Tuesday, 4 December 2012

ரோஜா ரோஜா!

என் வீட்டுத் தோட்டத்திலிருந்து, முகநூல் பக்கத்தில் பகிர்வுக்குச் சென்ற படங்கள் இவை. உங்கள் பார்வைக்காக...
 அரும்பு மலராகி....
காயாகி...
 கனிந்தால்....
(பழங்கள் இனிமையாக இருக்கும்)
உலர வைத்து தேநீர் தயாரிக்கலாம்.
 பழத்தினுள்ளே...
உலர்ந்த வித்துக்கள்
 ரோஜாக் கன்றொன்று
 இவை வித்திலைகள்

29 comments:

  1. :) seeing the Rojas from the seed for the first time imma! Cute!

    ReplyDelete
    Replies
    1. ம். எல்லோருமாக என்னைக் கிண்டல் பண்ற மாதிரி இருக்கு. ;)

      Delete
    2. இந்தப் படத்தைப் பார்த்து என்னவர் "இதெல்லாம் நிஜமாவே நடந்துதா?" என்று கேட்கிறார். அதை நான் பதிவைப் போட்டவருக்குச் சொல்ல, //இல்ல, நடக்கலயே! முளைச்ச இடத்திலயேதான் இருக்கு. யாராச்சும் நல்ல நைக்கி ஷூ வாங்கிக் கொடுத்தா நடந்துரும். ;)))))))// என்கிறார்! இடையில் நான் மாட்டிக்கொண்டு முயிக்கிறேன்! ;)))))

      இதில நான் இவிங்களை கிண்டல் பண்றேனாம்! காலக்கொடுமடா சாமீஈஈஈ! ;))))))

      Delete
  2. பார்க்க குட்டி மாதுளம் பழம் போல் இருக்கு இமா .. ரோஜா விதைகள் இப்போதான் முதன் முறையாக பார்கிறேன். பதியம் நட்டுதான் வளர்ப்போம்.. இது புது வரவா..

    ReplyDelete
    Replies
    1. இல்லை. பதியன்தான் வைக்க வேண்டும்.
      இது வளர எத்தனை காலமாகுமோ! ;) தொட்டியில் வைத்து கொஞ்சம் வளர்ந்ததும் ஒட்டலாம் என்று எண்ணம்.

      Delete
  3. ரோஜா காய், பழம், விதை எல்லாம் முதல் முறை பார்க்கிறேன் இமா... நாங்க செடியாக வாங்கி, பதியம் போட்டு, அதிக படுத்திக்கொள்வோம்... இலை கூட வித்யாசமா இருக்கு.... பகிர்வுக்கு நன்றி இமா....

    ReplyDelete
    Replies
    1. //செடியாக வாங்கி, பதியம் போட்டு, அதிக படுத்திக்கொள்வோம்... // அதேதான் செய்ய வேண்டும். இது... இமாவின் உலகம். ;D

      //இலை// செடி பெரிதானதும் சரியான அமைப்புக் கிடைக்கும்.

      Delete
  4. என்னது.....!!! ரோஜாப்பூ காயாகி, பழமுமாகுமா??!! நெஜம்மாவா... இல்லை எங்களை வச்சு காமெடிகீமெடி..... ??!!

    :-))))

    ReplyDelete
    Replies
    1. //காமெடி// ;) ஃபோட்டோ போடுறேன். கர்ர். ;)))

      Delete
  5. நான் கூட ரோஜா இலை, பூ தான் பார்த்திருக்கிறேன் இதுவரை!

    ReplyDelete
  6. அருமை! அருமை! ரோஜா விதைகளை இன்று தான் காண்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. ரோஜாவின் விதைகளை இப்பத்தான் முதன் முதலாப் பார்க்கிறேன். வித்தியாசமான வகைதான்.

    ReplyDelete
  8. ஸ்ரீராம், சுரேஷ் & சாந்தி...

    என்னிடம் இருக்கும் 4 வகைகள் காய்க்கின்றன. அயலார் வீட்டிலும் காய்கள் ஏராளமாக இருக்கின்றன.

    முகநூலில் இப்படங்களைப் பார்த்த நட்புக்களுக்கு புதினமாக இருந்தது. பலரும் இப்படிச் சொன்னதனால்தான் இங்கு பகிரவே தோன்றிற்று.

    ஒன்று குறிப்பிடத் தோன்றுகிறது - பூக்களைப் பறித்து விடுகிறோம். அல்லது அரும்புகளை ஊக்குவிக்க, பூ வாட ஆரம்பித்ததும் செடியிலிருந்து நீக்கி விடுகிறோம். இதனால்தான் காய்களைக் காணக் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. ஆஹா. ரோஜாவில் காய்கள், காய்களிலிருந்து கன்றுகள்.. நிங்க எங்கயோ போயிட்டீங்க இமா.. சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. //நிங்க எங்கயோ போயிட்டீங்க இமா // ???????!! இமா எங்க போயிட்டீங்க? சீக்கிரம் வாங்கோ! பூஸார் தமிளை;) என்னான்னு கேளுங்கோ..நிங்க!!! :)))))))

      Delete
    2. அதுவா!! கண்ணாடி குற்றி... பூஸுக்கு 'கால்' மிஸ்ஸிங்!! அல்லது எமக்கு 'கண்ணாடி' மிஸ்ஸிங்!! ;D

      இங்கயேதான் இருக்கிறன் அதீஸ். நீங்களும்தானே எனக்காக ;) காடுமேடெல்லாம் அலைஞ்சு, ரோஜாக் காய் படம் எடுத்துப் போட்டனீங்கள்!! இப்ப இப்பிடிச் சொன்னால் எப்பிடி!! ;)

      Delete
    3. மகியை ஒருக்கால் ஆராவது பிடிச்சுத்தாங்கோ:))

      Delete
    4. மியாவ் ஆன்டி, நான் இங்க இருக்கேன்! ;);0)

      p.s. "ரஜினி அங்கிள், நான் இங்க இருக்கேன்"-- மெட்டில் படிச்சுக் கொள்ளவும்! ;) :)

      Delete
  10. ஆஹா ! பின்னி பெடல் எடுத்துட்டீங்க,நானும் பார்த்திருக்கேன்..பகிர்வு அருமை.

    ReplyDelete
  11. ரோஜா மொட்டுவிட்டு பூவாகி காயாகி கனிந்து பழமாகி விதையாகி விதை முளைத்து மீண்டும் செடியாகி என்று அருமையான செழிப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. அரும்பாகி மொட்டாகி பூவாகி..
    பூப்போல பொன்னான பூவாயி....
    பூவு பிஞ்சாகி காயாகி பின்னர் விதையுமாயி..
    அதிலிருந்து மீண்டும் கன்றாகி...:)

    இங்கும் இப்படிப்பார்த்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து முளைத்ததை காணவில்லை, அல்லது கவனிக்கவில்லை...:)

    கவனிக்க வைச்சிட்டீங்கள்...மிக்க நன்றி இமா..;)

    ReplyDelete
  13. ரோஜா ரோஜா ரோஜா ரோஜா . பாடிக்கிட்டே பதிவை வாசித்தேன் ...:))))

    life cycle of rose !!!!!!! fantastic
    அவ்வ்வ்வவ் எங்க ரோஜா செடிகிட்ட இப்படி நிறைய குட்டி செடிங்க முளைக்கும்

    நான் weeds இல்லைன்னு சொன்னாலும் வீட்டில் என் பேச்சை கேக்காம பிடுங்கி போடுவார்
    பாவம் குட்டிசெடிகள் (
    இனி பிடுங்கிபோட விடமாட்டேன்

    ReplyDelete
  14. ரோஜா மிக அருமை இமா அக்கா.
    முன்பு ரோஜா என்றால் ஜலீலாவை ஈசியாக அடையாளம் சொல்வார்கள், எப்போதும் மஞ்சள் அல்லது சிவப்பு ரோஜா வைக்காமல் இருக்க மாட்டேன்.
    http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

    ReplyDelete
  15. உண்மையிலேயே ரோஜா காய்க்கிறது என்பது எனக்குப் புதிய செய்திதான்... வாழ்த்துக்கள் வலைச்சர அறிமுகத்திற்கு....

    ReplyDelete
    Replies
    1. _()_ எழில். பின்தொடருகிறீர்கள். அவதானித்தேன்.
      மிக்க நன்றி.

      Delete
  16. வலைச்சரத்திலிருந்து வந்தேன். ரோஜா. அருமை ரோஜாவிற்கு இத்தனை மாறுதல்களா? கூர்ந்து படிக்கவும்,பார்க்கவும் வைக்கும் பதிவு. ஸந்தோஷம். அன்புடன் சொல்லுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. :-) மிக்க நன்றி காமாட்சி அக்கா.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா