Wednesday 25 September 2013

ஊதா கலர் ரி(ப்)பன்

ட்ரிக்ஸிப் பொம்பிளை வந்த நாளில செய்ய விரும்பினது, கொஞ்சம் லேட்டாப் போச்சுது போல. புற்தரையில வோக் கூட்டிப் போகவேண்டும் எண்டு ஆசை. ஒரு ஹானஸ் வாங்கப் போனேன். வாங்கி வந்து ட்ரிக்ஸியைப் பிடித்து மாட்டப் பார்த்தால்... இந்தம்மா மகா சைஸ் ஆக இருந்தார். ;( அதைக் கடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு நாலு வைக்கோல் கட்டு வாங்கிவரலாம் என்று போனன்.

கடைக்காரப் பொம்பிளை, "பூனைக்கான ஹானஸ் சரியாக இருக்கும். அதுதான் பெரிய முயலுக்கு விற்கிறனாங்கள்," என்று எடுத்துத் தந்தா. அதில எழுதி இருந்துது... Trouble Trix என்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாங்கியாச்சுது. இல்லேல்ல, வித்தாச்சுது. (முன்னையதை விட இது விலை குறைவாக இருந்துது என்று கையில $3.00 கிடைச்சுது.)

வீட்ட வந்து ட்ரிக்ஸியைக் கூப்பிட்டு மாட்டினன். முதல் நாள் என்னையும் இழுத்துக்கொண்டு சந்தோஷமாக வளவெல்லாம் ஒரே ஓட்டம். பத்து நிமிஷம் கழிஞ்சு களைச்சுப் போய் பொத்தென்று ஒரு இடத்தில படுத்தாச்சுது ஆள். பிறகு தூக்கி வந்துதான் கூட்டில விட்டனான்.

அடுத்த நாள் ஹானஸ் கட்டின பாதியில பிடுங்கிக் கொண்டு ஓடீட்டா ட்ரிக்ஸி. சரியென்று விட்டாச்சுது. இப்ப என்னடா என்றால்... ஊதா கலர்ல (ஊதாவா அது!!) ரிபன் மட்டுமில்ல, என்னத்தை கண்டாலும் ஒரே ஓட்டம் கூடுக்குள்ள. தன்னை கட்டாமல் சுதந்திரமாக புல்லில ஓட விடட்டாம். அப்பிடியே பேஸ்மண்ட்டுக்குள்ள ஓடினால் நான் பிறகு எப்பிடிப் பிடிக்கிறது! அதை விட ஒரு பெரும் பூனைப் படை இருக்கிற இடம் இது.

பின்னேரம் நான் வேலையால வந்ததும் கதவடியில போய் நிற்கிறா. திறந்து விட்டால் (ஒரு தட்டி மறைப்பு வைச்சிருக்கிறம்.) பத்து நிமிஷம் புல்லில குதிச்சுப் போட்டு உள்ள வந்துருவா. நாங்கள் உள்ள வந்தாலும் வெளியில நிற்க மாட்டா. தனிய நிற்கப் பயம் போல இருக்கு.

அடைக்கவேணும் என்று எப்ப நினைச்சாலும் ஊதா!! கலரில எதையாவது காட்டினால் வேலை ஆகீருது. ;))
தமிழ் விளங்கினால்... 'ஊதா கலர் ரிப்பன்' பாட்டுக் கேட்டாலும் ஓட்டம் பிடிக்கும் போல. ;)))) ஆமாம், ஒரு சந்தேகம் எனக்கு. பாட்டில் வாறது நீலக் கலர் ;)) ரிபனாக இருக்க ஏன் 'ஊதா... கலர்' என்கினம்!  ஒருவேளை எனக்குத்தான் கண் சரியாத் தெரியேல்லயோ! ;)))
அந்த ரிபன் வடிவா பாம்பு மாதிரி டான்ஸ் ஆடுது. ;)))

33 comments:

  1. அதை விட ஒரு பெரும் பூனைப் படை இருக்கிற இடம் இது.

    பத்திரமா பார்த்துக்குங்க ..

    ReplyDelete
    Replies
    1. இதுவா!! ;)) ஆளை இன்னும் காணோம் அக்கா. ;D

      Delete
  2. ஒருவேளை எனக்குத்தான் கண் சரியாத் தெரியேல்லயோ! ;)))//தோழி வயசு ஆயிட்டே இருக்குன்னு சொல்லாமல் சொல்லுகிறீர்களோ?

    ஊதான்னா நீலம்தானேப்பா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸாதிகா. வானவில்லின் ஏழு நிறங்களுள் நீலம், ஊதா இரண்டும் அடக்கம்.

      நீலம் - மூன்று முதன்மை நிறங்களுள் ஒன்று. (மீதி இரண்டும் சிவப்பு & பச்சை)

      ஊதா / நாவல் = நீலம் & சிவப்பு நிறங்களின் கலவை

      ஒருவேளை அந்த யூடியூப் வீடியோவில் சரியான நிறம் தோன்றாமற் போயிருக்கக் கூடும் ஸாதிகா. அவர்கள் சரியானதைத் தான் போட்டிருப்பார்கள்.

      Delete
    2. ஆஹா! ;))) மம்மிக்கே இன்னும் வயசாகலயே. எனக்கு காலம் இருக்கு. ;D

      Delete
  3. நானும் பார்த்தேன்.எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.ஆனா அது நீல கலர் ரிபன். நாங்க purple,violet ஐ தான் ஊதா என்போம். ஹாய்.ட்ரிக்ஸி!!

    ReplyDelete
    Replies
    1. ட்ரிக்ஸி26 September 2013 at 00:44

      ;))
      ஹாய் ப்ரியா. :-) நலம்தானே!
      எனக்கு நீலக்கலர் பிரச்சினை இல்லை. வயலட்தான் என் எதிரி.

      Delete
  4. இலங்கைத் தமிழ் சுப்பர்!;) ரசித்தனான். ட்ரிக்ஸிப் பொம்பிளை!!!! அவ்வ்வ்வ்வ்....நோ கமென்ஸ்! ஹஹஹா!

    ReplyDelete
    Replies
    1. ;)) பின்ன! யாராவது பெடியனுக்குப் போய் ட்ரிக்ஸி என்று பேர் வைப்பினமோ! ;) அது போக... இப்ப அவ பொம்பிளைதான். ;D

      Delete
  5. "ட்ரிஸ்கி" நல்லாதான் விளயாட்டுக்காட்டுறா போல...;)

    ஆமா இதையெல்லாம் கடிச்சுப்போட்டுடாதே...
    நம்ம மீராவை 4 மாசக்குட்டியா இருக்கேக்கை கார்டனில் கொஞ்சம் பழகட்டும் எண்டு இப்படித்தான் இதே ட்வைனால் கட்டி விட்டிட்டு துள்ளி ஓடி விளையாடிப் புல்லுக்கை படுத்தா. சரி கொஞ்ச நேரம் இருக்கட்டும் எண்டு விட்டிட்டு உள்ள வந்து 1/2 மணித்தியாலம் இல்ல காலுக்கை மியா மியான்னுது ஐயோடா எண்டு பார்த்தா கழுத்தில மாலையா ஒருமுழ நீளத்தில மட்டும் ட்வைன்... மிச்சம்?..
    வாயால கடிச்சு அந்த மொத்த நைலோனை துண்டாக்கிப்போட்டு உள்ள வந்திட்டா ராசாத்தி...;))).

    ஊதாவைக் கண்டு மிரளும் ட்ரிஸ்கியை நினைத்து சிரித்தேன் இமா?.. வேற நிறத்தில வாங்குங்கோ...;).

    ReplyDelete
    Replies
    1. ;)) //கடிச்சுப்போட்டுடாதே... // விட்டால் அதுதான் நடக்கும். இப்ப காட்டினால் உள்ள போறா. போகேலாமல் மாட்டினால் உறுமி உறுமி, பாய்ஞ்சு பாய்ஞ்சு அதோட சண்டை. கண்ணில அப்பிடி ஒரு கோவம் தெரியும். ;D
      //நைலோனை துண்டாக்கிப்போட்டு உள்ள வந்திட்டா ராசாத்தி.// பூனை பசித்தாலும் நைலோனைத் தின்னாது. இது முயல் - செலுலோஸ்தான் இது. சாப்பிட்டுருவார். ;)

      //வேற நிறத்தில வாங்குங்கோ...;).// அவ்வ்! கலர்கலரா வாங்கி, என் ட்ரெஸ்ஸுக்கு மாச்சிங்காகக் கட்டட்டோ!! 'கஸ்டம் மேட்' தான் வாங்கவேணும். ;)

      Delete
  6. எனக்கு வாயில பேர் நுழையுதில்ல இமா... :) டிக்‌ஷி எண்டுதான் சொல்லுவன் :) சரி விடுங்கோ... ஆஹா படிக்க படிக்க ஆசையா இருக்க்கு.. இவ்ளோ தூரம் விளங்குதே எல்லாம்ம்.. எங்கட மொப்பி இருந்தபோது எனக்கு இப்படி ஐடியா வரல, ஆனா திரும்ப கொடுத்த பின் நினைத்தேன்ன்.. அடடா.. நாயைக் கூட்டிப் போவதுபோல மிப்பொயையும் கூட்டிப் போயிருக்கலாமே என:(..

    ReplyDelete
  7. பாட்டை ரசிக்கோணும் :) சந்தேகம் எல்லாம் பட்டு.. முட்டையில முடி பிடுங்கப்படா சொல்லிட்டேன்ன்:).. கவிஞர்கள் பொய் பேசுவார்களாம்ம் அதுதான் கவிதைக்கும்.. பாட்டுக்கும் அழகாம் :)

    ReplyDelete
  8. Immi, this toooo much. Harness for trixie

    ReplyDelete
    Replies
    1. ;) என் கழுத்தில மாட்டீட்டு ட்ரிக்ஸீட்ட கொடுத்தால் என்னை இழுத்துக் கொண்டு போவா வான்ஸ்.

      Delete
  9. கடைக்கார அம்மா,கடைக்கார பொம்பிளை ஆனதுகூட எனக்கு ஒன்றும் தெரியவில்லை.ஆனால் ட்ரிக்ஸி 'ட்ரிக்ஸி பொம்பிளை' ஆனதை நினைத்துநினைத்து ரசித்தேன்.உங்க தமிழை பலமுறை படித்தேன், விரும்பித்தான்.சில வார்த்தைகள் (வோக்)புதிர் விடுவிப்பதுபோல் இருந்தது.

    "பத்து நிமிஷம் கழிஞ்சு களைச்சுப் போய் பொத்தென்று ஒரு இடத்தில படுத்தாச்சுது ஆள். பிறகு தூக்கி வந்துதான் கூட்டில விட்டனான்"_____ கற்பனையிலேயே பார்த்தாச்சு.ரசிக்கும்படியான பதிவு.

    இங்கும் நீலக்கலர்தான்.ஒருவேளை தியேட்டரில் பார்த்தால் ஊதா நிறம் தெரியலாம்.

    ReplyDelete
    Replies
    1. //தியேட்டரில் பார்த்தால் ஊதா நிறம்// எப்படியும் அது கொஞ்சம் குழப்பமான நிறம்தான். வயலட்டுக்கும் இன்டிகோவுக்கும் பக்கத்தில வாறதால அப்பிடி. அதிரா சொன்னதுதான் சரி.
      //'ட்ரிக்ஸி பொம்பிளை' ஆன//து பற்றித்தான் 'வசந்தம் வருது' கவிதை. ;)

      Delete
  10. உங்கள் எழுத்து நடை புன்னகையுடன் ரசித்தேன். அந்த சன்னல் பூனைகளா...பாத்துகோங்க :)
    அழகா வாடாமல்லி நிறம், கத்தரிப்பூ நிறம் அப்படி இப்படி சொன்னதெல்லாம் போய் இப்போ ஒரே குழப்பம் இமா

    ReplyDelete
    Replies
    1. ம்... எனக்கு வெங்காயத்தோல் நிறம் பிடிக்கும். நெய்ல் பாலிஷுக்கு அருமையாக இருக்கும். ;)

      ஆமாம், பூனைகளைத்தான் கவனிக்க வேண்டி இருக்கிறது கிரேஸ். ;(

      Delete
  11. trixi pompalai..:) ribbonota pompalai photo pottirukkalaam imaa.. sinna kuttyyil paarththathu..pompalai kutty pottirukkaa. pathivu rasiththen..:)

    ReplyDelete
    Replies
    1. //ribbonota pompalai photo// இருக்கு. எடிட் பண்ண வேணும். முயலை எடுக்கச் சொல்லி காமராவைக் கொடுத்தால்... என்னையும் என் 'காஷுவல் ட்ரெஸ்'ல சேர்த்து எடுத்து இருக்காங்க. கர்ர்.. ;(

      //kutty pottirukkaa// இல்ல. ஆனா பெரிய ஆரவாரமா இருக்கு இங்க. ;)

      Delete
  12. ஊதாகலர் ரிப்பன் ......அய்யோ பாவம் ட்ரிஸ்கி.

    ReplyDelete
    Replies
    1. ;) ரிப்பன் மட்டும் இல்ல. சமீபத்துல கவனிச்சேன். ஊதா கலர் நைட்டில பக்கதுல போனாலும் கர்ர் சொல்றாங்க என்னைப் பார்த்து. ;)

      Delete
  13. எனக்கு லாவண்டர் கலர் மாதிரி தெரியுதே :))

    நான் ஜெஸிக்கு ட்ரை செய்யலாம்னிருக்கென்

    ReplyDelete
    Replies
    1. //லாவண்டர்// ;))) இவங்களை விட ஜெஸிக்குத்தான் பொருத்தம். ட்ரிக்ஸி ரொம்ப டிமிட். எப்படியும் அரை மணிக்கு மேல இருக்க மாட்டாங்க. வெளில எல்லாம் கூட்டிப் போறது முடியாது. யாராச்சும் மேல பாஞ்சா ட்ரிக்ஸி பயத்துலயே காலி.

      ரூத் ஹானஸ்ல ஸ்கூலுக்கு நிறைய தடவை கூட்டி வந்திருக்காங்க அவங்க பூஸாரை.

      Delete
  14. ஆகா ,அருமையா இயல்பா சொல்லிடிங்க .உங்க பேச்சு வழக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு .இந்த மொழி நடைக்காகவே மீண்டும் மீண்டும் வருவேன் இமா அவர்களே

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு மகிவதனா. அழகா இருக்கு உங்க பேர்.
      சந்தோஷம். முடியும் போது வாங்க. :-)

      Delete
  15. சுவாரசியமான பகிர்வு, இமா இந்தப் பாட்டின் தாக்கம் உங்களையும் விடலையோ!

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்ண ஆசியா! ஸ்கூல்ல நிறைய நல்ல பசங்க அதே சமயம் குறும்பூஸா இருக்காங்க. சிவகார்த்திகேயன் பார்க்க நம்ம வீட்டுப் பையன் போல வேற இருக்காங்களா. கொஞ்சம் தாக்கம். :-)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா