இமாவுக்கு இனிய விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள்.
பின்ன என்ன? எல்லாரும் கொழுக்கட்டையும் மோதகமுமாகப் போட்டுப் போட்டு என்னைப் புகைய வைக்கிறீங்கள். எனக்கு ஒருவரும் தாறதாக் காணேல்ல. ;(
நானே மோதகம் செய்து சாப்பிட்டன்.
இது உங்களுக்கு.
அனைவருக்கும்... பிலேட்டட் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள். :-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிராவுக்காக 0--- ---
பின்ன என்ன? எல்லாரும் கொழுக்கட்டையும் மோதகமுமாகப் போட்டுப் போட்டு என்னைப் புகைய வைக்கிறீங்கள். எனக்கு ஒருவரும் தாறதாக் காணேல்ல. ;(
நானே மோதகம் செய்து சாப்பிட்டன்.
இது உங்களுக்கு.
அனைவருக்கும்... பிலேட்டட் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள். :-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிராவுக்காக 0--- ---
ஆவ்வ்வ்வ் இது மோதகமோ கேக்கோ இமா? உள்ளே என்ன இருக்கு? சதுர்த்தியில பொய் சொல்லப்பூடா சொல்லிட்டேன்ன் :).
ReplyDeleteஎன் பக்கத்தில் ஒண்ணே ஒண்ணு கொழுக்கட்டை வச்சிருக்கிறேன்ன் அது இமாவுக்குத்தான்ன்:).. அச்சில போட்டீங்களோ? எனக்கு அச்சையும் காட்டுங்கோ.. எப்படி ஸ்ரவ் வச்சு அதை மூடினீங்க எனவும் காட்டுங்கோ.
மோதகம்தான். ;) உள்ள... வறுத்த பயறு, தேங்காய்ப்பூ & சர்க்கரை. சரியான தோமாஸ். ;)) //எப்படி ஸ்ரவ் வச்சு அதை மூடினீங்க// இறந்தகாலத்தை இனி எப்பிடிப் படம் எடுக்க? அடுத்த முறை செய்யேக்க எடுத்துப் போடுறன் அதீஸ். உள்ளங்கையில செப்பு செய்து உள்ளுடன் வைச்சு மூடி, அதை அச்சில வைச்சு மூட மிச்ச மா வெளியில வந்துரும். முதலாவது செய்ததுமே அளவுக் கணக்கு பிடிபட்டுரும். இது ஐம்பது சதத்திற்குத்தான் வாங்கினன்.
Deleteஆவ்வ்வ்வ் சூப்பர்ர்... அம்மாவிடம் இதேபோல ஒரு பற்றிஸ் அச்சு இருந்தது.. எந்த பிள்ளையின் வீட்டுக்குப் போனாலும் அதை காண்ட் பாக்கில் கொண்டுபோய், பற்றிஸ் செய்வா. சூப்பராக வரும் அதுவும் கொழும்பு பெற்றாவில ஒரு ரூபாவுக்கு வாங்கியது, ஆனா உலகமெல்லாம் தேடினாலும் இப்போ வாங்க முடியுதில்லை, அந்த அச்சும் துலைச்சுப் போட்டா அம்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. என்னிடம் தாங்கோ எனக் கேட்டுக்கொண்டிருந்தனான்.. அப்ப போய்க் காணாமல் போச்ச்ச்ச்ச்:)).
Deleteஇப்போ புரியுது எப்படி மூடியிருப்பீங்களென.. நான் நினைத்தேன் ஜெலி செய்யும் அச்சுப் போல ஒன்றிலுள் மாவை வச்சு ஒட்டியதாக்கும் என, அதனால்தான் கேட்டேன் எப்படி மூடினீங்களென:).
//பெற்றா பற்றிஸ் அச்சு// என்னட்டயும் இருந்துது அதீஸ். //உலகமெல்லாம் தேடினாலும் இப்போ வாங்க முடியுதில்லை,// ம். ;( இங்க வந்து கொஞ்சம் அதே போல இருந்த ஒன்றை வாங்க அது கிள்ளிக் கிள்ளி வைக்குது. கர்ர்.. ;(
Deleteஇது போன முறைக்கு முந்தின விநாகசதுர்த்திக்கு இங்க வலையுலகில அறிமுகமாகின அச்சு. கண்ணில படவும் வாங்கி வைச்சன். வெள்ளி அச்சும் கடைல இருந்துது. எனக்கு அது பிடிக்கேல்ல. ஒரு முக்கோண சமோசா அச்சும் வைச்சிருக்கிறன்.
//ஜெலி செய்யும் அச்சுப் போல ஒன்றிலுள் மாவை வச்சு ஒட்டியதாக்கும்.// ம். முதலில் அப்பிடி ஒட்டப் பார்த்தன். விசராக் கிடந்துது. பிறகு இப்படித்தான் நடக்குது.
சொல்ல மறந்திட்டேன்ன் அதிராவுக்கு இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்ள்ள்...
ReplyDeleteஎங்கிட்டயேவா?:))
;))
Deleteஎன்ன நடக்கு உலகத்தில...:)
ReplyDeleteஎதுக்குத்தான் அச்சு எண்டு இல்லாம போச்சுது..
அழகா இருக்கு கொழுக்கட்டை!
எனக்கும் 2 அச்சு வாங்கி அனுப்புங்கோ ப்ளீஸ்..;)
கெட்டிக்காரிதான்... வாழ்த்துக்கள்!
//என்ன நடக்கு உலகத்தில...:)// ;)))
Delete//2 அச்சு வாங்கி அனுப்புங்கோ// ம். ம். ;)
//கெட்டிக்காரிதான்.// ஆஹா!! நன்றி இளமதி. :-)
அழகான மோதகம்... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் தனபாலன்.
Deleteநான் எங்க கொண்டாடுறன்! மோதகம் ஆசையாக இருந்துது. செய்து சாப்பிட்டன். மற்றப்படி அழகாகப் பிள்ளையார் பிடிச்சு அவரைக் கடலில கரைக்கிற விஷயம் மட்டும்தான் தெரியும். இருந்தாலும் வாழ்த்துக்கு நன்றி.
இமா உங்கட வீட்டு கொழுக்கட்டை அச்சு சூப்பராக உள்ளது.
ReplyDelete;) எல்லாம் வலையுலக மகிமை. முன்பு இதே பொருளைப் பார்த்திருந்தால் ஏதோ விளையாட்டுப் பொருள் என்று நினைத்து வாங்காமல் வந்திருப்பேன்.
Deleteநன்றி ஸாதிகா.
வாவ் ..ஆஅவ்வ்வ்வ் ..மோதகம் அருமையா வந்திருக்கே ..
ReplyDeleteஅடுத்த டைம் பூனை ஷேப்பில் செய்யுங்க இமா அதத்தான் அதிராவுக்கு தரனும் ..இது எல்லாம் எனக்கே
நோஓஓஓஓஓஓ இது அநீதி அழிச்சாட்டியம்:)).. இமா அந்த எலி பன்னைக் கொஞ்சம் அஞ்சுவுக்கு காட்டுங்க:))... டோண்ட் கிவ் தட் ரூ கேர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Delete//பூனை ஷேப்பில்// அதுக்கென்ன செய்தால் போச்சு. ;))
Delete//அழிச்சாட்டியம்// என்றால் என்ன அதீஸ்!! ;)))))))) ம். காட்டுறன். அஞ்சு பார்த்திருப்பா முதலே. //டோண்ட் கிவ் தட் ரூ// ம். அப்படியே ஆகட்டும். ;))
கொழுக்கட்டை க்யூட்டா இருக்கு இமா! :) இந்த மாதிரி அச்சு ஊரில் வைச்சிருந்தேன், இங்கே இல்லை. சிவப்பரிசியில இதுவரை கொழுக்கட்டை செய்ததில்லை!
ReplyDelete//பயறு, தேங்காய்ப்பூ & சர்க்கரை.// சேம் பின்ச்...என்று சொல்ல முடியாது! ;) நான் வேகவைச்ச பயற்றம்பருப்பு, தேங்காய்ப்பூ, வெல்லம் சேர்த்து ஸ்றவ்:) பண்ணினேன், சூப்பரா இருந்துச்சு. நானும் படமெடுத்து ப்ளாகில போஸ்ட்டை அப்டேட் செய்திருக்கேன், பாருங்க.
சிவப்பரிசியில இதுவரை கொழுக்கட்டை செய்ததில்லை! /////
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சுத்த வெள்ளையாக.. பால்போல இருக்கு கொழுக்கட்டை.. இதைப்போய் சிவப்பரிசியாமே:)).. ஓவரா வானம் பார்த்து முகில் பார்த்து கலர் எல்லாம் காணாமல் போச்சு:).. ஹையோ இத நான் சொல்லல்ல:) இது அஞ்சுட மைண்ட் வொயிஸாக்கும்:)))
//சிவப்பரிசியில// மகீ..!!! ;))))) முதல் படம் இருட்டில எடுத்தது. ;)))
Delete//பாருங்க. // பார்த்தேன். முதலில அங்கதான் போய்ப் பார்த்தன் குறிப்பு இருக்கோ என்று. சட்டென்று கண்ணில படேல்ல. தேடப் பஞ்சியாக இருந்துது. என் வழக்கமான செய்முறைக்கே போயாச்சுது.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.இப்போதான் மோதக அச்சையே பார்க்கிறேன்.எல்லா கொழுக்கட்டைகளும் பளபளன்னு சூப்பரா இருக்கு.
ReplyDelete"எனக்கு ஒருவரும் தாறதாக் காணேல்ல"___________ அன்றே சாப்பிடுவதைவிட அடுத்த நாள்தான் நல்லாருக்கும்.அதனால கொஞ்சம் எடுத்து பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்.அதில் கொஞ்சம் அனுப்பிவிடலாமா!!
'ஸ்ரவ்'__ பூரணத்துக்கான இந்தப் பெயர் வித்தியாசமா இருக்கு. 'ஸ்ரவ்'வுக்கு வறுத்த வேர்க்கடலை,வறுத்த எள்,வெல்லம்,ஏலம்,பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து வையுங்கோ.எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.
//இப்போதான் மோதக அச்சையே பார்க்கிறேன்.// ஹா!! நான் உங்கட வலைப்பூவிலதான் முதலில் கண்டதாக நினைச்சுக்கொண்டு இருக்கிறன். இல்லையா? மகிட தோழமைகள் யாரோதான், வடிவாப் போட்டிருந்தினம். அந்தக் கொழுக்கட்டை இன்னும் வெள்ளையாக பூண்டு போல இருந்துது. //பளபளன்னு சூப்பரா// ஒட்டாமல் இருக்க அச்சில எண்ணெய் தடவினதால வந்த பளபளப்பு அது சித்ரா. ;))
Delete//அன்றே சாப்பிடுவதைவிட அடுத்த நாள்தான் நல்லாருக்கும்// ஆஹா! நல்ல சமாளிப்பு இது. ;)))
//'ஸ்ரவ்'__ பூரணத்துக்கான இந்தப் பெயர் வித்தியாசமா இருக்கு.// அந்த மழலைப் பூஸை நம்பிக் கெடாதைங்கோ. ;) அது பிரித்தானியப் பூஸ். ;)) ஸ்டஃப் - stuff. ;) நாங்கள் உள்ளுடன் / உள்ளீடு என்றுதான் சொல்லுறனாங்கள்.
//வறுத்த வேர்க்கடலை,வறுத்த எள்,வெல்லம்,ஏலம்,பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு// கட்டாயம் செய்து பார்க்கிறேன். இங்க உள்ளவை... ;))) கட்லட் மிக்க்ஷரை வைச்சு மோதகம் செய்யேலாதோ எண்டு யோசிக்கினம். ;)
"//அன்றே சாப்பிடுவதைவிட அடுத்த நாள்தான் நல்லாருக்கும்// ஆஹா! நல்ல சமாளிப்பு இது. ;))) "__________ உண்மைதாங்க.ஆனால் எண்ணெய் தடவி செய்வது நல்லா இருக்குமா என்டு தெரியல.
Deleteபுது ஈரமாவு இடித்து கையால பிடிச்சு செஞ்சு சாப்பிட்டு,மீதியை அடுத்த நாள் வச்சு சாப்பிட்டு பாருங்க,சூப்பரா இருக்கும்.ஒருவேளை மீதமானது கொஞ்சமா இருக்கும் என்பதால்கூட இருப்பினம்.
நீங்க சொல்லும் உள்ளீடை நாங்க 'தீனி' என்போம்.எழுதும்மோது எல்லோரையும்போல் 'பூரணம்'னு எழுதிடுவேன்.
"கட்லட் மிக்க்ஷரை வைச்சு மோதகம்"________ புதுசா கேள்விப்படுறன். ஹை எனக்கும் இலங்கைத் தமிழ் வந்திட்டு.
//ஹை எனக்கும் இலங்கைத் தமிழ் வந்திட்டு.// ;))))
Deleteஅழகான மோதகம்.ஆனால் இதற்கும் அச்சாஆஆ.என்னாஆ ஒரு சோம்பேறித்தனம். மோதகத்தைப்பார்த்தால்()இருகைகளையும் கூப்பியிருப்பது போல் இருக்கு.
ReplyDelete//என்னாஆ ஒரு சோம்பேறித்தனம்.// ;)) என்னையோ சொல்லுறீங்கள்!! ;))
Delete//()இருகைகளையும் கூப்பியிருப்பது போல் இருக்கு.// கொழுக்கட்டைக்கு இதை வைச்சும் ஒரு பேர் இருக்கெல்லோ! தெரிஞ்சால் சொல்லுங்க ப்ரியா.
வணக்கம் சகோதரி, இளமதி சகோதரியின் அறிமுகத்தால் தங்கள் வலைப்பக்கத்தில் நான். தங்களின் ரசனை உள்ளமும், படைப்பாற்றலும் வியக்க வைக்கிறது. தொடர்ந்து வருகை தருவேன் தங்களின் வலைப்பக்கத்திற்கு. தங்களுக்கும், இளமதி சகோதரிக்கும் நன்றிகள். அதிரா அவர்களின் குறும்பு ரசனை.
ReplyDelete_()_ நல்வரவு பாண்டியன்.
Deleteமுன்பே இளையநிலாவில் உங்கள் கருத்து பார்த்தேன். வருகைக்கு என் அன்பு நன்றிகள். எல்லோருக்கும் என் எல்லா இடுகையும் பிடிக்காது. மிக்க்ஷர்ல இருந்து பிடிச்சதைப் பொறுக்கிச் சாப்பிடுற மாதிரி, உங்களுக்குப் பிடிக்கிற இடுகை வரும்போது பாருங்கள். :-)
கொழுக்கட்டை செய்யவும் அச்சு வந்த பிறகு அழகாய் செய்றாங்க...இருந்தும் பழைய பக்குவங்கள் மறந்து போச்சு,,,,
ReplyDeleteநல்லா சாப்பிடுங்கோ
வாழ்த்துக்கள்...
ஹா!! அச்சு வர முதலும் அழகாய்த்தான் செய்தனான் சீராளன். :-)
Deleteநீங்களும் ஒன்று எடுத்துச் சாப்பிடுங்கோ.
வரவுக்கு மிக்க நன்றி சீராளன். மகிழ்ச்சி.
அட நீங்க வேற சாப்பிட சொல்லமுதலே சாப்பிட்டு முடித்திருபொம்ல..!
Deleteஹா ஹா ஹா நன்றி நன்றி
கொழுக்கட்டை ரொம்பவும் அழகாக இருக்கிறது இமா! சுவையும் அப்படித்தானிருக்கும் என்று பார்த்தாலே தெரிகிறது!
ReplyDeleteஆமாம் அக்கா. எப்போதாவது சமைக்கின்ற உணவு என்பதால் அதற்கே என்றுள்ள சுவையை விட அதிக சுவைதான்.
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
அழகான கொழுக்கட்டை...
ReplyDeleteஅதிராவுக்கு மட்டும் தானா...
இல்லையே! அதிராவுக்கு... அந்த அச்சு மட்டும்தான். ;)))
Delete