"ச்சிப்! ச்சிப்! ஹாய்ய்ய்!"
எல்லாருக்கும் பாங்க்ல, ஹௌசிங் லோன் குடுக்கிறாங்கள். எங்களுக்கு மட்டும் தரமாட்டினமாம். ;( ஷூரிடி கேட்கினம்.
கதவடைப்பு சத்தியாக்கிரகம்; ம்... இவங்கட காசை இவங்களே வைச்சுக் கொள்ளட்டும் எண்டு, நாங்கள்.....
பாங்க் சுவரிலயே ஹௌஸ் கட்டியாச்சுது.
இப்ப....
எங்களுக்கு ரெண்டு பிள்ளைகளும் இருக்கினம். இனிமேல் பின் கதவைத் திறக்க முடியாது இவை."
~~~~~~~~~~~~
வங்கி பின்புறம் வாகனத்தை நிறுத்திவிட்டு க்றிஸ் உள்ளே போய்விட்டார். என் கவனத்தைக் கலைத்தது மெல்லிய "கீச்கீச்".
தந்தை... மேலே உடலுலர்த்த... தாய்ப்பறவை பறந்து பறந்து இரை தேடிக் கொடுத்தது.
"பாங்க்ல களவு போனால் முதலில என்னைத்தான் பொலிஸ் தேடி வரும்," என்று க்றிஸ் சொன்னதைக் கவனிக்காமல் ஃபோட்டோ எடுத்து இருக்கிறன். ஒண்டும் ஆகாமல் இருக்கவேணும் எண்டு மன்றாடுங்கோ மக்கள். ;)
//"பாங்க்ல களவு போனால் முதலில என்னைத்தான் பொலிஸ் தேடி வரும்," என்று க்றிஸ் சொன்னதைக் கவனிக்காமல் ஃபோட்டோ எடுத்து இருக்கிறன். ஒண்டும் ஆகாமல் இருக்கவேணும் எண்டு மன்றாடுங்கோ மக்கள். ;)//
ReplyDeleteக்றிஸ் மிகவும் உஷாரானவர் போலிருக்கு. ;)
//இவங்கட காசை இவங்களே வைச்சுக் கொள்ளட்டும் எண்டு, நாங்கள்.....
பாங்க் சுவரிலயே ஹௌஸ் கட்டியாச்சுது.
இப்ப....
எங்களுக்கு ரெண்டு பிள்ளைகளும் இருக்கினம்.//
கொஞ்சும் தமிழில் இமா பேசுவது போலவே உள்ளது, பறவைகள் பேச நினைத்த கற்பனை வரிகள்.
நல்ல நகைச்சுவையான வரிகள்.
மிகவும் ரசித்தேன். vgk
:) நன்றி அண்ணா.
Deleteஇமாக்கு பயம் வந்துடிச்சு...பயப்படாதீங்கோ இமா சாட்சி சொல்ல நாங்க பறந்து வரோம். பாங்க் வேலையா போயிட்டு ஒரு குருவிய பார்த்த உடன் கெமிரா கையுமா அலையுற இமாக்கு ஒரு பதிவு போட ஐடியா கிடைத்து விட்டது.:)
ReplyDelete;) சாட்சி சொல்லப் பறந்து வரும் பறவைக்கு ஒரு நன்றி.
Deleteமுதல் படத்தில் வானத்தின் நீலம் பளீச்சுன்னு வெளிச்சமா இருக்கு இமா! படத்தைப் பார்த்ததுமே மனசும் கொஞ்சம் ப்ரைட் ஆகிருது! :)
ReplyDeleteகுருவீஸ் ஹௌஸ்;) சூப்பர்! அதுவும் லோன் கொடுக்காத பேங்கிலயே வீடு கட்டிருப்பது:) அருமை!
/ தந்தை... மேலே உடலுலர்த்த... தாய்ப்பறவை பறந்து பறந்து இரை தேடிக் கொடுத்தது. / ஃபாதர்ஸ் டே ஸ்பெஷலா இருக்கும், அப்பாவுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு அம்மா வீட்டு வேலைல்லாம் கவனிக்கிறாங்க! ;)))))
அட! சூப்பர் மகி. ;)
Deleteகீச் :))) கீச் :)))
ReplyDeleteசிட்டுகுருவி பாஷையில் நன்றி சொன்னேன் :)))
உண்மையிலேயே அதுங்களுக்கு பேச முடியும்னா நீங்க சொன்ன மாதிரிதான் பேசியிருப்பாங்க
;) ம்.. ஒரு சின்னப் பயம் இருக்கு. இவ்வளவு தூசு பிடிச்சு இருக்குது. பீச் பீச் வேற. சுத்தம் செய்யுறம் எண்டு குருவியைக் கவனிக்காமல் கூட்டைப் பிரிச்சுப் போட்டுரக் கூடாது யாரும். பாவம் அவை.
Delete///"பாங்க்ல களவு போனால் முதலில என்னைத்தான் பொலிஸ் தேடி வரும்," என்று க்றிஸ் சொன்னதைக் கவனிக்காமல் ஃபோட்டோ எடுத்து இருக்கிறன். ஒண்டும் ஆகாமல் இருக்கவேணும் எண்டு மன்றாடுங்கோ மக்கள். ;)
ReplyDeleteஹா..ஹா...ஹா.. இமாவுக்கு சங்கிலி போடுறதென்ன புதுசோ இமா?:)) நட்சத்திர ஆமையையே “சூட்” பண்ணி வந்தனீங்களெல்லோ... இது வேற சூட்ட்ட்:))).
;))))))
Delete//கதவடைப்பு சத்தியாக்கிரகம்; ம்... இவங்கட காசை இவங்களே வைச்சுக் கொள்ளட்டும் எண்டு, நாங்கள்.....
ReplyDelete////
ஹா..ஹா...ஹா.. படத்துக்கு ஏற்ப பொருத்தமா கதை சொல்வதில் இமாவை மிஞ்ச “கிரிஸ்” அங்கிளாலை கூட முடியாது.....:))
நன்றீ.... மனசு அப்பிடியே... குளிர்ந்து போச்சுது அதீஸ். ;)))
Delete////இனிமேல் பின் கதைத் திறக்க முடியாது இவை."///
ReplyDeleteறீச்சர் ஓடிவாங்கோ... ஸ்பெல்லிங் மிசுரெக்கூஊஊஊஊஊ:))
!!!!!!!!!!!!!!!
Deleteதந்தை... மேலே உடலுலர்த்த... தாய்ப்பறவை பறந்து பறந்து இரை தேடிக் கொடுத்தது.
ReplyDelete///
அவர் தான் மனிதன்:)) ஹா..ஹா..ஹா...
//பாங்க் சுவரிலயே ஹௌஸ் கட்டியாச்சுது.
ReplyDeleteஇப்ப....
//
றீச்சர் ஓடிவாங்கோ... ஆங்கிலம் பேசுறா இமா:)..
இமா இல்லை, அது நியூஸி கீச் பாஷை. ;)))
Deleteஅதுதானே மனமுண்டானால் இடமுண்டு, எண்ணம் அழகானால் எங்க வீடு கட்டினாலும் அழகுதானே... சூப்பர்... நல்லா இருக்கோணும் அக்குருவித் தம்பதிகள்...
ReplyDeleteம்... அப்பிடியே நாலு நெல்லையும் தூவி மொய்யும் எழுதிப் போட்டுப் போங்கோ. ;)))
Delete:)
ReplyDeleteஎன்ன? நான் உங்கட பேபி சிஸ்டரைக் குழப்பி விட்டுட்டன் எண்டு சிரிக்கிறிங்களோ சிவா!! நான் சத்தமில்லாமல் கதவைத் திருத்திப் போட்டு இருக்கிறன். நீங்களும் இதைப் படிச்சதும் கிழிச்சுப் போடுங்கோ, என்ன! ;)))
Delete"பாங்க்ல களவு போனால் முதலில என்னைத்தான் பொலிஸ் தேடி வரும்," என்று க்றிஸ் சொன்னதைக் கவனிக்காமல் ஃபோட்டோ எடுத்து இருக்கிறன். ஒண்டும் ஆகாமல் இருக்கவேணும் எண்டு மன்றாடுங்கோ மக்கள். ;)//ஹா..ஹா..ஹா..இத்தனை சொல்லியும் தைரியமாக போட்டோ எடுத்த இமாவின் தைரியத்தை எப்படி பாராட்டுவது?
ReplyDelete;)))
Deleteநானும் நீங்க வீடு கட்டின கதைய சொல்ல போறீங்கன்னு ஒரு எதிர்பார்ப்போட படிச்சா இது அத விட சூப்ப்பர். குருவி குடும்பம் அவுங்க இஷ்ட படுற வரைக்கும் இருக்க பாங்க மானேஜருக்கு ஒரு மனு போடுங்களேன்.
ReplyDelete;)) நான் வீடு கட்டவில்லை. ரெடிமேடாக வாங்கியாச்சு கிரி. ம்.. பிறகு அங்கு போஸ்ட் ஒன்றும் காணோமே!!
Delete// நான் சத்தமில்லாமல் கதவைத் திருத்திப் போட்டு இருக்கிறன்//
ReplyDeleteபூசுக்கு மாலை கண் நோய் இதெல்லாம் தெரியாது :)) நீங்க ஒண்ணும் பயப்புடாதீங்க டீச்சர். எதுக்கு சிவாவ கிழிச்சு எல்லாம் போட சொல்லுறீங்க ??
பூஸ் பிஸி. சிவா அதைவிட பயங்கர பிஸி. பானர் அடிச்சுப் போட்டாலும் பார்க்க மாட்டாங்க இப்போ. ;))))
Delete//ம்.. பிறகு அங்கு போஸ்ட் ஒன்றும் காணோமே!!//
ReplyDeleteஅடுத்த வாரம் ஒண்ணு வரும் டீச்சர். இப்பெல்லாம் வேலையில் பொறுப்புகள் ஜாஸ்தி ஆகி இருக்கு. அப்புறம் பையன் பத்து வயசாவதால் நெறைய ஆக்டிவிடி கூட்டிகிட்டு போவதுன்னு நேரம் பத்தலே:))
இமா!!!
ReplyDeleteஉள்ளே வரலாமா? பயந்துகொண்டேதான் வரவேண்டியதா இருக்கு.
ஏனென்றால்.......... வேணாம் அப்புறம் பாரதம், இராமாயணம் என்றிடுவீங்கள்
எதுக்கு வம்பு:)))
ஆனாலும் சிலது சொல்லாமல் போகேலாது.:)
இமா! உங்கள் உலகமே தனிதான்.
எத்தனையோதடவை வந்திருக்கிறேன் ஆனால்..... வரேல்லை.:))
மனதுக்கு இதமான நல்ல பல விஷயங்களை உங்கள் உலகில் தொகுத்துத் தருகிறீர்கள்.
அறிவுக்கு விருந்தாகும் கைவினைப் பகுதி, கண்ணுக்குக் குளிர்ச்சியான நிழற்படப் பதிவுகள், இன்னும் காட்சியும் கதையும் இப்படி........ சொல்லிக்கொண்டே போகலாம் இமா.
எல்லாமே நன்றாக இருக்கு.
இங்கும் கீச் கீச்களின் சம்பாஷனை அருமை!
எதுவானாலும் எப்பவுமே கற்பனையில் காட்சியை காட்டும்விதமாக உங்கள் எழுத்துநடை இருக்கும். மிஞ்ச யாரும் இல்லை.
சொல்லப்போனால் உங்களின் ரசிகை நான். வாழ்த்துக்கள் இமா!
மிக்க நன்றி!!!
new to your space..
ReplyDeletevery interesting space you have
happy following you..:)
do stop by mine sometime
Tasty Appetite