Tuesday 20 May 2014

மணநாள் வாழ்த்துக்கள்

 மாமி வீட்டில் இந்த அழைப்பிதழைக் கண்டு அழகாக இருக்கவும் எடுத்து வந்தேன்.

எத்தனை நாள் வைத்திருப்பேன்! பிறகு இதற்கு என்ன ஆகும்!

உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தேதி கண்ணில் பட்டது.  மகன் முறையானவரது திருமண அழைப்பிதழ், விலாசமும் மனப்பாடம். இதையே மணநாள் வாழ்த்தாக அனுப்பிவிடலாமா!! தபால் செய்யப் போதுமான கால அவகாசம் இருந்தது அப்போது.
அழைப்பிதழைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் போட்டேன். வெளிப்பக்கம் OHP ஷீட்டில் அச்சடித்திருந்தார்கள். (அனைத்துப் படங்களிலும் பெயர்களை மறைத்திருக்கிறேன்.) நெய்ல் பாலிஷ் ரிமூவரைத் தொட்டு எழுத்துகளை அழிக்க முயன்றேன். திருப்தியாக வரவில்லை. முடிந்தவரை அழித்து எடுத்தேன்.
 உள்ளே அச்சடித்த பக்கத்தை நீக்கிவிட்டு அதே அளவில் இன்னொரு அட்டை வெட்டி துளைகளையும் சரியான இடங்களில் அடித்து எடுத்துக் கொண்டேன். இந்த அட்டையில் என் எழுத்தில் வாழ்த்துக்களைப் பதிவு செய்து...
மீண்டும் முன்பிருந்தபடி கோர்த்துக் கட்டினேன். பஞ்ச் செய்த பூக்கள் தேவையற்ற பகுதிகளை மறைத்திருக்கின்றன. தபாலில் சேர்க்கும் முன் இறுதியாக, வெறுமையாகத் தோன்றிய பூக்களின் நடுவே நகங்களுக்கு ஒட்டும் சிறிய சிவப்புக் கற்களை ஒட்டி முடித்தேன்.

குறிப்பிட்ட அந்த இனிய உறவுகளுக்கு என் அன்பான மணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

23 comments:

  1. ஆஹா !!! சூப்பரா இருக்கு இமா ....எனக்கு அந்த நிறம் ரொம்ப பிடிச்சிருக்கு ..
    போஸ்டில் அனுப்புமுன் டெம்ப்ளேட் வரைந்து save செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .அப்படி செய்திருந்தா
    எனக்கு அதை மெயில் அனுப்பவும் ..இந்த டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு .:)

    பிரவுன் நிற காதிதத்தின் மேலுள்ள பெயர்களை அழிக்க ..கிராப்ட் கத்தியால் மிக லேசாக சுரண்டி அதன்மேல்
    distress இங்கினால் தேய்க்க ஓரளவு சரிவரும்

    ReplyDelete
    Replies
    1. ஒரே கேள்விக்கு எத்தனை இடத்தில்தான் பதில் சொல்வேன்!! ;)) நீங்கள் செய்தது போலவே... வெட்டி ஒட்டப் போகிறேன்ன்ன். ;)

      ///அவ்வ்வ்! டெம்ப்லேட்டா! இன்னொரு முறை முயற்சிக்கும் நோக்கம் இருக்கவில்லை. தேவைப்பட்டால் இந்த ஃபோட்டோவைப் பார்த்து மீண்டும் வரைவது ஒழித்து வைத்த டெப்லேட்டைத் தேடுவதை விட சுலபம் எனக்கு. ;)))

      அச்சடித்த பக்கத்தை அப்படியே வைத்து ட்ரேஸ் செய்தேன். பிறகு எழுத்து இல்லாமல் இருந்த இடத்திலெல்லாம் பூக்கள் பஞ்ச் செய்து டப்பாவில் போட்டு வைத்துவிட்டு மீதியை வீசிவிட்டேன். இனி ஏதாவது செய்தால் நிச்சயம் ஏஞ்சலுக்காக சேமித்துவைக்கிறேன். புதிதாக வெட்டிய அட்டையின் மீதிக்கும் இதேதான் நடந்தது.

      //பிரவுன் நிற காதிதத்தின் மேலுள்ள பெயர்களை அழிக்க ..கிராப்ட் கத்தியால் மிக லேசாக சுரண்டி அதன்மேல் distress இங்கினால் தேய்க்க ஓரளவு சரிவரும்// நான் செய்ததும் அதுதான். நெய்ல் பாலிஷ் ரிமூவர் சூப்பராக வேலை செய்தது. மிக மிக மிக லேசாக சுரண்டியது பிழை பிடிக்கும் இமா கண்ணுக்கு தெரிந்ததே! 100% சுரண்டாத எஃபெக்ட் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ;(

      Delete
    2. //அந்த நிறம் ரொம்ப பிடிச்சிருக்கு// ஆமாம், அழகான நிறம். அது ஹான்ட் மேட் பேப்பர், ஒரு கசங்கிய எஃபெக்ட்டோடு சற்றுத் தடிமனாகவும் பாரமாகவும் இருந்தது.

      Delete
  2. அழைப்பிதழ் அழகாக இருக்கு இமா. நல்ல ஐடியா.நீங்க திருத்தி செய்தபின் இன்னும் அழகா.

    ReplyDelete
  3. ஆகா...!

    எங்களது அன்பான மணநாள் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன். :-)

      Delete
  4. ம்ம்ம். ... சூப்பர்மா :-) நல்ல ஐடியா ...

    ReplyDelete
    Replies
    1. குணாவுக்கும் வரும். ;) முதல்ல அழைப்பிதழ் அனுப்புங்க.

      Delete
  5. அசத்தலா அழகா இருக்கு இமா.. மேலே ஒட்டியிருக்கிற பூ அந்த கல் இன்னும் அழகு...:)

    ReplyDelete
  6. கலக்கல் இமாம்மா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்ற்ரி ப்ரேமா.

      Delete
  7. அன்பின் இமா - ஒரு மண நாள் வாழ்த்து அனுப்புவதற்கு இவ்வளவு சிரமம் எடுத்து வாழ்த்து த்யாரித்து அனுப்பிய செயலுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் அன்பு வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. அழகா வித்யாசமான வடிவில் இருக்கு வாழ்த்து அட்டை! :) அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிருங்கோ இமா! :))

    ReplyDelete
    Replies
    1. ;) பார்த்திருப்பாங்க மகி.

      Delete
  9. அன்பின் இமா - புதிய முறையில் மண நாள் வாழ்த்து அட்டை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அவங்க அழகான கார்ட் தெரிந்திருக்கிறாங்க. அது நான் அழகாக செய்த மாதிரி காட்டுது. ;)

      Delete
  10. வாழ்த்துக்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட எமது திருமண அழைப்பிதழ்இற்கும் எமது மனமார்ந்த நன்றிகள் சித்தி ....

    ReplyDelete
  11. வாழ்த்துக்களுக்கும் திருமண அட்டை புதிய வடிவமைப்பிட்கும் எமது மனமார்ந்த நன்றிகள் சித்தி... இது எப்பவும் மறக்க முடியாத ஒரு பரிசு.... இப்படிக்கு அன்பு மகன்

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் மகன். இன்று போல என்றும் மகிழ்ச்சியாக உங்கள் வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

      அன்புடன்
      சித்தி

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா