Friday, 30 December 2011

ஆசை, தோ... ம்..ஹும்! பிட்டு , கம்பி, கைக்குட்டை

ஆசை, தோசை, பிட்டு, கம்பி, கைக்குட்டை
 !!!
எப்போ விடுமுறை என்று எங்கு போனாலும் நாங்களே சமைத்துச் சாப்பிடுவதைத்தான் விரும்புவோம். இம்முறை விதி விளையாடி விட்டது. ;(
சென்று தங்கிய...

granny flat ல்... சமையற் பாத்திரங்கள் போதுமானதாக இருக்கவில்லை. ;( இங்கு வந்த 12 வருடங்களில் முதல்முறையாக மைக்ரோவேவ் இல்லாத ஒரு தங்குமிடம் அமைந்தது. பிட்டு அவிப்பதற்கு ஆயத்தமாக அரிசிமா கொண்டு போயிருந்தோம். ;((

முதல் நாள் வேறு வழியின்றி ஒரு மலேஷிய உணவகத்தைத் தேடி நடக்க, அது 'விடுமுறைக்காக மூடியுள்ளோம்' என்கிற அறிவிப்போடு எங்களை வரவேற்றது.

பக்கத்து dairy ல் பாண், மாஜரின், கரட், சலாமி, முட்டை என்று தேவைக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தால் கண்முன்னே Yellow Chillie.

வெகு காலம் கழித்து ஒரு உணவகத்தில் நுழைந்து சாப்பிட்டுவிட்டு (அவர்கள் சமையல் பிரமாதமாக இருந்தது.) அறையில் போய் மாத்திரை எடுத்துக் கொண்டு உறங்கிப் போனேன்.

மறுநாள்...
தேன்கூட்டின் உள்ளே சுற்றும் முன் கைப்பையை அங்குள்ள பெண்ணிடம் ஒப்படைத்து 'டோக்கன்' பெற்றுக் கொண்டோம்.

"ஹச்சும்!" கையிலிருந்த 'டிஷ்யூவை' வெளியே எடுக்க... க்றிஸ் திடீரென்று, "கைக்குட்டை இருக்கிறது," என்கிறார். 
"என்னிடம் போதுமான அளவு டிஷ்யூ இருக்கிறது," இது நான். 
"ஒரு நாடா மட்டும் கிடைத்தால்...!!" 
தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. கர்ர்.. என்று வந்தது எனக்கு.

"புட்டு அவித்து விடுவேன்," என்று முடித்தார். "இருக்கிற pan ல ஹங்கியைக் கட்டி... அவிக்கலாம்." 
"ம்!" வாயைத் திறக்க யோசனையாக இருந்தது எனக்கு. என் பிரியமான jacket ல் இருந்த நாடாவைப் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அமைதி காத்தேன்.

இரவு பாணும் பருப்புக்கறியும் சாப்பிட்டாயிற்று.

மறுநாள் இரவு அறைக்கு வந்ததும் ஒரு தட்டில் அப்பிள் கத்தி சகிதம் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமைந்தார் க்றிஸ். நான் குளித்துவிட்டு வரும்போது அப்பிள் தீர்ந்திருந்தது; கட்டிலில் தரையிலெல்லாம் ஏதுவோ நீலநிற ப்ளாத்திக்குத் துண்டுகள் போல் நீளநீளமாகக் கிடந்தது.

கையில்...
இன்னும் நீ..ளமாக ஒரு கம்பி.
!!!
ஏதாவது புரிகிறதா!!

என்னைப் பார்த்து ஒரு அரை வெற்றிச் சிரிப்புச் சிரித்தார்.
புரிந்தது எனக்கு - கோட் ஹாங்கர்!! ;)

இதற்குப் பெயர்தான்... நளபாகம். நளமகாராஜா out of nothing சமைப்பாராமே! ;)

இனி மீதியை 'ஸ்டெப் பை ஸ்டெப்' படங்கள் விளக்கும். ;) பார்த்து மகிழுங்கள்.
கைக்குட்டை கட்டிய pan...
துணி தீப்பிடிக்காமல்... 'சேஃப்டிபின்'...
தட்டில் பிட்டுக் குழைத்து....
பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து....
குழைத்த மாவை கைக்குட்டை மேல் கொட்டி...
மூடி அவித்தால்...
பிட்டு தயார். பிறகு... முட்டைப் பொரியல், காய்கறிக் கலவைப் பொரியல் என்று திருப்தியாக விருந்து சாப்பிட்டாயிற்று. 
யம்! யம்! ;P

27 comments:

 1. m.. ரைமிங்கா! ;)
  ரொம்ப நேரம் தண்ணில விளையாடாதீங்க, ஜலதோஷம் பிடிச்சுக்கும்; அப்றம் அம்மா திட்டுவாங்க.

  ReplyDelete
 2. சூப்பர் ஐடியா டீச்சர் . க்றிஸ் அங்கிள் இன் புட்டு செய்யும் முறை ரொம்ப அருமை. எனக்கு புட்டு பிடிக்கும் ஆனா அதை செய்வதற்கு ஏற்ற புட்டு குழல் எதுவும் இல்லையே ன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன். இந்த ஐடியா ரொம்ப நல்ல இருக்கே?

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சிரமப்பட்டாலும் பரவாயில்லை, வெளியிலும் வீட்டுச் சாப்பாடுதான்னு உறுதியா இருக்கீங்களோ?

  //"ஹச்சும்!" கையிலிருந்த 'டிஷ்யூவை' வெளியே எடுக்க... க்றிஸ் திடீரென்று, "கைக்குட்டை இருக்கிறது," என்கிறார்.//

  அந்தக் கைக்குட்டை ஏற்கனவே "ஹச்சும்!" போட்டது அல்லவே? :))) (ச்சும்மா..)

  என்னதான் ஸ்டார் ஹோட்டலா இருந்தாலும் நாமே செய்து சாப்பிடுவது தனி திருப்திதான் இமா :) ஆனா அது எல்லா நேரத்திலும் முடிவதில்லை.

  ReplyDelete
 4. வல்லவருக்கு புல்லும் ஆயுதம் .இமா,உங்களவர் அதை மெய்யாக்கி விட்டார்..
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
  vgk

  ReplyDelete
 6. பிட்டு இப்படியும் செய்யலாமா? முயற்ச்சிக்கிறேன்
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
 7. //செய்வதற்கு ஏற்ற புட்டு குழல் எதுவும் இல்லையே ன்னு நெனைச்சுகிட்டு// ஸ்டீமர்ல போட மாட்டீங்களா கிரிஜா! அது ஈசில்ல!
  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 8. அஸ்மா.. ;) //ஏற்கனவே "ஹச்சும்!" போட்டது அல்லவே?// ஹா!! நல்லா விட்டேன்ல! ம்! இது எங்க ரெண்டு பேருக்கும் மாட்டும் என்பதால்தான். பசங்க கூட வந்திருந்தா... ஒருவேளை என் காட்டன் துப்பட்டா காலியாகி இருக்குமோ என்னமோ! ;))
  //அது எல்லா நேரத்திலும் முடிவதில்லை. // இங்க முடியும். இந்த ஒரேஒரு தடவைதான் இப்பிடி ஆச்சு.

  ReplyDelete
 9. தாங்ஸ் ராதா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நன்றி அண்ணா. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. உங்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள் சூரியஜீவா.

  ReplyDelete
 12. தேன் கூட்டில தேனி இருக்குமோ இமா?:).

  மக்கள்ஸ்ஸ் ஓடிவாங்க .. பூனைக்கும் ஒரு காலம் வந்திருக்கு:)))...

  //துணி தீப்பிடிக்காமல்... 'சேஃப்டிபின்'...//

  நான் ஷலோ ரேப் ஒட்டினதுக்கே... சாப்பிடப் பயமாக்கிடக்காம்... இப்போ ஷேஃப்டி பின்னாம்... இனியும் ஆராவது இமா வீட்டுக்குச் சாப்பிடப்போவீங்களோ?

  சேஃப்டிப் பின்னை விழுங்கினால்... சுத்திச் சுத்தி 18 ஊசி போட வேணுமாமே:)))))... ஹையோ நானில்லை நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))).

  ReplyDelete
 13. புட்டுடன் புத்தாண்டு.நல்வாழ்த்துக்கள் இமா.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. ஓக்லாண்டில புதுவருஷம் பிறந்திட்டுது:))...பார்த்தமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) இமாவைத் தெரியேல்லை:(

  ReplyDelete
 15. //பிட்டு தயார். பிறகு... முட்டைப் பொரியல்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  புட்டுக்குத் தேங்காய்ப்பூப் போடேல்லையோ இமா?...

  அருமந்த கைக்குட்டை:(((... அந்தரமாவத்துக்கு கண்ணைத் துடைக்கலாம்.... ம்ம்ம்ம்:)))))) போச்ச்ச்ச்:))).

  ReplyDelete
 16. ;)) shall come l8r to reply u all. thanks.

  ReplyDelete
 17. //தேன் கூட்டில தேனி இருக்குமோ இமா?// யார் சொன்னது அப்பிடி!! முதலைதான் இருக்கும். ;)))
  //ஷலோ ரேப் ஒட்டினதுக்கே...// ஹையோ!! மாட்டீட்டேனா!!;)
  //இனியும் ஆராவது இமா வீட்டுக்குச் சாப்பிடப்போவீங்களோ?// இப்பிடி எதிரா கன்வஸ் பண்ணப்படாது அதீஸ். ட்ரிப் போனால் மட்டும்தான் இப்பிடி. நீங்கள் வந்தால்... வேற மாதிரி கவனிப்பன். சரி.. இப்பிடித்தான் எண்டாலும்... உங்களுக்கென்ன! ஊசி போட கையோட ஆட்கள் இருக்கினம்தானே. ;)
  //இமாவைத் தெரியேல்லை:( // மடிக்கணனிக்குப் பிறத்தால போய்ப் பார்த்தீங்களோ!!
  //தேங்காய்ப்பூ// அது விருந்தாளிகள் வந்தால் மட்டும். நாங்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடுற ஆட்கள். ;)
  //அருமந்த கைக்குட்டை:(((// கிக் கிக்க்க்க். முடியேல்ல அதீஸ், முடியேல்ல ;) கொமண்ட் போடவெண்டு போக கொசுமெய்ல் அனுப்பச் சொல்லுமெல்லோ! அப்ப உதவும் எண்டு, திரும்பப் பத்திரமா எடுத்துக் கழுவிக் காயப் போட்டு வச்சிருக்கிறன். ;D

  பி.கு
  அதீஸ்.. ஆசியாட பக்கம் கொமண்ட் போட்டால் ஃபொலோ பண்ணுறது இல்லையோ நீங்கள்!! கிக் கிக்

  ReplyDelete
 18. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ஆசியா. (அங்க... வாழைக்காயில் நான் போட்டதை நீங்கள் காணேல்லதானே!) ;)))

  ReplyDelete
 19. கிறிஸ் அண்ணா, நோட் திஸ் point அடுத்த முறை இமாவின் ஜாக்கெட்டிலை ஒரு நாடா இருக்காம். அவ குளிக்கப் போனதும் மெதுவா நாடாவை உருவி எடுத்து, புட்டை அவிச்சுப் போட்டு, திரும்ப வைச்சிடுங்கோ.
  இமா, புட்டு super- o- super.
  இருந்தாலும் இப்படி எல்லாம் திறமையா புட்டு அவிப்பது எவ்வளவு கஷ்டம்???!!!!!

  ReplyDelete
 20. ;)))))))))

  ஏற்கனவே எட்டிப் படத்தைப் பார்த்துப் போட்டு, 'இதெல்லாம் பகிரங்கப் படுத்துறதோ!' எண்டு ஒரு கொமண்ட் சொல்லுப்பட்டுது. நீங்களும் போட்டுக் குடுக்க வெளிகிடாதைங்கோ வான்ஸ்.

  ReplyDelete
 21. எங்க ஊர்ல இப்படித்தான் புட்டு அவிப்போம் இமா. இடலிப் பானையில், தட்டின்மேல் துணி விரித்து, மாவைப் பரத்தி வைத்து அவிப்போம். மாவு வறுக்கும்போதே, தேங்காய்ப் பூவையும் சேர்த்து வறுத்து விடுவோம். அதனால் அவிக்கும்போது தனியே பூ சேர்ப்பதில்லை. கூட்டுக்குடும்பங்களில் குழல் வைத்து அவித்துக்கொண்டிருந்தால் எப்ப முடிக்கிறது? அதனால், இப்படித்தான் செய்வது.

