Saturday 8 June 2013

ஃபீஜோவா கேக்

பலமாகக் காற்று வீசிய ஓர் நாளில் ஃபீஜோவா மரம் ஏராளமாகக் காய்களை உதிர்த்துவிட... நண்பர் ஒருவர் கொடுத்த குறிப்பு இது.
Feijoa Cake
தேவையானவை

சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிய ஃபீஜோவா - 1 கோப்பை (25ml)
சிறிதாக நறுக்கிய... glazed ginger - 1/4 கோப்பை

மா- 2 1/2 கோப்பை                           
பேக்கிங் பௌடர் - 2 தே.க             
பேக்கிங் சோடா - 1/2 தே.க
வேர்க்கொம்புத்தூள் - 2 தே.க


பட்டர் - 175 கிராம்
சீனி - 1 கோப்பை
முட்டை - 3
வனிலா எசென்ஸ் - 1 தே.க
sour cream - 250 ml

முதலில் இஞ்சியையும் ஃபீஜோவாவையும் வெட்டி வைக்க வேண்டும்.

உலர்பதார்த்தங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சலித்து வைக்க வேண்டும்.

பட்டரையும் சீனியையும் நன்கு குழைத்து முட்டைகளையும் சேர்த்து அடிக்கவேண்டும்.

பிறகு, வனிலா சேர்த்துக் கலந்து ஃபீஜோவா & இஞ்சித் துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி....

அதனோடு சலித்து வைத்துள்ள உலர்பதார்த்தங்கள் அனைத்தையும் சேர்த்துக் கலக்கி...

இறுதியாக sour cream சேர்த்துக் குழைத்து....
180°cயில் 65 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டு...மாம்.

சாதாரணமாக வீட்டார் எல்லோரும் விருப்பும் சமையற்  குறிப்புகளை pantry cupboard கதவின் உள்ளே க்ளூடாக் போட்டு ஒட்டி வைப்பேன். இப்போது இடமில்லை. அதனால் இங்கே ஒட்டி வைக்கிறேன்; என்னோடு மற்றவர்களுக்கும் (பழம் கிடைத்தால்) பயன்படட்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~
முதல் முறை சமைத்த போது கிடைத்த காய்கள் பெரியவை.
அன்று கையில் அகப்பட்டது பெரிய silicon ring cake mould ஒன்று.  முப்பது நிமிடங்கள் வேகவிட்டேன். இறுதியில் cream cheese frosting பூசும்படி சொல்லி இருந்தார்கள். எங்கள் வீட்டாருக்கு இந்தக் கேக்கை தனியாகச் சுவைக்கத்தான் பிடித்திருந்தது. 
ஃபீஜோவா கேக் - 2
நீர்த்தன்மை அதிகமுள்ள சிறிய வகைக் காய்கள் கொண்டு செய்த கேக் இது. மேலே குறிப்பில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மேலதிகமாக 1 மேசைக்கரண்டி இஞ்சியும் 1/2 தேக்கரண்டி வேர்க்கொம்புத்தூளும் சேர்த்தேன். நீள்சதுர குக்கி ட்ரேயில் ஊற்றி 25 நிமிடங்கள் வேக விட்டு எடுக்க மெத்தென்று அருமையான கேக் கிடைத்தது.
சூடாக இஞ்சிச்சுவையுடன் தொண்டையிலிறங்க...இதம்!
~~~~~~~~~
மேலும் சில ஃபீஜோவா குறிப்புகள்...
ஃபீஜோவா ரெலிஷ்
ஃபீஜோவா பை

29 comments:

 1. ம்... எவ்வளவு அழகாக செய்து உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமையாக மென்மையாக வந்துள்ளது கேக்.. வேர் கொம்புத் தூள்... பேர் இப்பத்தான் கேள்விப்படுறேன் இமா. இதுக்கு வேற பேர் ஏதானும் இருக்கா..

  ReplyDelete
  Replies
  1. தட்டச்சு செய்யும்போதே யோசித்தேன், ஞாபகம் வரவில்லை அப்போது.

   வேர்க்கொம்புத்தூள் = சுக்குப்பொடி

   Delete
 3. ம்.. அருமையாக வந்திருக்கிறதே கேக்...;)

  ஆனா அதென்ன பழம்?..
  எனக்கு புரியவே இல்லை இமா... :(

  ReplyDelete
 4. கேளிவிப்படாத காயில் அற்புதமாக கேக் சமைத்த இமாவுக்கு ஒரு பூங்கொத்து.

  ReplyDelete
 5. கேக் சூப்பரா வந்துருக்கு இமா!!

  ReplyDelete
 6. ஃபீஜோவா காய் என்றால் என்னவென்று தெரியவில்லை இமா. நீங்கள் கொடுத்த லிங்க்கில் தகவல் அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் செய்முறை ஆர்வத்தைத் தூண்டுகிறது. காயைப் பார்க்க கொய்யாக்காய் போல உள்ளது. சுவை எப்படியென்று தெரியவில்லை. வேர்கொம்புத்தூள் என்றால் சுக்குத்தூள் என்றும் அறிந்தேன். புதுமையானதொரு கேக் அறிமுகத்துக்கு நன்றி இமா.

  ReplyDelete
  Replies
  1. //தகவல் அழிக்கப்பட்டுள்ளது.// !! எனக்குத் தெரிகிறதே!!

   http://en.wikipedia.org/wiki/Acca_sellowiana
   இப்போ பாருங்க.

   Delete
 7. கேக் அழகா இருக்கு! இந்த வகை:) எல்லாம் பார்சல்ல அனுப்பினீங்கன்னா டேஸ்ட் பார்க்கலாம், படம் பாத்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியிருக்குது! ;) :)

  ReplyDelete
  Replies
  1. ம்... நேர்ல வந்தால் கிடைக்கும். ;)

   Delete
 8. ம்ம்ம்...அருமைங், அருமைங்...வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 9. பார்த்தேன் பின்னூட்டமிட தாமதமாகிட்டுது.. இதனாலதான் நான் எப்பவும் பார்த்ததும் பின்னூட்டம் போட்டுவிட நினைப்பது.

  பிஜோவா.. நான் பார்த்ததும் இல்லை அறிந்ததும் இல்லை இமா. ஒருவகை கொய்யாபோல இருக்கு. ஆனா பச்சைக்காயாக சாப்பிட நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

  ஐஈஈஇ.. இமாவுக்கும் கேக் செய்யத் தெரியுது:)).. கேக் நல்லா வந்திருக்கு... றீச்சர் கல்லெடுக்கு முன்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:).

  ReplyDelete
  Replies
  1. //பச்சைக்காயாக சாப்பிட நன்றாக இருக்//காது. ஆனால் சாப்பிடலாம்.
   //இமாவுக்கும் கேக் செய்யத் தெரியுது// ;))) பூனைக்கு வால் நீ...ளம். ;)

   Delete
  2. ஓ! சமைக்காமல் சாப்பிடுறதைச் சொல்லுறீங்களோ! ஓம், அதுதான் டேஸ்ட். ஆனால் நாலைஞ்சு கிலோ ஒன்றாகக் கிடைத்தால் என்ன செய்யுறது! இப்பிடி ஏதாவது செய்யலாம். செய்து ஃப்ரீசரில போட்டால் பிறகு சாப்பிடலாம்.

   Delete
 10. வணக்கம் இமா...
  நலமா?

  இன்று வலைச்சரத்தில் ஆசியாவின் அறிமுகம் நீங்கள்.
  வாழ்த்துக்கள்!

  //இமாவின் உலகத்தில் - மனதை தொட்ட மனதோடு ஒரு மழைக்காலம் பகிர்வு.
  முன்பே தொலைபேசியூடாகக் கேட்டிருக்கிறோம், எப்போதும் 'நாட்டுக்குச் சமாதானம் தாரும்' அல்லது 'எனக்குச் சமாதானத்தைத் தாரும்,' என்று சத்தமாகப் பிரார்த்தித்தபடியே இருப்பார். இந்த பிரார்த்தனை பலித்ததா?//

  என்னையெல்லாம் மறந்திட்டீங்களாஆஆஆ...:’(

  ReplyDelete
  Replies
  1. மறக்கேல்ல. எல்லாரும் இப்பிடித்தான் நினைப்பாங்கள் தெரியும். முடியும் போது ஒவ்வொரு இடமாகப் போய் வருகிறேன். காலையில் உங்கள் பக்கம். என் பக்கம் (இது இமாவின் பக்கம்) இப்போதான் பதில் சொல்லக் கிடைத்திருக்கிறது.

   //பிரார்த்தனை பலித்ததா?// அதை அந்த இடுகையிலேயே சொல்லி இருந்தேனே! அவங்க இறந்துட்டாங்க. அதுதான் அவங்க கேட்ட சமாதானம் போல.

   Delete
 11. பிஜோவா.. நான் பார்த்ததும் இல்லை அறிந்ததும் இல்லை ...Athan eppo paathuteengale...:)

  ReplyDelete
 12. Good recipe..:) konjam parcel please..

  ReplyDelete
  Replies
  1. பார்சலா! ம். அட்ரஸ் அனுப்புங்க, அனுப்பி வைக்கிறேன்.

   Delete
 13. Thanks for your comment ... your cute ginger glaze recipe is perfect, hugs.

  ReplyDelete
 14. கேக் ரொம்ப நல்ல இருக்கு பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கு.
  பிஜோவா கேள்விபட்டதில்லையே
  முடிந்த போது என் பக்கமும் வந்து போங்க இமா அக்கா.

  ReplyDelete
 15. கேள்விப்படாத காயில் புது வகை கேக். அருமை.

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா