Friday, 10 March 2017

DARE to make a change!!

பாடசாலையில் அறை எண் 16 மூடிக் கிடந்தது. 

அங்கு முன்பு பணியாற்றிய ஆசிரியர் 2015 இறுதியில் பணிமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார். பின்பு அதே அறையில் கற்பித்த அருட்சகோதரருக்கு தொண்டையில் ஒரு சத்திரசிகிச்சை. குரல் கிசுகிசுப்பாக மட்டுமே வருகிறது. அவரும் ஓய்வுபெற்றுவிட்டார். இருவருமே பாடசாலையிலிருந்த இறுதி நாட்களில், தேர்ச்சி அட்டை வேலைகளில் மும்முரமாக இருந்ததால் அறையை அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். 

அந்த அறையைச் சுத்தம் செய்யும் வேலையை என்னிடம் ஒப்படைத்தார் அதிபர். எப்போதெல்லாம் சிறிது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்திகரிப்பு வேலை நடந்தது.

முதலில் பெரிய கடதாசிகளும் ஒரு மார்க்கரும் தேடி வைத்துக் கொண்டேன். மீள்சுழற்சிக்கு ஒரு இடத்தைத் தெரிந்து வைத்து ஒரு பக்கம் கடதாசிகளும் அருகே ப்ளாத்திக்குப் பொருட்களையும் போட்டேன்.  'PE Department' 'Arts Department' 'RE Department' என்று பிரித்துப் பொருட்களைப் போட்டு லேபிள் போட்டு வைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தேன். 

அருட்சகோதரர் சென்ற வருடம் வரை ஃபெல்ட் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்பித்து வந்தார். அந்தப் பெட்டியை எனக்குத் தருவதாக முன்பே சொல்லியிருந்தார். வீட்டிலுள்ள குப்பைகளோடு அதுவும் வந்து சேர்ந்திருக்கிறது. :-) 

கூடவே இந்த அட்டைகளும்.
 
வருடாவருடம் மூன்றாம் தவணையின் போது ஒரு குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி DARE Program  நடாத்த வருவார். சென்ற வருடம் இந்த அட்டைகளை மாணவர்களுக்காக எடுத்து வந்தார். ஆளுக்கொன்று கொடுத்து மீந்த மூன்று, கடதாசிக் குப்பைகள் மத்தியில் கண்ணில் பட்டது. 

இன்று ஒரு மாற்றம் வேண்டும் எனத் தோன்ற, அட்டைகளை எடுத்தேன். இமா விளையாட 3 கார்கள் கிடைத்தன. :-) 

6 comments:

  1. ஐய்ய்ய்ய்ய் எனக்கும் வேணும் இந்த கார்.விளாடுறீங்களோ .வடிவா இருக்கு

    ReplyDelete
  2. அட.... றீச்சருக்கு ஓடக் கார் கிடைக்காட்டிலும் வெளாடக் கிடைச்சிருக்கே:)... அழகான பொலீஸ்கார்கள் இமா... பத்திரமா எங்காவது ஒட்டி வையுங்கோ...

    ReplyDelete
  3. இமாவைப் போலவே காரும் அழகு.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா