Wednesday, 7 August 2013

சிங்கமும் முயலும்

எப்போதோ குமுதத்திலோ ஆனந்தவிகடனிலோ படித்த ஜோக் ஒன்று... 

நாடகத்தில நடிச்ச  அனுபவம் இருக்கா?
இருக்கு. அரிச்சந்திரன் நாடகத்தில நடிச்சிருக்கேன்.
அதில அரிச்சந்திரன் வேஷமா?
இல்ல, சந்திரமதி...
ஓ! சந்திரமதியா?
...கைல தூக்கிட்டுப் போவாங்கல்ல இறந்து போன லோகிதாசன்...

முதல் தடவை இந்த நகைச்சுவையைப் படித்த போது சிரிப்புக்குப் பதில் குழப்பம்தான் வந்தது. இதிலென்ன நகைச்சுவை இருக்கிறது! நிச்சயம் ஒரு குட்டிப் பையனுக்கு பிணம்போல நடிப்பது சுலபமாக இருந்திராது.

நெற்றியில் பட்டை, அம்மா சந்திரமதியிடமிருந்து விடைபெற்று இன்னும் சில குட்டீஸோடு தருப்பை சேகரிக்க கிளம்பிப் போகும் சமயம்... சோ...கமாக முகத்தை வைத்திருக்க வேண்டும்.

பிறகு... பாம்பு கொத்தும். (ஆனால் கொத்தாது.) டைமிங் பார்த்து சருகுகள் மேலே விழுந்து படுத்தால்.... பிறகு அம்மா சந்திரமதி தலைவிரி கோலமாக, தூக்கிக் கொண்டு பாடு பாடு என்று பாடிக் கொண்டு மேடை முழுக்க வலம் வருவார்கள்.

பிறகு.... சருகுக் குவியலில் போட்டு... குட்டி பூச்சீஸ் இருக்காதா!! பயம்!  அரிச்சந்திரன் நடிப்பாக விட்டாலும்... உதை உதைதான். அனுபவம். ;)

பிறகு... ஒரு முறை 'சிங்கமும் முயலும்' - புத்திசாலியான மெய்ன் முயலாக இல்லாமல் கூட வசிக்கும் இன்னொரு முயல் வேடம்.
இன்னொரு முறை குசேலர் குழந்தைகளில் ஒன்றாக 'அம்மா... பசிக்குதே!' வேடம்.
அதன் பின்... ஆசிரியர்கள் என் திறமையை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். யாருமே ரிஸ்க் எடுக்கவில்லை. என்னை நிம்மதியாக விட்டுவிட்டார்கள். 
~~~~~~~~~~

வாலை ஒட்ட நறுக்கிருவேன்!
சிங்கமானாலும்... சிங்கிளா மாட்டப்படாதோ!
 முதலில் லேபிள், அடுத்து காது, பிறகு வால் என்று பிடுங்கிவிட்டாலும் இந்தச் சிங்கத்தின் மேல் ஒரு தனிப் பிரியம் ட்ரிக்ஸிக்கு.
 தன் குட்டி அது என்னும் எண்ணமோ தெரியாது, எப்பொழுதும் குரங்கு குட்டியைத் தூக்கித் திரிவது போல  தூக்கிக் கொண்டு அலைகிறார். ஒவ்வொரு இடமாக மாற்றி மாற்றி வைப்பார். கூட்டுக்கு வெளியே சில குறிப்பிட்ட இடங்களில் தூங்கப் பிடிக்கும் ட்ரிக்ஸிக்கு. அங்கு தன் அருகே சிங்கத்தையும் தூங்க வைத்திருப்பார்.
 
கொஞ்ச நேரம் தட்டிக்கு மேலே வைக்கலாமா!

9 comments:

  1. த்ரிலிங்கான படம் இமா.உங்க வீட்டு வளர்ப்பும் முயலா?பளீரென்று கொள்ளை அழகு.

    ReplyDelete
  2. தன் குட்டி அது என்னும் எண்ணமோ தெரியாது, எப்பொழுதும் குரங்கு குட்டியைத் தூக்கித் திரிவது போல தூக்கிக் கொண்டு அலைகிறார்.

    செல்லமே செல்லம் ...~

    ReplyDelete
  3. Super photos. School days drama experience is very funny.

    ReplyDelete
  4. எப்படி மா இப்படி கலக்கறீங்க? :))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா