வீட்டில் இடம் நெருக்கடியாகத் தோன்றிய ஒரு சமயம் ஒன்றாய் தொலைக்காட்சிப் பெட்டியும் இடறல் செய்ய... சுவரில் மாட்டுவதுபோல் ஒன்று வாங்கிவிட்டால் இடத்தை மிச்சம் பிடிக்கலாமென்று வாங்கி மாட்டியும் ஆகிற்று. மீதிப் பொருட்களை எங்கே வைப்பது என்று சிந்திக்க, மூத்தவர் கொடுத்த யோசனை, சுவரில் ஒரு தட்டு அடிக்கலாம் என்பது.
இது முன்னோட்டம்.
கிடைத்த பழைய கதவு ஒன்று. ;) வெண்மையாக இருந்தால் அழகாக இருக்குமா அல்லது 'வார்னிஷ்' பூச்சு அழகாக இருக்குமா!
தட்டு எந்த வடிவில் இருக்கவேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடந்தது. இறுதியாக வீட்டில் ஏற்கனவே செய்து வைத்திருந்த தேநீர் மேசைக்குப் பொருத்தமாக அமைப்பது என்று முடிவானது.
மேசை மேல் புதினத்தாளை விரித்து வைத்து வெளி வடிவத்தைப் பிரதி எடுத்தேன். பொருத்தமாக நீளத்தைச் சரிசெய்து கொடுத்தேன். பிறகு க்றிஸ் வேலையை ஆரம்பித்தார்.
பலகையை வெட்டி, முதல் முறை பூச்சுக் கொடுத்துக் காயவைத்தாயிற்று. வெள்ளைப் பலகையை எடுத்துவிட்டு சுவரில் இதை வைத்துப் பார்த்தோம். பிறகு இந்தச் சட்டம்...
பின்னால் உள்ள கம்பியை அழகாக மறைப்பதற்காக பொருத்தப்பட்டது.
எல்லாம் சீராக்கி, அரம் & அரத்தாள் கொண்டு தேய்த்து மீண்டும் பூச்சுப் பூசி மாட்டி இப்போ இப்படி இருக்கிறது. பலகைக்சுவர்; இடையே எங்கு மொத்தமான சட்டங்கள் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் வைத்தே தொலைக்காட்சிப் பெட்டியையும் தட்டையும் மாட்டவேண்டியிருந்தது. சரியாக நேராக மாட்ட இயலவில்லை. ;(
யாராவது எதையாவது கீழே போட்டு தட்டின் கீழ் குனிந்து நிமிர்ந்து... தலையில் தட்டிக்கொள்ளாமல் இருக்க... அதன் கீழ் இந்தக் குட்டித் தோட்டம்.
தேனீர் மேசையும் ,டி வி ஸ்டேண்டும் கூடவே தலை இடித்துக்கொள்ளாமல் இருக்க குட்டி தோட்டமும் சூப்பர்.இமாவுக்கு கார்பெண்டர் வேலையே இல்லை.டீ மேசையினுள் இருக்கும் கண்ணாடிக்குள் வித விதமான பூக்கள்,இலைகள்,பளிங்குகற்கள்,குட்டி குட்டி ஃபர்பொம்மைகள்,இப்படி விதவிதமாக ஒன்று மாற்றி ஒன்று அவ்வப்பொழுது மாற்றி வைத்தால் ரொம்ப அழகாக இருக்கும் இமா.
ReplyDeleteThanks 4 ur compliments Shadiqah. ;) This is only da default setup. I have different sets 2 go with da different seasons. Shall post later.
Deleteம்..நல்லாயிருக்கு...நீங்க சொன்ன விதமும்..இந்த செயல்பாடும்..
ReplyDeleteசந்தோஷம், மிக்க நன்றி மதுமதி.
Deleteசூப்பர் ஐடியா இமா. எங்களுடைய ஹாலையும் படம் அனுப்புகிறேன். ஐடியா சொல்லுங்கோ.
ReplyDeleteபகிடி விடுறீங்கள்! சும்மாவே வடிவான வீட்டுக்கு மேக்கப் தேவையில்லை, ம்.. அனுப்புங்கோ ப்ரியா.
Deleteஇமா முதலாவது ஏற்கனவே பார்த்தோம். இப்ப செய்ததை எங்கே பொருத்தியிருக்கிறீங்க புரியவில்லை.
ReplyDeleteகிரிஸ் அங்கிளுக்கு என்பெயரால, நீங்களே வாங்கி நீங்களே போட்டுவிடுங்கோ ஒரு வைரக் காப்பு.... என்ன அழகா கலக்குறார்.. கண்பட்டிடப்போகுது.
//முதலாவது ஏற்கனவே பார்த்தோம்.// !! இரண்டாவது படம்தான் பார்த்தனீங்கள். //இப்ப செய்ததை// முதலாவது படத்தில இருக்கிற வெள்ளைப் பலகையை எடுத்துப்போட்டு அந்த இடத்தில பொருத்தியிருக்கிறம்.
Deleteயாராவது எதையாவது கீழே போட்டு தட்டின் கீழ் குனிந்து நிமிர்ந்து... தலையில் தட்டிக்கொள்ளாமல் இருக்க... அதன் கீழ் இந்தக் குட்டித் தோட்டம்.///
ReplyDeleteநல்ல ஐடியா.. ஆனா இமாவைவிட ஆரும் குனியப்போவதில்லை, இது இமா தனக்காகவே ஏற்படுத்திக் கொண்ட தற்பாதுகாப்பு:))).. சொல்லியிருக்கலாமில்ல:))
;)) அதுதான் நீங்கள் சொல்லீட்டீங்களே! ;)
Deleteகடசி தோட்டம்:))) இயற்கையா செயற்கையா? நல்ல பசுமையாக இருக்கு.
ReplyDeleteஇயற்கை ;)
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இங்க என்ன எக்ஸாமா நடக்குது, என் கேள்விகளுக்கெல்லாம் யோசிச்சு யோசிச்சு நிதானமா ஒற்றை வரியில பதில் சொல்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..
Deleteமக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு, இமா றீச்சர் “தாங்ஸ் அதிரா” எனச் சொல்லவில்லை, விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்:)))
Sorry Athira. ;(
Delete“தாங்ஸ் அதிரா”, Anna & Mahi. ;))
//என்ன எக்ஸாமா நடக்குது// m. midyear + seba's 76th b'da + retreat etc. etc.
Shall catch u all next week. bfn.
செபா ஆன்ரிக்கு என் இனிய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொலிடுங்கோ இமா.
Deleteகட்டாயம் சொல்லுறன் அதீஸ். Thnx a lot. ;)
Delete//யாராவது எதையாவது கீழே போட்டு தட்டின் கீழ் குனிந்து நிமிர்ந்து... தலையில் தட்டிக்கொள்ளாமல் இருக்க... அதன் கீழ் இந்தக் குட்டித் தோட்டம்.//
ReplyDelete;) ஆஹா! நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். [இமாவா.... சும்மாவா]
/தட்டாமல் ஒரு தட்டு/ க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் மாதிரி திகில்/டெரர் :) டைட்டிலா வைக்கிறீங்க இமா?! :))))))
ReplyDeleteதட்டு--- அழகாய் இருக்கு. இயற்கைத் தோட்டம் நல்ல ஐடியா! கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
இமா , செபா ஆன்டிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுங்கள் .
ReplyDeleteநிச்சயம் சொல்கிறேன் ஏஞ்சல். மிக்க நன்றி.
Deleteநீங்கள் கவனமாக இருந்து கெதியாச் சுகமாகுங்கோ. ம்.
டீச்சர் தட்டு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அதை விட தேநீர் மேசை ரொம்ப அழகா இருக்கு. எங்கு தேடினாலும் இந்த மாதிரி furniture கிடைக்காது சூப்பர்!!
ReplyDeleteதாங்ஸ் கிரி. ;)
Deleteசெபா ஆண்டி உங்கள் அம்மா என்று நினைக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க இமா.
ReplyDeleteஆமாம். http://seba-jeyam.blogspot.co.nz/ நிச்சயம் சொல்கிறேன். மீண்டும் என் அன்பு நன்றி.
Deleteமீ ரொம்ப லேட்டு..:(
ReplyDeleteம் அதற்குள் ரெண்டு பதிவு வந்துவிட்டதா
ம்.. பரவாயில்ல சிவா. சுத்தம் சுகம் தரும். நீங்கள் நல்லாக் குளிச்சு முடிச்சுப் போட்டு வாங்கோ. ;)
Deleteat last photos
ReplyDeleteரெண்டு வாத்து
ரெண்டு ஏஞ்சல்
ரெண்டு பூசார்
ஒரு குட்டிபப்பி
ஒரு சிங்கம் நடுவில....
இத்தனையும் ஒண்ணா இருந்தா எப்படி தொலைகாட்சி பார்ப்பது ???
1. ;)) எங்கயாவது மேய்ச்சல்ல இருந்து தப்பி வந்திருக்கும் போல. ;)))))
Delete2. இரட்டை வேடம் ;))
3. இல்லை, உலகில் ஒன்றே ஒன்றுதான் இருக்குது சிவா. ;))
4. 3 இருக்கே!!
5. ஹி! ஹி! அது பெரிய பப்பி, சிங்கம் இல்லை. ;))