Tuesday, 1 October 2013

காலா லில்லி



ஒரு முறை பின்வீட்டு அங்கிளிடம் பேச்சுக் கொடுத்து காலா லில்லித் தாவரம் ஒன்று வாங்கி வைத்தேன்.
பூக்களைப் பிடுங்காமல் விட்டால் காய்களும் நிறைய வருகிறது. சில நாட்கள் முன்பாக எடுத்த படங்கள் இவை.
காலா லில்லி மலர்கள்
காய்கள் பழங்கள்
பறவைகள் பார்வைக்குத் தப்பியவை இவை.
குட்டித்தாவரங்கள்

19 comments:

 1. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,என்னையே (பக்கத்துல யாரும் இல்லாததால) நான் கிள்ளிப்பாத்துட்டு வரேன்.

  ReplyDelete
 2. ஆ, நினைவில் வைத்து, எனக்காக ஒரு இடுகை. நன்றி இமா.

  பூக்கள் எல்லாம் நீளமான காம்புகளுடன்,மென்மையா, அழகா இருக்கு. ஒன்றிரண்டு இலைகளுடன் குட்டிசெடி வருவதே ஒரு அழகுதான். பழங்கள் பறவைகளிடமிருந்து தப்பிவந்து உங்களிடம் மாட்டிக்கொண்டதே!

  எங்க அப்பார்ட்மென்ட்ல காய்,பழம் எல்லாம் வருவதற்குள் வெட்டிவிடுகிறார்களோ! அடுத்த தடவையாவது கவனிக்கணும்.இங்கு இப்போது செடி மட்டுமே தழைத்துள்ளது.

  ReplyDelete
 3. அழகான லில்லி மலர்கள்! தாவரக் குட்டிங்களும் க்யூட்டா இருக்காங்க! :)))

  ReplyDelete
 4. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

  ReplyDelete
  Replies
  1. அழைப்புக்கு நன்றி தனபாலன். உண்மையில் வெகு சுவாரசியமாக இருந்தது.

   Delete
 6. லில்லி மலர்களுக்கு கொண்டாட்டமோ..!

  ReplyDelete
 7. ஹய்ய்ய்... அழகான வெள்ளை லில்லி..:)

  இதில் காயும் வருமோ.. :0.

  இதில் நல்ல சிவப்பு நிறப் பூக்களும் இருக்கெல்லோ... இதுவும் அதுவும் ஓரினம் தானே.. கிட்டத்தட்ட 4 வருடமாக என்னிடமும் வீட்டுக்குள் வைத்து வளர்த்துப் பூத்தது. ஆனால் காய் வந்ததே இல்லையே.... மெல்லமெல்லக் காய்ந்து பட்டுப்போச்சு...:(

  வாங்கவேண்டும்.. மீண்டுமென இருக்கின்றேன்..
  அழகான பூக்கள்.. பல நாட்களுக்கு மரத்தில் அப்படியே வாடாமல் இருக்கும்..:)

  ReplyDelete
  Replies
  1. //சிவப்பு நிறப் பூ// ம். ஒரே குடும்பத்தாவரங்கள்தான் இரண்டும். அது அந்தூரியம், இது காலா லில்லி. அந்தூரியத்திலயும் வெள்ளைப்பூ இருக்கு
   //காய் வந்ததே இல்லை// வீட்டினுள் இருப்பதால் மகரந்தச் சேர்க்கைக்கான சாத்தியம் வெகு குறைவு. ஒரேயொரு தொட்டிச் செடி & காற்றும் வீசாது. வெளியே தரையில், பிரித்து வைத்தால் விரைவில் பெருகும். காய்க்கும். அந்தூரியத்தில் இப்படி பூவின் அடியில் காய்கள் வராது. நடுவிலுள்ள பாளையில் சோளமுத்துப் போல வரும். ஊரில் வைத்திருந்தேன். பாளை நிரம்ப வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் காய்த்தது.

   //அப்படியே வாடாமல் இருக்கும்.// அந்தூரியம்தான் அதிக நாள் இருக்கும்.

   Delete
 8. லில்லி மலருக்குக்கொண்டாட்டம் இமாவின் வீட்டினிலே.

  ReplyDelete
 9. மலர்கள்: நனைந்தன பனியாலே
  என் மனமும் நிறைந்தது இந்த பதிவாலே


  ரசித்தேன் இமா படங்களை...

  ReplyDelete
 10. இமா இது ஐந்தூரியப் போல இருக்கே.. இதுக்கு உதுவோ பெயர். நானும் கனடாவிலிருந்து கொண்டுவந்து வீட்டில் வளர்க்கிறேன்ன்.. ஒருக்கால் பூத்தது இனி இன்மேல்தான் பூப்பாவாக்கும்.. ஆனா இலை கொஞ்சம் வித்தியாசம், காய்கள் வரவில்லை, ஆனா பூ மட்டும் இதேதான்:).

  ReplyDelete
  Replies
  1. இரண்டும் வேறு அதிரா.

   அந்தூரியம் - http://en.wikipedia.org/wiki/Anthurium

   காலா லில்லி - http://en.wikipedia.org/wiki/Zantedeschia_aethiopica

   Delete
 11. ஏஞ்சல், மகி, தனபாலன், இராஜேஸ்வரி அக்கா, ப்ரியா, ஸ்ரீராம், ஸாதிகா அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 12. காலா லில்லி - பெயரையும் பூவையும் பார்த்து கொஞ்சம் குழம்பிவிட்டேன். என்னடா வெள்ளைப்பூவுக்கு பெயர் காலா லில்லியா என்று! (காலா என்றால் இந்தியில் கருப்பு என்பதுதான் சட்டென்று நினைவுக்கு வந்தது.)
  பிறகுதான் அது இந்தி காலா அல்ல இங்கிலீஷ் காலா என்று புரிந்தது. அழகான மலர்கள். பகிர்வுக்கு நன்றி இமா.

  ReplyDelete
 13. லில்லி மலர்களை அள்ளி எடுக்க ஆசை...

  ReplyDelete