Tuesday, 26 February 2019

ஒற்றைக் காதானும் அறுந்து போன சங்கிலியும்

ஒற்றைக் காதான் தொலைந்து போயிற்று. 
மற்றதை வீச மனமில்லை. 
 இந்தச் சங்கிலியில் ஒரு சிப்பி வளையம் இருந்தது. அதைக் காணோம். இதையும் வீச மனதில்லை. என் மருமகள் இதே போல் ஒன்று வைத்திருக்கிறார். வித்தியாசம் தெரிவதற்காக முன்பு ஒரு கறுப்புக் கண்ணாடி வளையலை சிப்பியைச் சுற்றி வரும் விதமாக மாட்டி வைத்திருந்தேன். வளையல் உடைந்து போயிற்று; சிப்பி தொலைந்து போயிற்று.
மீதி இருந்தவற்றைச் சேர்த்து...
அழகாக ஓர் மாலை.
இது போல் இன்னொருவரிடம் இராது. ;)

23 comments:

  1. ஹை :) சூப்பர் ஐடியா ..ஒரு காதானை காணோம்னாலும் இங்கெல்லாம் பிரச்சினையில்ல one earring ட்ரெண்ட் இப்போ பேமஸ் இங்கே :) காதானை கழுத்துக்கு மாற்றியது நல்ல ஐடியா .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அஞ்சு. நான் உடைந்து போனதை என் 2 துவாரம் உள்ள காதில் எப்படியாவது மாட்டிக் கொள்வேன். ஒழுங்காக உள்ளதை ஒழுங்கான காதில் மாட்டுவேன். இன்னும் 2 ஒற்றைகள் இருக்கின்றன. வேறு ப்ளான் வைத்திருக்கிறேன் அவற்றுக்கு.

      Delete
  2. காதை விட கழுத்துக்கு மாறினதும் ரொம்பவே அழகா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பின்னால பின் குத்தியிருக்கிறன் அஞ்சூஸ். ;-)

      Delete
  3. வாவ்! நானும் கொஞ்சம் மணிமாலைகள் செய்ஞ்சு பார்க்கலாமுன்னு மணிகள், கம்பிகள் எல்லாம் வாங்கி வச்சுருக்கேன். இன்னும் செஞ்சு பார்க்கலை. மணிகள் கோர்த்துட்டாலும் கடைசியில் ஹூக் வைக்கறது சிரமமாத் தோணுது. படிக்கணும்.....

    ReplyDelete
    Replies
    1. உதவி செய்யக் காத்திருக்கிறேன். ஃபோட்டோஸ் அனுப்புங்க அக்கா.

      Delete
  4. கண்டிப்பா இன்னொருவரிடம் இருக்காதுதான்.அழகாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரியா. உங்களை இங்க பார்க்க சந்தோஷமா இருக்கு. (வேற யாராவது வந்து தங்களைப் பார்க்கச் சந்தோஷமில்லயோ என்று கேட்டிருவினம் என்று பயமாயிருக்கு.) :-)

      Delete
  5. அழகாய் இருக்கிறது ..

    ReplyDelete
  6. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் புது வருடத்தில ஆமை குஞ்சு பொரிச்சிட்டுதூஊஊஉ அதுவும் ஒரே ஒரு குஞ்சூஊஊஊ:) ஐ மீன்ன்ன்ன்ன் ஒற்றைக் காதுக்குச் சொன்னேன்ன்ன்ன் ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. இல்ல, பழைய வருஷத்தில். ;-) இப்ப பொரிச்சு 9 கிழமையாகீட்டுது.

      Delete
  7. நானும் இப்படி எறியவே மனமில்லாமல் ரெண்டு தூக்கணங்கள் வைதிருக்கிறேன்... அதன் ஜோடி வீட்டுக்குள்ளேயேதான் இருக்குமென தேடிக் கொண்டிருக்கிறேன் 3,4 வருசமா ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. நான் லெவலா பின்பக்கம் சுரை மாட்டாமல் போயிருவன். அனேகம் துப்பட்டாவில மாட்டிக் காணாமல் போயிருது. ;-( சிலது அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போகேக்க வழியில கிடைக்கும். ஒன்று ஒரு கிழமைக்குப் பிறகு கிடைச்சுது. இன்னொன்ரு எதிர்பாராம கனகாலம் கழிச்சு கோயில்ல கிடைச்சுது. எனக்கு வீட்டுக்குள்ள திரும்ப ஒரு காலமும் கிடைக்கிறேல்ல.

      Delete
  8. நீங்க விடா முயற்சியாக கழுத்துக்கு செய்து முடிச்சிட்டீங்க இமா, நான் கழுத்து மாலை அறுந்ததை எறிய மனமில்லாமல் தூக்கணமாக்கலாமே என இப்போ 7, ,8 வருசமாக வைத்திருக்கிறேன்... இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்:)

    ReplyDelete
    Replies
    1. ;-) சரி, இப்ப செய்யலாம் தானே. அப்பிடியே எனக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ.
      நான் அதிரா ச்செய்த மாதிரி வோட்ரோபுக்குள்ள எல்லாத்தையும் மாட்ட யோசிச்சுக் கொண்டு இருக்கிறன். தேடுற நேரம் மிச்சம்.

      Delete
  9. நீங்க செய்து போட்டதைப் பார்த்திட்டு... 2008-2009 களில் ஓடிப்போய் தோடு செய்யும் குரட்டிலிருந்து கம்பி மணிகள் என வாங்கி ஒரு சோடி மட்டும் செய்துபோட்டு மிகுதி அப்படியே இருக்கு.. எப்போதாவது செய்வேன் எனும் நம்பிக்கையில்:)...
    அதே காலத்திலயே நீங்க கலர்க் கரண்டியில் ஏதோ உருவம் செய்து போட நானும் ஓடிப்போய் 2 பக்கட்ஸ் கரண்டிகள் வாங்கி, அதையும் இன்னும் வைத்திருக்கிறேன்ன்ன்ன் பத்து வருடமாக கர்ர்ர்ர்ர்ர் 4 மீ:)... ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ;-) நானும் இன்னும் கரண்டிகள் மிச்சம் வைச்சிருக்கிறன். கெதியாச் செய்ய வேணும். அதுக்கிடையில வேற காரியங்களில மூளை போகுதே! ;-)

      Delete
  10. வயசாகிட்டாலே தொலைப்பதும் பின்பு தேடுவதும் சகஜம்தானே இமா:) விடுங்கோ:) உங்கட ஒற்றைத் தூக்கணத்துக்குச் சொன்னேன் ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:)

    ReplyDelete
    Replies
    1. @miyaaaw

      //அதன் ஜோடி வீட்டுக்குள்ளேயேதான் இருக்குமென தேடிக் கொண்டிருக்கிறேன் 3,4 வருசமா ஹா ஹா ஹா...///வயசாகிட்டாலே தொலைப்பதும் பின்பு தேடுவதும் சகஜம்தானே...haahoooooooheeeeeeeeeeeeeeeeeeee

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ஜொன்னனே மீக்கு எடிரி வெளியில இல்லை:)).. எங்கட வீட்டில இப்படி தோடு விழுந்தால், அது ஸ்ரெயிட்டா வக்கியூம் கிளீனருக்குள் போய்விடும் என நினைக்கிறேன்,..:(.

      Delete
    3. ;-) நுணலும் தன் வாயால்! ;-)))

      நன்றி ஏஞ்சல். ;)

      Delete
  11. நன்றி சகோதரரே. மீண்டும் அனைவரையும் காண முடிவது சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா