Wednesday 28 August 2013

காணாமற் போன செம்மறிகள்

நாளை வெள்ளி - மதிய இடைவேளைப் பூசைக்கான ஏற்பாடுகளை அறை எண் 16 மாணவர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். 'காணாமற்போன செம்மறி' பற்றிய உவமையை நடித்துக் காட்டப் போகிறார்களாம். 
நூறு செம்மறிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல நான்கு செம்மறிகள் மட்டும் வருவார்களாம். தங்களுக்கு உரையாடல்களெல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நடித்தும் காட்டினார்கள். அவர்கள் உண்மையில் என்னை நாடியது முகமூடிகள் செய்வதற்காக. இடைவேளைகளின் போது கிடைத்த நேரத்தில் காகிதத்தில் ஒருவர் முகத்திற்களவாக வரைந்து பிடித்துப் பார்த்தோம். பிறகு அவர்களே அட்டையில் வரைந்து கொடுத்தார்கள். அட்டை மொத்தமாக இருந்தது. வெட்டிக் கொடுத்தேன். 
இங்கு என் யோசனை என்று எதுவும் இல்லை. உதவி மட்டும்தான் நான். நாடா வேண்டாம்; சுற்றிலும் தலைக்கு மேலாகவும் பட்டி போல் அட்டையை வெட்டி ஒட்டினால் தொப்பி மாட்டுவது போல மாட்டலாம் என்றார்கள். நேற்று மதிய இடைவேளையில் பார்த்தால் அறையில் ஒழிந்து உட்கார்ந்து பஞ்சு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். :-) என்னைக் கண்டதும் ஒருவர் தலையில் மாட்டி "மே..." என்றார். ;))

நாளை நான் பாடசாலையில் இருக்க மாட்டேன். நாற்பது மாணவர்களை அழைத்துக் கொண்டு Art Gallery போகிறோம். என்னால் சின்னவர்களின் நடிப்பு பார்க்கக் கிடைக்காது. ;(

இந்தப் படங்கள் அனைத்தும் சின்னவர்கள் எடுத்துக் கொடுத்தவை. நாளை மதியம் வரை யாருக்கும் தெரியக் கூடாதாம். நீங்களும் ஷுஷ்! ;)
நியூசிலாந்தில் காணாமற் போய் ஏழு வருடங்களின் பின்பு கண்டுபிடிக்கப்பட்ட செம்மறி ஒன்றின் கதை இங்கு இருக்கிறது. விரும்பினால் படித்துப் பாருங்கள். கதையின் முடிவு இங்கே.

10 comments:

  1. சிறுவர்களின் திறமையே அலாதிதான். ஒரு ஆசிரியர் என்னும் முறையில், ஆசிரியையான தங்களின் பணியினைப் பாராட்டுகின்றேன். வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. // 'காணாமற்போன செம்மறி' பற்றிய உவமையை // அது என்ன நிகழ்வு என யாமறியோம் பராபரமே! :) உங்கள் பதிவுகளில் வரும்
    ---
    பூசை..
    தேவதிரவிய அனுமானம் பெற்றுக் கொண்ட..
    பாடசாலைத் திருப்பலியின்போது திருவருட்சாதங்கள் பெற ..
    ---
    போன்றவற்றைப் படிக்கையில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்குது எனக்கு! ஹிஹி..ஹிஹி! பூசை கூட mass என்பதாகப் புரிந்துகொள்கிறேன், மற்றவை புத்தம் புதுசாக இருக்குங்க இமா!
    ----
    பை த வே, செம்மறிகள் க்யூட்டாக இருக்காங்க. ஆட்டோகிராஃப் கேக்கும், பானர்களும் அழகு!
    3 இன் 1 கமெண்ட்டாக பதிவிட்டுவிட்டேன், அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ! டாங்ஸூ! ;) :)


    ReplyDelete
    Replies
    1. ;)) This isn't a religious post. ;) http://christianity.about.com/od/New-Testament/a/JZ-Lost-Sheep.htm
      //திருவருட்சாதங்கள்// oopS! my bad! ;D not a type of rice. i'v missed the 'na' b4 'ng' ;)))
      //தேவதிரவிய அனுமானம்// = //திருவருட்சாதnaங்கள்// = http://en.wikipedia.org/wiki/Sacrament ;)))
      //பூசை கூட mass// yupS.
      //அட்ஜஸ்ட் // k. tnx ;))

      Delete
    2. thanks for the links! :)

      நீங்க சொல்லலேன்னா அது சாதமா, சாதனமா என்று கூட எனக்குத் தெரிந்திருக்காது இமா. ;)

      Delete
  3. அருமையான திறமையான குழந்தைகளின் ஆக்கம் ..!

    ReplyDelete
  4. சின்னவர்களுக்கு ஒரு சின்ன ஐடியா கொடுத்தால் போதும்,நாமே பிரமிக்கும் அளவில் செய்து முடித்து விடுவார்கள்.நன்றாக இருக்கிறது அவர்களின் திறமை.

    ReplyDelete
  5. 'காணாமற்போன செம்மறியாடு' எனும்போது இது கிறித்துவப் பள்ளியாக இருக்க சான்ஸ் உண்டு.பள்ளி ஆண்டுவிழா போன்ற விசேஷங்களில் பைபிளில் இருந்து ஒரு கதையை எடுத்து அதை பிள்ளைகள் நாடகமாகப் போடுவார்கள்.ஒருவேளை அதுவாக இருக்கலாம்.

    ஆனாலும் இமா வந்து இதை ஆமோதித்தால்தான் சரியெனக்கொள்ளலாம்.

    மகி, "பூசை..தேவதிரவிய அனுமானம் பெற்றுக் கொண்ட..
    பாடசாலைத் திருப்பலியின்போது திருவருட்சாதங்கள் பெற" _______ இதை எங்கிருந்து எடுத்திங்க.ஒன்னுமே புரியல.

    ReplyDelete
    Replies
    1. //இதை எங்கிருந்து எடுத்திங்க.// that was a //3 இன் 1 கமெண்ட்// will hav 2 check da 2 previous posts Chithra. ;)
      //கிறித்துவப் பள்ளி// yup. ;) we hav a mass evry Friday lunch break. ஆமோதிkiren. ;)
      Tnx Chithra.

      Delete
    2. //காணாமற்போன செம்மறியாடு' எனும்போது இது கிறித்துவப் பள்ளியாக இருக்க சான்ஸ் உண்டு.// நானும் அதை கெஸ் பண்ணினேன், ஆனால் கதை எனக்குத் தெரியாத காரணத்தால ஒரு கமெண்ட்டையும் போட்டு வைச்சேன் சித்ராக்கா! ;)

      //இதை எங்கிருந்து எடுத்திங்க.ஒன்னுமே புரியல.// ஹஹா! அது இமாவின் முன்னிரண்டு பதிவுகளில் இருந்து எடுத்தது. பொதுவாஇப்படி புதிய வார்த்தைகள் கண்டா பொட்டிப் பாம்பா சுருண்டு கம்முன்னு போயிருவேன். அப்புறமும் கை கம்முன்னு இருக்காம இப்படி சம்பந்தமில்லாத இடத்தில வந்து கேட்டு வைப்பேன்! ஹிஹ்ஹிஹி! ;)

      தேங்க்யூ ஃபார் தி க்ளாரிஃபிகேஷன்ஸ் சித்ராக்கா & இமாக்கா! ;) :)

      Delete
  6. Thanks a lot for the comment Mr. Jeyakumar & Rajeswary Akka.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா