சமர்ப்பணம் - என் செல்ல மீன் தொட்டிக்கு ;)
பாஷை தெரியவில்லை
புரிவதற்கு எதுவுமில்லை
மொழி.. அன்பென்பதால்,
இசைக்கு மொழியிலாததால்
மனதைத் தொட்டதிது.
விரும்பியது...
முதலிற் பெண் வேண்டும்.
யாரதுவென்றே யானறியேன்.
இரண்டாவது பெற்றுப்
பெண்ணாய் வளர்க்க
வளர்ந்தது என் தாயாய்
சேயானேன் நான்.
மூன்றாவதும் சோதரனாய்ப் போக...
சேர்த்துக் கொண்ட சின்ன மகள்
சொன்ன சேதி
சொர்க்கம் தருது இன்று.
அன்றன்று வரும்
சின்னச் சின்னக் குறிப்புகளில்
உணர்கிறேன் தாய்மை மீண்டும்.
மென்மையாய் வளர் வயிற்றில்
மீன்குஞ்சு ஊரக் கண்டேன்.
அது சுழல,
மென்வால் தடவ,
சின்னச் சிலிர்ப்பு என்னுள்.
கண் பனிக்கக் கேட்ட வரம்
கனிவாய்ச் செவி மடுத்தாய்.
மனம் நிறைந்து நிற்கிறேன்
மனதார நன்றி தந்தாய்.
மீண்டும் ஓர் வரம் வேண்டும்
என் செல்ல மீன் தொட்டிக்கு...
ஒரு குஞ்சு போதா
தாராளமாய்த் தங்கமீன்கள்
தாங்கும் வரம் வேண்டும்.
தயை கூர்ந்து தா இறையே!
- இமா க்றிஸ்
பாஷை தெரியவில்லை
புரிவதற்கு எதுவுமில்லை
மொழி.. அன்பென்பதால்,
இசைக்கு மொழியிலாததால்
மனதைத் தொட்டதிது.
விரும்பியது...
முதலிற் பெண் வேண்டும்.
யாரதுவென்றே யானறியேன்.
இரண்டாவது பெற்றுப்
பெண்ணாய் வளர்க்க
வளர்ந்தது என் தாயாய்
சேயானேன் நான்.
மூன்றாவதும் சோதரனாய்ப் போக...
சேர்த்துக் கொண்ட சின்ன மகள்
சொன்ன சேதி
சொர்க்கம் தருது இன்று.
அன்றன்று வரும்
சின்னச் சின்னக் குறிப்புகளில்
உணர்கிறேன் தாய்மை மீண்டும்.
மென்மையாய் வளர் வயிற்றில்
மீன்குஞ்சு ஊரக் கண்டேன்.
அது சுழல,
மென்வால் தடவ,
சின்னச் சிலிர்ப்பு என்னுள்.
கண் பனிக்கக் கேட்ட வரம்
கனிவாய்ச் செவி மடுத்தாய்.
மனம் நிறைந்து நிற்கிறேன்
மனதார நன்றி தந்தாய்.
மீண்டும் ஓர் வரம் வேண்டும்
என் செல்ல மீன் தொட்டிக்கு...
ஒரு குஞ்சு போதா
தாராளமாய்த் தங்கமீன்கள்
தாங்கும் வரம் வேண்டும்.
தயை கூர்ந்து தா இறையே!
- இமா க்றிஸ்
அருமை...
ReplyDeleteநலம்தானே சகோதரரே! வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பு நன்றிகள்.
Deleteஇளையநிலா மூலம் உங்கள் தளத்திற்கு வருகை.
ReplyDeleteபுரிந்து கொண்டேன். :-) இளமதிக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோதரரே.
Deleteஅன்பு இமா... என்னவெனச் சொல்ல இந்த பதிவுதனை!
ReplyDeleteமுதலில் உள்ளத்தை ஊருடுவும் தாய்மை தந்த பாடல். இன்றுதான் முதன் முதலாகப் பார்க்கின்றேன்.
ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். தாய்மையின் பூரிப்பை, கனவைக் கண்டு...
ஒவ்வொரு தாயும் தனக்குள் காணும் கனவை என் (மன) கண்ணில் கண்டு கண் பனிக்க ரசித்தேன்...
பகிர்விற்கு மிக்க நன்றி தோழியே!
அனுபவித்து எழுதியது இளமதி. கொஞ்சம் அவசரமாக எழுதியது. அதனால் மெருகு சேர்க்க இயலவில்லை. உள்ளத்தில் உள்ளது உள்ளபடி வந்திருக்கிறது. :-)
Deleteமீன் தொட்டிக்கு சமர்ப்பித்த கவிதை...
ReplyDeleteஅடடா... வார்த்தைகள் தொலந்தன என்னிடம்
வர்ணிக்கத் தெரியவில்லை....
அற்புதம் இமா!
அவைகளுடன் பேசிப் பேசி அவையின் மொழியறிந்து
அதன் உணர்வுகளை இங்கு கவிதையாக...
நினைத்துப் பார்க்கின்றேன்.. உங்கள் ஜீவகாருண்யத்தை...
இறை தருவான் இன்னும் குஞ்சுகளை...
எங்கே அவர்கள்?.. எல்லோரும் நலமாக இருக்கினமோ?
பார்த்துக் கொள்ளுங்கள்.
அவர்களையும் இங்கே கீழே இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...:)
அனைத்தும் அற்புதம்!
அருமையான பதிவும் பகிர்வும்!
வாழ்த்துக்கள் இமா!
*என் வலைத்தளத்திற்கு உங்கள் வரவுவேண்டிக் காத்து நிற்கின்றேன்..:)
சகோ. கலியப்பெருமாளுக்கும் என் நன்றிகள்!
நலமாக உள்ளீர்களா சகோதரரே!
//இறை தருவான் இன்னும் குஞ்சுகளை...// மகிழ்ச்சி. தங்கள் வாழ்த்துக்கு நன்றி இளமதி.
Delete//அவர்களையும் இங்கே கீழே இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...// நேரம் வரட்டும். இணைக்கிறேன் பொறுத்திருங்கள். :-)
//என் வலைத்தளத்திற்கு உங்கள் வரவு வேண்டிக் காத்து நிற்கின்றேன்..// வந்தேனே! ;))
//அவர்களையும் இங்கே கீழே இணைத்திருந்தால்// ;)) அவர்களாகவே கீழே இணைந்திருக்கிறார்கள். ;)
Deleteஇமா.!!!. உங்கள் கவனித்திற்கு!
ReplyDelete//வளர்ந்தது என் தாயாய்
சேயாயேன் நான்.//
இங்கு எழுத்துப் பிழையோவென எனக்கு மயக்கம்..
சேயாயேன் நான் - சேயானேன் நான்
என் கணிப்பு தவறாயின் மன்னியுங்கள்..
கணிப்பு தவறல்ல. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. பார்த்ததுமே மாற்றிவிட்டேன். மிக்க நன்றி இளமதி.
DeleteNalla vatikal.
ReplyDeleteEniya vaalththu.
Vetha.Elangathilakam.
ஆஹா! வந்துவிட்டீர்களா! :-) சந்தோசஷம். மிக்க நன்றி அக்கா.
Deleteவணக்கம்
ReplyDeleteமனதை நெருடிய கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை.
குறிப்பு- தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி நடைபெறுகிறது பார்வைக்கு இங்கே
http://2008rupan.wordpress.com
http://dindiguldhanabalan.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர் திரு. த.தவரூபன்(ரூபன்)// என்று தனபாலன் குறிப்பிட்டுருந்ததைக் கவனித்தேன். முதலில், நீங்கள் என் ஒன்றுவிட்ட சகோதரராக இருக்கக் கூடும் என்று சந்தேகித்தேன். அவர் மலேஷியாவில் இல்லை. என் பிறந்த மண்ணிலிருந்து 'இமாவின் உலகிற்கு' வந்திருக்கும் மூன்றாவது நட்பு நீங்கள். சந்தோஷமாக இருக்கிறது. நல்வரவு ரூபன். _()_
Delete//கவிதை அருமையாக உள்ளது// & //வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை.
// மிக்க மகிழ்ச்சி. நன்றி ரூபன்.
போட்டி பற்றி முன்பே தனபாலன் பக்கம் பார்த்து அறிந்தேன். பங்குபற்றவும் விரும்பினேன். எனக்கு தீபாவளியைப் பற்றி அடிப்படை மட்டும்தான் தெரியும். அதனாற்தான் தயக்கம். முயற்சித்துப் பார்க்கிறேன். கவிதை திருப்தியாக அமைந்தால் நிச்சயம் பங்குபற்றுவேன்.
தண்ணிக்குள்ள மீனழுதா தரைக்கொரு தகவலும் வருவதில்ல..ஆனா இந்த மீன் தொட்டியும் தங்கமீன் குஞ்சும் சிந்திய ஆனந்தக்கண்ணீர் கண்டிப்பா உங்கள வந்து சேந்திருக்கும் இமாம்மா! :)
ReplyDeleteஏழு கடல் தாண்டி ஏழு வனம் தாண்டி ஏழு மலை தாண்டி உச்சி மலை மேல உயிர் இருக்குன்னு மந்திரவாதி கதை சொல்றது போல, இத்தனை நாடுகள் தாண்டி எங்களுக்காக இறைவனை வேண்டி, வேண்டும் வரம் வாங்கித்தரும் நீங்க இருக்க எங்களுக்கென்ன கவல? உங்களைப் பெற நாங்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கோம் இமாம்மா, நன்றி என்ற மூணெழுத்தில் அடக்க முடியாத உணர்வுகள் இது. கடவுளுக்கு நன்றி!
//இறை தருவான் இன்னும் குஞ்சுகளை...// நன்றிங்க இளமதி!
:-)
Deleteஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
சந்தோஷமாக இருங்க. @}->--
மிக்க நன்றி மீன்தொட்டி... :)
Deleteஇங்கே இமா ரீச்சர் சரியான குழப்படி...:)))
எப்ப வந்து இங்கே உங்களை எங்களுக்குக் காட்டப்போறீங்க...
நிறையப் பொன்குஞ்சுகளோட வாங்கோ!..
நல்லா இருங்கோ! வாழ்த்துக்கள்!
நீண்ட நாள் கழித்து வந்து பார்த்தால் அருமையான கவிதையுடன் அசத்தலாயிருக்கிறது இமாவின் உலகம்.
ReplyDelete:-) நன்றி ஆசியா.
Deleteகேட்ட வரம் கிடைக்கட்டும்!
ReplyDeleteகவிதை அருமை.
வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கள் இரண்டுக்கும் என் அன்பான நன்றிகள் ஐயா.
Deleteஎன்ன இமா குயப்புறீங்க?.. ஆரம்பம் புரியுது.. முடிவு குழப்புது..
ReplyDeleteஹை!! எல்லாரையும் குழப்புகிற பூஸாரை இமா குழப்பீட்டேன்ன்ன். ;)))
Deleteஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுத்தலாகாதா!! பொறுமை பிள்ளாய். ;))))))
நல்ல கவிதை...
ReplyDeleteவினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்... தங்கள் வருகை கண்டேன். மிக்க மகிழ்ச்சி...
நன்றி வெற்றிவேல். கவிதையென்று எழுதவில்லை. எழுதுவது படிக்கச் சுவைக்க வேண்டும். அதனால் பந்திகளாக இல்லாமல் இப்படி. :-)
Deleteஇமாவுக்கு நத்தார் சமயம் வாழ்த்துச் சொல்ல மறந்துராதீங்க. அதுதான் எனக்கு முக்கியம். ;)
ஆஹா..தாய்மையின் அழகு கவிதை
ReplyDeleteநன்றி கிரேஸ்.
Deleteகவிதையாக எழுதி வைத்தால் பிற்பாடு படிக்கும் பொழுது, எழுதிய தினத்தன்று அனுபவித்த உணர்வு மீளவும் கிடைக்கிறது.
இமாவுக்குள்ள ஒளிஞ்சிருந்த கவிதாயினி வெளியே வர ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே! தொடர்ந்து கவிதைகளா எழுதி கலக்கறீங்க இமா! நல்லா இருக்கு கவிதை.
ReplyDeleteகளிமண்ணு பாடலைப் பார்த்துவிட்டு படத்தின் விமர்சனமும் படிக்க நேர்ந்தது, மனசு கனத்துப் போச்சு! ஹ்ம்ம்...அதெல்லாம் வேணாம், சுகந்தரும் பாடலோடு நிறுத்திக்கலாம்.
உங்க மீன் தொட்டியும், மீன் குஞ்சுகளும் சுகமாய் வாழ வாழ்த்துக்கள்! :)
க்ர்ர்.. ;))
Delete//விமர்சனமும்// அது எல்லாம் பார்க்கக் கூடாது மகி. என்ன எழுதுகிறோம் என்றே தெரியாமல் எழுதி இருப்பார்கள் சிலர்.
;) வாழ்த்திய நல்மனதுக்கு என் அன்பு நன்றிகள். ;)
அன்பின் இமா :) இக்கவிதையை படிக்கும் போது கண்கள் பனித்துவிட்டன. நட்பும் தாயமையாக கிடைத்தால் யாருக்குத்தான் கசக்காது. நானும் அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.. :) மீன் தொட்டிக்கு என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete