Saturday 21 September 2013

ஜன்னல் மலர்கள்

ஒரு மதியம் பின் வீட்டு ஜன்னலில் நிழல். அது அவர்களது மலகூடம். ஜன்னற்கட்டில் கம்பளி ஜாக்கட் ஒன்றை வைத்திருக்கிறார்களா? அங்கு அந்த அளவு இடம் இராதே!

ஆரம்ப காலத்திலிருந்தவர்கள் வீடு விற்பதற்காக open home வைத்த சமயம் போய்ப் பார்த்திருக்கிறோம். இந்த பிரதேசத்தின் நிலம், வீடு விலை நிலவரம் அறிந்து கொள்வதற்காக இப்படிப் போய்ப் பார்த்துப் பார்த்தே அயலிலுள்ள பல வீடுகளின் அமைப்புத் தெரியும்.
எங்கள் வீடும் அவர்கள் வீடும் 95 % ஒரே அமைப்பிலானவை. அவர்களது தரைமட்டத்திலும் எங்களது பிடுங்கி நடக்கூடிய விதமாகவும் அமைத்திருக்கிறது. வாகனத் தரிப்பிடக் கூரை எங்களது சரிவாக இருக்கும்; அவர்களது கூராக இருக்கும். அதற்கான கதவு இருக்குமிடமும் வேறு. பார்த்திருக்கிறேன். 

சற்று நேரத்தில் 'ஜாக்கட்' பெரிதாகிற்று.
செவியொன்றும் கண்ணொன்றும் தெரிந்தது. ;) மலகூடத்து ஜன்னலில் என்னவோ இருக்கிறது. சாப்பாடா! பூச்சி ஏதாவதா? இங்குதான் அவையெல்லாம் அபூர்வமாயிற்றே!

சற்று நேரத்தில் இன்னொருவர் அதே இடத்தில். ;)

திரும்ப முதலாமாள்

ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை விடுமுறையில் சென்றிருப்பார்களோ வீட்டார்! முன்பிருந்தவர்கள் விடுமுறையில் செல்லும் போது எங்கள் பராமரிப்பில் பூனைகளை விட்டுப் போவார்கள். இப்போதுள்ளவர்கள் இளவயதினர். மேலதிகமான இந்த மலகூடத்தில் கம்பளித் தரை இல்லையென்பதால் அதனை பூனைகளுக்கான அறையாக்கிவிட்டார்களோ!

35 comments:

  1. அட, வித்தியாசமான பதிவு. நல்ல தமிழ் சொற்கள் பயன்படுத்துகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. :-) நன்றி கிரேஸ்.

      நானும் கேட்க நினைத்தேன். உங்கள் தளம் திறக்கவே முடியவில்லை. முதல் முறை எனக்கு எச்சரிக்கை வந்தது. பிறகு பயத்தில் நானும் திறக்க முயற்சிக்கவில்லை. இன்று இளமதிக்காக ஒரு முறை திறக்கப் பார்த்தேன். இயலவில்லை. என்னவென்று பாருங்கள்.

      Delete
    2. என்ன பிரச்சனை என்று தெரியவில்லையே இமா. என்ன எச்சரிக்கை வந்தது தோழி? நானும் என்னவென்று பார்க்கிறேன்..நன்றி இமா.

      Delete
  2. உங்கள் பதிவுகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக உள்ளன..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலியபெருமாள். :-) சிலசமயம் கர்ர் என்று எழுதுவேன். சில சமயம் படிப்பவர்களுக்கு ஒன்றும் புரியாது. :-) இது என் 'நல்ல காலம்'. ;))

      Delete
  3. பக்கத்துவீட்டை ஆழ்ந்து கவனித்து பதிவு தேத்தி விட்டீர்கள் இமா.

    ReplyDelete
    Replies
    1. ;) அது சமையலறை ஜன்னலுக்கு நேரே இருக்கிறது. பார்வைக்குத் தப்ப முடியாது ஸாதிகா.

      Delete
  4. பாவம், சிறைப் பட்டிருக்கிறதோ...

    ReplyDelete
    Replies
    1. ;) அப்படித்தான் இருக்கவேண்டும். எங்கள் வீட்டுப் பக்கம் ஆட்களைக் காணோம் ஸ்ரீராம்.

      Delete
  5. Replies
    1. :-) இமாவின் உலகுக்கு சூப்பர். அவை பாவம் தனபாலன்.

      Delete
  6. Oh my god how many cats do they have?

    ReplyDelete
  7. இமா... இதென்னதிது...டெரர்.. கதையும் படங்களுமாய்.... அவ்வ்வ்வ்.... :0

    ReplyDelete
    Replies
    1. :-) எனக்கும் இன்னொரு இடுகை தட்ட நேரம் கிடைக்கவில்லை. இது சுலபமாக இருந்தது இளமதி.

      Delete
  8. இமா.. இமா.. இங்கு வந்த அன்புதோழி கிரேஸ்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...

    அவங்கட வலைத்தளம் எனக்குதிறக்குதில்லை... டாஷ்போர்டில் அவரின் புதுப் பதிவு மட்டும் காட்டுது. ஆனா தளம் திறக்குதே இல்லை..:(

    உங்களுக்கு யாருக்கேனும் இந்தப் பிரச்சனை அவரின் தளத்தில் ஏற்பட்டிருக்கோ.. இல்லை எனக்கு மட்டுமோ..:(

    ஒருக்கா சொல்லிவிடுங்கோ ப்ளீஸ்...;)

    மிக்க நன்றிம்மா...:)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் திறக்கவில்லை இளமதி. ;( நான் என் கணணியின் பிரச்சினை என்று நினைத்தேன். மின்னஞ்சல் பார்க்கவும். கிரேஸ் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அனுப்பியிருக்கிறேன்.

      Delete
    2. மிக்க நன்றி இமா!...:).

      Delete
    3. என் தளம் பார்க்க ஆவலாய் இருக்கும் உங்கள் இரண்டு பேருக்கும் மிகவும் நன்றி. என்னவென்று கண்டிப்பாக பார்க்கிறேன்..நீங்கள் வராமல் நன்றாய் இல்லை என் தளம்!

      Delete
    4. தளம் இப்பொழுது திறந்து பாருங்கள் தோழி, அன்புத் தோழி இளமதிக்கு இப்பொழுது திறக்கிறது, உங்களுக்கும் திறக்க முடியும் என்று நம்புகிறேன். இல்லையென்றால் தெரியப்படுத்துங்கள். நன்றி இமா!

      Delete
  9. இருக்கும் ஜீவன்கள் பூனைகள் போலும் நல்ல இடம்கிடைத்து இருக்கு அவைக்கு!

    ReplyDelete
    Replies
    1. :-) ம். ஆனால்.. முன்னால் இருந்தவர்களைப் போல இவர்கள் என்னோடு சினேகமாக இல்லை.

      Delete
  10. இமா ! நல்ல ஓர திகில் கதை போல .
    இது நல்ல ஐடியா! இப்படியும் ஓர ஆக்கம் போடலாம் என்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ;))) இமாவின் உலகத்தில இது எல்லாம் சாதாரணம் அக்கா.

      Delete
  11. ஹா..ஹா..ஹா... இமாவோ கொக்கோ:).. ஒட்டி நிண்டு பக்கத்து வீட்டு.. அதுவும் பார்த்ரூமில் இருக்கும் பூஸாரைப்:) படமெடுத்த குற்றத்திற்காக உடனடியாக பிரித்தானிய ஹை கோர்ட்டுக்கு வரும்படி மேன்மை தங்கிய ஜஜ் (அது நாந்தேன்ன்:)) ஆணையிடுகிறார்ர்ர்:)..

    ReplyDelete
  12. அவர்கள் ஹைட் அண்ட் சீ விளையாடியிருக்கினம் இமா:).. அது சரி இப்படிப் படமெடுக்க எவ்ளோ நேரம், உங்க வீட்டு ஜன்னலிலேயே வெயிட் பண்ணியிருப்பீங்க???

    ReplyDelete
    Replies
    1. 5 நிமிஷம்.

      பிறகும் பார்க்கிற நேரம் எல்லாம் மாறி மாறி ரெண்டுல ஒருவர் இருந்தினம் அதீஸ்.

      Delete
  13. சே..சே..சே... இந்தக் காலத்தில ஒரு பூஸ்:) சுகந்திரமாக் குளிக்ககூட முடியுதில்ல:) உடனே படம்புடிச்சு புளொக்கில போடுகினமே.. ஆண்டவா.. ஹையோ இமா வரும் சத்தம் கேட்குதூஊஊஊஊஊஉ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  14. 'சற்று நேரத்தில் 'ஜாக்கட்' பெரிதாகிற்று'____நல்லா நகைச்சுவையா எழுதறீங்க‌.

    நல்லவேளை, இரண்டு பேராக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. பார்க்கும் அனைத்தையும் ரசனையுடன் பகிரும் அழகே தனி.உங்கள் உலகமே தனி தான் இமா.

    ReplyDelete
  16. இமா அவங்க என்னானாங்க ??/ நடந்தது என்ன ?எனக்கு மட்டும் உடனே தெரிவிக்கவும் :))
    இதில் ஒருவர முந்தி உங்க வீட்டு கிச்சன் கூரைல பார்த்த நினைவிருக்கே ..கட்லட் பொரிக்கும்போது
    பாவம் இமா ஜன்னல் சாத்தியிருக்கு ..ஆட்கள் இருக்காங்களா அந்த வீட்டில்

    ReplyDelete
  17. செவியொன்றும் கண்ணொன்றும் தெரிந்தது. ;)
    விறுவிறுப்பான காட்சி ..அழகு ..!

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5109.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா