Saturday, 8 September 2012

பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி

;) _()_

பூ வைக்க இந்தப் பூவைக்குக் கொள்ளை ஆசை, அதிலும் சரம் வைக்க. ஆனால் ஊசி நூல் கொண்டு கோர்க்க மட்டும் வரும்.

எப்போதோ பக்கத்து வீட்டுக் கலியாணத்திற்கு அவர்கள் சொன்னது போல் கட்டிக் கொடுத்துவிட்டு மறந்து போனேன். பிறகு ஒரு இந்தியத் தோழி (Aunty) காட்டிக் கொடுத்தார்கள். திரும்பவும் மறந்தேன். டச் விட்டுப் போச். பூ இருந்தால்தானே டச்.

சமீபத்தில் ஒரு இணையத்தோழி உதவ.... செய்முறை கிடைத்தது. ஆனால் பூ!! இருந்த மல்லிகையை வெட்டியாயிற்றே!! காலை செபா வீட்டுக்குப் போய் வெளியே வருகையில் கண்ணில் பட்டது இந்த மல்லிகையின் சக்களத்தி. ;))

பிடுங்கி வந்தேன். வீட்டில் இறங்கும் போது ஒருமாதிரி மயக்கமாக இருந்தது, அவ்வளவு வாசனை.

இரவெல்லாம் மழை. பூக்கள் நிறையவே நீரை உறிஞ்சிவைத்திருந்தன. காம்பும் சின்னது. எப்படியோ மல்லுக்கட்டி.... சரம் கட்டி...

கூந்தலில் சூடினால் படம் பிடிக்க ஆள்!!! க்றிஸ் உதவிக்கு வந்தார். ஏதோ கலியாண ஃபோட்டோ ஷூட் போல அரைமணி நேரம் சுட்டு மீந்தது இந்த இரண்டும்தான். அதற்குள் பாதிப் பூக்களுக்கு பாதிப்பு வந்து கொட்டிப் போய் விட்டது.

ஒரு ஆன்டிஹிஸ்டமைன் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.... தங்கள் கனிவான கருத்துக்களை எதிர்பார்த்து. ;)))))

நன்றி _()_

29 comments:

 1. :)
  பாட்டும் சூப்பர்..பூவும் சூப்பர்..படமும் சூப்பர்! :)


  அதென்ன மல்லிகையின் சக்களத்தி? பார்க்க ஜாதிமல்லி பூ போலே தெரியுது ரீச்சர்! ஆனா பூவை மட்டும் பறிக்காம ஏன் செடியவே வெட்டிட்டு வந்திருக்கேள்? கர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்ர்!


  நல்ல முயற்சி..தொடருங்கோ..அடுத்த முறை அரும்புகளை எல்லாம் கட்டாமல், பூக்களை மட்டும் தொடுங்கோ! ;) ;)

  ReplyDelete
  Replies
  1. ;))

   இது சிவப்பு காம்பா இருக்கும் சின்னது. காம்பு 1.5செ.மீ இருக்கும். கைல புடிக்கவே முடியல. ;( இங்க களை இது.

   //ஏன் செடியவே வெட்டிட்டு வந்திருக்கே//ன்னா... எங்காளு கால்ல வெந்நீரைக் கொட்டினா மாதிரி நின்னுட்டிருந்தாங்க. ஊரார் வீட்டுக் கொடில ஒவ்வொன்றாக பறிச்சிட்டிருக்க முடியுமா? கொப்போட அபேஸ். ;)
   //நல்ல முயற்சி// திருட்டையா சொல்றீங்க!! அவ்வ்!! ;))) //தொடருங்கோ// கொஞ்ச நாளைக்கு வேணாம்னு தோணுது. இரவைக்கு நுரையீரல் பாடும் போல இருக்கு. ;)) வாசமில்லா மல்லிகை எங்கயாச்சும் கிடைக்குமா என்று தேடப் போறேன். //அரும்புகளை எல்லாம்// ம். ஆகட்டும். இது ட்ரையல். அரும்பு பிடிக்க வசதியா இருந்துதே. ;)

   Delete
 2. ரொம்ப அழகா தொடுத்திருக்கீங்க இமா. எனக்கும் அப்பப்போ இதுபோல் தோன்றுவதுண்டு. போனவாரம் அம்மாவுடன் பேசும்போதுதான் சொல்லிக்கொண்டிருந்தேன், எனக்கு மீண்டும் கோலம் போட வருமா என்று சந்தேகமா இருக்கென்று. ம்... உள்ளுக்குள் புதைந்து கிடந்த பூ ஆசையை கிளப்பி விட்டீங்க. இங்கே எங்காவது கிடைக்குதான்னு பார்க்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. //கோலம்// அட! நீங்களும் எனக்குள் இருந்த ஆசையைக் கிளறி விட்டிருக்கிறீர்கள். திரும்ப ஆரம்பிக்க வேண்டும். நன்றி கீதமஞ்சரி.

   Delete
 3. ஆனால் ஊசி நூல் கொண்டு கோர்க்க மட்டும் வரும்.
  //அதேதான் இங்கும்.இதுவும் ஒருவித மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த பூதான்..உச்சி வகுந்தெடுத்து பிச்சுப்பூ வச்சகிளி பாட்டு நினைவுக்கு வருது இமா.

  ReplyDelete
  Replies
  1. பிச்சிப்பூ ஊரில் வைத்திருந்தேன் ஸாதிகா. கோப்பிப்பிச்சி என்று ஒரு இந்தியத் தாத்தா கொடுத்தார்கள். குப்பென்று பூத்து வாசனை மயக்கும். அந்தச் செடியில் ஒரு குரிவிக் குடும்பமும் குடியிருந்தது. மனதோடு மழைக்காலம். ;)

   Delete
 4. பூ முடிந்த பூங்குழல்..பூவும் அழகா மயில் தோகை மாதிரி விரிந்து அழகா இருக்கு...கூந்தலும் அதே மாதிரி அழகா இருக்கு.

  ReplyDelete
 5. பூவோடு மனதையும் கட்டிப்போட்ட பகிர்வு .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஸ்வரி அம்மா.

   Delete
 6. அருமை! மல்லிகையில் மயங்காதோரும் உண்டோ:)
  மல்லிகையும் அழகு, மல்லிகைச்சரமும் அழகு, அதைச் சூடி எடுத்திருக்கும் படமும் அழகோ அழகு;)))
  ஊரில் எம் வீட்டில் 2 பந்தல்கள். நிறைய பூத்துக்கொட்டும். சரமாக்கி ஸ்வாமி படத்துக்குச் சாற்றி, அதை பின்னர் நம் தலையில் சூடிக்கொண்டதும் எல்லாம் கடந்துபோன நினைவுகள். மீட்டவைத்துவிட்டீர்கள்:)

  பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. கடந்து போன நினைவுகளை மீட்டத்தானே இங்கு வருகிறோம். சுகம் அது இல்லையா!

   Delete
 7. இமா, பூக்களை ஓரளவு நல்லாவே தொடுத்திருக்கீங்க!
  பாராட்டுக்கள்.

  ஆனால் நெருக்கமாக ஜோராக தொடுக்கணும். இடைவெளியே இருக்கக்கூடாது.

  திருச்சியிலே இருவாச்சி மல்லிகைப்பூன்னு நெருக்கமாகத் தொடுத்து விற்பார்கள்.

  அதன் அழகும், வாஸனையும் ..... அடடா! நினைத்தாலே மயக்கம் வருது ..... இமா. ;)))))

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 8. நீங்கள் செடியுடன் படத்தில் காட்டியுள்ளது பவழமல்லி என்று நினைக்கிறேன். இதையே பார்ஜாதம் என்றும் சொல்லுவார்கள். காம்பு மட்டும் நல்ல சிவப்பாக இருக்கும். இதன் மணம் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் இதை அதிகம் பெண்கள் தங்கள் கூந்தலில் சூடுவதில்லை.

  இதை ஊசி நூல் கொண்டு அழகாகக் கோர்த்து, ஹனுமாருக்கு மாலையாகப் போடுவார்கள். சீக்கரமாக வாடிவிடும். நல்ல வாசனையாகவே இருக்கும். மாலையாக்கப்பட்ட அது பார்க்கவே ஜோராக இருக்கும்.

  சிவப்புச் சங்கிலி போல நடுவே வெள்ளை வெளேர் என இதழ்களுடன் ரொம்ப ஜோராக இருக்கும்.

  vgk

  ReplyDelete
  Replies
  1. பவளமல்லி... செடி அல்லவா! அதன் பூ, காய், இலை எல்லாமே தனித்துவமான வடிவம் கொண்டவை.

   பூவைப் புத்தகத்தில் வைத்து அடித்தால் அந்தச் சிவப்புப் படியும். சிறு வயதில் முயன்றிருக்கிறேன். :)

   சிவகாமியின் சபதத்தில் கூட இந்தச் செடி வந்திருந்ததோ! ஒரு அத்தியாயத்தில் வந்த ஓவியம் எங்கோ பத்திரமாக இருக்கிறது.

   காய் வட்டமாக இருக்கும். இரண்டாகப் பிரித்து மீண்டும் மாற்றிச் சொருகினால் பாய் விரித்த வள்ளம் போல் தோன்றும். இலையும் அழகு. பக்கத்து வீட்டு மதில் மேல் வளர்ந்திருந்தது.

   படத்திலுள்ளது கொடியாக வளர்ந்திருக்கிறது அண்ணா. பூக்கள், ஊசி மல்லிகை போல மெல்லிய சிவப்புச் சேர்ந்தாற்போல் இருக்கிறது.

   ஊரில் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர்களது உறவினர் சொன்னது இது - முள்முருக்கு மரத்தில் மெல்லிய துளை செய்து அதன் ஊடாக மல்லிகைக் கிளையை நுழைத்து எடுத்து வளரவிட்டால் மல்லிகைப் பூக்கள் சிவப்புச் சாயல் கலந்து வருமாம். ஊரில் இரண்டு தாவரங்களும் தூரத்தூர வளர்ந்திருந்ததால் முயற்சி செய்யவில்லை. யாராவது முயற்சி செய்து சொன்னால் சந்தோஷப்படுவேன்.

   Delete
 9. இது முல்லை பூ தானே
  நானும் ரொம்ப நாளா கட்ட கத்துக்கனுமுன்னு இன்னும் வரல.
  ஒன்று ஊசி நூல் வைத்து கோர்த்து கொள்வேன்.

  இன்னொன்று கால்களால் கட்டுவேன் அது ஈசி.

  முல்லை பூவுடன் இமா அக்காவோட சுருட்ட முடியும் அழகோ அழ்கு

  ReplyDelete
  Replies
  1. //கால்களால் கட்டுவேன் அது ஈசி.// ;) நானும் சில கைவேலைகளுக்கு காலைப் பயன்படுத்துவது உண்டு ஜலீ.

   Delete
 10. பூ, பூவை & கூந்தல் எல்லாமே அழகு டீச்சர் . க்றிஸ் அங்கள் உக்கும் வாழ்த்துகள் பின்னே அழகா அரை மணி நேரம் பொறுமையா படம் எடுத்து இருக்காங்க இல்லே?

  எனக்கும் பூ கட்ட தெரியாது. ஊரில் இருக்கும் போது அம்மா இல்லே அக்கா கட்டி கொடுப்பாங்க. மல்லிகைக்கு மயங்காதவங்க உண்டா ?

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூக் கட்டத் தெரியாதோ?:)

   Delete
  2. //மல்லிகைக்கு மயங்காதவங்க உண்டா ?// நிச்சயம் இருக்க முடியாது கிரி. இயற்கையின் விந்தை அது.

   Delete
 11. இமா, பூவை விட உங்கள் கூந்தல், சுருள் சுருளா ரொம்ப அழகா இருக்கு... முல்லை பூ கிடைத்தால் அதை வைத்து கட்ட ட்ரை பண்ணுங்க... நெருக்கமாக வரும்...

  ReplyDelete
  Replies
  1. //முல்லை பூ// இங்கு கிடைக்காதே ப்ரியா. ;( செபா வீட்டில் ரோஜா நிறைத்தில் ஒரு பூ இருந்தது. அதை வைத்துக் கட்டலாம் என்று நினைத்தேன். இப்போ பார்க்க பூக்கள் வாடிவிட்டன.

   Delete
 12. ஆஆஆ இதாரிது படத்தில இருப்பது இமாவின் இளைய மகளோ?:))...

  பாருங்கோ கிரிஸ் அங்கிளுக்கு அந்தநாள் ஞாபகம் வந்திட்டுது:).... பின்ன கூந்தல்லயே அரை மணிநேரம்.. படமெடுத்தவர் எனச் சொன்னேன்ன்:)..

  ஹையோ என் வாய் அடங்காதாமே.. கீரி இண்டைக்கு என்னைச் சேஃப் பண்ணிடுங்கோ.... பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. ம் ;) இளைய மகள், மூத்த மகள் எல்லாம் ஒரே ஆள்தான். //அந்தநாள் ஞாபகம்// கர்ர்ர். :)

   Delete
 13. பூவுடன் இமா அக்காவோட சுருட்ட முடியும் அழகோ அழ்கு

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜி. சமயத்தில் கூந்தல் நுனியை மட்டும் கொஞ்சம் நறுக்கிச் சீராக்கலாம் என்று தோன்றும். ஆனாலும் செய்வதில்லை.

   Delete
 14. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூக் கட்டத் தெரியாதோ?:)

  அதிராவ் கர்ர்ர்ர் பூ கட்ட தெரியாது :))

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா