Thursday, 17 April 2014

வானமே எல்லை!

என் சேகரிப்பில் என்னவெல்லாம் இருக்கும் என்பது எனக்கே தெரியாது. 
 
சமீபத்தில் எதையோ தேட, குறுக்கே தரிசனம் தந்தது எப்போதோ 'கராஜ் சேல்' ஒன்றில் வாங்கிப் போட்ட இந்த ஆகாயவிமானத்தின் அமைப்பு!!!
அட்டைப் பெட்டியினுள்ளே ஒரு குட்டிப் பையில் சில ஸ்டிக்கர்களுடன் தேவையான பாகங்களனைத்தும் உதிரியாக இருந்தன.

குட்டிப் பிள்ளைகள் செய்யும் வேலைதான். ஆசையாக இருக்கிறதே! இங்கு குட்டீஸ் யாரும் இல்லை என்னைத் தவிர. பொறுமையாக பாகங்கள் அனைத்தையும் பொருத்தி ஸ்டிக்கர்களையும் ஒட்டி முடித்தேன்.

வானம் - என் சேலை. :-)

பெட்டியில் நிஜ விமானத்தைப் பற்றிய குறிப்புகள்.

16 comments:

  1. சேலை வானத்தின் பின்னணியில் சூப்பர் விமானம்!

    ReplyDelete
  2. ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  3. ஏன்னா இது பிளான் லாம் செய்துகிட்டு குட்டிப்பிள்ளை ....

    ReplyDelete
  4. அழகா இருக்கு குட்டிப் பாப்பா

    ReplyDelete
  5. ஐ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ! வானத்தைக்கூட யோசிச்சு செஞ்சிருக்கீங்க. திரும்ப மடிச்சு வைக்கணுமே !

    "குட்டிப் பிள்ளைகள் செய்யும் வேலைதான். இங்கு குட்டீஸ் யாரும் இல்லை என்னைத் தவிர" __________ துணைக்கு இங்கொரு ஆள் இருக்க, இதுக்கெல்லாம் கவலைப்படலாமா. பொட்டலமா கட்டி பார்சல் அனுப்பிடுங்க, நான் பார்த்துக்கறேன்.

    எதையோ எடுக்க கராஜுக்கு போவேன், ஆனால் வரும்போது கூடவே எங்க பாப்பா சின்ன வயசுல விளையாடிய குட்டிகுட்டிப் பொருள்களுடன் திரும்புவேன்.

    ReplyDelete
  6. வணககம்
    அம்மா


    நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்...

    நன்றி
    அன்புன்
    ரூபன்

    ReplyDelete
  7. பொம்மை எல்லாம் வாங்குவீங்களா? ;-)

    ReplyDelete
  8. அழகா இருக்கு...

    ReplyDelete
  9. குழந்தைமை மனத்தில் இருக்கும்வரை துயரங்கள் நம்மை வாட்டாது... அழகான விமானம்... ஆகாயமாய் பளபளக்கும் நீலச்சேலைப் பின்னணியோடு ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் இமா.

    ReplyDelete
  10. சேலை ‍ வானம் அருமை

    ReplyDelete
  11. இமா,

    இன்று எங்க வீட்டு பூண்டு செடியில பூண்டு வந்திருக்கு, மண்ணைப்போட்டு மூடியிருக்கிறேன். அது நெஜமான பூண்டுதானான்னு வந்து பாருங்க :)

    ReplyDelete
  12. //என் சேகரிப்பில் என்னவெல்லாம் இருக்கும் என்பது எனக்கே தெரியாது. // எங்களுக்கும் தெரியாது :)

    ReplyDelete
  13. நல்லா இருக்குடா குட்டி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா