Wednesday, 4 September 2013

நடை


 அழகாய் ஒரு காலை
அன்பு மகன் இறக்கி விட
கால் வீசி நடந்து
புகாருள்ளே தொலைந்து
இன்புற்ற பொழுதில் தோன்றிற்று...
கவிதை வரி.

படம் பிடித்தேன்
இரவு வந்து வார்த்தைச் சரம் கோர்த்தேன்.
அனுப்பினேன் அறுசுவைக்கு

நேற்று...
மகிழ்ச்சி எல்லாம் பனிபோல்
கலைந்து போயிற்று.

அதைச் சுட்டுச் சின்னாபின்னமாக்கி
முகநூற் சுவரில் ஒட்டியிருக்கிறார் ஒருவர். ;(
வாழி அவர்.

20 comments:

 1. மகிழ்ச்சி எல்லாம் பனிபோல்
  கலைந்து போயிற்று.

  அழகான நடை ஊனமானதே...!!

  ReplyDelete
 2. நடப்பது ஒரு சுகம்,வழியில் நடப்பதை ரசிப்பதும் ஒரு சுகம்.நான் உச்சரித்த பெயர்களில் அதிக எண்ணிக்கையை உடையது அந்தப் பெயர்தான் (கவிதையை ஆக்கியவர்)

  படங்களில் உள்ளதுபோல் இப்போது இங்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

  சுட்டு,சின்னாபின்னமாக்குவதில் அப்படி என்ன சந்தோஷமோ.இப்படி நொந்துகொள்வதைத் தவிர வேறென்ன செய்வது.அவர்களாகத் திருந்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. //(கவிதையை ஆக்கியவர்)// :-)

   //படங்களில் உள்ளதுபோல் இப்போது இங்கிருந்தால் // நிச்சயம் ரசிப்பீர்கள். உள்ளே போகப் போக பனி காணாமற் போகும். மேகத்திற்குள் நடந்தால் அப்படித்தான் இருக்கும். :-)

   Delete
 3. ம்... இப்படியெல்லாமுமா திருட்டு...:(

  இமையமென இமைதூக்கி அருமையான
  புனிதாவின் கவிதை கண்டேன்...
  அழகின் ஆராதனையில் எனைமறக்கத்
  தொலைந்தது என்னுள்
  தொடுத்திடச் சொற்களுமே...

  கவிதைக்கு வாழ்த்துக்கள் இமா!
  திருட்டுக்கு...:(?

  ReplyDelete
 4. கருத்துச் சொன்ன அனைத்து நட்புகளுக்கும் என் அன்பு நன்றிகள்.
  ஒரு குட்டி அப்டேட்...
  http://www.arusuvai.com/tamil/node/26662 ;)

  ReplyDelete
  Replies
  1. நல்ல சூடு...:)

   அதுசரி... புனிதா என்று.. அங்கு...அதுவும் நீங்கள்தானோ?...

   குழப்புகிறீங்களே.. குழப்படி...;).

   Delete
 5. இப்படியும் சிலர்....

  ReplyDelete
  Replies
  1. ஒன்றும் செய்ய இயலாது ஸ்ரீராம்.
   ஒன்றைப் படித்த தாக்கத்தில் வந்து விழும் வார்த்தையில் சாயல் இருக்கும். அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இயல்பு அது.
   இது வேறாக இருக்கிறதே. என் மன ஆறுதலுக்கு இப்படி. ;-)

   Delete
 6. என்ன இமா.. சுடச்சுடத் திருட்டோ? அட கடவுளே... சரி விடுங்க.. நீங்க மனம் சோராதீங்க தொடருங்கோ.. களவெடுத்தவர் நல்லாயிருக்கட்டும் என வாழ்த்திவிட்டு இனியும் எழுதுங்கோ கவிதை.

  ReplyDelete
 7. //சுட்டுச் சுட்டுப்
  படையலிடுவோரே!!
  ஒரு கேள்வி உமக்கு,
  உம் படைப்பை நான் சுட்டால்...
  சும்மா விடுவீரோ!////

  ஹா..ஹா..ஹா.. முடிவில்தான் தெரிஞ்சுது இது வேற சுடுகிறதென:)))

  ReplyDelete
 8. அட சூடாக சுட்டுவிடுகிறார்களா?!!! அவர்களையும் வாழ்த்தும் உங்கள் மனதிற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. உண்மை மட்டுமே உயிருடன் வாழும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலியபெருமாள். :-)

   Delete
 10. //மகிழ்ச்சி எல்லாம் பனிபோல்
  கலைந்து போயிற்று.// ம்ம்...இதெல்லாம் பெரிதா எடுத்துக்காதீங்க இமா! பிரதி எடுப்பவங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம், எல்லாராலும் காப்பி அடிக்க முடியும், ஆனால் கவிதை எழுத முடியாது. இணையத்தில இதை கன்ட்ரோல் செய்வதும் இயலாத காரியம். அதற்காக உங்க அதிருப்தியை கோபத்தை வெளிப்படுத்தாதீங்க என சொல்ல வரவில்லை, வெளிப்படுத்துங்கோ, ஆனா சீரியஸா எடுத்துக்காதீங்க. டேக் இட் ஈஸி! :)

  பி.கு. ஓவராப் பேசுறனோ?? எனக்கு இப்படி கவிதை-கைவினை வழக்கமெல்லாம் இல்லாததால் இந்த கவிதைத்திருட்டு, கைவினைத் திருட்டுக்கள் பற்றி அவ்வளவாக தாக்கம் இல்லை, அதனால இதெலாம் டேக் இட் ஈஸி-யா தெரியுதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்!! ;)

  ReplyDelete
  Replies
  1. :-) //வெளிப்படுத்துங்கோ, ஆனா சீரியஸா எடுத்துக்காதீங்க.// yup. m.

   Delete