"பூனையைக் கண்டால் நாய் மாதிரிக் கத்தவேணும்.
இல்லாட்டி பூனை மாதிரியாவது நடிக்க வேணும். ரெண்டும் தெரியாட்டி உள்ள ஓடி வரவேணும்,"
எண்டு இமா சொல்லுறா.
நான் சொல்லுக் கேக்கிறேல்ல எண்டு உயரமா வேலி போட்டிருக்கிறாங்கள்.
எனக்கென்னவோ ஸ்பெகட்டோ எப்பிடியும் இதையெல்லாம் தாண்டி என்னைப் பார்க்க வரும் எண்டு
நல்ல நம்பிக்கை இருக்கு. அதே நம்... ம்ஹும்! சந்தேகம் இமாவுக்கும் இருக்கும் போல. இப்ப
க்றிஸ் படலை அடிக்கிறார்.
எனக்காக கஷ்டப்படுறாங்கள்.
பாவம்! ஏதாவது உதவி செய்யலாம் எண்டு நினைச்சன். சுத்தியல் கீழ கிடந்தது எடுத்துக் குடுக்கப்
போனன். அது சரியான பாரம். தூக்கத் தூக்க விழுந்து வைச்சுது. கடகடவெண்டு சத்தம் கேட்க
எல்லாரும் சிரிக்கிறாங்கள். இனி ஒரு உதவியும் செய்ய மாட்டன் இவங்களுக்கு. ;(
எனக்குப் பசிக்குது.
இமா பிடுங்கி வைச்சிருக்கிற கரட்... உங்களுக்கும் வேணுமோ!
நான் கீரையைச்
சாப்பிடுறன். நீங்கள் கரட் சாப்பிடுங்கோ. எனக்கு கடையில வாங்குற கரட் கிழங்கு மட்டும்தான்
விருப்பம். இது நல்லாவே இருக்காது. வாசம்... கரட் போலவே இல்லை. ஆனால் இந்தக் கீரை மட்டும்
யமி. ;P ஏன் இப்பிடி இருக்கு! உங்களுக்குத் தெரியுமோ!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
முயலை வைத்து சிறப்பான கருத்தாடல்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
:) Naughty Triksy :)
ReplyDeleteஎங்க ஜெஸ்ஸி வேற ஒரு பூனையைபார்த்து அலறிட்டு ஓடி வந்தா இன்னிக்கு ..ஓடி வந்து அப்பா மடியில் உக்காந்திச்சு :))
குழந்தைகளாகவே ஆக்கிட்டோம்னு நினைக்கிறேன் ,நாலுகால்கள் நம்மோட சேர்ந்து நம்மைபோலவே மாறிட்டாங்க :)
ReplyDelete//கடவெண்டு சத்தம் கேட்க எல்லாரும் சிரிக்கிறாங்கள். இனி ஒரு //
நீங்க தப்பிச்சீங்க இமா :) நாங்க இப்படிதான் பார்த்து சிரிச்சதக்கு ..பாய்ஞ்சு வந்து ஓடி அடிக்கிறா :) எங்க ஜெஸி ...
ஹாய் ட்ரிக்ஸி ஹவ் ஆர் யூ? உங்களுக்கு உங்க இருக்க விருப்பமில்லேன்னா இங்க வாங்க. இங்க வேலி,படலை ஒன்னுமேயில்ல. நல்லா ஓடி விளையாடலாம். சிரிக்கிற ஆட்கள்,ஏசுற ஆட்களோட நீங்க இருக்க வேணாம்.வாங்க இங்க.சரியாஆஆஆ.
ReplyDelete//பூனையைக் கண்டால் நாய் மாதிரிக் கத்தவேணும். இல்லாட்டி பூனை மாதிரியாவது நடிக்க வேணும். ரெண்டும் தெரியாட்டி உள்ள ஓடி வரவேணும்," எண்டு இமா சொல்லுறா.//
ReplyDeleteஆகா
பலே
:) ஹாய் டிரிக்ஸி! :)
ReplyDeleteஸ்பெகட்டோ உங்க ப்ரெண்டா இல்ல எனிமியா? டிசைட் பண்ணிட்டு பழகுங்கோ! ;)
படல் எல்லாம் அழகா இருக்கு. உங்களுக்காக எக்ஸ்க்ளூசிவ் ஆக அடிக்கிறாங்கள், என்சொய் பண்ணுங்கோ. பத்திரமா இருங்கோ.
இன்னும் என்னென்னமோ சொல்ல நினைக்கிறன், ஆனா வார்த்தை வர மாட்டேங்குது. நான் முயல் பாஷையில மெசேஜ் அனுப்புறன், அப்புறமா! ;))))
நான் கீரையைச் சாப்பிடுறன். நீங்கள் கரட் சாப்பிடுங்கோ. எனக்கு கடையில வாங்குற கரட் கிழங்கு மட்டும்தான் விருப்பம். இது நல்லாவே இருக்காது. வாசம்... கரட் போலவே இல்லை.
ReplyDeleteகாரட் பிடிக்காத முயல்....!
இமா எப்படி முயல் நினைத்ததை அப்படியே ஒப்சுட்டீங்க. ரொம்ப சமத்து தான். ஒரு வேளை போன பிறப்பில முயலோட சொந்தமா இருந்திருப்பீன்களோ.
ReplyDeleteஉண்மையில் நன்றாகவே ரசித்தேன் படங்களும் சூப்பர்.
வாழ்த்துக்கள் ...!
படித்தேன்.. ரசித்தேன் இமா...:)
ReplyDeleteட்ரிக்ஸிக்கு நல்ல ட்ரெயினிங்தான். ஆனா பாவம் அவ பிரச்சனை அவளுக்குத்தானே தெரியும். அவளுக்குமொரு ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்திடுங்க இமா.
ReplyDeleteஅட, முயலைக்கொண்டு ஒரு பதிவா....
ReplyDeleteநான் டோக்கியோவில் இருக்கும்போது, ஜப்பானிய நண்பரின் வீட்டில் முயல்களை வளர்ப்பதைப் பார்த்து ஆச்சிரியப்பட்டிருக்கிறேன்.
இப்போது தங்கள் வீட்டில்...
படங்களை ரசித்தேன் சகோதரி.
:-) ஹிஹிஹி. . நல்ல கற்பனைங்க
ReplyDelete