  இப்பச் சில வருஷங்களாய்த்தான் குழாய்ப்புட்டு...

  ஆமா, மைக்ரோவேவில் புட்டு எப்படிச் செய்வீங்க? செஞ்சு படம் போடுங்க.

  ReplyDelete
 22. @ வான்ஸ்.. ;) + 'க்' ப்ளீஸ்ஸ் ;)

  ReplyDelete
 23. //எங்க ஊர்ல இப்படித்தான் புட்டு அவிப்போம் இமா.//ஹா!! கைக்குட்டையை கோட் ஹாங்கரில் கட்டியா!! \
  //இடலிப் பானையில், தட்டின்மேல் துணி விரித்து, மாவைப் பரத்தி வைத்து அவிப்போம்.// ம். அதுதானே பார்த்தேன்.

  //மாவு வறுக்கும்போதே, தேங்காய்ப் பூவையும் சேர்த்து வறுத்து விடுவோம்.// சூப்பர் ஐடியா. புட்டு 'நளபாகம்' என்பதால் நான் அவிப்பதே... இல்லை. ;)) ஒரு தடவை அவித்தால் ஒரு நேரத்துக்கான அளவு ஒரு பாத்திரத்தில் வைத்து ஃப்ரீசரில் வைக்கப்படும். தேவையைப் பொறுத்து வெளியே வரும், மைக்ரோவேவ் ஆகும். கெட்டு விடாமல் இருக்கவென்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வினாலும் ;) தேங்காய்ப்பூ சேர்ப்பதில்லை என்பதாக அறிகிறேன். ;) விரும்பினால் மைக்ரோவேவ் செய்கிறபோது "டெசிகேடட் கோகனட்" சிறிது நீரில் ஊற வைத்து சுடவைத்துக் கொள்ளலாமாம். ;)

  //கூட்டுக்குடும்பங்களில் குழல் வைத்து அவித்துக்கொண்டிருந்தால் எப்ப முடிக்கிறது? அதனால், இப்படித்தான் செய்வது.// செபா அதிகம் இடியப்பம் அவிக்கும் ஸ்டீமரில் தான் அவிப்பார்கள். ஆவி வெளியே போகாமல் மூடி இறுக்கமாக இருக்கும். அதுபோல் தேடுகிறேன். கிடைக்க மாட்டேன் என்கிறது. ;(

  //குழாய்ப்புட்டு...// மூங்கில் குழாய் என்றால் சுவை தனிதான் இல்லையா! ஹும்! ;)

  //மைக்ரோவேவில் புட்டு// ஃபிஷ் ஸ்டீமரில் போடுவேன். //செஞ்சு படம் போடுங்க.// ஆஹா! என்னே இமாவின் உலகுக்கு வந்த சோதனை! ;))) இறுதி விளைவு ஒரே மாதிரித்தான் இருக்கும். கைக்குட்டை பிட்டு படம் போட்டு... இதுதான் மைக்ரோவேவ் பிட்டு என்று ஹுஸைனம்மா காதில் பூ சுற்றிவிடுவேன். ;) அது சட்டென்று சாப்பிடாவிட்டால் ரப்பர்தான். ;)

  ReplyDelete

 24. கைக்குட்டையில் புட்டு - அங்கிள் கிறிஸ் ஐடியா சூப்பரோ சூப்பர் :))
  அதெப்படி நீங்களும் சரி, அங்கிளும் சரி கில்லாடிகள் தான் போங்க :)) வேறென்ன சொல்ல, ஜாடிக்கேற்ற மூடி :))

  ஹாட்பிளேட்டும் கூடவே வைத்திருந்தீங்களோ?!

  ReplyDelete
  Replies
  1. // ஜாடிக்கேற்ற மூடி// ;)) அது உண்மைதான். ;)

   //ஹாட்பிளேட்// எப்பவும் கிச்சன் உள்ள இடமாகவே பார்ப்போம். அந்த க்ரானி ஃப்ளாட், கிச்சன் ரேஞ்ச் அது.

   Delete
 25. \\granny flat ல்// didn't notice this ealier . I thought it was a Hotel :))

  ReplyDelete