ஈஸ்டர் – உயிர்ப்பின் திருநாள்.
அந்த வார இறுதி, முன்னால் பெரியவெள்ளியும் தொடர்ந்து ஈஸ்டர் திங்களுமாகச் சேர்ந்து நீளமாக வந்தது. (இவ்வருடம் திங்களன்றே அன்சாக் தினமும் சேர்ந்து வந்திருந்ததால் ஒரு விடுமுறைநாள் குறைந்து விட்டிருக்கிறது.)
அந்த வார இறுதி, முன்னால் பெரியவெள்ளியும் தொடர்ந்து ஈஸ்டர் திங்களுமாகச் சேர்ந்து நீளமாக வந்தது. (இவ்வருடம் திங்களன்றே அன்சாக் தினமும் சேர்ந்து வந்திருந்ததால் ஒரு விடுமுறைநாள் குறைந்து விட்டிருக்கிறது.)
விடுமுறையில் தரைக்கு 'டைல்ஸ்' பதிக்கலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. அந்தச் சமயம் பார்த்து ‘பன்னிங்ஸ் வேர்ஹவுஸில்’ மலிவு விற்பனை அறிவித்திருந்தார்கள்.
க்றிஸ் கணக்குப் பார்த்து 50 டைல்ஸ் தேவை என்று சொல்லிக் கொண்டிருந்தார். மலிவு விலை, கூடவே ஒவ்வொரு 100$ கொள்முதலுக்கும் 20% விலைக்கழிவு வேறு கிடைக்கும் என்றார்கள். தேவையானதை வாங்கிக் கொண்டோம்.
டைல்கள் வெட்டுவதற்கான இயந்திரம் மற்றும் சில சிறு உபகரணங்கள் ஏஞ்சல் அப்பாவிடம் இருந்தன.
பெரிய வெள்ளி காலையே அன்றைய நாளுக்கான சமையலை முடித்தாயிற்று. வேலை முடிகிறவரை சமையலறை பாவிக்க முடியாது. ஒரு குட்டிச் சுற்றுலாவுக்கு ஆயத்தமாவது போல் 4 தட்டு, கத்தி, கரண்டி, கேத்தல், கோப்பி, சீனி , உப்பு, புளி, அரிசி இத்யாதிகள் சாப்பாட்டு மேசைக்கு இடம்பெயர்ந்தன.
தற்காலிக சமையலறை இது.
ஃப்ரிஜ், ஸ்டவ், மைக்ரோவேவ் எல்லாம் நகர்த்தப்பட்டன. சோறு வழக்கம் போல் மைக்ரோவேவில் போட்டு விட்டேன். ஒரு எலெக்ட்ரிக் குக்கிங் பானில் மீதச் சமையல் ஆகிற்று. அழுக்குப் பாத்திரங்கள் மட்டும் ஒரு ப்ளாஸ்டிக் வாளியில் போட்டு ‘பாலத்தின்’ மேலாக குளியலறைக்கு எடுத்துப் போய்க் கழுவி வர வேண்டி இருந்தது. ;))
க்றிஸ்ஸும் அலனுமாக லைனோவை உரிக்க ஆரம்பித்தார்கள்.
(செபா வீட்டுப் பக்கம் குப்பைத்திருவிழா ;) ஜூன் ஆரம்பத்தில் வரும், அப்போது லைனோவை எறிந்துவிடலாம் என்பதாக எண்ணம்.)
இம்முறை க்றிஸ் உதவியாளர் நிலைக்குப் பதவி இறக்கம் செய்யப் பட்டிருந்தார். இவர்கள் சேர்ந்து வேலை செய்வது பார்க்க அழகாக இருக்கும். பேசும் போது தோழர்கள் போல் பேசிக்கொள்வார்கள். வேலை நடுவே கருத்து வேறுபாடுகள் வரும் போது அலன் குரலை உயர்த்தி ஒரு மேலாளருக்குரிய அதட்டலோடு உறுதியான குரலில் பேசுவார். தன் பக்கத்து நியாங்களை விடாமல் காரணங்களோடு எடுத்துச் சொல்லி க்றிஸ்ஸை சம்மதிக்க வைத்துவிடுவார். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்... இருவரில் யார் தந்தை யார் மகன் என்று சந்தேகம் வரும் எனக்கு.
சனி காலை... டைல்களைப் பார்த்துப் பார்த்து வெட்டிக் கொண்டார்கள். இயந்திரத்தின் தட்டின் உள்ளே நீர் விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இயந்திரம் வேலை செய்கிற போது நீர் சிதறிக் கொண்டிருந்தது.
ஓடுகளின் நடுவே ப்ளாஸ்டிக் துண்டங்களை வைத்து அடுக்கி வைத்துப் பார்த்தார்கள்.
ஓடுகளின் நடுவே ப்ளாஸ்டிக் துண்டங்களை வைத்து அடுக்கி வைத்துப் பார்த்தார்கள்.
எல்லாம் திருப்தியாக அமைந்தது. மதியபோசனத்தின் பின் வாங்கிவைத்திருந்த சீமெந்தைக் குழைத்துக் கொண்டார்கள்.
முன்பே வாசனை பற்றி ஏஞ்சல் பெற்றோர் எச்சரிக்கை செய்திருந்ததால் எனக்கு அந்தப் பக்கம் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
முன்பே வாசனை பற்றி ஏஞ்சல் பெற்றோர் எச்சரிக்கை செய்திருந்ததால் எனக்கு அந்தப் பக்கம் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
தரை ஓடுகள் வரிசை மாறாதிருக்க அடையாளமிடப்பட்டன.
பிறகு அவற்றில் சிலதை நீக்கிவிட்டு ஒருவர் சீமெந்தைக் கொட்ட மற்றவர் பரபரவென்று இழுத்துக் கொண்டே போனார்.
மெதுவே மீளவும் ஒழுங்கின்படி அடுக்கி...
பிறகு அவற்றில் சிலதை நீக்கிவிட்டு ஒருவர் சீமெந்தைக் கொட்ட மற்றவர் பரபரவென்று இழுத்துக் கொண்டே போனார்.
மெதுவே மீளவும் ஒழுங்கின்படி அடுக்கி...
இப்படியே தொடர்ந்த வேலை மூன்றரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
அந்தச் சமயம் அறையையும் மீதி இடத்தையும் இணைத்த பாலம். ;))
இரவு, க்ரவ்ட் வைத்து இடைவெளிகளை நிரப்பி நிரப்பி ஈரமான ஸ்பஞ்சால் துடைத்துக் கொண்டே போனார் மகன்.
ஸ்டவ்வுக்கான இடம்
பொல்லாத மனிதர்கள், என் அனுமதி பெறாமல் சமையலறையில் இருந்து இதையெல்லாம் கடத்தி இருக்கிறார்கள். ;((( வெகு நேரம் கழித்துத் தான் பார்த்தேன். ;(((
மீண்டும் ஒரு முறை துடைத்து 24 மணிநேரம் காய விட்டோம். இரண்டு வாரங்களுக்கு ஈரம் தொட்டுச் சுத்தம் செய்யலாகாதாம்.
மொத்தச் செலவு (NZ $ 270.88)
அப்போ வரவு!!
செலவு குறைந்த ஒரு அழகான சமையலறை, நாங்களே செய்தோம் என்கிற சந்தோஷம் + அனுபவங்கள், வீட்டினுள்ளேயே ஒரு சுவாரசியமான விடுமுறை.
உயிர்த்த ஞாயிறன்று வேலை எதுவும் செய்யவில்லை. பூசைக்குப் பிறகு காலை ஆகாரம் செபா வீட்டில். அதன் பின் வேறு வேலை செய்ய வழி இல்லாததால் படம் பார்த்தோம். பேச வேண்டி இருந்த உறவினர்களோடு தொலைபேசியில் உரையாடினோம்.
இரவு, க்ரவ்ட் வைத்து இடைவெளிகளை நிரப்பி நிரப்பி ஈரமான ஸ்பஞ்சால் துடைத்துக் கொண்டே போனார் மகன்.
ஸ்டவ்வுக்கான இடம்
பொல்லாத மனிதர்கள், என் அனுமதி பெறாமல் சமையலறையில் இருந்து இதையெல்லாம் கடத்தி இருக்கிறார்கள். ;((( வெகு நேரம் கழித்துத் தான் பார்த்தேன். ;(((
மீண்டும் ஒரு முறை துடைத்து 24 மணிநேரம் காய விட்டோம். இரண்டு வாரங்களுக்கு ஈரம் தொட்டுச் சுத்தம் செய்யலாகாதாம்.
கடைசியாக, தரை ஓடுகள் வேறு அறைகளோடு பொருந்தும் இடங்களில்...
மொத்தச் செலவு (NZ $ 270.88)
52 tiles – $85.28
grout – $33.96 (அரைப் பாக்கட் மீதி இருக்கிறது)
adhesive – $121.64
beading - $25.00
spacers - $5.00
அப்போ வரவு!!
செலவு குறைந்த ஒரு அழகான சமையலறை, நாங்களே செய்தோம் என்கிற சந்தோஷம் + அனுபவங்கள், வீட்டினுள்ளேயே ஒரு சுவாரசியமான விடுமுறை.
நாந்தான் FIRSTU வடை எனக்குதான்
ReplyDeleteசிக்கனம் ..
ReplyDeleteஅழகு
தூய்மை ....
இமாவின் அழகிய கிச்சன்...
அருமை
படங்களுடன்
விளக்கும் முறையும்...:)
mm பெரிய வேலை இலகுவா முடிச்சி இருக்கீங்க
ReplyDeleteகிரேட்
//கேத்தல்//
ReplyDeleteஎங்க ஊர் ஞாபகம் வந்துடுச்சு எனக்கு. பந்திகளில் தண்ணீர் ஊற்ற வைத்திருப்பதைக் கேத்தல் என்போம்!!
//டைல்ஸ்//
//பன்னிங்ஸ் வேர்ஹவுஸில்//
நீங்களும் டமிலர் ஆகிட்டீங்க போல!! வாழ்த்துகள். ;-)))))
//சீமெந்தைக் குழைத்துக்//
ஹய், ‘சிமெண்ட்”டை இப்படியும் தமிழாக்கலாமோ?;-)))) (ஊரில் சாந்து குழைப்பது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்)
//சமையலறையில் இருந்து இதையெல்லாம் கடத்தி இருக்கிறார்கள்.//
இங்கேயும் அதுதான் பிரச்னை. எவ்வளவு கண்கொத்திப்பாம்பாக இருந்தாலும், ஏதாவதொன்றை பறிமுதல் செய்துவிடுவார்கள். :-((((
//வாசனை.. அனுமதி மறுக்கப்பட்டது..//
ஏன்?
ஒரு NZ$ எத்தனை இந்திய ரூபாய்னு சொன்னாத்தானே நாங்களும் கணக்குப் போட்டுப் பாக்கமுடியும்? :-))))))))
சிக்கனமாக செய்த கிச்சன் அழகு... ஒவ்வொரு பகுதியாக போட்டோ எடுத்தது அழகோ அழகு
ReplyDeleteபடங்களுடன் செய்முறை அருமை அருமை !!!
ReplyDelete//பொல்லாத மனிதர்கள், என் அனுமதி பெறாமல் சமையலறையில் இருந்து இதையெல்லாம் கடத்தி இருக்கிறார்கள். ;((( வெகு நேரம் கழித்துத் தான் பார்த்தேன். ;(((//
எல்லார் வீட்டிலும் இப்படிதான் இமா
எங்க வீட்ல ஒருத்தர் இருக்கார் வேணும்னே hammer இக்கு பதில்
எங்கப்பா வாங்கி தந்த rolling pin
(ஒளிச்சு வச்சாலும்) எடுத்து உபயோகிப்பார்
ஆங்... இமா ஓய்வெடுத்து வந்து பதிவு போட்டமையால் பெரீஈஈஈஈய பதிவு.
ReplyDeleteகிச்சின் ரைல்ஸ்/டைல்ஸ் அழகாக இருக்குது இமா. வேலை பழகியிருந்தால் அனைத்துக்கும் நல்லதே. எங்கட வீட்டில ஆ எண்டாலும் வேலைக்கு ஆளைக் கூப்பிடுறோம் ஊ எண்டாலும் ஆளைக் கூப்பிடுறோம்:)))... இப்படிப் போகுது நிலைமை.
நீங்க ஸ்டெப் பை ஸ்ரெப் ஆக காட்டியிருக்கிறதைப் பார்க்க இனி நானும் ஓரளவு செய்வேன் எனத் தெரியுது.... கண்பார்த்தால் கை செய்யும் எனக்கு..., இருப்பினும் இப்போதைக்கு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
நல்ல வேலை, கிறிஸ் அண்ணாச்சி & அலன். அப்போ வரவு???? அது தெரியாது. செலவுல அந்தச் சட்டியை விட்டிப் போட்டீங்களே, இம்ஸ். அந்தச் சட்டிக்கு ஒரு 15$ ( சட்டி பெரீரீ....சா இருக்கே ) சேர்த்தா $285.88???!!!! (நான் கணக்கில சிங்கம் ).
ReplyDeleteஹுசைனம்மா,
ReplyDeleteகேத்தல் - teapot - தேநீருக்கு நீர் கொதிக்க வைக்கும் பாத்திரம். தமிழாக மாறிப் போன... போர்த்துக்கேயச் சொல் என்று நினைக்கிறேன். இன்னமும் எங்கள் பக்கம் புழக்கத்தில் உள்ள சொற்கள் கேத்தலும் சீமெந்தும்.
//டைல்ஸ்// தரை ஓடுகள் என்று ஆரம்பித்து பிறகு யாராவது வந்து சந்தேகம் கேட்டு வைக்கப் போகிறார்களே என்று மாற்றிவிட்டேன். ;)) அப்படியும் பதிவின் இறுதிப் பகுதியில் 'தரை ஓடுகளாகவே' இருக்கிறது.
//பன்னிங்ஸ் வேர்ஹவுஸில்// முயல்குட்டிகளின் சேமிப்பகம்!!! ;))))))))) அது கடைப் பெயர் இல்லையா, மாற்ற முடியவில்லை.
படிப்பர்களுக்குப் புரியாமல் எழுதினால் என்ன பயன்! அதனால் வந்த குழப்பம் ஹுசைனம்மா. ;(
வான்ஸ் சிங்கம்... அது என் ஃபேவரிட் பாத்திரம். ஒரு மாதிரி போட்டுத் தேய் தேய் என்று தேய்த்து எடுத்து வைத்துவிட்டேன்.
மாபிள் வீட்டிற்கு எப்படி மாற்றுவது என்பதனைப் பட விளக்கத்துடன் தந்திருக்கிறீர்கள். கூடவே சுவாரசியமும் கலந்து,
ReplyDeleteஇனிப் பழைய படி கிச்சினில் சமைக்கலாம் தானே;-))
அப்புறம், நீண்ட நாளைக்குப் பின்னர் வந்திருக்கிறீங்க. நலம் தானே சகோ.
அடடா இமா!! உங்களைச் சங்கடப்படுத்திட்டனோ? எப்பவுமே சுத்தத் தமிழில் எழுதுபவர் என்பதால், (கிட்டிய வாய்ப்பை விடக்கூடாதென்று) ச்சும்மா உங்களை பகடி செய்தனாக்கும்.
ReplyDeleteகேத்தல் - Kettle என்பதன் மரூஉ என்று நினைக்கிறேன். தண்ணீர் ஊற்ற கேத்தல்தான் பயன்படுத்துவோம். இப்ப நிறைய வீடுகளில் மினரல் வாட்டர் கப்புகள் அல்லது பாட்டில்கள்!!
///வாசனை.. அனுமதி மறுக்கப்பட்டது..//
ReplyDeleteஏன்?// ஒவ்வாமை - இழுப்பு வரும்.
//உங்களைச் சங்கடப்படுத்திட்டனோ?// க்ர்ர்ர்ர்ர்ர் சொன்னேனா அப்பிடி? ;)) இடுகை போடும் போதே சங்கடமாக இருந்தது. நீங்கள் கேட்ட பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது.
பீடிங்,ஸ்பேசர், க்ரௌட் எல்லாம் தமிழில் எழுதினாலும் இடறிற்று. தமிங்கிலத்தில் எழுதினாலும் இடறிற்று. நடுவில் கை + கூகிள் குழப்படி வேறு. ஒரு கட்டத்தில் எல்லாம் காணாமற் போயிருந்தது.
இனிப் போடுவது இல்லை என்று விட்டு விட்டேன். ;) பிறகு பார்க்க, அதிஷ்டவசமாக ப்ரீவ்யூ திறந்து இருந்து அதைக் கொண்டு வந்து ஒட்டி... போட்டால் போதும் என்று போட்ட இடுகை இது. ;))
நான் பிழையாகத் தட்டினால் ஒருவரும் சொல்லுறது இல்ல. ;((( எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டு வாசிக்கிற மாதிரி இருக்கு. ;(((((( மேல ஒரு எழுத்து மிஸ்ஸிங். ;((((
ReplyDeleteஅப்பாடியோ... இமா இம்முறை உங்க பதிவை படிக்க எனக்கு கஷ்டமா போச்சு... நிறைய பெயர் புரியல, ஏன்னா இதுவரை நாங்க எதையும் இது போல் செய்யல ;( “இடவெளிகளை” இடைவெளி என்று சொல்ல மாட்டீங்களோ... நான் கஷ்டப்படறேன்ல படிக்க???
ReplyDeleteஆன ஐமா... கிச்சன் அழகு... டைல்ஸ் பதிக்கும் வேலையை எல்லாம் இருந்தா நாமே எப்படி செய்யுறதுன்னு கத்துகிட்டேன். நன்றி,
கை வலி இப்போ எப்படி இருக்கு??? இத்தனை பெரிய பதிவு போடும் அளவுக்கு தேரிடுச்சா?? - வனிதா
;) //இடைவெளி// தாங்க்ஸ் வனி, மாத்திட்டேன். அதாரு ஐமா?? ;))
ReplyDelete//இத்தனை பெரிய பதிவு போடும் அளவுக்கு// தேறல. தப்புத் தப்பாத் தட்டுறதுலயே தெரியுமே.. நோ மாற்றம். இது வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது தட்டி வைத்த உடன் வர்ணனை. இப்போது படம் மட்டும் இணைத்தேன்.
நிரூபன்,
//இனிப் பழைய படி கிச்சினில் சமைக்கலாம் தானே;-))// ம், சமைக்கலாம். முதலில 'நாற்று' வெளியீடான 'மிளகாய்த்தூள்' தான் சமைக்கப் போறன். ;)))
ஹாய் இமா நலமா. உங்க டைல்ஸ் என்வீட்டு டைல்ஸ் மாதிரியே இருக்கு.நாங்களாகவே செய்வதால் மனதில் திருப்தியாக இருக்கும்.செலவும் மிச்சம். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநான் வீட்டில் இருக்கும் வரை பெரும்பாலான வேலைகளை நானேதான் செய்வேன் .வெளியிலிருந்து யாருமே வரமாட்டார்கள்.
ReplyDeleteஇதை படிக்கும் போது அந்த நினைவு வந்து விட்டது . நாமே செய்வதால் பாதிக்கு பாதி செலவு குறைந்து விடும் . நமக்கும் ஒரு திருப்தி கிடைகும்
இங்கே (ஷார்ஜா)ஒரு டைலின் மாதிரியை குடுத்தால் அதேப்போல செய்து தருவாங்க .
ReplyDeleteஇதனால் வீனாக ப்போன இடத்தின் அளவுக்கு மட்டும் டைல்ஸ் வாங்கி போட்டுக்கொள்ளலாம் . மொத்த டைல்ஸும் மாற்ற வேண்டியதில்லை :-)
திரும்ப ஊருக்குப் போற ப்ளானா ஜெய்லானி? ;)
ReplyDelete//மாதிரியை குடுத்தால் அதேப்போல செய்து தருவாங்க.// சுப்பரா இருக்கே ஐடியா. இங்கயும் இருக்கும். விசாரிச்சுப் பார்க்க வேணும்.
//திரும்ப ஊருக்குப் போற ப்ளானா ஜெய்லானி? ;) //
ReplyDeleteஇப்போது இல்லை இன்னும் சில மாதங்களில் போயே ஆகனும் , நீங்க எப்போ வறீங்க ..? :-))
/////மாதிரியை குடுத்தால் அதேப்போல செய்து தருவாங்க.// சுப்பரா இருக்கே ஐடியா. இங்கயும் இருக்கும். விசாரிச்சுப் பார்க்க வேணும்.//
ReplyDeleteஇதே மாதிரி வீட்டில் உள்ள பெயிண்ட்டும் , கொஞ்சமா சுரண்டி கொண்டு போய் கொடுத்தால் கம்ப்யூட்டரில் அனலைஸ் செய்து அதே மாதிரி மிக்ஸ் செய்து கொடுப்பார்கள் . அதுவும் சில மணி நேரத்துக்குள்ளேயே கிடைத்து விடும்