Tuesday 20 August 2013

சின்னவர்கள் செய்த 'பானர்கள்'

வருகிற 23ம் தேதி வெள்ளியன்று பாடசாலையில் ஒரு முக்கிய நாள். அன்று இருபத்தெட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியையும் பாடசாலைத் திருப்பலியின்போது திருவருட்சாதனங்கள் பெற இருக்கிறார்கள். சில மாதங்களாக வகுப்புகள் நடக்கின்றன.

இறுதி நாளன்று அலங்கரிப்பதற்கென்றும் பின்னால் அவர்கள் நினைவுக்காக வைத்திருப்பதற்காகவும் 'பானர்கள்' தயாரித்தார்கள்.
 ஃபெல்ட் துணியை ஒரேயளவாக வெட்டி....
 மேற்புறம் மடித்து...
 ஒரு வரி அடிக்கவேண்டும்.
கடகடவென்று அப்படியே தொடராக அடித்து எடுத்துப் போனேன்.
குறிப்பிட்ட சில டிசைன்களிலிருந்து தெரிந்து தங்களதை வடிவமைத்துக் கொண்டார்கள். 
 
 
 
 
 
 
பிறகு தங்கள் பெயர்களையும் ஒட்டினார்கள். 
துணியைச் சுருங்க விடாமல், ஒரு நீள ஸ்ட்ரா முனையில் நூல் கட்டி  கோர்த்து வைத்திருக்கிறேன். 
கடைசி நாள் படம் எடுக்கக் கிடைக்காது. அன்று காலை ஆறு மணி முதல் மூன்றரை வரை தொடர்ந்து வேலைகள் இருக்கின்றன.

12 comments:

  1. அழகான அலங்காரம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Lovely color combination imma ...ink blue goes well for backdrops and banners ..



    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீலம் பளிச்சென்று இருக்கும். உண்மையில் அது வேறொரு ஆசிரியையின் தெரிவு.

      Delete
  3. சிம்ம்பிளா சின்னவர்கள் செய்த பானர்கள் எங்கிறீங்க இமா...
    நான் மலைச்சுப்போய் பார்த்துக்கொண்டேன். அவர்கள் கைவண்ணம் எத்தனை அருமையாக இருக்கு.
    நல்ல ஆற்றல் மிகு சிறுசுகள்! அதை ஊக்குவித்து வளர்த்து வார்த்தெடுக்கும் உங்கள் பணி மலையெனப் பெரியது!

    இமா என்றால் இமாலயம்!!!

    அனைத்தும் சிறப்பாக அமைந்திட என் நல் வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
    Replies
    1. நான் பெருசா ஒன்றும் செய்யேல்ல இளமதி. அளவுக்கதிகமாக ஒட்டாமல் பார்த்துக் கொண்டேன். மேற்பார்வை மட்டும் நான். அது இல்லாவிட்டால் காரியம் கெட்டுவிடும். ;)))

      Delete
  4. //கடைசி நாள் படம் எடுக்கக் கிடைக்காது. அன்று காலை ஆறு மணி முதல் மூன்றரை வரை தொடர்ந்து வேலைகள் இருக்கின்றன.//

    ஆருக்கு?:)

    ReplyDelete
    Replies
    1. அதிபர் முதல் அனைவருக்கும் இருந்ததே. ;)

      Delete
  5. மிக அருமையான பானர்கள். இதை செய்ய ரொம்பவே பொறுமை வேண்டும், என்ன தையல் மிஷின் Brother aa

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், Brother தான் ஜலீ.
      கருத்துக்கு என் அன்பு நன்றிகள்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா