதியினருக்கு வெறும் ஆம்புளை பிள்ளையாய் பெற்றுக் கொண்டுப் போனால் என்னப் பேசிக் கொள்வார்கள் ?
ஆண் பிள்ளைகளைக் கொடுத்தக் கடவுள் கடைசி காலத்தில் அரவனைப்பதற்க்கு ஒரு மகளை தரவில்லையே என்றும்..வெறும் பொம்பளைப் பிள்ளையாய் பெற்றுக் கொண்டுப் போனால்,கடைசி காலத்தில் கொள்ளிப் போடறதுக்கு ஒரு ஆண் பிள்ளை இல்லாமல் போச்சே,என்று வருந்துவதை படத்திலும் சரி நடப்பிலும் சரி,பார்க்கத்தான் செய்கிறோம்.
ஆக இருவர் மீதும் அன்பாக இருக்கும் பெற்றோர்கள்,மகனை மருமகள் தம் கண்ட்ரோலில் கொண்டு வரும்போது அதன் பிரதி பலிப்பு, பாசம் கொஞ்சம் மைனஸ்தான்,அந்த அடிப்படையில் எழுதி விட்டேன் மேடம்,வேறே ஒன்னும் தவறாக எழுத வில்லை என்பது,படிக்கும் ஆண்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் தமிழ் ஆசிரியர் என்று தெரிந்திருந்தால்,சில விளக்கங்கள் கேட்டிருக்கலாம்னு நினைக்கிறேன் சரி ஒன்னே ஒன்னுக்கு மட்டும் சொல்லுங்கள்.
வீட்டில் இருக்கும் ஜன்னலுக்கு,தமிழில் எப்படி சொல்வது மேடம் ?
ம். நானும் விளையாட்டாகத் தான் பதில் சொன்னேன் அயுப்.
ReplyDelete//நீங்கள் தமிழ் ஆசிரியர் என்று தெரிந்திருந்தால்,// டொய்ங்... ;))) இத்தனை நாள் நான் சிங்களவர் என்றா நினைத்துக் கொண்டு பேசினீங்க!! ;)
தமிழர் தான்; ஆசிரியர் தான். தமிழாசிரியர் அல்ல.
//சில விளக்கங்கள் // 'பல' வேண்டுமானாலும் கேட்கலாம். தெரிந்ததைச் சொல்வேன். தெரியாவிட்டால் விசாரித்துச் சொல்கிறேன். நானும் புதிதாக ஒன்றை அறிந்து கொண்டதாகும்.
//வீட்டில் இருக்கும் ஜன்னலுக்கு,தமிழில் எப்படி சொல்வது மேடம் ?// சீரியசாத்தானே கேக்குறீங்க? என்னைக் கலாய்க்கலையே!!
ம்.. ஜன்னல்... 'ஜ' தமிழ் அல்ல, சன்னல் என்று எழுதலாம்.
ம்!!! அது எதுக்கு 'வீட்ல இருக்கும் ஜன்னல்'ங்கறீங்க!! பயமா இருக்கே பதில் சொல்ல. ;)) வீட்ல இருந்தாலும் ஆஃபீஸ்ல இருந்தாலும்.. இல்ல கான்டீன்ல இருந்தாலும் எல்லாம் ஒண்ணுதானே!!
சரியான தமிழ்ச் சொல் சாளரம். (கவனிக்க - சாரளம் இல்லைங்க. நிறையப் பேர் இதுல தப்புப் பண்ணுவாங்க.)
பதில் திருப்தியா இருந்தா... ;௦) அடுத்த கேள்வியைக் கேட்கலாம். ;) ஆனா.... மேடம், ரிஷபம்னா பதில் வராது, சொல்லிட்டேன். ;))
//மகனை மருமகள் தம் கண்ட்ரோலில் கொண்டு வரும்போது அதன் பிரதி பலிப்பு, பாசம் கொஞ்சம் மைனஸ்தான்,// நீங்க சொல்றது உண்மைதான். நிறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன். ஆனா.. செபா, இமால்லாம் கண்ட்ரோல்ல கொண்டுவராத பிரிவில் அடக்கம் என்பதைச் சொல்லிக்கிறதுக்குப் பெருமையா இருக்கு. இங்க வர என்னோட வேற சில தோழிகள் வீட்லயும் அப்பிடி இல்லைன்னு தெரியும். நாம அன்பால எல்லாரையும் கண்ட்ரோல் பண்ற விதம். ;) எங்க மாமி வீட்ல கூட இப்பிடித்தான். ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் நாங்கன்னு புரியுது. சந்தோஷமா இருக்கு அயுப்.
ReplyDeleteஅழகான blessed family அற்புதமான கேக் ..அம்மா அப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .
ReplyDeleteஹை! அஞ்சலின் எனக்கு தமிழ்ல பதில் போட்டு இருக்காங்க. ;) ஒருவேளை உங்களுக்குப் தமிழ் படிக்க மட்டும்தான் வருமோ என்று நினைத்து இருந்தேன். தாங்க்ஸ் அஞ்சலின். ;)
ReplyDeleteநான் இப்ப தான்தமிழ் font install
ReplyDeleteசெய்தேன் .நான் நாகர்கோவில்+ மதுரை bangalore born தமிழ் பொண்ணுங்க ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து இந்த ரெண்டு நாட்டிலும் என் முதல் பெயரையே வசதிக்காக எல்லாரும் கூப்பிடுவார்கள் .
அது அப்படியே நிலைத்து விட்டது .
இமா செபா ஆண்டிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள், எனக்கு இந்த பதிவ பார்கக் ரொம்ப சந்தோஷமா இருக்கு, எவ்வளவு அழகான முறையில் உஙக்ள் அன்பை வெளி படுத்தி இருகீங்க, எனக்கு கேக் செய்ய அவ்வளவா வராது, வராதுன்னா பொறுமை கிடையாது, செய்வே அவசர அடி தான்,அதுவும் அறுகோணவடிவில் இதை செய்ய்வே நாள் எடுத்து என்கிறீர்கள்,எனக்கும் என் அம்மாவுக்கு திருமணநாள், பிறந்த நாள் என்றால் அவரக்ளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பேன்,அவரக்ள் ரொம்ப சந்தோஷம் ந்னு சிர்ச்சிட்டே சொல்லும் போது , அதை கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்,
ReplyDeleteஒரு மாதம் முன்பே செய்து விட்டு அதை எப்படி பாதுக்காத்திங்க.
Nan thaan fistu...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅன்னையின்
அன்பில்
ஆசியும்
அறிவு தந்தையின்
பாசமும்
கொண்டு
பொறுமையின் சிகரமாய்
திறமையின்
வெளிப்பாடு
பாசத்தின்
கலங்கரை
விளக்கமாய்
நீங்கள் செய்த கேக்
ஆடம்பரம் என்றி
அன்பால் மட்டும்
பூக்களை
சேர்த்து
அம்மா அப்பாவின்
பொன்விழா
கொண்டாடிய
இம்மா
வணக்கங்கள்
செபா பாட்டிக்கும் வணக்கங்கள்
Thanks for stopping by José Ramón.
ReplyDeleteவாங்க ஜலீலா. வாழ்த்துக்கு நன்றி.
ReplyDelete//ஒரு மாதம் முன்பே செய்து விட்டு அதை எப்படி பாதுக்காத்திங்க.// கேள்வி புரியல. ;) ஸோ... எல்லா மாதிரியும் யோசிச்சு பதில் சொல்றேன். ;)
*கேக் செய்து வைத்தேன்.
*வெட்டுவதற்கு குட்டிக் கேக்கை முதலில் ஷேப் பண்ணி ஒரு வெற்று ஐஸ் கிரீம் பெட்டியில் வைத்தேன்.
*மீதியை துண்டுகள் போட்டு ஐசிங் செய்து, பேக்கிங் பேப்பரில் சுற்றி வைத்தேன். அது இருந்தது.
சரியான படி செய்தால் இந்த வகை கேக் ஒரு வருடத்துக்கும் அதிக காலம் இருக்கும். (அதுக்கு மேல கவனிக்க முடியல. மீதம் இருந்தது இல்லை எனக்கு.)
*முன்பாகவே பூக்கள், இலைகள் செய்து பெட்டியில் வைத்துக் கொண்டேன். ஸ்ட்ரக்ஷர் டெகரேஷன் கடதாசி ஒட்டி வைத்து இருந்தேன்.
*ஐசிங் எல்லாம் மூன்று நாட்கள் முன்னாடிதான் செய்தேன். தனித் தனியே வலை மூடிகள் கொண்டு மூடி வைத்தேன். அவ்வளவுதான், இருந்தது.
இங்கு எலிகள் கிடையாது. ;) இப்போல்லாம் எல்லாரும் ரொம்ப ஹெல்த் கான்ஷியசாக இருக்கிறாங்க. தவிர எதுவானாலும் உடனே ஆளுக்கொரு துண்டு சாப்பிட்டு அபிப்பிராயம் சொல்வாங்க. பிறகு அதற்கான நேரம் வரை அதை நிம்மதியா விட்டுருவாங்க. எனக்கு வேண்டிய அளவு சேமித்து வைத்து விட்டு மீதியை அவர்களுக்குத் தனியாக எடுத்து வைப்பேன். இரண்டிலும் தனித் தனியே லேபில் போட்டு வைப்பேன். குழப்பம் வராது. இன்னும் மூன்று துண்டுகள் மீதி இருக்கிறது. ;) பார்க்கலாம் எவ்வளவு காலம் வரும் என்று.
நிச்சயமா சிவாதான் ஃபர்ஸ்ட்டு... எங்களைக் கவிதை பாடி வாழ்த்தினதுல. ;) டச் பண்ணிட்டீங்க.
ReplyDeleteஅம்மா அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்னைக்கு இதில மாமியின் பதில் எல்லாமே ரொம்ப பெரீஈஈஈஈஈஈஈஈஈஈசு :-))
ReplyDelete:-)
ReplyDeleteரெண்டு பேரும் புகையிறது தெரியும் ஜெய். மன்னிச்சுக் கொள்ளுங்கோ. என்ன செய்ய?
ReplyDeleteஇதை ஒரு பதிவு எண்டு போட்டிட்டன். இங்க வர்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லாம ஸ்மைலி போட்டால் விசர்ப் பட்டம் குடுத்துருவீங்கள். ;)
வாழ்த்துக்கு மிக்க நன்றி சாமக்கோடங்கி. அவங்க சத்தமில்லாம இங்க வந்து பார்த்துட்டுப் போறாங்க. ;)
ReplyDeleteகேக் ரொம்பவும் அழகா இருக்கு . ரொம்பவும் ரசனையோடு செஞ்சிருக்கீங்க போல :-))
ReplyDeleteஹாய் இமா நலமா? சூப்பரா இருக்கு உங்க பொன்விழா அரேஞ்மெண்ட்.கேக் சூப்பரா செய்திருக்கிறீங்க.எல்லாவற்றிலும் உங்க கற்பனை திறன் பளிச் பளிச்.வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும். என் வாழ்த்துக்களை அப்பா,அம்மாவிடம் கூறுங்கள்.
ReplyDeleteநான் பிசி இமா. அதனால்தான் கடைசியாக வந்திருக்கிறேன். மன்னிக்க. குறைநினைக்கவேண்டாம்.
ம்.. @ ஜெய்லானி. ;))
ReplyDelete~~~~~~~~~~~
//கடைசியாக வந்திருக்கிறேன்// Better late than never, Ammulu. ;))
Imma! Pleassseee save the cake. I am looking for a vacation to NZ this year. I just have to find the right time to come.
ReplyDeleteஹாய் இமா..., எப்படி இருக்கீங்க...?
ReplyDeleteஇன்றுதான் உங்களுடையை இந்த பதிவை பார்க்கின்றேன்.மிகவும் அழகான முறையில் உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்திருக்கின்றீர்கள் என்பது உங்கள் எழுத்து நடை மூலம் தெரிகின்றது.பாராட்டுக்கள்.
கேக் அப்பப்பா... சும்மா சொல்ல கூடாதுங்க.சூப்பராக செய்து இருக்கீங்க.எவ்வளவு இதற்க்காக நேரம் எடுத்திருப்பீங்க,கவனம் எடுத்திருப்பீங்கன்னு பார்க்கும் போதே தேரியுது.
பஃபெக்ட்டாக இருக்கு.நல்ல பொருமையும்,நிதானமும் இதற்க்கு இருந்திருக்கணும் இல்ல...?
நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள் இமா...
அன்புடன்,
அப்சரா.
கேக் மிகவும் அழகு இமா! அக்கறையும் அன்பும் அதில் தெரிகிறது! உங்கள் பெற்றோருக்கு இதையும் விட சிறந்த பரிசு வேறென்ன வேண்டும்? அதுதான் அம்மா மனம் நெகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்!!
ReplyDeleteஎப்ப வரீங்க இலா? உண்மையாவே எடுத்து வச்சாச்சு. ;) பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete~~~~~~~~~~
;) நேரம் எடுத்து பின்னூட்டம் போட்டு இருக்கீங்க அப்சரா. பாராட்டுக்கு மிக்க நன்றி.
~~~~~~~~~~
உங்கள் பின்னூட்டம் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது மனோ அக்கா. கட்டாயம் அம்மாவிடம் சொல்கிறேன்.
இமா நீண்ட நாட்கள் கழித்து வந்தால் வாவ் பாசத்தோட அன்பான அழகான கேக். ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு இமா.
ReplyDeleteபொன் விழா வாழ்த்துக்கள்.
tkz viji. ;)
ReplyDeleteநல்ல மகள் நீங்கள் அதை விட நல்ல மனுஷின்னு சொல்லலாம்...என் மகளது பிறந்தநாளன்று நானே கேக் செய்தேன் அதை சர்ப்ரைசாக அவளிடம் காட்டி அவள் ஹை என்று தாவியதும் எனக்கு கண்ணில் நீர்..எதற்கு என்று காரணம் தெரியவில்லை...
ReplyDeleteஅதுக்கே அப்படி பில்டப் என்றால் மகள் அம்மாவுக்கு செய்தால் நிச்சயம் அம்மா மறைவாக ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்..இப்படி ஒரு அழகான அம்மாவுக்கும் மகளுக்கும் பல காலம் இன்னும் அன்பாக வாழும் பாகியத்தை இறைவன் தரட்டும்.செபா அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thalika
இமா கேக் ரொம்ப அழகாக இருக்கிறது..நம்பவே முடியலை..எவ்வாளவு அழகு..என்னெல்லாம் யூஸ் பண்ணி செய்தீங்கள்..எப்படி அலங்காரம் பண்ணிநீங்க என்று படிப்படியாக சொல்லி தாருங்க.ப்லீஸ்
ReplyDeleteThalika
இன்னும் ஒரே ஒரு டவுட் கேட்டுட்டு போய்க்கறேனே ..எப்படி 1 மாசம் முன்பே கேக் செய்தீங்க???
ReplyDeleteThalika
கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி தளிகா. ;)
ReplyDeleteரெசிபி... இலங்கையில் கிடைத்த சில பொருட்கள் இங்கு கிடைக்காத காரணத்தால் என் வழமையான குறிப்பில் மாற்றங்கள் செய்யவேண்டி வந்தது. பயணம் போகும் அவசரத்தில் குறிப்பினை எங்கோ கைமாறி வைத்து விட்டேன். கிடைத்ததும் மாற்றங்களோடு தருகிறேன்.
அலங்காரம்.. பார்க்கவே தெரிகிறதே. ;) நிகழ்ச்சியின் தன்மையைக் காரணம் காட்டி ஒரே வர்ணத்தில் சுலபமாக ஐசிங் வேலையை முடித்துவிட்டேன் - மெல்லிய மஞ்சள் நிறம்.
//படிப் படியாக// ;) விரைவில் தர முயற்சிக்கிறேன்.
//ஒரு மாசம் முன்பே// இருக்காது என்று நினைக்கிறீர்களா!! என்ன இப்படிக் கேட்கிறீர்கள்! பலபேர் என்னிடம் கேட்ட கேள்வி இது. இருக்கும்... இந்தக் கேக் ஒரு வருடத்தும் மேல் கெடாமல் இருக்கும். வழக்கமாக திருமணத்துக்குச் செய்யும் கேக் மீதியை எடுத்து வைத்து முதலாம் வருட அனிவர்சரிக்கும் பரிமாறுமாறுவார்கள். இன்னும் சுவை கூடி இருக்கும். என் மருமகள் திருமணத்தின் போது இலங்கையிலிருந்து எங்களுக்காக அனுப்பி வைத்த கேக் - வைத்திருந்து அவர்களது முதலாவது மணநாள் அன்று சாப்பிட்டோம்.
தரமான பொருட்களாகத் தெரிந்து சரியானபடி சுத்தமாகச் செய்தால் போதும். இல்லாவிட்டாலும் ப்ரிஜ்ஜில் வைத்தால் இருக்கும்.
இன்றைய இடுகையில் தெளிவான படங்கள் இணைத்திருக்கிறேன்.
ReplyDeletehttp://imaasworld.blogspot.com/2011/03/blog-post_03.html