Wednesday, 19 February 2020

மணநாள் வாழ்த்து

என் மருமகள் ஒருவர், என் பெற்றோரை, 'மம்மி, டடா,' என்று அழைப்பார். மணமாகி வெளிநாடு சென்றபின் தனது கணவரோடு சேர்ந்து இந்த வாழ்த்து இதழை என் பெற்றோரது பொன்விழாவுக்காக அனுப்பி இருந்தார். இப்போதுதான் அனைத்தும் என் உடைமைகள் ஆகி விட்டனவே! 

ஆனால் எத்தனை காலம் வைத்திருப்பேன்! வீச மனதே இல்லை.

என்னைப் பொறுத்த வரை - அவர்கள் கடைக்குப் போக, தெரிவு செய்ய  விலாசம் தேடி எழுதி முத்திரை வாங்கி ஒட்டித் தபாலில் சேர்க்க செலவழித்த நேரமும் அவர்கள் பணமும் விரயமாய் குப்பையில் போகக் கூடாது. அனுப்பியவரது அக்கறை மதிக்கப்பட வேண்டாமா!

சமீபத்தில் சில மாற்றங்களோடு மகனுக்கும் மருமகளுக்கும் அனுப்பிவைத்தேன். 
இனி செய்த மாற்றங்களைச் சொல்கிறேன்.
1. புதிய அட்டை தயார் செய்து ஓரங்களுக்கு வெள்ளி நிறக் கோடுகள் (ஸ்டிக்கர்) ஒட்டினேன்.
2. எழுத்துக்களைச் சுற்றி முகில் வடிவம் வரைந்து வெட்டி, 3 D sticky dots கொண்டு ஓட்டினேன்.
3. தேன் கூட்ந்த் தனியாக வெட்டி தேனீக்களின் கண்களுக்கு குட்டிக் குட்டி google eyes வைத்து ஒட்டினேன். குட்டிப் பூக்கள் - நக அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் பூக்கள்.
 4. தேனீக்களின் தலைகள் மேல் உள்ள இரண்டு இதயங்களும் ஸ்டிக்கர்கள்.
5. தேன் கூட்டின் கால்களைப் பேனையால் வரைந்தேன்.
6.  பழைய அட்டையின் பச்சை நிறப் பகுதியிலிருந்து இலைகளையும் காம்புகளையும் வெட்டி ஒட்டினேன்.   
7. வெள்ளைப் பூக்கள் - திருமண அழைப்பு ஒன்றிலிருந்து வெட்டி எடுத்தவை. நடுவில் நகத்திற்கு ஓட்டும் கற்கள்.

உள்ளே வாழ்த்தினை எழுதி அனுப்பினேன்.

சேமிப்பு மெதுவே குறைந்து வருகிறது. முடியும் போதெல்லாம் ஒவ்வொரு அட்டையாக புதுப்பித்து வைக்கப் போகிறேன். பெரும்பாலான வாழ்த்திதழ்களிலிருந்து வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டன. படங்கள் தான் மீதம் இருக்கின்றன. 

8 comments:

  1. நலம்தானே இமா.
    அழகாக இருக்கு ஒரிஜனலை விட புதுப்பித்தது.

    ReplyDelete
    Replies
    1. நலம் ப்ரியா. நீங்கள் நலம்தானே? மஞ்சல் டஃபடில் பூவுக்கு ஒரு மெசேஜ் போட்டிருக்கிறன். வாசிச்சுப் பாருங்க. :-)

      Delete
  2. //அவர்கள் கடைக்குப் போக, தெரிவு செய்ய விலாசம் தேடி எழுதி முத்திரை வாங்கி ஒட்டித் தபாலில் சேர்க்க செலவழித்த நேரமும் அவர்கள் பணமும் விரயமாய் குப்பையில் போகக் கூடாது. அனுப்பியவரது அக்கறை மதிக்கப்பட வேண்டாமா!///

    அதே அதே.. அப்பூடித்தான் என் கொமெண்ட்டையும் நினைக்கோணும் றீஈஈஈஈச்சர்ர்:)) ஓகே?:))..

    ஹா ஹா ஹா நானும் சேர்ப்பதை இப்போ குறைத்து வருகிறேன், 2008 இல் என நினைக்கிறேன் நீங்க ஒரு பிளாஸ்ரிக் கரண்டியில் அப்பிள் செய்து எங்கோ போட்டீங்க, உடனே ஓடிப்போய் 2 பெரிய பக்கட் கரண்டீஸ்ஸ்:)) வாங்கி வந்தேன்ன்.. இப்போ 12 வருடமாக என் லாச்சியிலேயே இருக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. //அப்பூடித்தான் என் கொமெண்ட்டையும் நினைக்கோணும்// அப்பிடித்தான் நினைக்கிறன் அதிரா. இன்னும் பதினைஞ்சு பதினாறு மாசத்துக்கு இப்பிடி எப்பவாவது எட்டிப் பார்க்கிறது மட்டுமே முடியும் எண்டு நினைக்கிறன். போஸ்ட் போடுறதுக்கு ஒரேயொரு காரணம்... வீட்டில இடம் மிச்சப்படுத்துறது. :-) கெதிகெதியா நிறைய வேலை செய்ய இருக்கு. கர்ர்ர் எண்டு இருக்குது சில நேரம். :-)

      Delete
  3. அழகான வாழ்த்து அட்டை. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நான் உடனே பதில் சொல்லாமல் இருக்கிறதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் கொமண்ட் போடுறீங்கள். மிக்க நன்றி. ஒரு நாளைக்கு எல்லாத்துக்கும் வட்டியோட ரிட்டன் பண்ணுவன். :-)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா