Monday 14 February 2011

தேன்மெழுகு(வர்த்திகள்)




பழங்கதை பேசுகிறேன் ;)
தட்டச்சு செய்து நேரம் போதாமையால் பாதியில் சேமிக்கப் பட்டிருந்த பழைய இடுகை இது.

1/12/2010
வருட இறுதி, பரீட்சையும் முடிந்துவிட்டது. விசேட ஆக்க வகுப்புகள் நடைபெறுகின்றன இப்போது.
திங்களன்று ரங்கோலி வகுப்பு - ரங்கோலிக் கலைஞர் ஒருவர் இதற்காகவே வருகை தந்திருந்தார். அறிமுகம், விளக்கம் எல்லாம் முடிந்த பின், அட்டையில் ரங்கோலி வரைந்தனர். வரைந்த கோலம், நியூசிலாந்து நத்தார் காலத்தைச் சித்தரிக்கும் விதத்தில் பொஹுடுகாவா மலர். (மேலே இருக்கும் சிவப்புநிறப் பூ அதுதான்,) மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து ஆர்வத்தோடு வேலை செய்தனர். இறுதி முடிவுகள் பிரமிப்பாக இருந்தது. அட்டை என்பதால் க்ளூ + ரங்கோலிப் பொடி பயன்படுத்திய வரைந்து பின்பு ஃபிக்செடிவ்' பயன்படுத்திக் காயவிட்டனர். அவற்றை சட்டம் போட்டு மாட்டிவைக்கலாம். படங்கள் எதுவும் எடுக்கவில்லை அன்று. ;(

இவை 30/11/2010 அன்று என் மாணவர்கள் செய்த கைவேலை - தேன்மெழுகு மெழுகுவர்த்திகள். ஒவ்வொருவருக்கும் beeswax sheet ஒரு முக்கோணத் துண்டும் ஒரு நீள்சதுரத்துண்டும் மட்டும் அனுமதித்திருந்தேன். அடிப்படை விளக்கம் கொடுத்தபின் மீதியை அவர்களிடமே விட்டுவிட்டேன். அவர்கள் தனித்தன்மை என்று ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா?

வேலையை ஆரம்பிக்குமுன் ஒரு கடதாசியில் அவர்களது மெழுகுவர்த்தி அமைப்பைச் செய்து காட்டினார்கள். திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக உருவானவை இவை. சிலர் அலங்காரத்துக்காக சிறிய மெழுகுவர்த்தி வடிவம், வெள்ளை உள்ளம் ;) க்றிஸ்மஸ் மலர்கள் என்று வெட்டி ஒட்டி இருக்கிறார்கள்.
அனேகமானவற்றில் கோடுகள் மட்டும் இருக்கின்றன.

சாதாரண நாள் ஒன்றில் தொணதொணவென்று பேசி கற்பித்தலைக் குழப்பக் கூடிய மாணவரொருவர் இரண்டு ஆக்க வகுப்புகளிலும் கலந்துகொண்டார். அமைதியாகவும் விரைவாகவும் செயற்பட்டார். முழுக்கவனமும் வேலையில் இருந்தது. விளைவும் நேர்த்தியாக இருந்தது. வகுப்பில் எழுதும் போது மட்டும் கிறுக்கிவைப்பார். ;))

இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று என்ன செய்வார்கள்! அறிந்துகொள்ளலாம் என்று கேட்டேன். எல்லோருக்குமே யாருக்காவது நத்தார் காலப் பரிசாகக் கொடுக்கும் யோசனைதான் இருக்கிறது. எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)

31 comments:

  1. அருமை மெழுகு வர்த்தி ஆக்கம்,உங்களை என் பக்கம் பார்க்கவே முடியலை,ரொம்ப பிஸியா இமா?

    ReplyDelete
  2. "முடிந்த பின் அட்டையில் 'ரக்கோலி' வரைந்தனர்" - ரங்கோலி - பிழை திருத்துங்கோ.

    "மேலே இருக்கும் சிவப்புநிறப் பூ அதுதான்" - அதென்ன சிவப்பு மலர்? எங்கே அந்த படம்??னு எனக்கு புரியல. :( - Vanitha

    ReplyDelete
  3. //சாதாரண நாள் ஒன்றில் தொணதொணவென்று பேசி கற்பித்தலைக் குழப்பக் கூடிய மாணவரொருவர் இரண்டு ஆக்க வகுப்புகளிலும் கலந்துகொண்டார். அமைதியாகவும் விரைவாகவும் செயற்பட்டார். முழுக்கவனமும் வேலையில் இருந்தது. விளைவும் நேர்த்தியாக இருந்தது. வகுப்பில் எழுதும் போது மட்டும் கிறுக்கிவைப்பார். ;))//

    :-)))

    My boy...

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஆசியா. //உங்களை என் பக்கம் பார்க்கவே முடியலை// நான் என்னையே என் பக்கம் பார்க்க முடியவில்லை. ;)) பல்வேறு காரணங்கள்... கணனி + நேரம் + இணையம்... முழுமையாகத் திரும்ப இன்னும் 1 வாரமாகலாம் செல்லுமிடங்களில் கூட சுருக்கமாகவே பதிவிட முடிகிறது. ;( சிலது காற்றில் கரைந்து விடுகிறது. ;(

    ~~~~~~~~~~

    //ரங்கோலி// நன்றி வனி. நெட் பெரிய பிரச்சினையா இருக்கு. ;((
    //அதென்ன சிவப்பு மலர்? எங்கே அந்த படம்?// உலகத்துல மே...லே... இருக்கே, நியூஸிலாந்து கிறிஸ்மஸ் மரம். ;))

    ~~~~~~~~~~

    வசந்த் சார்... அவங்க இனிஷியல் வேறயா இருந்துதா, ஏமாந்துட்டேன். அடுத்த தடவை நல்லா 'கவனிக்கிறேன்'. ;)))

    ReplyDelete
  5. பார்க்கவே ரம்யமா இருக்கு இமா.கையில் இருந்தால் கூட பற்ற வைக்க மனது வராது போலும்.அத்தனை அழகு.அப்புறம் அந்த கேக் படத்தையும் செய்முறையையும் எப்போ போடப்போறீங்க?

    ReplyDelete
  6. மெழுகுவர்த்திகள் அழகா இருக்குது.
    /எல்லோருக்குமே யாருக்காவது நத்தார் காலப் பரிசாகக் கொடுக்கும் யோசனைதான் இருக்கிறது. எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)/ அந்தக்குழந்தைகள் மனசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! :) :)

    ReplyDelete
  7. //அந்தக்குழந்தைகள் மனசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! :) :) // like ours. ;))

    ReplyDelete
  8. //அந்தக்குழந்தைகள் மனசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! :) :) // like ours. ;)---
    like me...

    ReplyDelete
  9. ஒரு சிறிய இடை வெளிக்குப் பிறகு நான் உங்கள் உலகத்தில் கலந்து கொள்கிறேன்,பனியின் அழுத்தம் காரணமாக ஒரு வாரம் வலைப் பகுதிக்கு செல்ல வில்லை.

    வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  10. //எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)//

    வெறும் கூட்டை மட்டும் குடுத்தா என்னா செய்யுறதாம் அதோட கொஞ்சம் தேனையும் குடுத்து பாருங்க அப்புரம் தெரியும் எப்போ எப்படி பறக்குதுன்னு :-)))))))))))))))))))))))

    ReplyDelete
  11. மெழுகுவர்த்தி எரிகின்றது.....
    எதிர்காலம் தெரிகின்றது.....

    ReplyDelete
  12. பயல்கள் டிசைன் டிசைனாகச் செய்து இருக்கிறார்கள் இமா! எங்கட அட்ரசையும் சொல்லி விடுறன்.. அனுப்பிவிடச் சொல்லுங்கோ - பரிசாகத் தான்..

    //மெழுகுவர்த்தி எரிகின்றது.....
    எதிர்காலம் தெரிகின்றது....//

    இங்கே எதுவும் எரியக் காணோமே.. பூனைக்கு மட்டும் ஜ்வாலை எங்கிருந்து தெரிகிறது? :)

    ReplyDelete
  13. ஸாதிகா... சாரி. படிச்சுட்டும் பதில் போடாம விட்டு இருக்கேன். பாட் மீ ;(
    செய்முறை... அடுத்த தடவை செய்றப்ப. நமக்கு ஸ்ட்ரிக்டா செய்முறைல்லாம் கிடையாது சொல்லித் தர. ;) மனசுக்குப் படுற மாதிரி பண்ணிட்டே போவேன். போதும், நேரம் இல்லன்னா நிப்பாட்டிருறது. இந்த வருஷம் பெருசா ஒண்ணும் பண்ணுறதா இல்ல. சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்கலாம். படம்... என் லாப்டாப் வந்ததும் வரும், இன்னும் 2 வாரம் ஆகலாம் என்று தெரிகிறது. ;(

    ReplyDelete
  14. ஆமாம் சாரு. இதை முடிச்சு போட்டோவுக்காக அடுக்கி வச்சப்ப அவங்க முகத்தில இருந்த பெருமிதம் இன்னும் கண்ணில் இருக்கு. ;))

    ~~~~~~~~~~

    தாங்க்ஸ் வாணி. ;)

    ~~~~~~~~~~

    வேலைப்பளுவா? இல்ல... அங்க பனிப் பெய்யுதான்னு புரியல அயூப். எதுவானாலும் பத்திரமா இருங்க. All the best.

    ReplyDelete
  15. @ ஜெய்லானி...//வெறும் கூட்டை மட்டும் குடுத்தா என்னா செய்யுறதாம்// இதுக்கே ரூமுக்கு தேனீ வரும் தெரியுமா?

    ~~~~~~~~~~

    //மெழுகுவர்த்தி எரிகின்றது.....
    எதிர்காலம் தெரிகின்றது.....// அங்க பவர் கட்டா பூஸ்!! ;))

    ~~~~~~~~~~

    //எங்கட அட்ரசையும் சொல்லி விடுறன்..// கெதியாச் சொல்லுங்கோ L's. மற்ற ஆக்கள்டது எல்லாம் கிட்டத்தட்டத் தெரியும் இப்ப. உங்கடது தான் தெரியாமல் இருக்கிறன். ;))

    //பூனை// இருட்டில பார்த்து இருக்கும். ;))

    ReplyDelete
  16. //இதுக்கே ரூமுக்கு தேனீ வரும் தெரியுமா? //

    சாரி எனக்கு பூச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை ஹி..ஹி.. !!

    //அங்க பவர் கட்டா பூஸ்!! ;))//

    ஒரு வேளை குன்றத்திலே ஓவர் கொண்டாட்டமா
    இருக்கும் போல :-))

    ReplyDelete
  17. என்னாது இது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சிரிக்கிறீங்க ..? ஏதாவது வைத்திய டிப்ஸ் வேனுமா ? ஹி..ஹி.. !! இல்ல இஞ்சி டீயில இஞ்சி கிடந்து கடிபட்டுடுச்சா :-/

    ReplyDelete
  18. கிக்..கிக்...கிக்... இப்பூடித்தான் மாத்தி யோசிக்கோணும் ஜெய்... , சாரி சிரிக்கோணும்....:))... அது தேன் பூச்சிய கடிச்ச சே..சே.. பூச்சி கடிச்ச எபெக்ட்டூஊஊஊ:)

    ReplyDelete
  19. //அது தேன் பூச்சிய கடிச்ச சே..சே.. பூச்சி கடிச்ச எபெக்ட்டூஊஊஊ:) //

    உங்கட நாட்டுல தேன் பூச்சி கடிச்சா க்கி...க்கி.ன்னு சிரிப்பு வருமா..? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  20. Super cute imma! I love it. I sometimes feel i lack motivation more than creativity :)

    who is bitten by a Bee ??!!! athira yoouuuuu??

    ReplyDelete
  21. ம். எல்லாரும் இங்க இருக்கிறியள் போல. ;)

    ReplyDelete
  22. இமா நலமா?
    மிக அழகாக செய்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  23. தேன் மெழுகு வர்த்திகள் அருமை,

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா