அந்தி சாயும் போது நகம் வெட்டக் கூடாது என்பார்கள். அரையிருட்டில் பார்வை சரியாகத் தெரியாமல் ஆளமாக வெட்டிக் கொள்ளாமல் இருக்கட்டும் என்பதால் இப்படிச் சொல்வார்களோ!!
நகம் வெட்டும் போது சில சமயம், 'நீ வெட்டி வெட்டிப் போடும் நகத்திலெல்லாம், குட்டிக் குட்டி நிலவு தெரியுதடி,' என்கிற வரிகள் காதில் ஒலிக்கும். பிறகு அந்தக் குட்டிக் குட்டி நிலவுகளை வீச மனம் வருவது இல்லை. சின்னதாக எப்போதோ ஓர் கலியாண வீட்டில் கிடைத்த கேக் பெட்டியுள் போட்டு வைப்பேன்.
என்ன செய்வேன் என்கிற சிந்தனை எதுவும் இருந்ததில்லை. முட்டாள்தனமாக இதையெல்லாம் சேர்த்து வைக்கிறேன் என்று மனம் சிரித்தது. குட்டி நிலவுகளோடு கூட செயற்கை நகங்கள் சிலது.... சின்னவரது திருமணம் நடந்த காலத்தில்தான் அம்மா சுகவீனமாக இருந்தார்கள். என் வசதிக்காக நகங்களை அளவுக்கு வெட்டிப் பூசி வைத்திருந்தேன். தேவையான சமயம் ஒட்டிக் கொள்வேன். பிறகு சிலது தானாக விழுந்து தொலைந்துவிடும். சிலது எப்படி முயற்சி செய்தாலும் வராது. தொலையாமல் கழன்றவற்றையும் குட்டி நிலவுகளோடு போட்டு வைப்பேன்.
ஆஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்திச்சு.. நெயில் ஆர்ட் ஜூப்பர்ர்.. ஆனா நெயில் கலெக்ஷன்ஸ் பார்க்க டிஸ்கஸ்ரிங்:)).
ReplyDeleteபொழுது சாய்ந்தபின்பு நகம் வெட்டக்கூடாது.. அதாவது இரவிலும்.. அது வெட்டினால் கூடாது என்பினம், என்ன மந்திரமோ மாயமோ ஆருக்குத் தெரியும்.:).
;-0 டிஸ்கஸ்டிங்கானதை டிலீட் பண்ணீட்டன் அதீஸ்.
Deleteவாவ்வ்வ்வ் இப்போ சூப்பர் .
Deleteட்ங்ஸ் றீஈஈச்சர்:)..
மாலை நேரத்துல நகம் வெட்டினால் சரிவர வெட்டமுடியாது. அதுமட்டுமில்லா வெட்டின நகங்கள் வீட்டுக்குள் விழுந்து சாப்பாட்டில், கால்களில் பொத்துவதும், சிறு குழந்தைகள் இருந்தால் அவங்க வயித்துக்கும் போற வாய்ப்பு இருக்குறதால நகத்தை இருளில் வெட்டக்கூடாதுன்னு சொல்வாங்க.
ReplyDeleteஆஹா! அப்படியா! நன்றி ராஜி.
Deleteஎனக்கு நகம் வளர்க்கும் ஆசை இல்ல. ஆனா, பூண்டு, வெங்காயம் உரிக்க கட்டைவிரலில் மட்டும் துளியூண்டு வளர்க்க ஆசைப்படுவேன். அரை செ.மீ வளர்ந்ததும் நானே கடிச்சு துப்பிடுவேன்.
ReplyDeleteநான் சின்னக் காலத்தில் மோசமாக நகம் கடிப்பேன். அதனாலேயே இப்போது நகம் வளர்க்காவிட்டால் சிரமமாக இருக்கிறது. குட்டி நகங்களில் எதுவும் வரையவும் முடியவில்லை.
Deleteஆவ்வ்வ்வ் நெயில் கலெக்ஷ்சன். இவ்வளவு பெரிதா வளர்ப்பீங்களா. நானெல்லாம் சின்னதா கண்டாலே வெட்டிவிடுவே. எனக்கு நகமெல்லாம் ஆகாது..
ReplyDeleteஉங்க நெயில் ஆர்ட் சூப்பரா இருக்கு இமா.
பெரிதாக இருக்கிறது எல்லாம் செயற்கை நகங்கள் பிரியா. என் நகத்தை விடப் பெரியவை. பெட்டீட் சைஸ் கூட எனக்குப் பெரிதாக இருக்கிறது. ஒரு மாதிரி அழுத்தி ஒட்டவேண்டும். ஜேமன் நெய்ல் பொலிஷ்கள் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு. ;-)
Deleteவித்தியாசமான ஆர்டா இருக்கே ...
ReplyDeleteஅழகா இருக்கு ..
நானும் ராஜி க்கா மாதரி வெங்காயம் உரிக்க மட்டும் கட்டை விரலில் கொஞ்சமா நெகம் வச்சுப்பேன் ...அவ்வளவு தான்
Thanks Anuradha. I won't have long nails always. They break when I do gardening.
Deleteஅடடே...ஐ மிஸ்ட் திஸ் போஸ்ட்!!??!! அழகா இருக்கு..இப்படி செயற்கை நகங்கள் எல்லாம் ஒட்டி பழக்கமில்லை..ரெகுலர் சமையல் செய்ய ஆரம்பிப்பதற்கு (கல்யாணத்துக்கு முன்) முன்னால விதம்விதமா வண்ணங்களில் நெய்ல் பாலீஷ் போடுவேன்..இப்போ அப்படியே விட்டுபோயிடுச்சு!! வெட்டி வெட்டி போடும் நகத்திலெல்லாம் - பாட்டு ரொம்ப பிடித்த பாட்டு..நான் பி.எஸ்.ஸி. முதல் வருஷம் படிச்சபோது காலேஜில் இந்தப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாங்க..:D
ReplyDeleteThat smiley looks...:-)
DeleteWho danced!