1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?
இருப்பேன்
என்று கொண்டு கேட்கப்பட்ட கேள்வி இது. கட்டாயம் கொண்டாட வேண்டும். மகாராணியிடமிருந்தும் வாழ்த்து வருமே! ;-) சந்தோஷமாக என் குழந்தைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், வலையுலகிலும் இதே போல ஒரு
குடும்பம் பெருகி இருக்குமே.... எல்லோருடனும் என் மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொள்வேன். :-)
இமா...
குதூகலமான, ரசனை நிறைந்த, ஆரோக்கியமான மனதுக்குச் சொந்தக்காரி. யார்
மேலாவது (நியாமாக) கோபம் வந்தாலும் கர்ர்...ச்சித்துவிட்டு... ;) நாலு
நாளில் அதை 100% மறந்து விட்டு அன்பு பாராட்ட முடியும் பேர்வழி. தன்
ஆரோக்கியம் பற்றிய புரிதல் போதுமான அளவு இருக்கிறது. இப்போது இமா இருக்கும்
நிலையை வைத்துப் பார்க்க...
நிச்சயம் 100 வயதில் ஆரோக்கியமான மனநிலையில் இன்னும் அழகான குழந்தையாக
இருப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது. ;) அப்படியில்லாமல் சுயநினைவில்லாது
இருப்பேனானால்... நடப்பது நடக்கட்டும். நன்றாக இருந்தால்... நிச்சயம் அப்போது என் வசதிக்கு
ஏற்ப, என் நட்பு வட்டத்திற்கேற்ப... கொண்டாடுவேன். என் கையாலேயே கேக் செய்வேன். ஊட்டிவிட செபாதான் இருக்க மாட்டாங்க.
அன்றைய நாள் நிச்சயம் இன்னொரு சாதாரண நாளாக இராது. குடும்பம் & நெருங்கிய நட்புகளோடு செலவளிக்கும் ரசனை மிக்க அவர்களாலும் மறக்க முடியாத நாளாக இருக்கும். என் அகராதியில் 'கொண்டாடுதல்' - ஆடம்பரச் செலவு செய்து கொண்டாடுவது அல்ல. என் வாழ்க்கையைக் கொண்டாடுவது, என் உறவுகளை, நட்புவட்டத்தைக் கொண்டாடுவது, அ+து... அங்கீகரித்தேன், மகிழ்ச்சியாக அனுபவித்தேன் என வெளிப்படுத்துவது.
'பிறந்தநாள் இன்னொரு நாள் மட்டும்தான்.' / 'இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.' / 'வீண்!' / 'வாழ்க்கையில் ஏதாவது சாதித்தவர்கள் தான் பிறந்தநாள் கொண்டாடலாம்.' இப்படிப் பலர் வாயிலிருந்து பல கருத்துகள் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை... ஒவ்வொரு பிறந்தநாளும் விசேடம்தான். நான்... இறப்பைச் சுவைத்துப் பார்த்தவள். மனித உயிரின் அற்புதத்தை, பெறுமதியை முழுமையாக உணர்ந்து வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையை இனிமையாக்கிய, முழுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் அந்தச் சமயம் சின்னதாகவாவது ஏதாவது செய்ய வேண்டும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் விலாசங்களைத் தேடிச் சேகரிப்பேன். குறைந்தது... பிரத்தியேகமாக ஆளொக்கொரு Thank you Card - அவரவர் குணாதிசயத்திற்குப் பொருத்தமாக நானே செய்து என் கைப்பட நன்றிச் செய்தி பதிவிட்டு அன்போடு அனுப்பிவைப்பேன். இது முன்பே தயாராக இருக்கும். பிறந்தநாளுக்கு பத்து நாட்கள் முன்பாகத் தபாலில் சேர்த்தால் வெளிநாட்டு நட்புகளுக்கு சரியான சமயத்தில் கிடைக்காதா! அவ்வ்!! இப்போதே இங்கு தாபால் நிலையங்களுக்கெல்லாம் மூடுவிழா நடக்கிறது. ஹ்ம்! குரியர் இருக்கும் எப்படியும். நம்பிக்கைதான் வாழ்க்கை. ;)
அன்றைய நாள் நிச்சயம் இன்னொரு சாதாரண நாளாக இராது. குடும்பம் & நெருங்கிய நட்புகளோடு செலவளிக்கும் ரசனை மிக்க அவர்களாலும் மறக்க முடியாத நாளாக இருக்கும். என் அகராதியில் 'கொண்டாடுதல்' - ஆடம்பரச் செலவு செய்து கொண்டாடுவது அல்ல. என் வாழ்க்கையைக் கொண்டாடுவது, என் உறவுகளை, நட்புவட்டத்தைக் கொண்டாடுவது, அ+து... அங்கீகரித்தேன், மகிழ்ச்சியாக அனுபவித்தேன் என வெளிப்படுத்துவது.
'பிறந்தநாள் இன்னொரு நாள் மட்டும்தான்.' / 'இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.' / 'வீண்!' / 'வாழ்க்கையில் ஏதாவது சாதித்தவர்கள் தான் பிறந்தநாள் கொண்டாடலாம்.' இப்படிப் பலர் வாயிலிருந்து பல கருத்துகள் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை... ஒவ்வொரு பிறந்தநாளும் விசேடம்தான். நான்... இறப்பைச் சுவைத்துப் பார்த்தவள். மனித உயிரின் அற்புதத்தை, பெறுமதியை முழுமையாக உணர்ந்து வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையை இனிமையாக்கிய, முழுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் அந்தச் சமயம் சின்னதாகவாவது ஏதாவது செய்ய வேண்டும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் விலாசங்களைத் தேடிச் சேகரிப்பேன். குறைந்தது... பிரத்தியேகமாக ஆளொக்கொரு Thank you Card - அவரவர் குணாதிசயத்திற்குப் பொருத்தமாக நானே செய்து என் கைப்பட நன்றிச் செய்தி பதிவிட்டு அன்போடு அனுப்பிவைப்பேன். இது முன்பே தயாராக இருக்கும். பிறந்தநாளுக்கு பத்து நாட்கள் முன்பாகத் தபாலில் சேர்த்தால் வெளிநாட்டு நட்புகளுக்கு சரியான சமயத்தில் கிடைக்காதா! அவ்வ்!! இப்போதே இங்கு தாபால் நிலையங்களுக்கெல்லாம் மூடுவிழா நடக்கிறது. ஹ்ம்! குரியர் இருக்கும் எப்படியும். நம்பிக்கைதான் வாழ்க்கை. ;)
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
இன்னும் அதிகமாக 'என்னை'. ;)
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
ம்... இது இமாவிடம் கேட்கும் கேள்வியா இளமதி! 'கடைசியாக உர்ரென்று இருந்தது
எப்போது? எதற்காக?' என்று கேட்டால் கூட "நினைப்பில்லை," என்பேன். பாரமான
எதையும் மனதில் தூக்கிக் கொண்டு உலவுவது கிடையாது. சிரிப்பது தினம்
பலமுறை. கடைசிவரை அது என் கூட வரும்.
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
செய்வது என்னவா? என்ன செய்வேனா?
ம்... இது... நியூஸிலாந்து. கோடையென்றால்... இங்கு
சூரியபகவான் அதிகாலை உதித்து ஒன்பது ஒன்பதரை வரை கோலோச்சுவார். பிரச்சினையே
இல்லை.
பனிக்காலமானால்... ஒன்றன் மேல் ஒன்றாக நான்கைந்து துணி, கையுறை
காலுறையெல்லாம் மாட்டிக்கொண்டு எல்லா நாளும் போல பகற்பொழுது வேலைகள் ஆகும்.
சமையல்... இதற்காகத்தானே வாயு அடுப்பு வைத்திருக்கிறேன். இணையம்... ஒரு பொழுதுபோக்கு. வேறு பொழுது போக்குகள் நிறைய இருக்கின்றன எனக்கு. பொழுது போதவில்லை என்று பின்போட்ட வேலைகளும் இருக்கும். அதிலொன்றை முடிப்பேன்.
குளியல்... 25 ஆவது மணி ஆனதும் வெந்நீர் கிடைக்கும்போது குளிக்கலாம்.
இரவு!! மெழுகுவர்த்தி எதற்கு இருக்கிறது! ஒரு ரொமான்டிக் 'காண்டல் லைட் டின்னர்'. போன் / அழைப்பு மணி அடிக்காத, கணனி / தொலைக்காட்சி வழியாக எட்டிப் பார்க்கும் கோபிநாத்கள் சூப்பர் சிங்கர்கள் யாருமில்லாத அமைதியான தனியான இரவு... நான்... க்றிஸ்... ட்ரிக்ஸி... ஆவலுடன் எதிபார்க்கிறேன். :-)
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
அவர்களிருவரையும் நல்ல மனிதர்களாக வளர்த்திருக்கிறேன் என்கிற பெருமை எனக்கு அதிகம் இருக்கிறது. இதற்குமேல் சொல்வதற்கு அறிவுரைகள் எதுவும் இல்லை. தேவையும் இல்லை. வாழ்த்து... அதுதான் ஒவ்வொரு நிமிடமும் என் மனதில் ஓடுகிறதே, தனியாக வாழ்த்த வேண்டாம். "I am proud of you!" என்று பூரிப்போடு சொல்லலாம். ஆனால் என்னிரு குழந்தைகளுக்கும் இதெல்லாம்தான் தெரியுமே. எதைச் சொன்னாலும் செயற்கையாகத்தான் தெரியும்.
ஒரு முத்ததுடன் "Love you lots Mahan!"
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்? அனைத்துப் பிரிவினைகளையும் இல்லாமற் செய்ய விரும்புகிறேன்.
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? முதலில்... என் புத்தியிடம்! அதற்கு மட்டும்தான் என்னை முழுமையாகத் தெரியும். அது சொல்லும் எதற்கு யாரை அறிவுரைக்கு அணுகவேண்டும் என்பதை.
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?
அனுபவம் இருக்கிறது. அப்போது இருந்த இமா சின்னப்பெண். அமைதியாக மனதுக்குள் புழுங்கினேன்தான். ஆனால் அதை மனதோடு காவித் திரியவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு மன ஆறுதல் வேண்டி அப்படிச் செய்திருந்தார்கள். பரிதாபம்தான் வருகிறது இன்று நினைக்க.
இனிமேல்... என்னை, என் குடும்பத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதைப் பொறுத்துத்தான் கவனிக்காது விடுவதா அல்லது ஏதாவது செய்யவேண்டுமா (அல்லது என்ன செய்வேன்) என்பதைத் தீர்மானிப்பேன்.
அனுபவம் இருக்கிறது. அப்போது இருந்த இமா சின்னப்பெண். அமைதியாக மனதுக்குள் புழுங்கினேன்தான். ஆனால் அதை மனதோடு காவித் திரியவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு மன ஆறுதல் வேண்டி அப்படிச் செய்திருந்தார்கள். பரிதாபம்தான் வருகிறது இன்று நினைக்க.
இனிமேல்... என்னை, என் குடும்பத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதைப் பொறுத்துத்தான் கவனிக்காது விடுவதா அல்லது ஏதாவது செய்யவேண்டுமா (அல்லது என்ன செய்வேன்) என்பதைத் தீர்மானிப்பேன்.
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
என் 'நண்பர்கள்' அனைவருமே யதார்த்தவாதிகள். சொல்வதற்கு குறிப்பாக எதுவும் இராது. என்னால் அவர்களுக்குப் புதிதாக ஏதாவது உதவி தேவைப்படுமானால் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தொல்லையில்லாத விதத்தில் உதவ முயற்சி செய்வேன்.
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
;)) இது எனக்கு சர்வசாதாரணம்.
முன்பெல்லாம் என் விடுமுறைகள் சின்னவர்களுக்கும் விடுமுறைகளாக அமைந்துவிடும். அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியில் கால் பதித்த பின்புதான் விடுமுறைகளில் தனியாக இருந்திருக்கிறேன். வீட்டு வேலை இருக்கும் விதம் விதமாக. பித்தளை மினுக்க, மூலை முடுக்குகள் தூசு நீக்க, முத்திரைகள் நாணயங்கள் பிரிக்க, வலையுலக நட்புகளோடு தொடர்பு... அதிகம் இந்த நாட்களிற்தான். ட்ரிக்ஸியோடு அதிக நேரம் செலவளிப்பேன். தோட்டத்தில் உலவுவேன்.
நட்பாயினும் உறவாயினும்
ஜெர்மனியின் செந்தேன் மலர்களோடு பேச, உகந்த நாட்கள் இவை. :-) கொஞ்சம்
வலைப்பூக்களில் இடுகை, பின்னூட்டம், கொஞ்சம் அதிகமாக அறுசுவை. கைவினை
செய்வேன். குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி ரசித்து ஊ..றிக் குளிப்பேன். நக
அலங்காரம். புதிதாக ஒரு கைவினை. இமை மூடி ரசித்து என் mouth organ இல் ஒரு ராகம். பூனையைக் கண்டால் நாய் போல் குரைத்துக் காட்டுவேன். பறவைக் குரல்களை பயிற்சி செய்து அவர்களைக் குழப்புவேன். ;) கிண்ணம் நிறைய மணத்தக்காளி பறித்துச் சுவைத்து... நாவைக் கண்ணாடியில் பார்ப்பேன். ;))
எதிர்பாராமல் அந்நியர்கள் யாராவது கதவைத் தட்டினால்... (இங்கு அறிமுகமானவர்கள் முன்பே பேசி வைக்காமல் வருவது கிடையாது.) படுக்கை அறை ஜன்னலைத் திறந்து, "எனக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான் வேலைக்கும் போகாமல் வீட்டில் இருக்கிறேன். (பொய்தான், ஆபத்துக்குப் பாவம் இல்லையல்லவா!) குறை நினைக்க வேண்டாம்." என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஜன்னல் வழியாகவே பேசி அனுப்புவேன். தனியாகத் தெருவில் நடக்கப் பிடிக்கும். கிளம்பிவிடுவேன்.
//முதலில்... என் புத்தியிடம்! அதற்கு மட்டும்தான் என்னை முழுமையாகத் தெரியும். அது சொல்லும் எதற்கு யாரை அறிவுரைக்கு அணுகவேண்டும் என்பதை. //
ReplyDeleteஅப்ப நீங்க தெளிவாக முடிவெடுப்பீர்கள்
:-) யோசிச்சு பண்ணுறது எல்லாம் தெளிவாகத்தான் போகுது. யோசிக்காம பண்ணுறது... ;))
Deleteஇமா, செபா ஆன்டி எப்படி இருக்கீறார்கள் .
ReplyDeleteநலம் ஜலீ. :-)
Deleteவணக்கம் இமா!....
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்.... உங்களுக்குள், உள்ளுக்குள் இத்தனை இருந்ததா?.... அற்புதம்!
கொட்டித்தீர்த்துவிட்டீர்கள் என நினைக்கின்றேன் இமா!
அருமை! இது எனக்குப் பிடிச்சிருக்கு! உங்கள் பதில்கள் அத்தனையும் ஒளிவுமறைவின்றி திறந்த புத்தகமாக இன்று வாசிப்பிற்கு விடப்பட்டிருப்பதை ஒவ்வொரு கேள்வியின் பதில்களும் சொல்கின்றன..
பெருமிதமாக இருகின்றது உங்களை எண்ணுகையில் எனக்கு!...
நானும் உங்களைப் போன்றோரிடமிருந்தும் கற்க இன்னும் நிறைய இருக்கின்றது.
அருமை! என் வேண்டுகோளை ஏற்று இப் பதிவினை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றி!
ஹாஆ.. இங்குள்ள கேள்விகள் நான் கேட்டவை எனது சொந்தத் தயாரிப்புக் கேள்விகள் அல்ல..
இது ஒரு சங்கிலித் தொடர்! தோழி கிரேஸ் என்னைப் பணிக்க நான் உங்களிடம் விட்டேன். பத்துப் பேரைத் தொடருக்கு இணைக்க வேண்டுமாம்... :)
வாழ்த்துக்கள் இமா!
//பத்துப் பேரைத் தொடருக்கு இணைக்க வேண்டுமாம்... :)// ;) நீங்கள் உங்கள் இடுகையில் இதுபற்றிச் சொல்லியிருக்கவில்லை. தேடிப் பார்த்தேன். ;)
Deleteஇமாவின் உலகம் இந்த ஒரு விடயத்தில் மட்டும் உடன்படுவது இல்லை. நெருங்கியவர்களிடம் அவர்களால் இயலுமாவெனக் கேட்டுவிட்டு அதன் பிறகு அழைப்பு வைப்பதுதான் சரியானது. அல்லாவிட்டால் வெளியே சொல்லாமல் மனதினுள் சின்னதாகவாவது ஒரு சிணுக்கம் வரலாம். அந்தப் பக்கம் வீட்டில் நிலமைகள் எப்படி என்பது எனக்குத் தெரியாது அல்லவா? இதுவரை எல்லாத் தொடர்களிலும் இப்படியேதான் விட்டிருந்தேன். சில சமயங்களில் விரும்பியவர்கள் தொடரலாம் என்று பொதுவாக ஒரு அழைப்பு வைத்தேன்.
இங்கு... விசாரித்துக் கொண்டு அழைப்பதற்கு வழியில்லாமல், நேரத்தைக் கையில் வைத்திருந்த என் நட்பு வட்டம் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தார்கள்.
தெரியாதவர்களை எப்படி இழுப்பது!
கருத்துக்கு நன்றி இளமதி.
விரிவான சிறப்பான அருமையான பதில்கள்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Deleteஆஹா !!! நீங்க சூப்பர் fast !!! நான் இனிமே தான் தொடரனும் ..
ReplyDeleteஉங்கள் பிறந்த நாள் வைபவத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் இமா :)
பார்ட்டியில் பூனைகளுக்கும் அனுமதி உண்டா :) நான் ஜெஸ்ஸியை சொல்லவில்லை ..
என்னது ?ஒன்லி 24 மணிநேரமா ..கரண்ட் போகனுமா ? நோ!! நான் எப்பவும் பத்து மடங்குதான் உதவி செய்வேன் ..இருங்க ஒரு பத்து நாளுக்கு கரண்ட வெட்டி உடறேன் உங்க வீட்டுக்கு மட்டும் :))
//பூனையைக் கண்டால் நாய் போல் குரைத்துக் காட்டுவேன். பறவைக் குரல்களை பயிற்சி செய்து அவர்களைக் குழப்புவேன். ;) கிண்ணம் நிறைய மணத்தக்காளி பறித்துச் சுவைத்து... நாவைக் கண்ணாடியில் பார்ப்பேன்//
ஆக மொத்தம் மியாவை பாடாபடுத்துறீங்க ..
@அதிரா ..மியா மியா ஓடிவா :)
அனைத்து பதில்களும் சூப்பரோ சூப்பர் ..
//பிறந்த நாள் வைபவத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் // நீங்க இல்லாமலா! மகாராணி ஒரு கார்ட் அனுப்புவாங்க, ஏஞ்சல் ஒரு கார்ட் அனுப்புவாங்கன்னு நினைச்சேன். நேர்லயே வரீங்க. தாங்ஸ். :-)
Delete//நீங்க சூப்பர் fast !!! // ;) காற்றுள்ள போதே தூற்ற வேண்டும். நேரம் கிடைக்கும் போது சட்டென்று தட்டிப் பதிவேற்ற வேண்டும். பிறகு எதுவும் ஆகாது. :-)
Deleteஒவ்வொரு பதிலும் ஒரு கதை சொல்கிறதே!
ReplyDeleteஒவ்வொரு பதிலுக்கும் ஒரு போஸ்ட் தேற்றி இருக்கலாம். ;) நீங்களெல்லாம் பிழைத்துப் போகட்டும் என்று இப்படி சுருக்கமாக.
Deleteநன்றி சித்ரா.
அனைத்து கேள்விகளுக்கும் அனுபவித்து பதில் எழுதியுள்ளது அருமை... அதிலும் ##பூனையைக் கண்டால் நாய் போல் குரைத்துக் காட்டுவேன். பறவைக் குரல்களை பயிற்சி செய்து அவர்களைக் குழப்புவேன். ;) கிண்ணம் நிறைய மணத்தக்காளி பறித்துச் சுவைத்து... நாவைக் கண்ணாடியில் பார்ப்பேன்.## மிகவும் ரசித்தேன்
ReplyDeleteஹாய் எழில்! ;)) இது இமா. அப்படித்தான் நான். :-)
Deleteஎன் அன்பு பாட்டிக்கு
ReplyDeleteஇனிய அன்பு முத்தம்
என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ..
take care paatimma
உங்கள் பேரன்
சிவாக்குட்டி
;) சிவா மகன்... என்ன தூக்கக் கலக்கமா? இது வேற போஸ்ட் பையா. ;)) ம்... சொல்லிவிடுகிறேன் சிவா.
Deleteஆழமான மனம் திறந்த பதில்கள்..அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்!
:-) மிக்க நன்றி கிரேஸ்.
Deleteஇயல்பாய் பொருள்கொண்டு இம்மையும் சேர்த்து
ReplyDeleteநயமாக தந்தவிடை நன்று !
வணக்கம் இமா ....!
எல்லாமே அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
:-) கவிதையால் பாராட்டும் சீராளனுக்கு என் அன்பு நன்றி.
Deleteஆஹா....உங்களின் கேள்வி பதில் பாணி அருமையா இருக்கே... ரெண்டாவது கேள்வியின் பதில் நச்...
ReplyDeleteவீட்டில் கேட்டதாக சொல்லுங்கள்...
:-) இப்போதெல்லாம் இர்ஷாதைக் காணவே முடிவதில்லை. (உண்மையில் இமாதான் வருவதில்லை அல்லவா!)
Delete//வீட்டில் கேட்டதாக// நிச்சயம் சொல்கிறேன் இர்ஷாத். உங்கள் அன்பிற்கு நன்றி.
ரசிக்கும் படியாக அருமையான பதில்கள் இமா. நானும் இவ் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டேன். முடிந்தால் என் பதில்களையும் பாருங்கள்.
ReplyDelete//அகப்பட்டுக் கொண்டேன்// சந்தோஷப் படுங்க இனியா. இது பாசவலை. :-)
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
கேள்விக்கு பதிலை மிக அருமையாக தெளிவான விளக்கத்துடன் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
:-) மிக்க நன்றி மகன்.
Deleteஆகா தங்கள் தளத்திலுமா
ReplyDeleteஒவ்வொரு கேள்விக்கும் மிக விரிவானபதில்கள்
அருமை சகோதரியாரே
அநேகமாக இந்த அளவிற்கு விரிவான பதில்களை வழங்கியவர் தாங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
//தங்கள் தளத்திலுமா// :-) இது ஒரு விதமான உலகம்.. உறவு. நிஜ வாழ்க்கையில் சமூகக் கடமைகள் என்போமில்லையா! அது போல... இது வலையுலக சமூகக் கடமை. ;) ஒரு அழைப்பு வந்தால் முடிந்தவரை நிறைவேற்ற வேண்டும்.
Deleteபதில்கள்... பதில் சொல்ல வேண்டுமேயென்று சொல்லப்பட்டவையல்ல. உண்மையானவை. பத்துக் கேள்விகளையும் எனக்கு நானே கேட்டுக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறேன். அதனால்தான் இத்தனை நீ...ளம். ;))
என் பிறந்தநாட்களன்று என் பக்கத்தில் அம்மா, அல்லது அத்தை இருந்தால்... அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம்தான் பதில் 1. சொல்கையில் கண்ணில் ஓடியது.
5. மருமக்களை வீட்டினுள் ஏற்றுக்கொண்டு சில வருடங்களாயிற்று. திருமணநாள் இனி ஒரு அடையாளம்தான்.
8. //தவறான தகவல் பரப்பினால்// இதைப்பற்றி சரியான விளக்கம் இல்லாமல்தான் பலர் பதில் சொல்லியிருக்கிறாங்க. 'தவறான தகவல்' / வதந்தி / கிசுகிசு என்கிறது எல்லாச் சமயங்களிலும், 'போனால் போகுது,' என்று விட முடியாது. ஜீரணிக்க முடியாத, விபரீமான, வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய விடயமாகக் கூட அமையலாம்.
9. பதில் 'நண்பியின் கணவர்' பற்றியது அல்ல. 'நண்பரின் மனைவி' பற்றியது. :-)
உங்கள் பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் ஜெயகுமார்.
/// இன்னும் அதிகமாக 'என்னை' ///
ReplyDeleteஅப்படிச் சொல்லுங்க...
வாழ்த்துக்கள்...
ஆமாம் தனபாலன். இன்னமும் பல சமயங்களில் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. :-)
Deleteநானும்...
ReplyDeleteசொடுக்குக : பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!
நன்றி...
படித்தேன் தனபாலன். அசத்திட்டீங்க.
Deleteஊப்ஸ்! நிறைய பிழைகள் தெரியுதே! ஸ்பேஸிங்கும் சரியில்லை. கண்ணை மூடீட்டோ வாசிச்சனீங்கள் எல்லாரும்!! கர்ர்ர்... ;))
ReplyDeleteஇரவைக்கு வந்து எடிட் பண்ணிவிடுறன். அப்ப எல்லாருக்கும் பதில் போடுறன்.
எழுத்துப் பிழைகள் உறுத்தவில்லை!
Deleteஇது நல்ல கதை யோகா. :-) எனக்கு உறுத்தல்தான். இப்பொழுதுதான் திருத்த முடிந்தது. இன்னும் இருக்கும். அதெல்லாம் ஒரு மாதம் கழித்துத்தான் எனக்குக் கண்ணில் படும்.
Deleteஅவ்வ்வ்வ். இப்படி எழுதினால் நாங்க one word answer தான் எழுதவேணும். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீங்க.சூப்ப்ப்பர்.
ReplyDeleteநீங்களும் வடிவாகத்தான் பதில் சொல்லியிருக்கிறீங்கள் ப்ரியா. நன்றாக எல்லாம் எழுதேல்ல நான். இவை என் போக்கு & நோக்கு. :-)
Deleteஅழகாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு பதிலும் சிறு கதையாக இருக்கிறது. அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் இவ்வலையில் மாட்டிக் கொண்டேன்.நேரம் இருப்பின் காண்க.
//இளையநிலாவைத் தொடர்கிறேன்// ஓகே ஆனா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்:) நியூஸிலிருந்தேயா? இல்ல ஜே.. போயா? :)
ReplyDeleteம்.. பூனை போல பதுங்கிப் பதுங்கி. மியாவ்! ;))
Delete//வலையுலகிலும் இதே போல ஒரு குடும்பம் பெருகி இருக்குமே....///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பெரி இருக்க இது என்ன எலிக்குடும்பமா? இல்ல பூஸ் குடும்பங்களோ?:)... இதுக்கு எனக்குப் பதில் வேணும்.. :).
பூனை, எலி, ஆமை, முயல் எல்லாம்தான். ;))
Delete//
ReplyDeleteஎன் ஐம்பதாவது பிறந்தநாள் இங்கே.//
இதை எப்படி மிஸ் பண்ணினேன் என்றே தெரியவில்லையே.. :(.. இங்கேயே அதுக்கும் வாழ்த்திடறேன்ன்.. வாழ்த்துக்கள் இமா பல்லாண்டு காலம் நீடூழி வாழோணும் நீங்க.. பை தெ வே.. டிமென்ஷியா வந்தாலும்.. கோல்ட் பிஸ்ஸை மறந்தாலும் பூஸை மறந்திடாதீங்க:)..
///இதையும் கொஞ்சம் பாருங்கள். பொழுது போகும். ;)///
சூப்பர்.. நடக்க முடியாவிட்டால் பறவாயில்லை அந்த கிராண்ட்மாக்கு அறிவு மங்கவில்லை.. அதுதான் சூப்பர்.. கடவுளின் கொடை.. !!!
ஆஹா தொடரை நல்லபடி எழுதிக் கலக்கிவிட்டீங்கள் இமா... அடுத்து கோல்ட் பிஸ்ஸு என்ன சொல்றா என போய்ப் பார்த்திட்டு வாறேன்ன் :)
ReplyDeleteஅற்புதமான பதில்கள் இமா. ஒவ்வொன்றும் நிதானித்து ஆழ்மனத்திலிருந்து உணர்ந்து எழுதப்பட்டவை என்பது வாசிக்கையிலேயே புரிகிறது. உங்கள் பதில்களை வாசித்தால் வாசிப்போர்க்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். பாராட்டுகள் இமா.
ReplyDeleteநிதானித்து எல்லாம் கிடையாது. ஒரு வீச்சில் எழுதியது. எத்தனை தப்புகள் என்று பார்த்தாலே புரியும். :-)
Deleteமிக்க நன்றி கீதா.
//அவர்களிருவரையும் நல்ல மனிதர்களாக வளர்த்திருக்கிறேன் என்கிற பெருமை எனக்கு அதிகம் இருக்கிறது//....
ReplyDeleteஅருமையான வார்த்தைகள், வாழ்த்துக்கள்.
நன்றி விசு.
Deleteஆஹா.. அருமைங்க :-) ஆரம்பமே அசத்தலான பதில்கள்...
ReplyDeleteஅருமைங்க இமாம்மா..
என்ன ஆரம்பமே! இன்னும் நிறைய கேள்விக் கொத்துகள் இருக்கிற மாதிரி சொல்லுறீங்க!! :-)
Deleteகுணா மகன்... இதை 'அங்க'யும் கொண்டு போய் தொடர வைக்கப் போறேன்ன்ன். ;) பதில் சொல்லப் போற முதல் ஆள் குணாதான். ;)))
உங்களின் விததியாசமான சிந்தனைகளும் வாழ்முறைகளும் எனக்குப் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தன. “அனைத்துப் பிரிவினைகளையும் இல்லாமற் செய்ய விரும்புகிறேன். “ உங்களின் பதில்களில் என்னை மிகவும் கவர்ந்த பதில். தொடர்கிறேன். தொடருங்கள்.நன்றி சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துப் பதில் சொல்கிறேன். மன்னிக்க வேண்டும்.
Deleteஅருமையான,நெஞ்சை சில சமயம் நெகிழ வைத்த பதில்கள்.எழுத்துப் பிழைகள் உறுத்தவில்லை!
ReplyDeleteஇன்னும் அதைத் திருத்தக் கிடைக்கவில்லை. நீங்கள் சொன்னாலும் எனக்குத் திருப்தியாக இல்லையே. :-)
Deleteவருகைக்கு நன்றி யோகா.
அருமையான பதில்கள்........
ReplyDeleteநன்றி அனுராதா.
Deleteதங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி
ReplyDeleteதகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மைதிலி. சென்று பார்க்கிறேன்.
Deletesuper imma amma
ReplyDelete
ReplyDeleteSounds the answers are very Spontaneous :))
Very well done Imma