Tuesday 26 February 2019

கண்ணான கண்ணே!

அப்பாவை கண் பரிசோதனைக்காக அழைத்துப் போன ஒரு சந்தர்ப்பத்தில் என் கண்ணில் பட்டது அங்கிருந்த இந்தக் கடதாசி. மறுபக்கத்தில் இருந்த
விபரங்கள் சுவாரசியமாக இருந்தன. இங்கே சேமித்து வைக்கப் போகிறேன்.

1. புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் அழும் போது கண்ணீர் சுரப்பதில்லை.

2. மனிதக் கண்கள் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட அசையக் கூடிய பகுதிகளால் ஆனது.

3. மனிதர் சிலர் பிறக்கும் போதே இரு வேறு நிறக் கண்களுடன் பிறக்கிறார்கள்.

4.  ஐன்ஸ்டைனின் கண்கள் நியூயோர்க் நகரில் ஓர் பத்திரமான இடத்தில் பெட்டி ஒன்றுள் சேமிக்கப்பட்டிருக்கிறது.

5. தங்கமீன்களுக்கு இமைகள் இல்லை.

6. ராட்சதக் கணவாய்களுக்கு கால்பந்து அளவு பெரிதாகக் கண்கள் வளருமாம்.

7. டொல்ஃபின்கள் ஒற்றைக் கண்ணைத் திறந்தபடி உறங்குமாம்.

8. பெரிய வெள்ளைச் சுறாக்கள் தம் இரைகளைத் தாக்கும் போது கண்களை பின்புறமாக தலைக்குள் உருட்டி வைத்துக் கொள்ளுமாம்.

9. சில பறவைகளால் அவற்றின் கண்கள் வழியே காந்தப் புலங்களைக் காண முடியுமாம்.

10. தீக்கோழியின் கண் அதன் மூளையை விடப் பெரிதாக இருக்குமாம்.

11. ஜாக்சன்ஸ் பச்சோந்திகள் தம் கண்களிரண்டையும் ஒரே சமயத்தில் வெவ்வேறு திசைகளில் அசைக்கக் கூடியனவாம்.

12. தேனீக்களுக்கு ஐந்து கண்கள் இருக்குமாம்.

தட்டி முடித்ததும் கடதாசியைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன். அதனால் இது, 'குப்பைத் தொட்டி' என்னும் பிரிவின் கீழ் தெரியும். ;-)

3 comments:

  1. சுவாரஸ்மான தெரியாத தகவல்கள்

    ReplyDelete
  2. சுவாரசியமான தகவல்கள்..

    ReplyDelete
  3. அந்தக் கடதாசியை எங்காவது பத்திரப்படுத்திவிட்டு மறந்து போவதை விட இங்கு பகிர்ந்தால் தேடுவது சுலபம் என்று நினைத்தேன். கருத்துக்களைப் பகிர்ந்த ப்ரியா, ராஜி, தனபாலன் மூவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா