Wednesday 8 August 2018

பெட்டியொன்று பையான கதை!

என் மூத்த மருமகள் சற்றுத் தீவிரமான ப்ளாத்திக்கு எதிர்ப்புப்போராளி. :-) அவர் வீட்டில் அவற்றைக் காண்பது குறைவு.

எதையாவது அன்பளிப்பாகக் கொடுக்கும் போது ப்ளாத்திக்குப் பையில் எடுத்துப் போனால், அதை என்ன செய்வது என்கிற கேள்வி உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்பே அவர் முகத்தில் தெரியும். ஆரம்பத்தில் நானே திரும்ப எதையாவது போடும் சாக்கில் என்னோடு எடுத்து வந்திருக்கிறேன். பிற்பாடு நல்ல கடதாசிப் பைகள் கிடைக்கும் போது, இவர்கள் வீட்டிற்குப் போகும் சமயம் உதவும் என்று சேமிக்க ஆரம்பித்தேன்.
ஒரு முறை சிறிய பிரம்புக் கூடையில் எடுத்துப் போனேன். அந்தக் கூடை இப்போது அவர்கள் பழக்கூடையாக மாறி இருக்கிறது.

மகனது கடந்த பிறந்தநாளுக்கான அன்பளிப்பை எடுத்துச் செல்ல என்னிடமிருந்த எந்தப் பையும் நீள அகலம் தோதாக இருக்கவில்லை. பாதி அளவாக 'வீட்பிக்ஸ்' பெட்டி அளவாகத் தெரிந்தது. அதைக் கொண்டு ஒரு பை செய்யலாமா!

செய்தேன்.
மகனுக்கு நாய் வளர்ப்பு பிடிக்கும். நாய்ப் படங்களுடனான பொதி சுற்றும் தாள் ஒன்று இருந்தது. செபாவின் சேகரிப்பிலிருந்து ஒரு துண்டு நாடாவைப் பொறுக்கிக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன். கூடவே... பசை, கத்தரிக்கோல் & ஒரு துளையிடும் உபகரணமும் தேவையாக இருந்தன.
பெட்டியின் வாய்ப் பகுதியை உட்புறமாக மடித்து ஒட்டிக் கொண்டேன்.
பெட்டியைச் சுற்றிச் சுருக்கமில்லாமல் கடதாசியை ஒட்டினேன். கீழே இருந்த கடதாசியை மடித்து ஒட்டிவிட்டேன்.
மேலே மீந்திருந்ததை இப்படி மூலை வழியே வெட்டி விட்டு....
உட்புறமாக மடித்து ஒட்டினேன்.
அகலமான வாய்ப் பகுதியில் துளைகள் செய்து நாடாவைக் கோர்த்துக் கட்டிக் கொண்டேன்.
உள்ளே அன்பளிப்பாக வாங்கியவற்றை  - எல்லாம் இலங்கைக் கடையில் வாங்கிய உணவுப் பொருட்கள் தான். வேண்டாதவற்றைக் கொடுத்தால் என்ன செய்யப் போகிறார்கள்! பிடித்ததை, கிடைக்காததை வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் பயன்படுத்தி முடிப்பார்கள் அல்லவா! - உள்ளே வைத்து எடுத்துப் போனேன்.

இம்முறை உறுத்தலாக இருக்கவில்லை எனவே பையைத் திரும்பக் கொண்டு வரவில்லை. :-)

14 comments:

  1. அருமையா இருக்கிறது!! :) பவ்...வவ்...வவ்...!!

    ReplyDelete
  2. ஜீனோ மாதிரி அருமையாகக் குலைக்கிறீங்கள் மகி. ;)

    ReplyDelete
  3. வணக்கம் நட்பே...
    உங்கள் தளத்திற்கு இப்போதுதான் என் முதல்வருகை,
    இனி தொடர்கிறேன்...

    பையின் விளக்கம் சூப்பர்...👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. பின்தொடர இணைந்திருக்கிறீர்கள், அவதானித்தேன். :-) நன்றி. என் இடுகைகள் உங்களுக்கு சுவாரசியம் கொடுக்குமா என்பது தெரியாது. பிடித்தால் மட்டும் படியுங்கள்.

      Delete
  4. அழகான (பெட்டி)பை. நீங்கதான் ஐடியா ராணி ஆச்சே...

    ReplyDelete
  5. வாவ்...சூப்பர்...

    ReplyDelete
  6. இப்படி பைகள் செய்வதுக்கும் அதிக பொறுமை தேவையே! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா! அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை. உங்களைச் செய்து பார்த்து எப்பிடி வந்துது என்று சொல்லச் சொல்லிக் கேட்க மாட்டேன். (சினேகாக்கு என்றால் செய்து குடுப்பீங்கள் தானே நேசன்!) ;)

      Delete
  7. அருமையான வடிவமைப்பு , அழகாக உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமேஷ். வெகு காலத்தின் பின்பு காண்கிறேன். எப்படி இருக்கிறீர்கள்? நலம்தானே?

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா